-
3rd August 2014, 10:16 PM
#681
Senior Member
Diamond Hubber

Originally Posted by
joe
refrain from sweeping political statements in NT thread.
Well said Joe. ஆனால் நடிகர் திலகத் திரியில் பெரும்பான்மை ரசிகர்கள் திராவிட கழக எதிர்ப்பு மனநிலைக் கொண்டவர்கள் என்றே பதிவுகள் உணர்த்துகிறது. காமராஜர் புகழ் பாடும் பல பதிவுகளையும் பார்க்கிறோம். நடிகர் திலகமும், அரசியலும் என பிரத்யேகத் திரியொன்றை ஆரம்பித்து அதில் இதுபோன்ற சிலாகிப்புகள், பார்வைகளைப் பதியலாம். நடிகர் திலகமும் அவரது படைப்புகளும் என்ற திரியில் திராவிட இயக்க கருத்தியல்களை விமர்சிப்பது அழகல்ல.
சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...
-
3rd August 2014 10:16 PM
# ADS
Circuit advertisement
-
3rd August 2014, 10:55 PM
#682

Originally Posted by
Gopal,S.
பாவ மன்னிப்பு
தேவிகா சம்பத்த பட்ட அனைத்து காதல் காட்சிகள். ரஹீமாக சிவாஜி உள்ளூர ஆசையிருந்தாலும் , சந்தர்ப்ப-சூழ்நிலை கருதி restraint ஆக வெளியிடும் முறை.
பாடாமல் பாடி விடும் பாலிருக்கும் பாட்டில் எவ்வளவு அழகு இந்த திராவிட மன்மதன்.!!!!
சில வருடங்கள் முன்பு நான் எழுதிய ஒரு பதிவிலிருந்து சில வரிகள்!
Let me take the first film they starred together. Paava Mannippu. As everyone knows, Mary loves Rahim but he is reluctant to accept her. The way she would express her love in her words, eyes and body language would be so graceful. Take the scene before Paalirukkum song. NT would be tying the புறா கூண்டு and she would come behind and talk. You have to see the expression. When the song ends, the pallavi
பாலிருக்கும் பழமிருக்கும்
பசியிருக்காது
பஞ்சணையில் காற்று வரும்
தூக்கம் வராது
would be sung without music. கண்ணில் காதலும் கண்ணீரும் சேர்ந்து ததும்ப நடிகர் திலகத்தின் கைகளை பிடித்து அந்த உள்ளங்கைகளில் தன் முகத்தை சேர்த்து இனிமேல் சொல்வதற்கு ஒன்றுமில்லை. என் காதலை உன்னிடம் கொடுத்து விட்டேன் என்று சொல்லாமல் சொல்லி விட்டு அப்படியே விலகிப் போவார். நளினம் என்றால் அப்படி ஒரு நளினம் தெரியும்.
அன்புடன்
-
Post Thanks / Like - 0 Thanks, 3 Likes
-
4th August 2014, 04:29 AM
#683
Junior Member
Newbie Hubber

