Posting this, as an extention to this -> http://www.mayyam.com/talk/showthrea...l=1#post976393

Since that is Rahman thread, I am posting here

ராஜா ஆஸ்கார் விருதைப்பத்தி பேசினாக்கூட கோபம் வருதுன்னா என்ன சொல்றது? ஆஸ்கர் என்ன ரஹ்மானோட ஹோல்சேல் ப்ராபர்டியா அல்லது அதை நடத்துறது தான் அவரா?!? அப்படியே அதைப்பத்தி ராஜா பேசக்கூடாதுன்னா எதுக்கு சில விளக்கெண்ணைகள் அதைப்பத்தி கேள்வி கேக்கணும், வாய மூடிட்டு சும்மா இருக்கவேண்டியது தானே?!? உனக்கு புரியலைன்னா விட்ரேன், நீ தலைல தூக்கி வெச்சிகிட்டு ஆடியே ஆகணும்னு ராஜா உன்கிட்ட வந்து கேட்டாரா?!?

ஒரு உயரிய தேசிய விருதை ராஜாவுக்கும் இன்னொரு இசையமைப்பாளருக்கும் ஒரே நேரத்தில் சேர்த்து கொடுப்பதே தவறு. அட்லீஸ்ட் ராஜாவுக்கு மிக தாமதமாக தருகிறோம் என மத்திய அரசு சொல்லியிருக்கலாம். சரி ஒழியட்டும், மத்திய அரசு எப்பத்தான் இந்தமாதிரி விஷயங்களில் (இல்லாத)மூளையை உபயோகப்படுத்திருக்கு!! சரி, விடுவோம். இந்த விஷயத்துக்காக பிரஸ்மீட் வெக்கணும்னு கேட்டதே பிரஸ் ஆட்கள் தான். சரி ராஜாவும் ஒரு பிரஸ் மீட் வெச்சார். அப்பொ ஒரு அதிபுத்திசாலியும் கேள்வி கேட்கிறார், "சார், உங்களுக்கும் ரஹ்மானுக்கும் ஒரே நேரத்துல விருது தர்ரதைப்பத்தி என்ன சீல் பண்றீங்க?!" இந்த விளக்கெண்ணையை எந்த கொப்பறையில் தள்ள?!? ஆனா அதற்கும் ராஜா பொறுமையாகவே பதிலளிக்கிரார் "வொய் ஷுட் ஐ ஃபீல் ஃபார் ஹிம்?" இதிலும் அவர் கேள்விகேட்ட அந்த அடிமுட்டாளையும் சரி, ரஹ்மானையும் சரி, எந்த தாக்குதலான வார்த்தையும் சொல்லவில்லை. அவருக்காக நான் ஏன் ஃபீல் செய்யணும் என்று மட்டும் சொன்னார். அதோடு விட்டாரா?! ரஹ்மான் பற்றி நான் ஏற்கனவே அவருக்கு ஆஸ்கர் விருது பாராட்டு விழாவின்போது பேசியிருக்கிறேன் என்று அவர் ரஹ்மானை பாராட்டிய பேச்சை நினைவு கூர்ந்தார்.

இதே குமுதம் பகுதியில் இன்னொரு கேள்வி. "நீங்கள் ஏன் இந்த இரண்டு ராகங்களை பயன்படுத்தவேயில்லை" அதாவது இந்த 3.தேவி ராஜாவின் 4500 பாடல்களையும் கேட்டுட்டு வந்து இந்த கேள்வியை கேக்குது! ராஜாவுக்கு கோவம் வருமா வராதா? ஆனாலும், அந்த ராகத்தை பயன்படுத்தி அவர் போட்ட பாடல்களை சொல்கிறார்.

எக்ஸாக்ட்லி இதே கேள்வியை இன்னொருவர் மிகச்சரியாக கேட்கிறார் "நீங்கள் பயன் படுத்தாத ராகம் என்று ஏதேனும் உண்டா" இதற்கு ராஜா அமைதியாக பதில் சொல்கிறார்!

இன்னொரு ஜந்து கேட்கும் கேள்வியை பாருங்கள் "உங்களால் எலக்ட்ரானிக் கம்பியூட்டர் சவுண்டு தொழில்நுட்பம் எல்லாம் பயன்படுத்தி இசையமைத்து காட்ட முடியுமா?" :: "காட்ட முடியுமா" என க்கேட்டவனுக்கு எவ்வளவு கொழுப்பும் அறியாமையும் இருந்திருக்கவேண்டும்! அதான் ராஜா இந்தக்கேள்விக்கான பதிலில் காட்டு காட்டு என காட்டி இருப்பார் யாரு கிட்ட வந்து என்ன கேள்வி கேக்குற!

ஒரு ஈடு இணையற்ற மேதையை புரிந்துகொள்ளவில்லை என்றாலும் பரவாயில்லை. கேள்வி கேட்கிறேன் பேர்வழி என உளரிவைத்து அவரையும் அவரது ரசிகர்களையும் புண்படுத்தாமல் இருந்தாலே போதும்!