-
4th January 2013, 04:52 PM
#1321
Senior Member
Seasoned Hubber

Originally Posted by
Vankv
நான் தமிழுடன் மறுபடியும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள இந்தத் திரி நல்லதொரு சந்தர்ப்பத்தை எனக்கு அளித்திருக்கிறது. அதற்கு நான் நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்குத்தான் நன்றி கூறவேண்டும்.
எல்லோருடைய உணர்வுகளையும் ஒரு வரியில் கூறிவிட்டீர்கள். நன்றி.
-
4th January 2013 04:52 PM
# ADS
Circuit advertisement
-
5th January 2013, 12:18 AM
#1322
நடிகர் திலகத்தின் திரிக்கு வருகை தந்து குறுகிய நாட்களிலே பலரது கவனத்தை கவர்ந்திருக்கும் வனஜா அவர்களே! உங்கள் வருகைக்கு நன்றி! பலரையும் எழுத தூண்டும் உங்கள் எழுத்து நடைக்கு நன்றி! இந்த திரியில் இதுவரை அதிகமாக பங்கு பெற்ற சாரதா, சக்திபிரபா, ரோஷன், tfmlover மற்றும் தமிழ் என்ற ஐந்து பெண்மணிகளுக்கு பிறகு ஆறாம் தினையாக வந்துள்ள உங்களை மன மகிழ்ச்சியோடு வரவேற்கிறேன்! தொடருங்கள்! [உஷா சங்கர் மற்றும் சுதா ஆகிய இரு பெண்மணிகளும் கூட தங்கள பங்களிப்பை இந்த திரிக்கு தந்துள்ளனர். அவர்களையும் இந்த நேரத்தில் நினைவு கூறுவோம்]
அதே போன்று புதிய வரவாக களமிறங்கியிருக்கும் நண்பர் முத்துராமன் அவர்களையும் நல்ல இடம் நீங்கள் வந்த இடம் என கூறி வருக வருக என வரவேற்கிறேன்!
கோபால்,
"மாணிக்கத்தை" எடுத்தால் மட்டும் போதாது. அதை துடைத்து பளிச்சென அதன் பிரகாசம் பலருக்கு தெரியும்படி செய்ய வேண்டும். அதற்கு ஏன் இந்த தாமதம்?
அன்புடன்
இந்த திரியில் பங்களித்தவர்களைப் பற்றிய எனது பதிவில் பெயர் விடுப்பட்டு போன அருமை தம்பி செந்திலிடம் (ஹரிஷ்) சொல்ல விரும்புவது மன்னிக்க வேண்டுகிறேன். அது போன்றே சேலம் பாலா ஹைதராபாத் ரவிக்குமார் ஆகியோரிடமும் அதே வார்த்தைகள்!
Last edited by Murali Srinivas; 5th January 2013 at 12:20 AM.
-
5th January 2013, 01:59 PM
#1323
Senior Member
Devoted Hubber
திரு முரளி சார்
இந்த திரியில் இருக்கிறேன் என்பதைவிட உங்கள் மனதில் இருக்கிறேன் என்பதுதான் எனக்கு பெருமகிழ்ச்சி
TAMIL THAAYIN THALAIMAGAN NADIGARTHILAGAM
-
6th January 2013, 01:53 PM
#1324
Junior Member
Newbie Hubber
சவாலே சமாளி- நடிப்பு தெய்வத்தின் 150 ஆவது காவியம்- 1971- பகுதி-1
1970 களில், 1971 ஆரம்பத்தில்,நடிகர்திலகத்திற்கு, வியட்நாம் வீடு,ராமன் எத்தனை ராமனடி, எங்கிருந்தோ வந்தாள் , சுமதி என் சுந்தரி தவிர்த்து , மிக மிக சுமாரான சராசரியான படங்களே அமைந்து ,அவருடைய youthful ,smart ,trim and handsome காலகட்டத்தை வீணடித்து கொண்டிருந்தன.இந்த நேரத்தில்,சரியான நேரத்தில், எங்களுக்கு full meals என்று சொல்லத்தக்க முறையில் அமைந்த landmark படம்தான் சவாலே சமாளி. சிவாஜி இந்த படத்தில் வேட்டி கட்டிய மன்மதனாக ,அவ்வளவு அழகாக தோற்றமளிப்பார். விவசாயமும்,தொழில் துறையும் நாட்டின் இரு கண்கள்.தொழில் துறையில் இரும்புத்திரை வந்ததால், அதே பாதையில் விவசாயிகளின் பிரச்சினையை கையிலெடுத்தது சவாலே சமாளி. கதாநாயகனுக்கு அதே பெயர்-மாணிக்கம்,அப்பா-மகன் எதிர்-நிலை, இறுதி காட்சி தீ பந்தம் ,வீண் பழி என்ற பல ஒற்றுமைகள். வேற்றுமைகள்- இரும்பு திரை தொழிலாளர் பிரச்சினையை முன் நிறுத்தியது. சவாலே சமாளி ,வர்த்தக ரீதியாக குடும்ப பிரச்சினைகளை முன் நிறுத்தியது(தொட்டு கொள்ள ஊறுகாயாய் விவசாய பிரச்சினை). ஒரு சராசரி ரசிகனின் பார்வையில் ஈர்ப்பு அதிகம் நிறைந்தது சவாலே சமாளி.
