[QUOTE=gkrishna;1152899]ஒட்டடைக் குச்சி ஓய்வு எடுத்துக்கொண்டால் சிலந்திப் பூச்சி சிம்மாசனம் ஏறும் - சிலந்தி பூச்சி நகரத்தில் ஒரு ஒட்டடை குச்சியால் எவ்வளவு சிலந்தி ஒட்டடை அடிக்கமுடியும் ? சிலந்திகள் அப்படி ஏறுவது சிலந்திவலை என்ற அவர்களுடைய சிம்மாசனமே தவிர மனிதர்கள் அமைத்த சிம்மாசனம் அல்ல !
அதிகம் பேசாதவனை உலகம் அதிகம் விரும்புகிறது. அளந்து பேசுபவனை அதிகம் மதிக்கிறது. அதிகம் செயல்படுபவனையே கைகூப்பித் தொழுகிறது - கன்பூசியஸ் - தமிழகத்திற்கு, தமிழனுக்கு பொருந்தாத ஒரு பழமொழி காரணம் நேர்மை இங்கு விலைபேசபடுவதால்!
அறிவு ஒன்றுதான் அச்சத்தை முறிக்கும் அரிய மருந்து. அறிவை வளர்த்துக்கொண்டால் எல்லாவிதமான பயங்களும் அகன்றுவிடும் - எமர்சன் - அறிவை முழு உபயோகம் அரசியல் சூதாட்டங்களுக்கு மட்டுமே பயன் படுத்த படுகின்றன...நம்மை பொருத்தவரை
பழமையைப் பற்றி ஒன்றுமே தெரியாமல் புதுமையைச் சிறப்பாகப் படைக்க முடியாது. கடல் பழையது; மழை புதியது - மழை புதியதானாலும் கடலுடன் தான் கலக்கிறது...கடல் நிரந்தரம் ..மழை நிரந்தரம் அல்ல ! இப்படி தான் இங்கும்...! நல்லவர்கள் இல்லாத இடத்தில் மழை பெய்யாது !
கடிகாரத்தில் நேரத்தைப் பார்க்காமல் கடினமாக உழைத்ததால்தான் என்னால் புதிய பொருட்களைக் கண்டுபிடிக்க முடிந்தது - தாமஸ் ஆல்வா எடிசன் - கடிகாரம் பார்த்து வேலை செய்தால் கூட கண்டுபிடிக்கலாம் ! பல வீம்புகேன்று கூறும் குற்றங்கள் !
சிக்கனம் என்பது ஒருவன் பணத்தை எவ்வளவு குறைவாகச் செலவு செய்கிறான் என்பதைப் பொறுத்தது அல்ல. அதை அவன் எவ்வளவு உபயோகமாகச் செலவிடுகிறான் என்பதைப் பொறுத்தது ஆகும் -
இங்கு அள்ளி அள்ளி கொடுக்கவேண்டும் என்றில்லை... கொடுப்பதாக நாலுபேர் நம்பும் விதமாக பறைசாற்றிகொண்டாலே வள்ளல் என்று கூறுவார்கள் !
உலகம் ஒரு விசித்திரமான கல்லூரி. இங்கே பாடம் சொல்லிக்கொடுத்துத் தேர்வு வைப்பது இல்லை. தேர்வு வைத்த பிறகே பாடம் கற்பிக்கப்படுகிறது - ஜார்ஜ் - இதை கூட தேர்வு எழுதியபிறகு தான் பாடமாக கற்றுகொள்ளமுடின்தது !