அதத்தான் எண்ணி சிரிச்சேன்
அப்புறம் வரும் வரி சின்னாவுக்கு:)
---கொஞ்சம் மெதுவாக மெதுவாகவே:)
Printable View
அதத்தான் எண்ணி சிரிச்சேன்
அப்புறம் வரும் வரி சின்னாவுக்கு:)
---கொஞ்சம் மெதுவாக மெதுவாகவே:)
இல்லீங்கோவ்.. படத்துல பாவலர் வரதராஜன்னுசொல்வாங்க.. பட் ஒரு இசை நிகழ்ச்சியில் எஸ்.பி.பி சொன்னார் கங்கை அமரன் எழுதினதுன்னு.. அதைக் கன்ஃபர்மும் பண்ணிக்கிட்டேன்..
மெதுவாக மெதுவாக வே புரியலையே
டி.பி முத்துலட்சுமி.. அதான் தெரியுமே தானே..
முன்னாடியே ஒரு நகைச்சுவைக் காட்சி பற்றி எப்பவோ கேட்டிருந்தேன்..இங்கயா வேற எங்கன்னு நினைவில்லை..
மியூசிக் டைரக்டர் கிட்ட சிச்சுவேஷன் சொல்றார் ஒருத்தர்
தசரதன் செத்துப் போய்ட்டார் மக்கள்லாம் அழறாங்க
மியூசிக் டைரக்டர் கண் மூடி உள்வாங்கி.. ஹே ஹே தசரதா ஹோ ஹோ தசரதா எனப் பாட்டுக் கொடுக்க..ப்ரொட்யூஸர் .. நல்லாத்தான் இருக்கு ஆனா தசரதர் போனதுக்கு மக்கள்லாம் சந்தோஷமாயிட்டாப்ல இருக்கே
சரி என்று விட்டு ஓஓஓஒ தஸ்ஸ ரத்தா...ஆஆஆ தஸ்ஸா ரதா என ப் பாட எல்லாருக்கும் அழுகை வருகிறது..இது ரொம்ப உருக்கமால்ல இருக்கு என்பார் ப்ரொட்யூஸர்..
இது எந்தப் படம்..இதை ஆடியோவில் சிலோன் வானொலியில் மட்டும் கேட்டிருக்கிறேன்..
ஜி
இதோ தூங்க போகும் முன் உமக்காக ஒரு கன்னட பாடல்
ஓ முகிலே பெள் முகிலே
https://www.youtube.com/watch?v=TYoQQBtC_G8
மதுண்ணா!
என்னை ரொம்பவும் கவர்ந்த பாடல். பல சிறப்புக்கள் கொண்டது.
'சத்தியம் தவறாதே' படத்தில் அதே தலைப்பை பல்லவியின் முதல் வார்த்தையாகக் கொண்டு பாடல் ஆரம்பிக்கும்.
அடடா! இப்பாடலை எத்தனை முறை கேட்டிருப்பேன் என்று எனக்குத் தெரியாது. என் உள்ளத்தில் தனி இடம் பிடித்த பாடல். ஷோசலிஷக் கருத்துக்களை மிக எளிமையாக எடுத்துரைக்கும் பாடல்.
'மாஸ்டர்' ஸ்ரீதர் மெரினாவில் சுண்டல் விற்றுக் கொண்டே பாட, வெகு சிம்பிளாக, பாடலுக்குத் தோதாக கொட்டாங்கச்சி வயலின் இசைக்கு ஜெயகுமாரி பாவாடை, தாவணியுடன், வறுமையைக் காட்டும் கட்டங்கள் போட்ட ஜாகெட் அணிந்து, குப்பத்துப் பெண்ணாக உடம்பை வளைத்து ஆடுவார். சி.என்.பாண்டுரங்கனின் அற்புதமான இசைப் பின்னணி. பெருந்தலைவர், பேரறிஞர், ஔவை, கண்ணகி, மகாத்மா சிலைகள் என்று பாடல் முழுதும் கடற்கரையில் உள்ள சிலைகளின் மத்தியிலேயே நகரும்.
பாடலின் இடையில் வரும் 'தானே தந்தனா... தனே தந்தனா' என்று ஒலிக்கும் கிராமப் பின்னணி குரலும் இசையும் அப்படியே 'பாகப்பிரிவினை'யின் 'தாழையாம் பூமுடிச்சி' பாடலை அச்சு அசலாக ஒத்திருக்கும்.
'களை எடுக்காத பயிர் போலே
கடற்கரையில் கூடுது கூட்டம்'
என்னும் அருமையான உதாரணம்.
மீன் பிடிக்க கட்டுமரத்தில் பயணிக்கும் மீனவனுக்கு காற்று பலமாக, அதுவே புயலாக வீசினால் தொந்தரவு...அதனால் அவன் வாட்டமடைவான்' என்பதை அழகாக பாட்டில்
'கட்டுமரத்தை நம்பும் மனிதருக்கு
காற்று வீசினால் வாட்டம்
புயல் காற்று வீசினால் வாட்டம்'
என்று விளைக்கியிருப்பார் பாடலாசிரியர். (யார்?... சுரதாவா?)
சூரியன், மழை, காற்று இவை எல்லாம் தெய்வம் தந்த சோஷலிசமாம் ! ஆனால் நாட்டை சுரண்டும் கூட்டத்திற்குப் பெயர் 'டோட்டலிச'மாம்.:) என்ன அழகான நிஜமான விளக்கம்!
