-
1st January 2013, 11:47 PM
#11
Junior Member
Seasoned Hubber
வினோத் சார்,
அரசிளங்குமரி திரைப்படம் பற்றிய தங்களது பதிவுக்கு நன்றி. மக்கள் திலகத்தின் இரட்டை வேடப் படம். (ஒரே காட்சியில் மட்டும் தோன்றும் தந்தை எம்.ஜி.ஆர் பலருக்கும் தெரியாது). முத்துராமனின் முதல் படம் இதுதான். பாடல்களில் சின்னப்பயலே சின்னப்பயலே, ஏற்றமுன்னா ஏற்றம், நந்தவனத்தில் ஓர் ஆண்டி, ஊர்வலமாக மாப்பிள்ளை பொண்ணு, தாரா அவர் வருவாரா, வனிதா மணியே மையலாகினேன் போன்றவை மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும். மற்ற பாடல்கள் மிகவும் சுமார் ரகம் தான். மக்கள் திலகம் இடம் பெறாத காட்சிகள் அதிகம் அமைந்துள்ளது தான் படத்தின் விறுவிறுப்பு குறைவுக்குக் காரணம்.நான் ஏற்கனவே குறிப்பிட்டுள்ளது போல வனிதா மணியே பாடல் காட்சி எந்தஒரு டிவிடியிலும் இடம் பெறவில்லை. மக்கள் திலகத்தின் நடிப்பு அந்தப் பாடல் காட்சியில் மிகவும் அருமையாக இருக்கும். கே டிவியில் மட்டும் அந்தப் பாடல் காட்சியைப் பார்க்க முடிகிறது.
Last edited by jaisankar68; 1st January 2013 at 11:52 PM.
-
1st January 2013 11:47 PM
# ADS
Circuit advertisement
Bookmarks