மல்லியம் ராஜ கோபால் ,மிக சுவாரஸ்ய திரைக்கதைக்கு, K .S .கோபாலக்ருஷ்ணனின் மனிதம் நிறைந்து வழியும் இயல்பு வசனங்களையும்,கே.பாலச்சந்தரின் twist நிறைந்த sharp ,contemporary appeal நிறைந்த வசனங்களையும் கலந்து ,புது பாதை போட்டிருந்தார்.
விவசாய கூலி குடும்பத்தை சேர்ந்த மாணிக்கம்,சுய மரியாதை நிறைந்த, தலைமை பண்புகள் கொண்ட , சக-விவசாயிகளின் பிரச்சினையை புரிந்து கொண்ட ஒரு கிராமத்து(புளியன்சேரி ) வாலிபன்.அப்பா ஐயா கண்ணு, பெரிய பண்ணைக்கு விசுவாசமான வேலையாள்.தங்கை காவேரி ,மாரிமுத்து என்ற கொல்லன் பட்டறை வாலிபனை மணந்து, அவன் இன்னொரு பெண்ணுடன் வாழ்வதால் ,பிறந்த வீட்டிற்கு விரட்ட பட்டவள். மாணிக்கத்தின் ,விவசாய கூலி சார்பு நிலையும், பண்ணை வீட்டிற்கு அருகில் இருக்கும் சிறு நிலத்தில் போடபட்ட கொட்டகையும், பெரிய பண்ணை கண்ணை உறுத்த, தான் காவேரி கல்யாணத்திற்காக கொடுத்த பணத்திற்காக, அந்த நிலத்தை கொடுக்க வற்புறுத்தி, தவறினால், மாணிக்கத்தை பெரிய பண்ணைக்கே வேலையாளாய் சேர சொல்லி ,அந்த முயற்சியில் வெற்றியும் அடைகிறார் பெரிய பண்ணை.(சின்ன பண்ணை,மகன் ராஜவேலு ஆலோசனைகளோடு).பட்டணத்தில் படித்து விட்டு ,நாகரிக மிடுக்கோடு வரும் ,பெரிய பண்ணையின் மகள் சகுந்தலாவை ,ரயில் நிலையத்தில் அழைத்து வர சென்று, அவள் பேசும் பேச்சால் ஆவேச பட்டு,நடு வழியில் சென்று விடுகிறான் மாணிக்கம். ராஜவேலு விற்கும், மாணிக்கத்திற்கும் ,ஒரு கை கலப்பு ஏற்பட, மாணிக்கம் வேலையை விட்டு நீக்க படுகிறான்.