ஆனால் எப்போது நிலைமை சரியாகுமாம்? குனிந்து கிடக்கும் ஏழை துடித்தெழுந்தால் சமரசம் கிடைத்து விடுமாம்.
'தாய் நாட்டை மறக்கக் கூடாது...சத்தியம் தவறக் கூடாது...தன்மானத்தையும் இழக்கக் கூடாது....எவர் உரிமையையும் தட்டிப் பறிக்கக் கூடாது' என்று அம்சமான அறிவுரைகள் கொண்ட கருத்துப் பாடல்.
பாடலைப் பாடியவர் யார் என்பது பெருங்குழப்பம். ஒரு இணையதளத்தில் எம்.எஸ்.ராஜேஸ்வரி என்று படித்த ஞாபகம். ஆனால் கண்டிப்பாக 'பாப்பா' இல்லை.
ஆனால் டைட்டிலில் பிரேமா என்று ஒரு பெயர் போடுவார்கள். அவராகத்தான் இருக்குமோ என்று ஒரு சந்தேகம். ஆனால் இவரை சுத்தமாகத் தெரியாது. 'தானே தந்தனா' தருவது பொன்னுசாமி என்று நினைவு.
எல்லாவற்றுக்கும் மேலே மிகப் பாடலுக்குப் பொருத்தமான அந்த பிஞ்சுக் குரல் நெஞ்சைச் சுண்டித்தான் இழுக்கிறது. மறப்பதற்கு வெகு நேரம் பிடிக்கிறது.
'மாஸ்டர்' ஸ்ரீதரின் மாறாத அலட்டலில்,
சுண்டல்...சுண்டல்...
சத்தியம் தவறாதே
சத்தியம் தவறாதே தாய் நாட்டினை மறவாதே
சத்தியம் தவறாதே தாய் நாட்டினை மறவாதே
தட்டிப் பறிக்காதே தன்மானம் இழக்காதே
உரிமையைத் தட்டிப் பறிக்காதே
தன்மானம் இழக்காதே
(சத்தியம் தவறாதே)
களை எடுக்காத பயிர் போலே
கடற்கரையில் கூடுது கூட்டம்
ஓ...........ஓ
களை எடுக்காத பயிர் போலே
கடற்கரையில் கூடுது கூட்டம்
கட்டுமரத்தை நம்பும் மனிதருக்கு
காற்று வீசினால் வாட்டம்
புயல் காற்று வீசினால் வாட்டம்
(சத்தியம் தவறாதே)
சூரியன் ஒளியும் மழையும் காற்றும்
தெய்வம் தந்த சோஷலிசம்
சூரியன் ஒளியும் மழையும் காற்றும்
தெய்வம் தந்த சோஷலிசம்
நாட்டை சுரண்டும் கூட்டம்தான் டோட்டலிசம்
ஏழை துடித்தெழுந்தால் வரும் சமரசம் (சத்தியம்)
(சத்தியம் தவறாதே)
ஊருக்கு உழைப்பவன் யாருங்க ஓ.....ஓ.....ஓ....
(மகாத்மா காந்தி சிலையைக் காட்டிவிட்டு)
ஊருக்கு உழைச்சவன் பாருங்க
இங்கு ஊரை ஏய்ப்பவனும் உண்டுங்க
சிறுவன் சொல்வதை கேளுங்க
நீங்க சிந்தனை செய்து பாருங்க
சுண்டலை கொஞ்சம் வாங்குங்க
(சத்தியம் தவறாதே)
மதுண்ணா!
ஒரு ஜோக். ஒரு இணையத்தில் இப்பாடலின் வரிகளைக் கொலை செய்து வைத்திருந்தார்கள் வழக்கம் போல. அதில் முக்கியமான ஒன்று.
'ஏழை துடித்தெழுந்தால் வரும் சமரசம்' என்னும் வரிகளை மாற்றி,
'ஏழை குடித்திருந்தால் வரும் சமரசம்':)
என்று போட்டார்களே ஒரு போடு!:)
தெரிந்து எழுதினார்களோ... தெரியாமல் எழுதினார்களோ.... இதுவும் நன்றாகத்தான் இருக்கிறது. அதில் உண்மையும் இருக்கிறது.:)
இந்தப் பாட்டின் ஆடியோ, வீடியோ கேட்க, பார்க்க ஆவலாய் இருக்கிறேன். நண்பர்கள் ப்ளீஸ்.
தமிழ் காமடி நடிகையர் பட்டியலில் விடுபட்டவர்கள்
டி.ஏ.மதுரம்
ரமா பிரபா
கோவை சரளா
குமாரி சச்சு
வாசு சார்,
வீடியோவும் இல்லாமல் ஆடியோவும் இல்லாமல் எப்படி இவ்வளவு சுத்தமாக பாடல் வரிகளை டைப் செய்தீர்கள்?. பாட்டுப்புத்தகம் உதவி?.
மாஸ்ட்டர் ஸ்ரீதர் என்றால் எனக்கும் எப்போதும் பயம். சமீபத்தில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குறத்தி மகனின் 'அஞ்சாதே நீ அஞ்சாதே' பாடலில் ஸ்ரீதர் உடன் கோணவாய் ஜெயசித்ராவை பார்த்து நொந்து போனேன். இரண்டுமே அலட்டல் கேசுகள்.