Originally Posted by
venkkiram
Well said Joe. ஆனால் நடிகர் திலகத் திரியில் பெரும்பான்மை ரசிகர்கள் திராவிட கழக எதிர்ப்பு மனநிலைக் கொண்டவர்கள் என்றே பதிவுகள் உணர்த்துகிறது. காமராஜர் புகழ் பாடும் பல பதிவுகளையும் பார்க்கிறோம். நடிகர் திலகமும், அரசியலும் என பிரத்யேகத் திரியொன்றை ஆரம்பித்து அதில் இதுபோன்ற சிலாகிப்புகள், பார்வைகளைப் பதியலாம். நடிகர் திலகமும் அவரது படைப்புகளும் என்ற திரியில் திராவிட இயக்க கருத்தியல்களை விமர்சிப்பது அழகல்ல.
இங்கு அரசியல் பெரும் பாலும் விவாதிக்க படுவதில்லை.யாரும் ஊக்குவிப்பதும் இல்லை.ஆனால் சிவாஜி ரசிகர்கள் என்பதில் தமிழ் நாட்டில் இருக்கும் அனைவரும் அடங்குவர்.அதனால் எல்லா கருத்து கொண்டவர்களும் உண்டு.
என்னை எடுத்து கொண்டால் ,சிவாஜியின் ஆரம்ப அரசியல் தி.மு.க உறவு ,அவர் முன்னேற்றத்திற்கு உதவியது ,அண்ணா,கலைஞர் மூலம். ஆனால் அடிப்படை கருத்தியல் முரண்பாடு கண்ட பின் ,அவர் உச்சம் தொட்ட 58-65 கால கட்டம் போல ,அதற்கு பிறகும்,அவர் அரசியலில் இருந்து விலகி,இறுதி வரை ,நடிகர் என்ற பணி ஒன்றை மட்டும் தொடர்ந்திருந்தால் ,இன்னும் அதிக புகழை,அங்கீகாரத்தை அடைந்திருக்கலாம் என்ற கருத்து உள்ளவன்.எனக்கு ஈ .வெ .ரா,அண்ணா,காமராஜ் மேல் பிடிப்பு உண்டு. கலைஞரின் ரசிகன்.ஆனாலும் எந்த கட்சியாலும் ,ஆட்சியாலும் அந்த கலைஞன் நல்ல முறையில் அங்கீகரிக்க படவில்லை என்று குமுறுபவன்.
முரளி ,பெருந்தலைவர் கட்சி.அவர் மறைவுக்கு பிறகும்,பழைய காங்க்ரஸில் தொடர்ந்திருக்கலாம் என்று நினைப்பவர்.1976 க்கு பிறகான அரசியலில் உடன்பாடு இல்லாதவர்.
ராகவேந்தர் சார், சிவாஜி செய்ததெல்லாம் சரியானதே என்ற கொள்கை உள்ளவர்.
ரவி கிரண் , மாற்று கருத்து உடையவர். தி.மு.க எதிர்ப்பு சற்றே ஓங்கி நிற்கும்.
ஆனாலும் ,இங்கு நடிகர்திலகம் மட்டுமே மூலவர்.அரசியல் வந்தால் ,அது நடிகர்திலகம் சார்ந்ததாக மட்டுமே இருக்கும்.ஏனென்றால் பல அரசியல் கட்சிகள் அவருக்கெதிரான துர்பிரசாரம்,பொய் கருத்துகள் ,அனாகரிக பேச்சுகள் இவற்றை செய்துள்ளதால்,அந்த குறிப்புகள் எதிர்-மறை குறிப்பாக அவ்வப்போது வெளிப்படுவது தவிர்க்க இயலாததே
Last edited by Gopal.s; 4th August 2014 at 04:31 AM.
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
4th August 2014, 08:09 AM
#684
Junior Member
Veteran Hubber

Originally Posted by
venkkiram
well said joe. ஆனால் நடிகர் திலகத் திரியில் பெரும்பான்மை ரசிகர்கள் திராவிட கழக எதிர்ப்பு மனநிலைக் கொண்டவர்கள் என்றே பதிவுகள் உணர்த்துகிறது. காமராஜர் புகழ் பாடும் பல பதிவுகளையும் பார்க்கிறோம். நடிகர் திலகமும், அரசியலும் என பிரத்யேகத் திரியொன்றை ஆரம்பித்து அதில் இதுபோன்ற சிலாகிப்புகள், பார்வைகளைப் பதியலாம். நடிகர் திலகமும் அவரது படைப்புகளும் என்ற திரியில் திராவிட இயக்க கருத்தியல்களை விமர்சிப்பது அழகல்ல.
ஆலோசனைகளுக்கு நன்றி !
ஆனால் அதற்க்கு இங்கு agmark அரசியல் கட்டுரைகள், சிலாகிப்புகள், எதுவும் பதியவில்லையே !
காமாலை வந்தவனுக்கு பார்பதெல்லாம் மஞ்சள் என்பதுபோல அரசியல் கண்ணோட்டத்துடன் பார்ப்பவர் கண்களுக்கு எந்த உண்மையை சொன்னாலும் அது அரசியலாகதான் தெரியும்.
காமராஜர் மற்றும் நடிகர் திலகம் உறவு என்பது ஒரு நல்ல தலைவனை அதுவும் தமிழகத்திற்கு, தமிழ் இனத்திற்கு நல்லது மட்டுமே செய்தவரை அவரது நேர்மையை தலைமையாக ஏற்றுக்கொண்டு அரும்பணி ஆற்றிய ஒரு உண்மை தொண்டன் என்ற உறவாகும்.
தகுதி உள்ளவர்களை தான் அவர்கள் பிறந்தநாளில் இவர்களை பற்றிய கட்டுரை இங்கு பதியப்பட்டுள்ளது. தகுதி இல்லாத மற்ற ஆட்கள் பற்றி தகவல் என்றுமே இந்த திரியில் பதிவாக வந்ததில்லை. உண்மை தகவல்கள் பதிவதில் தவறு இல்லவே இல்லை. அது அரசியலும் அல்ல !
எந்த ஒரு தனிப்பட்ட கட்சியையும் இங்கு பாராட்டி அரசியல் கட்டுரை இந்த திரியில் ஒரு காலத்திலும் புனயபடவில்லை அது திராவிட கட்சியோ காங்கிரஸ் கட்சியோ அல்லது இதர கட்சிகளோ !
பார்பவர்களின் கண்ணோட்டத்தில் தான் சரியும் தவறும்..!
Last edited by RavikiranSurya; 4th August 2014 at 08:19 AM.
-
4th August 2014, 12:57 PM
#685
Junior Member
Veteran Hubber
1981 ஜூன் மாத பொம்மை இதழில் யார் இன்றைய SUPERSTAR என்ற கேள்வியும் ...அழைத்தாலும் அழைக்காவிட்டாலும் என்றும் நடிகர் திலகம் தான் SUPERSTAR என்ற நாசூக்கான பதிலும் !
-
4th August 2014, 08:18 PM
#686