இதற்கிடையில்,சகுந்தலாவை அழைத்து கொண்டு ,அவளுக்காக பார்த்திருக்கும் மாப்பிள்ளை,அவர்கள் வீட்டாரை அழைத்து வர ராஜவேலு சென்றிருக்கும் போது , சின்ன பண்ணை சூழ்ச்சியால்,பஞ்சாயத்து தேர்தலில் தனக்கு எதிரே நிற்கும் மாணிக்கம் தோற்றால் ஊரை விட்டு ஓட வேண்டும் எனவும்,தான் தோற்றால் தன பெண்ணை கல்யாணம் செய்து கொடுப்பதாகவும், மாணிக்கத்துடன் ஒப்பந்தம் போடுகிறார் பெரிய பண்ணை. இதன் படி தேர்தலில் தோற்கும் பெரிய பண்ணை ,தன மகளை மாணிக்கத்திற்கு கல்யாணம் செய்து வைக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ள பட்டு ,சகுந்தலாவின் ஒப்புதல் இன்றி,வற்புறுத்த பட்டு கல்யாணம் நடந்தேறுகிறது.
வேண்டா வெறுப்பாய் கல்யாணத்திற்கு உடன் படும் சகுந்தலா, மாணிக்கத்துடன் தாம்பத்ய வாழ்க்கையில் ஈடு பட மறுப்பதால், அவளே மனமொப்பும் வரை அவளை தொடுவதில்லை என்று சத்தியம் செய்கிறான். தனக்கேற்ற மனைவியாக அவளை மாற்ற முயல்கிறான் சிறிது அதிக பட்ச குதர்கத்துடன். சகுந்தலா பிறந்த வீடு சென்று, வர மறுக்க மாணிக்கம், விடியும் வரை கெடு விதித்து,திரும்பி வரவில்லையேல் தாலி தன கையில் வந்து சேர வேண்டும் என்கிறான். அம்மாவின் ,வற்புறுத்தலால்,சகுந்தலா மீண்டும் ,மாணிக்கம் வீட்டுக்கு வருகிறாள். ஆனால் மாணிக்கம் அவளை நாற்று நட வற்புறுத்த,அந்த உழைப்பினால், நோய் வாய் படுகிறாள்.தற்கொலை முயற்சியில் ஈடு படும் சகுந்தலாவை காப்பாற்றி மனம் திறக்கிறான் மாணிக்கம். வீட்டுக்கு வந்து, சகுந்தலாவை ,அழைத்து செல்ல முயலும் ராஜவேலுவை,காவேரி கடுமையாய் பேசி விட, கோப பட்டு ,ராஜவேலு ,நாயை வைத்து ஆடையை பறிக்க, காவேரி ,அம்மனுக்கு சார்த்திய புடவையை தன மேல் போர்த்து , தீபந்தம் ஏந்தி வயலுக்கு நெருப்பு வைக்கிறாள். அவளிடம் இருந்து, அதை பிடுங்கி மாணிக்கம் பழியை ஏற்று, உண்மையை சொல்லாமல்,பெரிய பண்ணை வீட்டில் சவுக்கடி படுகிறான். மனம் மாறி வந்த காவேரி கணவன் ,மாரிமுத்து, ராஜ வேலுவை பழி வாங்க எண்ணி ,அவன் தாயின் வேண்டுகோளால் விட்டு விடுகிறான்.மனைவியை அழைத்து செல்கிறான். சகுந்தலா தன கணவன் உள்ளமறிந்து, தாம்பத்யத்திற்கு உடன் பட எல்லாம் சுகமே.
(தொடரும்)
Last edited by Gopal.s; 16th January 2013 at 07:28 AM.