பாடல் வரிகள் கொலைபற்றி படித்ததும் சில நாட்களுக்கு முன் முகனூலில் ஒருவர் தில்லானா மோகனாம்பாள் பற்றி எழுதியிருந்த வரிகளும், படித்துவிட்டு நான் வயிறுவலிக்க சிரித்ததும் நினைவு வந்தது. அவர் எழுதியது..
' "மறைந்திருந்து பார்க்கும் மருமகனே" போன்ற இனிய பாடல்கள் இடம் பெற்ற படம்'.
//உடன் கோணவாய் ஜெயசித்ராவை // அவங்க உணர்ச்சி வசப்பட்டா மட்டும் தான் வாய் கோணுவார்..என்று ஆன்றோர்கள் சொல்வார்கள் :)
//"மறைந்திருந்து பார்க்கும் மருமகனே" // :)
காமெடியில் கலக்கிய கதாநாயகியர் பட்டியலில் 'தில்லுமுல்லு' சௌகாரை மறந்தது ஏனோ.
வாசு சார்,
மறதி அதிகமாகி விட்டது.
அன்புடன் கோபு.
ஆதி சார்,
பாட்டுப் புத்தகம் இருந்திருந்தால் முதலில் அதைப் பதித்திருப்பேனே! ஆதி முதலே அந்தப் பாடல் எழுத்துக்கு எழுத்து மனப்பாடம்.:) நான்கு வருடங்களுக்கு முன்' விஜய்' தொலைக்காட்சியில் 'சத்தியம் தவறாதே' முழுப் படமும் பார்த்தேன். அப்போது 'முத்துக் குளிப்பவரே' பாடல் மட்டும் ரிகார்ட் செய்தேன். மற்ற பாடல்களை துரதிருஷ்டவசமாக ரிகார்ட் செய்யாமல் மடத்தனம் செய்து விட்டேன். (அப்போது 'மதுர கானங்கள்' தொடங்கவில்லை) அதற்குப் பிறகு இப்படத்தை போட்டார்களா என்று தெரியவில்லை. இப்போது விஜய் தொலைக்காட்சியில் பழைய படம் போடுவதையே நிறுத்தி விட்டு அந்த சேனல் முழுநேரமும் ஆள் செலெக்ட் செய்யும் டிவி ஆகி விட்டது.:) இவர்கள் நிறைய பழைய படங்களை கைவசம் வைத்திருக்கிறார்கள். என்ன செய்ய! அதற்கு முன்னர் தியேட்டரிலும் இப்படத்தைப் பார்த்திருக்கிறேன். அதுவும் 'முத்துக் குளிப்பவரே' பாடலும், 'சத்தியம் தவறாதே' பாடலும் சிறுவயதிலேயே நெஞ்சில் நிலைத்து விட்டன. காட்சி அப்படியே மனதில் ஓடுகிறது. பின் ரவி திரிக்காக இணையத்தில் நான் தரவேற்றிய (தரவேற்றிய நாள் Dec 19, 2011) 'முத்துக் குளிப்பவரே' பாடல் தவிர இப்படத்தின் வேறு வீடியோ இருப்பதாகத் தெரியவில்லை. அதன் பிறகு வேம்பார் மணிவண்ணன் அவர்கள் அப்பாடலை இந்த வருட ஆரம்பத்தில் 'யூ டியூபி'ல் தரவேற்றியிருந்தார். அவரும் இப்படத்தின் வேறு பாடல்களை தரவேற்றியிருக்கிறாரா என்று தேடினால் அதுவும் இல்லை. ம்...பார்ப்போம். கிடைக்காமலா போய் விடும்?
'முத்துக் குளிப்பவரே' பாடல் பற்றி ரவி திரியில் நான் எழுதிய பதிவுக்கான லிங்க். அதைப் பற்றி கார்த்திக் சார் கூட அழகாக தன் கருத்துக்களை வெளிப்படுத்தியிருந்தார்.
http://www.mayyam.com/talk/showthrea...HANDRAN/page15
' "மறைந்திருந்து பார்க்கும் மருமகனே" போன்ற இனிய பாடல்கள் இடம் பெற்ற படம்'.
ஜனகராஜ் நிழல்கள் ரவியிடம் பாடுவதா?:)
//மெதுவாக மெதுவாக வே புரியலையே//
புரியாமலேயே இருக்கட்டும்.:) மதுண்ணா கூட சொல்லாமல் தவிர்த்திடுவார்.:)
//ஆன்றோர்கள் சொல்வார்கள்//
உங்களைப் போன்ற சான்றோர்களும்.:)
I remember watching Parasakthi in a touring talkies in 1952. Here is a song from Parasakthi.
poomalai neeye puzhudhi maN mele.......
http://www.youtube.com/watch?v=fdQzKA7I2GE
The original tune from Dupatta(1952)
sanwariya koi pukare.....
http://www.youtube.com/watch?v=QymmIj-MYLQ
I still remember the conversation I had with my neighbour. Next morning he asked me about the movie and the story.
Then he asked me about what I liked and what I disliked. I told him that a dance was obscene(aabaasam). I told him about 'Oh rasikkum seemaane' song and dance where the dancer's skirt goes up. He just smiled. Only years later I learned that such scenes were common in Hindi movies. Those were the days of innocence ! :lol:
Scene Stealers
இச்சையின் பச்சை அடையாளம் !
Tattoos !
Quote:
மனதுக்குப் பிடித்தவர்களின் பெயரையோ உருவத்தையோ மனம் கவர்ந்த வாசகங்களையோ மேனியில் பச்சை குத்திக் கொள்ளும் கலாசாரம் நியாண்டர்தால் வம்சா வழியாக இன்றும் ஏதோ ஒரு ரூபத்தில் அழிக்கமுடியாத கலாசாரமாக தொடர்ந்து கொண்டே இருக்கிறது !