Originally Posted by
Gopal,S.
ஜோவுடன் உடன் படுகிறேன். 8 வயது சிறுவனாக ஹிந்தி திணிப்பு எதிர்ப்பில் பங்கு பெற்றேன்.
ஆறு வயது சிறுவனாக இருந்த இவர் [1958 நவம்பர் - 1965 ஜனவரி] அந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டு கொடி பிடித்தாராம். இது போன்ற அள்ளி விடப்படும் திராவிடப் பொய்களைத்தான் நாம் இங்கே அடிக்கடி சுட்டிக் காட்டுகிறோம் [ஜோ, sorry]. கோபால், உங்களுக்கே ஒரு உண்மை உணரும் நேரம் தேவைப்படும் போலிருக்கிறதே.
நண்பர் RKS இங்கே குறிப்பிட்டது என்னவென்றால் அன்றைய நாளில் நடைபெற்ற மொழி போராட்டத்தின் போது அன்றைக்கு ஆட்சியில் இருந்த காங்கிரஸ் அரசையும் காங்கிரஸ் கட்சியையும் காங்கிரஸ் கட்சியை சார்ந்தவர்களையும் தமிழுக்கும் தமிழகத்திற்கும் எதிரானவர்கள் போல் சித்தரித்தார்கள். நடிகர் திலகத்தின் மேல் பகை கொண்டவர்கள் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு அவரையும் அது போல் சித்தரித்தார்கள். இது ஒரு பக்கம். நாத்திக வாதம் கொழுந்து விட்டெரிந்த நேரம். தில்லை நடராஜனையும் ஸ்ரீரங்கநாதனையும் பீரங்கி வைத்து பிளப்பது எந்நாளோ அந்நாளே நன்னாள் என்று மேடைதோறும் முழங்கினார்கள். மதம், புராண இதிகாசங்களுக்கு எதிராக தொடர்ந்து பிரச்சாரம் செய்தார்கள். இப்படி எதிர் மறை சூழலில் வெளியானது புராண படமான திருவிளையாடல். இது போதாதென்று யாரும் எதிர்பார்க்காத நிலையில் 1965 ஆகஸ்ட் இறுதியில் பாகிஸ்தான் குஜராத் அருகில் உள்ள கட்ச் பகுதி வழியாக நம் எல்லையில் அத்து மீறி நுழைந்து நம் மீது படை தொடுத்தது. நமது நகரங்களின் மீது இரவு நேரங்களில் வான் வழியாக குண்டுகள் வீசப்பட்டன. நமது நகரங்களில் உயிர் சேதத்தையும் பொருட்சேதத்தையும் தடுக்கும் பொருட்டு நமது இந்திய அரசு black out என்னும் விளக்குகளை முற்றிலுமாக அணைத்தல் முறையை அறிவித்து செயல்படுத்தியது. முன்னிரவு மற்றும் பின்னிரவு நேரங்களில் மக்கள் கூட்டமாக கூடும் இடங்களிலெல்லாம் போர் பீதி காரணமாக மக்கள் வெளியே வர அஞ்சிய நேரத்தில் திருவிளையாடல் செய்த சாதனைகள் அசாத்தியமானது. இதை முன்பே நானும் எழுதியிருக்கிறேன். அதைதான் நண்பர் RKS அவர்களும் குறிப்பிட்டார்.
அவர் எழுதிய ஒரு வார்த்தை பிரயோகத்தை பற்றி மட்டுமே ஜோ எதிர் வினை புரிந்தார். ஆனால் இதை சாக்காக வைத்து வினோத் போன்றவர்கள் கவுண்டமணி செந்தில் பாணியில் கிண்டலடித்தது மிகவும் வருந்ததக்கது. எத்துனை சத்தமாக பொய் முரசொலித்தாலும் உண்மை என்னும் ஆலய மணி உரக்கவே ஒலிக்கும். அதுதான் ஆண்டவன் கட்டளை. .
அன்புடன்
மற்றொன்றையும் குறிப்பிட வேண்டும். நடிகர் திலகத்தின் படங்களைப் பற்றி அவை சந்தித்த சோதனைகளைப் பற்றி எழுதம்போது அன்று நடந்தவற்றை பற்றி எழுத வேண்டி வரும். அது திரைப்படத்துறையைப் பற்றியதாகவும் இருக்கலாம். அரசியலாகவும் இருக்கலாம். இந்த திரியில் பங்களிப்பு செய்துக் கொண்டிருக்கும் நாங்கள் என்ன எழுத வேண்டும்/ எதைப் பற்றி எழுத வேண்டும் என்று தீர்மானிக்கும் அதிகாரத்தை வெளியிலிருக்கும் வேறு யாருக்கும் நாங்கள் வழங்கிடவில்லை எனபதையும் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
4th August 2014, 09:10 PM
#687
Junior Member
Newbie Hubber