-
6th January 2013, 05:48 PM
#1325
Junior Member
Newbie Hubber
சவாலே சமாளி- 1971- பகுதி-2
சவாலே சமாளியை பொறுத்த வரை, சிவாஜியை அதிகம் சிரம படுத்தாத பாத்திரம். அவ்வளவு இலகுவாய் கையாள்வார். அப்பாவுடன் செல்லமான முரண்பாடு, ஆதிக்க வர்கத்திடம் இயல்பான ஒரு எதிர்ப்புணர்வு,அதனால் ,அவர்களுடன் சவால் விடும் தோரணை,சுய மரியாதையை விட்டு கொடுக்காத ஒரு பிடிவாதம். அந்த பாத்திரத்திடம் ஈர்க்க பட்டு விடுவோம். ஜெயலலிதா தகாத வார்த்தை பேசும் போது ,பதில் பேசாமல், வண்டியை ஓட்டி அவரை விட்டு செல்லும் ரோஷம்,அம்மா சின்ன வயசில பால் வடியும் மொகம்னு சொல்லுவியே,மோர் வடியுது என்னும் கிண்டல்,சேரான துணியை துவைத்து போட சொல்லும் ஜெயலலிதாவை ,நீ என்ன என் பொண்டாட்டியா என்னும் நக்கல்,ராஜவேலு விடம் காட்டும் சீற்றம், கல்யாணம் ஆன இரவில் வர்க்க பேதம் பற்றி பேசி, அவருடன் தனக்கு முதல் பார்வையில் ஏற்பட்ட ஈர்ப்பு பற்றி பேசி, முரண் படும் போது , தொடுவதில்லை என்று சத்யம் செய்வது, சாப்பிட மாட்டேன் என்று சொல்லி,பசி தாளாமல் பழைய சோற்றை அள்ளி தின்னும் மனைவியை மற்றோர் எதிரில் காட்டி அவமான படுத்தும் நக்கல், உன்னோட வயல்தானே மிதி என்று மனைவியை நாற்று நட சொல்வது,ஜுரம் வந்து அவதி படும் மனைவியிடம் உருகுவது, அதனை மறைந்து நின்று பார்க்கும் அவள் தந்தையிடம் தனக்கும் தகப்பனின் மனம் புரியும் என்று உணர்த்துவது, தற்கொலை பண்ண முயலும் மனைவியை காப்பாற்றி தன உள்ளம் திறப்பது,இறுதி காட்சியில் உண்மையை மறைத்து,தண்டனை அனுபவிப்பது(தந்தை கையால்) என்று அதகளம் பண்ணுவார்.
வீ.எஸ்.ராகவன் ,அடிமை ரோலுக்கு படு பொருத்தம்.மகன் விறகு வெட்டி காய்த்த கைகளை பார்த்து உருகுவது, சவாலில் ஜெயித்த சிவாஜியை ஒன்றும் பண்ண முடியாமல், தன்னை துன்புறுத்தும் ராஜவேலு விடம் விசுவாசம் காட்டுவது,உன்னை வெட்டி போட்டுடுவேண்டா என்று மகனை திட்டி, மருமகளை பார்த்து அதற்கும் வழியில்லாம பண்ணிட்டியே என்று உருகுவது,இறுதி காட்சியில் தன கையாலேயே மகனை சவுக்கால் அடித்து விட்டு வருந்துவது எல்லாம் அருமை.
பகவதி ,பெரிய பண்ணையின் கம்பீரம்,குரூரம் எதுவும் காண்பிக்க இயலாமல் miscast ஆக தெரிவார்.நம்பியார் கூட இருந்து அதனை ஈடு செய்வார்.
நாகேஷ் ,கொடுத்த பாத்திரத்தில் பிய்த்து வாங்குவார். இவர் பாத்திரம் படத்திற்கு பெரிய பலம். ஜெயா மேடம், எங்கிருந்தோ வந்தாளுக்கு அடுத்த ,அருமையாய் நடிப்பில் score பண்ணிய படம்.அந்த பாத்திரத்தில் நமக்கு அனுதாபம் வரும் அளவு அருமையாய் நடிப்பார். தந்தையென்று அறியாமல் செருப்பை கழுவி விட ,பிறகு ஒருவரை ஒருவர் அறிந்து உள்ளுக்குள் மருகும் காட்சியில் இருவருமே அபாரமாய் நடித்திருப்பார்கள். முத்து ராமன்,விஜய குமாரி அவர்கள் பங்கிற்கு ,மறுமணம் பற்றி கேள்வி பட்டு முத்து ராமன் கேள்வி மேல் கேள்வி கேட்க , எல்லாவற்றுக்கும் ஆமாம் சொல்லி, அதுக்கு நீ சம்மதிச்சியா என்று கேட்டிருந்தால் இல்லைன்னு சொல்லியிருப்பேனே என்று கணவனை உருக்கும் இடம் அருமை.
supporting cast ,பாத்திர வார்ப்புகள் அருமை. நடித்தவர்களும் அருமை. வரலக்ஷ்மி உட்பட.
(தொடரும்)
Last edited by Gopal.s; 9th January 2013 at 07:11 PM.