ஊசிகளில் வண்ணக்கலவைகளை ஏற்றி பச்சை குத்துவது சற்று வலி தரும் முறையே !
மருதாணி மாதிரி தடவிக் கொள்ளும் பச்சை நாள்பட நாள்பட தேய்ந்து அழிந்து விடும்!!
காதல் இனிக்கும்போது அழியாவண்ணம் காதலி பெயரை இச்சையோடு பச்சை குத்தும் எத்தனையோ காதல் புரவலர்கள் காதல் கசந்தவுடன் அதை அழிக்கப் படாத பாடு படுவதும் .....பார்த்துக்கொண்டுதானே இருக்கிறோம் !
இங்கே ஒருவர் தனது காதலி சோனாவை கையில் பச்சை பதித்து மானசீக வாழ்வில் உல்லாச உலகில் சல்லாபித்துஅடிக்கும் கூத்து காலங்கள் கடந்தும் நினைவுகளில் பதிந்து விட்ட பசுமையே !!
Watch from 21:00! Enjoy Thangavelus Monkey shadow comedy elements daringly copied by Vivek!!
https://www.youtube.com/watch?v=xB17PFR1WPg
அக்கரைப் பச்சை ! / Thunderball
Foreigners' Tattoo Mania!
வெளிநாட்டினரிடம் அக்காலம் தொட்டே பச்சை குத்திக் கொள்ளும் பாஷன் மோகம் அதிகம் !
தனக்குப் பிரியமானவர் மட்டுமன்றி தான் சார்ந்திருக்கும் நிறுவனம் சார்ந்த சின்னங்களையும் பச்சை குத்திக் கொள்வதுண்டு !
ஜேம்ஸ் பாண்ட் படமான தண்டர்பாலில் வில்லன் கோஷ்டியை சேர்ந்த ஒருவர் சார்ந்திருக்கும் இயக்கத்தின் பச்சையைக் கையில் பதித்திருப்பது கண்டு
ஜேம்ஸ் பாண்ட் சீன் கானரி தனது அலுவலக தனிச் செயலாளரான மணிபென்னியிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளும் காட்சி சுவாரஸ்யமானதே!
அதே பச்சை முத்திரை வில்லியின் மோதிரத்திலும் இருப்பதை உன்னிப்பாகக் கவனிப்பார் பாண்ட் !
https://www.youtube.com/watch?v=uG7jXkqe_bU
சிவாஜி செந்தில் சார்,
பச்சை குத்துவதைப் பற்றி அப்போதே தமிழில் ராட்சஸி அழகா பாடிட்டாரே! இதை விடவா?
வாழ்க்கை வாழ்வதற்குத்தானே!
'பச்ச குத்தலயோ...
பச்ச குத்தலயோ'....
'அழகான மலையாளம்
மலையாளக் கரையோரம்
கரையோரம் மேற்கு மலை
மேற்கு மலை எங்க மலை'
அடடா! இந்தப் பாடகிதான் மேற்கண்ட வரிகளை எவ்வளவு அழகாகப் பாடி ஆனந்தப்பட வைக்கிறார்! இப்படியெல்லாம் பாட முடியுமா!
'ஊசியிலைக் காடுகளில் வாசம் செய்யும் ஜாதியம்மா
மாசுபட சம்மதியோம் மான் ஜாதிக் கூட்டம் அம்மா'
Pollution பற்றியும் அப்போதே பாடி வச்சாச்சு.
ராட்சஸியின் 'அழகா...ன' உச்சரிப்பைக் கவனியுங்கள். அவ்வளவு அழகாக இருக்கும்.
பல்லவி முடிஞ்சதும் வரும் அந்த 'டங்கு டங்கும் டங்கு டங்கும் டங்கு டங்கும்' இசை நெஞ்சிலே பாய்ந்து துள்ளும்.
தொடரும் அந்த 'ஒஒஒஓ...ஹோய்' ஹம்மிங் இன்னும் மயக்கும். ஹம்மிங் தருவது ஈஸ்வரியா சுசீலாவா என்று குழப்பம் நேரும்.
பச்சை குத்துவது எப்படி என்ற விளக்கங்கள் வேறு.
'பச்சை இலை வெட்டி வந்து
பாலெடுத்து மை வடித்து
அச்சடிக்கும் முத்திரைகள் மாறாதம்மா'
என்னென்ன உருவங்கள் பச்சை குத்தப்படும் என்ற விவரம்.
'மானெழுதி மீனெழுதி வண்ண மயில் பாம்பெழுதி
நானெழுதும் ஓவியங்கள் போகாதம்மா
நீரினிலே கரைவதில்லை
நெருப்பினிலே கரைவதில்லை'
(கல்விக்குப் போட்டியோ)
'இளமையிலே தீட்டிய பச்சை
இறுதி வரை அழிவதில்லை'
தொலைந்து போன பிள்ளைகளை கண்டு பிடிக்க உதவுவது பச்சைக் குத்தாம். குடும்பப் பாட்டு போல குடும்பப் பச்சை.
'பெற்றவரை விட்டு விட்டு சென்றுவிட்ட பிள்ளைகளை
கண்டு கொள்ளப் போடுவது பச்சையம்மா'
காத்து, கருப்புகள் அண்டாதிருக்கவும் பச்சைதான் குத்தணுமாம். அதில் கூட 'சுற்றிவரும் தேவதைகள்' என்று எவ்வளவு கண்ணியம் வார்த்ததைகளில்!