Originally Posted by
Murali Srinivas
ஆறு வயது சிறுவனாக இருந்த இவர் [1958 நவம்பர் - 1965 ஜனவரி] அந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டு கொடி பிடித்தாராம். இது போன்ற அள்ளி விடப்படும் திராவிடப் பொய்களைத்தான் நாம் இங்கே அடிக்கடி சுட்டிக் காட்டுகிறோம் [ஜோ, sorry]. கோபால், உங்களுக்கே ஒரு உண்மை உணரும் நேரம் தேவைப்படும் போலிருக்கிறதே.
முரளி,
உங்கள் வாழ்க்கையில் நடக்க முடியாதது பொய்களாகி விட முடியாது.
பொய் தேசியத்தில் எனக்கு நம்பிக்கையில்லை.நேரு நெய்வேலி வந்த போது ஒன்றாவது படிக்கும் சிறுவனாக பள்ளியில் கொடி(தேசிய) பிடித்து நேருவிடம் அரவணைப்பு பெற்றேன். அதே தேசிய தலைமைக்கு எதிராக மொழி போராட்டத்தில் எனது நண்பன் மகேந்திரன் அண்ணன்,மற்றும் என் தமிழ் ஆசான் ஊக்குவித்ததால் ,மொழி காக்க கொடி(எதிர்ப்பு) பிடித்தேன்.பின்னாளில் (1970)நடிகர்திலகத்துக்காக காங்கிரஸ் மேடையில் பேசியுள்ளேன்.
அன்றைய சூழல் ,இதை ஊக்குவித்த பெற்றோர் என்று சாதகமான சூழ்நிலை.
என்ன பெரிய தேசியம். நான்சென்ஸ் என்று நம்மை அழைத்த காஷ்மிரி தலைமையில் குழப்பமே மிஞ்சியது. சுற்றி எதிரிகளை விட்டு விட்டு போன பஞ்ச சீலர். எகிப்து அதிபர் நாசர் வந்து விசாரித்த பிறகுதான் ,இந்த உலக தலைவருக்கு உலக நடிகனை தெரியும்.கப்பலோட்டிய தமிழனை ஆதரிக்காத தேசியம்.
இதற்கு எதிரணியில் இருந்தாலும் பாலும் பழமும் முதல் காட்சி பார்த்து பாராட்டிய அண்ணா,125 அவது பட விழாவில் கலந்து பேசிய அற்புத பேச்சு, நண்பனை டி.வீயில் பார்க்கும் போதெல்லாம் நீதாண்டா நடிகன் என்று சொல்லும் கலைஞர் இவர்கள், நன்றி கெட்ட ஒவுரங்கசீப் காங்கிரஸ் தலைவர்களை விட மேல்.
Last edited by Gopal.s; 4th August 2014 at 09:20 PM.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
joe liked this post
-
4th August 2014, 09:12 PM
#688
Junior Member
Platinum Hubber
இனிய நண்பர் திரு முரளி சார்
ஹிந்து நாளிதழில் வந்த தமிழ் திரை உலகின் பொற்காலம் 1961-1970 பற்றிய கட்டுரையை மக்கள் திலகம் திரியில்
பதிவிட்டு , அந்த கால கட்டத்தில் சாதனைகள் புரிந்த படங்களில் மக்கள் திலகத்தின் படங்கள் சாதனைகள் பற்றி பதிவிட்டேன் திரு கார்த்திக் அவர்களும் நடிகர் திலகத்தின் பட்டியலை பதிவிட்டதை திரு கோபால் இந்த திரியில்
மறு பதிவிட்டார் .இத்துடன் முடிந்தது .ஆனால் ரவிகிரண் நீண்ட சாதனை பட்டியல் என்ற பெயரில் சில தவறான்
தகவலை பதிவிட்டதால் நானும் அதற்கு மக்கள் திலகம் திரியில் நகைச்சுவையாக பதிவிட்டேன் .யார் மனமும் புண் படும்படி கிண்டல் செய்யவில்லை ..திரு ரவியும் பதிலுக்கு நகைச்சுவையாக என்னை தாக்கி பதிவிட்டார் . நான் ரசித்தேன் ..
உண்மைகளை என்றுமே மறக்க முடியாது ..மறுக்க முடியாது . இது அனைவருக்கும் பொருந்தும் .
-
4th August 2014, 09:24 PM
#689
Junior Member
Newbie Hubber

