-
12th November 2012, 06:23 AM
#11
Senior Member
Seasoned Hubber
My favorite K.V. Mahadevan composition (in Tamil) sung by Yesudas!
I also like the lyrics, but don't know who wrote them!
Janakaraj and Kalaiselvi had the lead roles in the movie.
பாடல்: வானம் எங்கே முடிகிறது
திரைப்படம்: பாய்மரக்கப்பல் (1988)
இசை: கே. வி. மஹாதேவன்
பாடியவர்: கே.ஜே.யேசுதாஸ்
வானம் எங்கே முடிகிறது
கண்டுபிடித்தவர் சொல்லுங்கள்
வாழ்கை எங்கே முடிகிறது
கண்டுபிடிக்கச செல்லுங்கள்
பாய்மரக் கப்பல் இங்கே
பருவக் காற்று எங்கே
பாய்மரக் கப்பல் இங்கே
பருவக் காற்று எங்கே
வானம் எங்கே முடிகிறது
கண்டுபிடித்தவர் சொல்லுங்கள்
நதியின் முடிவை நாம் அறிவோம்
விதியின் முடிவை யார் அறிவார்
இரவின் முடிவை நாம் அறிவோம்
உறவின் முடிவை யார் அறிவார்
நதியின் முடிவை நாம் அறிவோம்
விதியின் முடிவை யார் அறிவார்
இரவின் முடிவை நாம் அறிவோம்
உறவின் முடிவை யார் அறிவார்
நேற்றுகள் இனிமேல் வருவதில்லை
நாளைகள் இன்னும் வரவில்லை
நேற்றுகள் இனிமேல் வருவதில்லை
நாளைகள் இன்னும் வரவில்லை
பாதைகள் இங்கே தெரியவில்லை
பயணங்கள் மட்டும் முடியவில்லை
வானம் எங்கே முடிகிறது
கண்டுபிடித்தவர் சொல்லுங்கள்
இமையே உனக்கு உறக்கமில்லை
இரவே உனக்கு இறக்கமில்லை
இதயம் பிரிவை பொறுக்கவில்லை
எனக்கோ அழுது பழக்கமில்லை
இமையே உனக்கு உறக்கமில்லை
இரவே உனக்கு இறக்கமில்லை
இதயம் பிரிவை பொறுக்கவில்லை
எனக்கோ அழுது பழக்கமில்லை
தெய்வத்தை எங்கே தேடுவது
திசைகள் எங்கே தேடுவது
தெய்வத்தை எங்கே தேடுவது
திசைகள் எங்கே தேடுவது
நதி வழி போகும் பொம்மையைப்போல்
விதி வழி போகும் பெண்மை இது
வானம் எங்கே முடிகிறது
கண்டுபிடித்தவர் சொல்லுங்கள்
வாழ்க்கை எங்கே முடிகிறது
கண்டுபிடிக்க செல்லுங்கள்
பாய்மரக் கப்பல் இங்கே
பருவக் காற்று எங்கே
பாய்மரக் கப்பல் இங்கே
பருவக் காற்று எங்கே...
-
12th November 2012 06:23 AM
# ADS
Circuit advertisement
Bookmarks