-
6th January 2013, 06:14 PM
#1326
Junior Member
Newbie Hubber
சவாலே சமாளி- 1971- பகுதி-3
சவாலே சமாளியை A ,B ,C எல்லா centre க்கும் பிடிக்கும் வகையில் திரைகதை வசனம் எழுதி இயக்கி,தயாரித்திருப்பார் மல்லியம் ராஜகோபால். இதற்கு முன் தெய்வ பிறவி கதை தன்னுடையது என்று கிருஷ்ணன்-பஞ்சு,K .S .G முதலியோருடன் பிணங்கியவர் .பிறகு அதே கிருஷ்ணன்-பஞ்சு இயக்கத்தில் ,N T படமான இளைய தலை முறைக்கு திரைகதை,வசனம் எழுதினார் . லட்சுமியை அறிமுகம் செய்த இயக்குனர்.(ஜீவனாம்சம்).திறமை இருந்தும் சவாலே சமாளி என்ற one movie wonder வகையில் சேர்ந்தது அவர் துரதிர்ஷ்டமே.இன்னும் நிறைய சாதித்திருக்க வேண்டியவர்.திறமை மிக்கவர்.
வின்சென்ட் காமரா பிரமாதம். கிராமம், இயற்கை, இரவு காட்சிகள் எல்லாம் அவ்வளவு அழகு. சிவாஜிக்கு கூடுதல் அழகு வின்சென்ட் படங்களில்.கமல் நடன உதவியாளராய் பணியாற்றிய N T படங்களில் இதுவொன்று.(மற்றது எங்கிருந்தோ வந்தாள் )
இந்த படத்தில் சொதப்பியவர் விஸ்வநாதன். தெலுங்கு பட dubbing range ல்தான் அத்தனை பாட்டும்.அன்னை பூமியென்று,சிட்டு குரூவிகென்ன(சுசிலா மட்டும் உழைத்து பாடுவார்),ஆனைக்கொரு காலம் வந்தா,நிலவை பார்த்து, என்னடி மயக்கமா எல்லாமே படு மோசமான நாலாந்தர பாடல்கள். 150 வது படத்தில் இசை ,பாடல்கள் நன்கு அமைந்திருந்தால் ,வெள்ளி விழாவே கண்டிருக்கும்.
ஆனால்,பெண்ணுரிமையாளர்கள் ,இந்த படத்தை பார்த்தால் ,மூர்சசையே போட்டு விடுவார்கள்.பெண்ணை பணயம் வைப்பது,விரும்பாத பெண்ணை மணந்து சித்திரவதை செய்வது(வார்த்தையால்),என்று கதாநாயகனின் வீரம் முடக்க பட்டு, விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு பெப்பே காட்ட பட்டு விடும்.
நேர்மையான திரைகதையமைப்பில், எடுத்து கொண்ட கருவில் என்று பார்த்தால் இரும்பு திரை ஒரு காவியம். சுவாரசியம் என்று பார்த்தால் சவாலே சமாளிதான்.(ஜன ரஞ்சகம்)
எல்லா ஊர்களிலும் நன்கு ஓடி ,வசூல் புரட்சி செய்த காவியம். 150 வது படம் என்ற நற்பெயரை காப்பாற்றி கொடுத்தது.மயிரிழையில்(??) சிறந்த நடிகர் பட்டம் (பாரத்) சிவாஜிக்கு பெற்று தர வேண்டிய வாய்ப்பை இழந்தது.காரணம் இன்று வரை புரிந்த மர்மம்தான்.
(முற்றும்)
Last edited by Gopal.s; 16th January 2013 at 07:26 AM.
-
7th January 2013, 01:15 AM
#1327
இன்றைய தினத்தில் மதுரை மாநகரில் நடைபெற்ற பராசக்தியின் வைர விழா சீரும் சிறப்புமாக நடைபெற்றிருக்கிறது. இன்று காலை 10 மணிக்கு துவங்கிய விழா மதியம் 2.30 மணி வரையிலும் மீண்டும் மாலை 6 மணிக்கு துவங்கி இரவு 9 மணி வரையிலும் நடைபெற்றிருக்கிறது.