'சுற்றிவரும் தேவதைகள் பற்றாமலே இருக்க
குத்தி வைக்கும் மந்திரமே பச்சையம்மா'
'சாமி பேர் எழுதி வைத்தால் தலைமுறைக்குக் காவல் வரும்
தேவி பெயர் எழுதி வைத்தால் தினம் தினமும் துணையிருக்கும்'
'அழகான மலையாளம்
மலையாளக் கரையோரம்
கரையோரம் மேற்கு மலை
மேற்கு மலை எங்க மலை'
'டாட்டூ' எல்லாம் நம்ம தமிழ் கல்ச்சர்கிட்டே டப்பா ஆடிடும் சார். எல்லாவற்றுக்கும் முன்னோடி முத்தமிழ்தானே!
எது இல்லை தமிழிலே? பச்சை குத்துவதைப் பற்றியே ஒரு முழு திரைப்படப்பாட்டு. கவிஞரின் கைவண்ணத்தில். பச்சை பச்சையான பாடல்கள் புழங்கும் இக்காலத் திரைப்படப் பாடல்களை ரசிக்கும் சிகாமணிகள் யாராக இருந்தாலும் சரி... பச்சை குத்துவதைப் பற்றிய, பசுமையான நெஞ்சில் நிறைந்த இந்தப் பாடலை, வளமான குரல் வளத்தோடு இப்போது ஒருமுறை கேட்டுப் பாருங்கள். வெட்கித் தலை குனிவீர்கள்.
இப்படி ஒரு பாடலை இதற்கு முன்னும் கேட்டிருக்க முடியாது. பின்னும் கேட்க முடியாது. 'மெல்லிசை மன்னர்' தரும் அந்த துள்ளலிசை புல்லாங்குழல் ஓசை ஒன்று போதும்.
அதுதான் கோல்டன் டேய்ஸ். திரும்ப வரவே வராது.
https://youtu.be/7HIzrUxbN5M
why are tattoos permanent?
https://www.youtube.com/watch?v=Fs9rR4W0EeA
tattoo processes
https://www.youtube.com/watch?v=Z8_VAW3j5X8
tatto is like our marudhani. We do it during DeepavaLi time! :) Good topic for the season ! :lol:
வாசுஜி..
சத்தியம் தவறதே பாட்டு பாடியவர் கண்டிப்பாக எம்.எஸ்.ஆர் இல்லை.. அந்தக் குரல் இப்பவும் என் காதில் கேட்குது. ஒரு வேளை நீங்க சொல்லும் பிரேமாவாக இருக்கலாம். its unique.. ... பாலு பாடல்கள் மெதுவாகவே ( சிக்கா ? ) பதியுங்கள். சிறப்பாக இருக்க அதுவும் ஒரு காரணம்.
அழகான மலையாளம்.... ஈஸ்வரியின் பாடல்களில் என் மனசுக்குள் பச்சை குத்திய ஒன்று.
அட..அட..அட... நான் அது பி.சுசீலாவேதான் என்று முன்னொரு காலத்தில் ரேடியோ மேல் காதை அழுத்தி வைத்து கண்டு பிடிக்க முயற்சி செய்ததுண்டு..Quote:
தொடரும் அந்த 'ஒஒஒஓ...ஹோய்' ஹம்மிங் இன்னும் மயக்கும். ஹம்மிங் தருவது ஈஸ்வரியா சுசீலாவா என்று குழப்பம் நேரும்.
இன்னும் சில பாடல்களில் கூட இது போன்ற சந்தேகங்கள் வந்ததுண்டு.
இது டைட்டில் பாட்டு ... இதோ வீடியோ
( படக்காட்சியில் "ஊசியிலை வரிகளைக் காணும்.. வெட்டிட்டாங்களோ ?)
https://www.youtube.com/watch?v=t4ukPtTU9PU
சத்தியம் தவறாதே பாடலைப் பாடிய பெண் பாடகி பிரேமா தான் என எனக்கும் நினைவு.
சத்தியம் தவறாதே படத்தின் இசையமைப்பாளர் சி.என்.பாண்டுரங்கன் அவர்களுடைய வீட்டின் மாடியில் என் நண்பன் தன் பெற்றோருடன் வசித்து வந்த போது அடிக்கடி அவனைப் பார்க்கப் போவதுண்டு. அப்போது ஒரு முறை அவன் கூறிய செய்தி, தன்னுடைய உறவுக்காரப் பெண் ஒருவரை ரவிச்சந்திரன் படத்தில் பாட வைத்திருக்கிறார் என்பதாகும். அப்போது படத்திற்குப் பெயர் வைத்திருக்கவில்லை. ஒரு வேளை அதுதான் இந்தப்பாடலாக இருக்கலாம்.
அழகான மலையாளம் பாடல் அருமை அருமை
அதே போல் இதோ ஒரு மலையாளப்பாடல் .. தமிழ் தெலுங்கு கன்னடா பற்றி பேசுகிறது
https://www.youtube.com/watch?v=M-uRrrD_pvE
ஹாய் குட் மார்னிங்க் ஆல்..
