சூரியன் காலையில் உதித்தது மாலையில் மறைந்தது என்று சொன்னால் என்ன தோன்றும்? அது போன்றுதான் வசந்த மாளிகை படத்திற்கு மாபெரும் வரவேற்பு, பிரமாதமான வசூல் என்று சொல்வதும். இன்றல்ல நேற்றல்ல என்றென்றும் தமிழகத்தின் அனைத்து ஊர்களிலும் இதுதான் நிலைமை. அதற்கு மீண்டும் கோவை மாநகரம் சாட்சியாக மாறியிருக்கிறது.
சென்ற வருடம் கோவையில் நான்கு திரையரங்குகளில் வெளியாகி பெரு வெற்றி பெற்று வசூல் சாதனை கண்ட அழகாபுரி சின்ன ஜமீன் ஆனந்த் 1-ந் தேதி வெள்ளி முதல் கோவை ராயலில் தன் ஆட்சியை மீண்டும் ஆரம்பித்தார். ஆடி வெள்ளி, ஆடிப்பெருக்கு மற்றும் தென் மேற்கு பருவகாலம் காரணமாக கேரளத்தில் கொட்டும் பேய் மழை அதன் எல்லைகளை விரித்து அண்டையில் அமைந்துள்ள கோவை மாநகரையும் வெகுவாக நனைத்துக் கொண்டிருக்க அத்தனையும் தாண்டி முதல் இரண்டு நாட்களில் ரூபாய் இருப்பத்தையாயிரத்திற்கும் அதிகமாக வசூல் செய்திருக்கிறது[above Rs 25,000/-].
இன்றும் சரியான கூட்டம். மாலைக்காட்சிக்கு பெரிய வரவேற்பு. மொத்த டிக்கெட்டுகளில் 40 டிக்கெட்டுகள் மட்டுமே நின்று போயினவாம். அரங்கினுள்ளே அமர்க்களமாக இருந்தது என்று செய்தி. அரங்க வாசலிலே எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள்.
தகவல்களை பகிர்ந்து கொண்ட கோவை நண்பர் சக்திவேல், வடிவேல் மற்றும் புகைப்படங்களை அனுப்பிய நண்பர் Dr. ரமேஷ் ஆகியோருக்கு நன்றி.
https://mail.google.com/mail/u/0/?ui...w&sz=w997-h544
https://mail.google.com/mail/u/0/?ui...w&sz=w997-h544
அன்புடன்