காலையில் நடிகர் திலகம் நடித்த பல்வேறு படங்களின் கிளிப்பிங்க்ஸ் திரையிடப்பட்ட நிகழ்வோடு விழா தொடங்கியிருக்கிறது. 11 மணிக்கு மேல் விழாவிற்கு அழைக்கப்பட்டிருந்த சிறப்பு விருந்தினர்கள் உரையாற்றியிருக்கின்றனர். இறுதியாக சிறப்பு விருந்தினராக வந்திருந்த திருச்சி சிவா அவர்கள் மதியம் 1.30 மணிக்கு பேச துவங்கி 2.30 வரை பேசியிருக்கிறார். நண்பகல் நேரம் ஆயினும் கூட ஒருவர் கூட கலைந்து செல்லாமல் பேச்சை கேட்டிருந்தனராம்.
மாலை 6 மணிக்கு மெல்லிசை கச்சேரி நடைப்பெற்றிருகிறது. நடிகர் திலகம் நடித்த படங்களிருந்து பாடல்கள் பாடப்பெற்றனவாம். மெல்லிசை குழுவில் இசை கருவிகளை இசைத்தவர்களும் பாடகர்களும் தங்கள் பங்கை செவ்வனே செய்தனர் என்று கேள்வி.
இனி சில விழா துளிகள்.
விழா நடைபெற்ற இடம் காமராஜர் சாலையில் அமைந்துள்ள v.s.செல்லம் கல்யாண மஹால். ஒரு காலத்தில் மதுரையில் மிகவும் பிரபலமாக விளங்கிய v.s.செல்லம் சோப் நிறுவனத்தினர் ஒரு திரையரங்கை புதிதாக கட்ட வேண்டும் என்று எண்ணத்தில் காமராஜர் சாலையில் [மாரியம்மன் தெப்பகுளத்திற்கு சற்று முன்னதாக] கணேஷ் தியேட்டருக்கும் இந்தியன் எக்ஸ்பிரஸ் /தினமணி பத்திரிக்கை அலுவலகத்திற்கும் நடுவில் உள்ள இடத்தை தேர்ந்தெடுத்தனர். ஆனால் பிறகு அவர்கள் திட்டம் மாறி அந்த இடத்தில கல்யாண மண்டபம் கட்டினார்கள். தியேட்டர் என்பதற்காக பெரிய இடம் வாங்கப்பட்டு பின்னர் அது மண்டபமாக மாறியதால் மதுரையில் அமைந்துள்ள பெரிய திருமண மண்டபங்களில் இதுவும் ஒன்று. அந்த மண்டபம் வழிய வழிய ஆட்கள திரண்டு விட்டனராம்.உள்ளே நிற்க கூட இடம் இல்லாமல் மண்டபத்திற்கு வெளியே, மண்டப வளாகத்தையும் தாண்டி சாலையில் ரசிகர்கள் கூட்டம் அணி திரண்டிருந்ததாம். காலை பத்து மணிக்கு விழாவிற்கு சென்ற நண்பன் அப்போதே மண்டபத்தில் இருந்த கூட்டத்தைப் பார்த்துவிட்டு சிறிது நேரத்தில் மண்டபம் நிறைந்து விடும் என அலைபேசியில் தகவல் சொன்னான். அதே போன்றே நடந்தது. ஆயிரக்கணக்கில் ஆட்கள் வந்திருந்ததாக தகவல்.
காலையில் கே.கே.நகரில் ராஜா முத்தையா மன்றம் மற்றும் நீதிமன்றத்திற்கு எதிரில் அண்மையில் காலமான திரு வி.என். சிதம்பரத்தால் அமைக்கப்பட்டுள்ள நடிகர் திலாக்தின் சிலைக்கு மாலை அணிவித்து விட்டு ரசிகர்கள் வாகனங்களில் ஊர்வலமாக விழா மண்டபத்திற்கு சென்றதாக தகவல். செல்லும் வழியெல்லாம் ஒரே அலப்பரையாம்.
மாலையில் மண்டபத்தை சுற்றிலும அமைக்கப்பட்டிருந்த நடிகர் திலகம் பானர்களுக்கும் கட் அவுட்களுக்கும் மாலை எல்லாம் அணிவிக்கப்பட்டு தெருவில் ஒரே அமர்க்களமாம்.(வழக்கம் போல்) போலிஸ் வந்து ரசிகர்களை மண்டப வளாகத்திலேயே கொண்டாட்டங்களை வைத்துக் கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்தனராம்.