ஆஹா பச்சை குத்துதல் பாடல்கள் விளக்கங்கள் எல்லாவற்றிற்கும் தாங்க்ஸ் சி.செ வாசு.. ஈவ்னிங்க் போய்ப் பார்க்கறேன்
பச்சைன்னவுடனே நினைவுக்கு வர்றது லேட்டஸ்ட் ஸாங்க் தான்
பச்சை த் தீயே ந்னு தமன்னா தாவும் டூயட் பாகுபலி
பச்சை நிறமே பச்சை நிறமே அலைபாயுதே மேடி
பச்சை மாமலை போல் மேனி - ந.தி திருமால் பெருமை
பச்சை வண்ண சேலைகட்டி முத்தம் சிந்தும் நெல்லம்மா - ந.தி
பச்சை வண்ணக் கிளிவந்து பழம் கொடுக்க - கண்ணன் வருவான்
பச்சை மூக்குத்தி வைரம் நீராடி ப் படிக்கும் பண்பாட்டுக் கவிதை - மதனமாளிகையில்..
ஓஹ்.. நிறப் பாட்டு இல்லியோ..பச்சை குத்தி எனத் தேடினால் இந்தப் பாட் வருதே..
ஒரு தேவதை வந்து விட்டாள் உன்னை தேடியே
கொஞ்சும் கிளியே உன்னை நெஞ்சில் உறங்கசொல்லி
தென்றல் என்னும் பாடிசைப்பார்
நெஞ்சம் நோகும் என்றால் மேகம் கொண்டு வந்து
மெத்தை செய்து பூ விரிப்பார்
வானத்து வானத்து நட்சத்திரம்
வாசலில் வாசலில் புள்ளி வைக்க
வானவில் வானவில் கொண்டு வந்து
வண்ணத்தில் கோலங்கள் இட்டு வைக்க
உள்ளங்கையில் பச்சை குத்தி
உன் பெயரை உச்சரிக்க
https://youtu.be/plXOkVhLYNg
paat eppadi irukkum.. veet pOi ketkaren :)
vaNakkam kaNNaa... I liked your dEvathai song... and here is a dhEvan magaL song.
It is different from the typical tfm song; but I hope you like this one!!! :)
https://www.youtube.com/watch?v=T2fA...layer_embedded
முக நூலில் படித்த இந்த விஷயத்தை இங்கு சொல்லக் காரணங்கள் சில
1. சுஜாதாவின் வாக்கியம் :“வாழ்க்கையே படிப்படியான சமரசங்களால் ஆனது.”
2. இந்த இடுகை எழுதியவர் ப்ரியா படத்தை திரும்பத்திரும்பப் பார்த்தோம் என எழுதியிருக்கிறார் ஆச்சரியமாக இருக்கிறது..ஏனெனில் குமுதத்தில் தொடராகப் படித்து விட்டு ஆவலாக ஸ்ரீதேவி தியேட்டருக்கு (ஆதிராம் ம்க்கும் :) ) ச் சென்று பார்த்து ஏமாற்றமடைந்த படம்..எஸ்பெஷலி க்ளைமாக்ஸில் அந்த அடுக்குமாடி அபார்ட்மெண்ட்ஸில் இருந்து பூச்சாடியை ஸ்ரீதேவி எத்துவாராம் படக்கென ஜன்னல் திறக்குமாம் அதைவைத்து ரஜினி காப்பாற்றுவாராம்..அட போங்கப்பா எனப் பார்த்த போதே தொன்றியது..
அப்படியே நாவல் வந்தது போலவே கொஞ்சூண்டு பாட்காட்சிகள் சேர்த்து எடுத்திருந்தால் வெகு நன்றாக வந்திருக்கும்..
3. இது பற்றி சுஜாதா சொன்னதை ஏற்கெனவே படித்திருக்கிறேன்..அதுபோல அவரது திரைக்கதை எழுதுவது எப்படி நூலில் அவரது எழுத்தின் மாற்றங்கள் நன்றாக வெளிப்படும்..உதாரணத்திற்குச் சொன்ன படம் உள்ளம் கேட்குமே..(வெகு அழகான படம்)
4. ம்ம்ம்.. பாடல் ஒன்று பார்க்க ஆவல் வந்தது :)
முக நூலில் எழுதியிருந்தவர் ஜான் துரை அஸீர் செல்லையா..
//சுஜாதா பற்றிய சுவாரஸ்யமான தகவல் ஒன்று கண்ணில் பட்டது...
‘ப்ரியா’ ..
இந்தப் படம் 1978 இல் வெளியானது நன்றாக ஞாபகம் இருக்கிறது... ஆனால் திரும்ப திரும்ப திரையரங்குகளுக்குப் படை எடுத்த நாங்கள் , எத்தனை தடவை இந்தப் படத்தைப் பார்த்திருப்போம் என்பது எங்களுக்கே ஞாபகம் இல்லை...
எங்கள் எல்லோருக்கும் பிடித்த இந்த “ப்ரியா” ஒரே ஒருவருக்கு மட்டும் கொஞ்சம் கூடப் பிடிக்கவில்லை..
“ப்ரியா”வைப் பிடிக்காத அந்த ஒருவர்.... அந்தப் படத்தின் கதையை எழுதிய சுஜாதா..
இதோ..அது பற்றி சுஜாதா...
“.... ‘ப்ரியா’ சினிமாவானது ஒரு கூத்து...
பஞ்சு அருணாசலம் அது தொடர்கதையாக வந்தபோதே அதற்கு கர்ச்சீப் போட்டு வைத்திருந்தார். ஆனால் கதை இஷ்டத்திற்கு மாற்றப்பட்டது...