Originally Posted by
esvee
உண்மைகளை என்றுமே மறக்க முடியாது ..மறுக்க முடியாது . இது அனைவருக்கும் பொருந்தும் .
நன்றி எஸ் வீ சார். பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த ,என்ற நல்ல பாடல் ஏனோ ஞாபகம் வருகிறது.
-
4th August 2014, 09:30 PM
#690
Senior Member
Diamond Hubber

Originally Posted by
murali srinivas
அவர் எழுதிய ஒரு வார்த்தை பிரயோகத்தை பற்றி மட்டுமே ஜோ எதிர் வினை புரிந்தார்.
புரிதலுக்கு நன்றி .

Originally Posted by
murali srinivas
ஆனால் இதை சாக்காக வைத்து வினோத் போன்றவர்கள் கவுண்டமணி செந்தில் பாணியில் கிண்டலடித்தது மிகவும் வருந்ததக்கது.
இது எங்கே எப்போது நடந்தது என எனக்கு தெரியாது ..இது தான் திருவாளர் rks --ன் எதிர்வினைக்கு காரணம் என்றால் அதற்கு என் மீது பாய்வது என்ன நியாயம் .. மீண்டும் மீண்டும் நான் விளக்கிய போதும் நீங்கள் புரிந்து கொண்டது போல அல்லாமல் என் மீது பாய்ந்து பிராண்டியது குறித்து உங்களுக்கு வருத்தம் இல்லாமல் இருக்கும் என்று நான் நம்பவில்லை .ஆனாலும் அதை குறிப்பிட முடியாத நிலையை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது.
மற்றபடி திருவிளையாடல் படம் வெளியான தருணத்தில் நிலவிய மற்றைய சூழ்நிலைகள் குறித்த கருத்துகளை ஒருவர் முன்வைப்பதில் எனக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை என்பதையும் நீங்கள் புரிந்திருப்பீர்கள் .அதே நேரத்தில் , இப்போதும் இந்தித் திணிப்பு எதிர்ப்பு இயக்கத்தை சமூகத்துக்கு எதிரான இயக்கம் என கொச்சைப்படுத்துவதை நான் வன்மையாக கண்டிக்கிறேன் . அதில் உங்களுக்கு மாற்றுக்கருத்து இருக்கலாம் .ஆனால் கண்டிக்க எனக்கு இருக்கும் உரிமையை நீங்கள் மறுக்க மாட்டீர்கள் என நம்புகிறேன் . திராவிட இயக்கம் , பெரியார் குறித்தெல்லாம் நாம் நேரெதிர் முனைகளில் நின்றாலும் நாமிருவரும் விவாதிக்கும் தளம் இதுவல்ல என நம்புவதால் கடந்து செல்கிறேன் . நன்றி
Last edited by joe; 4th August 2014 at 09:34 PM.
Bookmarks