மதியம் உணவு தயாராக இருந்தும் கூட காலை விழா முடியும் வரை யாரும் எழுந்து செல்லாமல் பேச்சை ரசித்து கேட்டனராம். நெருங்கிய உறவினர் வீட்டு திருமணங்களில் கூட சாப்பிட்டவுடன் கிளம்பி போய் விடும் இன்றைய காலகட்டத்தில் மதிய உணவு அருந்திய பிறகும் கூட, அதன் பிறகு மாலை 6 மணிக்குதான் விழா நிகழ்ச்சிகள் என்று தெரிந்திருந்த போதும் யாரும் மண்டபத்தை விட்டு வெளியேறாமல் அங்கேயே அமர்ந்து பல பழைய நிகழ்வுகளை அசை போட்டுக் கொண்டிருந்தனராம்.
நடிகர் திலகத்தின் மேல் ரசிகர்ள் வைத்துள்ள இத்தகைய அன்பை சுட்டிக் காட்டிய திருச்சி சிவா இப்படி பேசினாராம்.ஒரு மனிதன் வாழும் போது மனிதர்கள் அபிமானிகள் அவனை சூழ்ந்திருப்பது அதிசயமல்ல. ஆனால் ஒருவன் மறைந்த பிறகு, அவன் இறந்து 11 வருடங்கள் ஆன பிறகு, இறக்கும் போது எந்த அரசு/கட்சி பதவிகளிலும் இல்லாத ஒரு மனிதன், அவன் பெயர் நினைவில் நிறுத்தப்படுகிறது, அவன் புகழை பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்று சொன்னால் அதன் பின்னால் வலுவான சக்தி இயங்க வேண்டும், அப்படிதான் நாம் இதுவரை கண்டு வருகிறோம். ஆனால் நடிகர் திலகத்தின் புகழ் பாடும் கூட்டத்தை பார்த்தோமென்றால் அரசியல் ரீதியிலான இயக்கம் பின்னணியில் இல்லை. அரசாங்க நிர்வாகத்தின் பின்துணை இல்லை. அரசு பதவிகளிலோ அல்லது அதிகாரிகள் மட்டத்திலோ இவற்றை தூக்கி நிறுத்தும் முயற்சிகள் இல்லை. இதை செய்தோம் என்றால் பட்டம் பதவி காசு பணம் என்று பிரதி பலன் கிடைக்ககூடிய வாய்ப்புகள் இல்லை. கூட்டத்திற்கு வந்து போவதற்கு காசு பணம் கொடுப்பதில்லை இத்தனை இல்லைகளையும் மீறி இங்கே ஆயிரக்கணக்கில் வந்திருக்கிறீர்கள் என்று சொன்னால் இன்னும் வர முடியாத இது போன்ற பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள் என்று சொன்னால் இப்படிப்பட்ட படை இப்படிப்பட்ட ஒரு மாஸ் வேறு யாருக்கும் அமைந்திருக்காது. இப்பேர்பட்ட ரசிகர்கள் இன்றும் இருக்கிறார்கள் என்று சொன்னால் நடிகர் திலகம் கொடுத்து வைத்தவர்.
ஏறத்தாழ ஒரு மணி நேரம் பேசிய சிவாவின் பேச்சு மிகவும் ரசிக்கத்தக்கதாய் அமைந்திருந்தது என்று சொன்னார்கள். மேடையிலும் மண்டபத்திலும் மகாத்மா பெருந்தலைவர் மற்றும் நடிகர் திலகத்தின் படங்கள் வைக்கப்பட்டிருந்தனவாம்.