..இதெல்லாம் என் கதையில் எங்கே வருகிறது என்று கேட்பதை முதலிலேயே நிறுத்திவிட்டேன். சினிமா என்பது மற்றொரு பிராணி என்பதை என் குறுகிய கால சினிமா அனுபவமே உணர்த்தியிருந்தது...”
# “பிரியா” கதை , சினிமாவுக்காக சித்திரவதை செய்து கொல்லப்பட்டதை , சுஜாதாவால் கொஞ்சம் கூட ஏற்றுக் கொள்ள முடியவில்லை..
சிறிது காலத்திற்குப் பின் சுஜாதா எழுதிய 'உன்னைக் கண்ட நேரமெல்லாம்' என்ற கதையில் , கணேஷும், வசந்த்தும் இப்படி உரையாடுவது போல எழுதி தன் குமுறலைக் கொட்டித் தீர்த்துக் கொண்டார் சுஜாதா ...
### “வசந்த் அதிகக் கோபத்தில் மேலும் கீழும் நடந்து கொண்டிருந்தான்.
ஏராளமான காகிதங்களின் மத்தியில் 77 உறிஞ்சிக் கொண்டிருந்த கணேஷ் அவனை நிமிர்ந்து பார்த்து "எதுக்காக இப்படி வெட்டியா நடக்கிறே? என்ன ஆச்சு வசந்த்?"
"அந்த ஆள் மேல கேஸ் போடணும் பாஸ்."
"எந்த ஆள்? எந்த கேஸ்?"
"எழுத்தாளர் சுஜாதா! இந்த மாதிரி நம்ம ரெண்டு பேரையும் கேலிக்கிடமா படம் எடுக்க அனுமதிச்சதுக்கு."
"என்ன படம்?"
"ப்ரியா."
"எழுத்தாளர் என்ன செய்வார்? அவர் புஸ்தகத்திலே சரியாத்தானே எழுதியிருந்தார்?"
"படம் எடுத்தவர்கள் பேரில போடலாம்னு பார்க்கிறேன்."
"அவுங்க என்ன செய்வாங்க? புஸ்தகத்திலே இருந்த மாதிரி படம் எடுத்தா படம் போண்டி ஆயிடும்...... .......இதுக்கெல்லாம் கோவிச்சுண்டா என்ன ஆறது? விட்டுத் தள்ளு. படம் ஓடறது பாரு. கிளி, டால்பின்னு என்னமோ கலந்து கட்டி இருக்காங்களாமே?"
கணேஷ் வாய்விட்டுச் சிரித்தான்.
"என்ன இருந்தாலும் எனக்கு சமாதானமாகலே பாஸ். நீங்க அந்தப் படத்தைப் பார்த்தீங்கன்னா..."
"முதல்ல ஒண்ணு தெரிஞ்சுக்க. ஒரு லாயர் கேஸ் போடவே கூடாது. கேஸ் போட வைக்கணும்."
# இப்படி எழுதித் தன் குமுறலைக் குறைத்துக் கொண்டிருக்கிறார் சுஜாதா.... கொந்தளிப்பு குறைந்த பிறகு கொஞ்சம் கொஞ்சமாக யோசிக்க ஆரம்பித்தார்...
சினிமாவின் சூத்திரங்களுக்கு ஏற்ப தன்னை “அப்டேட்” செய்து கொண்டார்...
அவரின் அசத்தல் வசனங்கள் அனைவரையும் கவரும் அளவுக்கு , சினிமாவை தன் வசப்படுத்திக் கொண்டார்...
# இதோ..சில சாம்பிள்கள்.....
# அந்நியனில் தன் உள்ளங்கையில் முத்தமிட்ட நந்தினியிடம் ரெமோ: “ஹேய் என்ன கைல முத்தம் குடுக்கிற .... நான் என்ன போப்பாண்டவரா..?”
#“தப்புல ஸ்மால், லார்ஜ், எக்ஸ்ட்ரா லார்ஜெல்லாம் சொல்ல, அது என்ன பனியன் சைஸா?”
# சரி... சினிமாவை அடியோடு வெறுத்த சுஜாதா , காலப்போக்கில் அந்த சினிமாவுக்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொண்டு வெற்றியும் பெற்றது எப்படி..?
சுஜாதா ஒருமுறை சொன்னது நினைவுக்கு வருகிறது...
“வாழ்க்கையே படிப்படியான சமரசங்களால் ஆனது.”
# நிஜம்தானே...!!!
எவ்வளவு பெரிய உண்மையை , எவ்வளவு எளிமையாகச் சொல்லி விட்டார் சுஜாதா..?!!
ஆம்...“வாழ்க்கையே படிப்படியான சமரசங்களால் ஆனது.”//
https://youtu.be/5GA2rHlWYxE
ரிலாக்ஸ் பாடல்.
ரொம்ப நாளைக்கு அப்புறம்.
கொஞ்சம் வித்தியாசமான பாடல். அதுவும் எம்.ஜி.ஆர் அவர்களின் படத்திலிருந்து.
http://padamhosting.me/out.php/i58872_RTS1.jpg
காலையிலிருந்து 'அழகான மலையாள' ஈஸ்வரியே ராட்சஸத்தனமாக மன ராட்டினத்தில் சுற்றிக் கொண்டிருக்கிறார்.
சரி! இன்னொரு பாடலைத் தந்துவிடலாம் என்று யோசித்தால் 'படார்' என்று இந்தப் பாடல் மூளையை மின்சாரமாய்த் தாக்கியது.