இது நண்பர்கள் மூலமாக சேகரித்த தகவல்கள். மேலதிக்க தகவல்கள் கிடைத்தவுடன் இங்கே பகிர்ந்து கொள்கிறேன். இந்த விழாவை இத்துணை சிறப்பாக நடத்திய சந்திரசேகர் அவர்களுக்கும் மாநில நிர்வாகிகளுக்கும் பல்வேறு வகையில் உதவி ஓத்துழைப்பு நல்கிய அனைத்து நல இதயங்களுக்கும், வெளியே தன பெயரை விளம்பரப்படுத்திக் கொள்ளாமல் விழா சிறப்பாக நடைபெற உதவிய நண்பர் மதுரை சந்திரசேகர் போன்றவர்களுக்கும் நான்மாடக்கூடல் வாழ் நடிகர் திலகத்தின் ரசிகர்களுக்கும் நமது இதயங்கனிந்த நன்றியும் நல்வாழ்த்துகளும்!
தன் மன்னவன் யார் என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்த மதுரையே! உனக்கு என் சிரந்தாழ்ந்த வணக்கம்!
அன்புடன்
-
7th January 2013, 09:03 AM
#1328
Senior Member
Diamond Hubber

Originally Posted by
Murali Srinivas
நடிகர் திலகத்தின் மேல் ரசிகர்ள் வைத்துள்ள இத்தகைய அன்பை சுட்டிக் காட்டிய திருச்சி சிவா இப்படி பேசினாராம்.ஒரு மனிதன் வாழும் போது மனிதர்கள் அபிமானிகள் அவனை சூழ்ந்திருப்பது அதிசயமல்ல. ஆனால் ஒருவன் மறைந்த பிறகு, அவன் இறந்து 11 வருடங்கள் ஆன பிறகு, இறக்கும் போது எந்த அரசு/கட்சி பதவிகளிலும் இல்லாத ஒரு மனிதன், அவன் பெயர் நினைவில் நிறுத்தப்படுகிறது, அவன் புகழை பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்று சொன்னால் அதன் பின்னால் வலுவான சக்தி இயங்க வேண்டும், அப்படிதான் நாம் இதுவரை கண்டு வருகிறோம். ஆனால் நடிகர் திலகத்தின் புகழ் பாடும் கூட்டத்தை பார்த்தோமென்றால் அரசியல் ரீதியிலான இயக்கம் பின்னணியில் இல்லை. அரசாங்க நிர்வாகத்தின் பின்துணை இல்லை. அரசு பதவிகளிலோ அல்லது அதிகாரிகள் மட்டத்திலோ இவற்றை தூக்கி நிறுத்தும் முயற்சிகள் இல்லை. இதை செய்தோம் என்றால் பட்டம் பதவி காசு பணம் என்று பிரதி பலன் கிடைக்ககூடிய வாய்ப்புகள் இல்லை. கூட்டத்திற்கு வந்து போவதற்கு காசு பணம் கொடுப்பதில்லை இத்தனை இல்லைகளையும் மீறி இங்கே ஆயிரக்கணக்கில் வந்திருக்கிறீர்கள் என்று சொன்னால் இன்னும் வர முடியாத இது போன்ற பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள் என்று சொன்னால் இப்படிப்பட்ட படை இப்படிப்பட்ட ஒரு மாஸ் வேறு யாருக்கும் அமைந்திருக்காது. இப்பேர்பட்ட ரசிகர்கள் இன்றும் இருக்கிறார்கள் என்று சொன்னால் நடிகர் திலகம் கொடுத்து வைத்தவர்.
பாசமலருக்கு அழாதவன் மனுஷனாடே ! - சுயம்புலிங்கம்

-
7th January 2013, 11:15 AM
#1329
Junior Member
Seasoned Hubber
Mr Gopal,
Excellent analysis on Manickam.
Mr Murali Sir,
We too agree that Madurai city is very affectionate to our NT by giving more hits. We must thank Mr Chandasekarn for
doing this wonderful job by conducting numerous welfare schemes in the name of our NT.
-
7th January 2013, 06:37 PM
#1330
Mr. GOPAL.S,
Excellent analysis about two giant movies Irumbuthirai and Savale Samali.
Your way of analysing the charectors is something different and acceptable. For exgample, what you told about T.K.Bagavathi in savale samaali is correct. It is a miscast. If it was VKR, there would be little powerful (ex: Thiyagam).
MSV music is not that much poor in SS as you told. 'chittukuruvikkenna kattuppaadu' is the national award song for P.Susila. Only 'nilavaippaarthu vaanam sonnadhu' song is little bit like 'urainadai' form.
Verygood analysis.
Bookmarks