பாடலும் படார் படார்தான்.
இசையும் படார் படார்தான்
நடிப்பும் படார் படார்தான்
குரல்களும் படார் படார்தான்
ஒட்டு மொத்தப் பாடலும், காட்சிகளும் 'படார் படார்'தான்.
எம்.ஜி.ஆர் அவர்கள் படங்களில் இத்தகைய பாடல்களை அதிகம் காண முடியாது. அப்படியே காண நேர்ந்தாலும் அவருடைய பெரும்பான்மையான ஹிட்களுக்கிடையே இத்தகைய பாடல்கள் அடங்கி, அமுங்கி மறைந்து போய்க் கிடக்கும். அத்தகைய பாடல் ஒன்றை தூசி தட்டி எழுப்பி எடுத்தால் என்ன தோன்றியது. விளைவு...
நினைவுக்கு வந்தது ராட்சஸி, பாடகர் திலகம் கலக்கும் 'ராமன் தேடிய சீதை' படத்தின் 'படார் படார் படார்' பாடல்.
http://i.ytimg.com/vi/B86Gk92C7MM/maxresdefault.jpg
கால்கள் இருந்தும் சக்கர நாற்காலியில் அமர்ந்து நொண்டியாய் நடிக்கும் கோமாளி வில்லன் அசோகன். அவரிடம் மாட்டிக் கொண்ட ராமாராவின் வளர்ப்பு மகள் பேதை ஜெயா மேடம் தன்னை அசோகனிடமிருந்து காப்பாற்றிக் கொள்ள பைத்தியமாய் நடிக்கிறார். தன்னை எப்படியாவது காப்பாற்றச் சொல்லி ஹீரோ எம்.ஜி.ஆர் அவர்களுக்குக் கடிதம் அனுப்புகிறார்.
விவரமறிந்த எம்.ஜி.ஆர் அசோகன் வீட்டிற்குள் மேடத்தைக் காப்பாற்ற பைத்திக்கார டாக்டராக உள்ளே நுழைகிறார். ஜெயாவின் பைத்தியத்தை தன்னால் குணப்படுத்த முடியும் என்று கூறுகிறார். பைத்தியத்தை பைத்தியத்தால்தான் குணப்படுத்த முடியும் என்று கூறி வில்லன் முன் மேடத்திடம் பைத்தியம் போலவே தானும் நடித்து ஆட்டம் ஆடி பாட்டுப் பாடி நாடகம் ஆடுகிறார். ஜெயாவுடன் அசோகனுக்குத் தெரியாமல் கூட்டு வைத்துக் கொண்டே கூத்தடிக்கிறார்.
'ராணி எங்கே? என்று எம்.ஜி.ஆர் கேட்க,
ஜெயலலிதா 'கௌ கேர்ள்' ரேஞ்சில் பேன்ட், ஷர்ட், குல்லாய், கம் பூட் சகிதம் ஒற்றைகுழல் துப்பாக்கி எடுத்து சுட்டுக் கொண்டே வர, அவரை அடக்க வேஷம் கட்டும் எம்.ஜி.ஆர்.
இந்த ரகளையான பாடல் ராட்சஸி குரலில் ரசிக்கத்தக்கபடி ஆரம்பிக்கும்.
'படார் படார் படார்
படார் படார் படார்
படார் படார் படார்'
'தென் இலங்கை மன்னனுக்கு தங்கை இந்த மங்கை
எந்தன் மூக்கறுக்க வந்ததென்ன மூடா!
உன் மூளை கெட்டுப் போனதென்ன போடா!
வில்லொடித்த ராமனுக்கு பல்லொடித்து காட்டுதற்கு
அண்ணனுண்டு என்னிடத்தில் வாடா'
அடேயப்பா! என்ன வரிகள்!
அடுத்த வரி டாப்.
தொண்டை வற்ற மேடம் பாடி விட்டார்களாம். அதனால்,
'தொண்டை காய்ஞ்சி போச்சு கொண்டு வாடா சோடா' (ஈஸ்வரி என்னமா 'சோடா" சொல்லிக் கேட்கிறார்.)
மேடம் அசோகனை உலுக்கி, தொண்டை கனைத்துக் கொண்டு, 'ஜாவ்' ஆவார்.
அசோகன் அவரது பாணியில் ஓலமிட்டபடியே எம்.ஜி.ஆரிடம் 'என்ன டாக்டர் இது? என்று கேட்க,
எம்.ஜி.ஆர் நகைச்சுவையாக அசோகனிடம்,
'விடிய விடிய ராமாயணம் கேட்டிருப்பா போல இருக்கு:)... இருங்க என் கண்ட்ரோலுக்கு கொண்டு வரேன்':)
என்று சொல்வது நமக்கு உண்மையாகவே சிரிப்பை வரவழைக்கும்.
எம்.ஜி.ஆரிடம் 'ஹய்ய்யா' என்று துள்ளிக் குதித்து மேடம்,
'படார் படார் படார்
படார் படார் படார்'
என்று கைகள் நீட்டி குத்துக்கள் விட,
எம்.ஜி.ஆர் பதிலுக்கு பாடகர் திலகத்தின் குரலில்,
'பாடாதே பாடாதே நிப்பாட்டு
அடி பாடாதே பாடாதே நிப்பாட்டு
உன் பாட்டுக்குப் பாடப் போறேன் எதிர்பாட்டு
உன் பாட்டுக்குப் பாடப் போறேன் எதிர்பாட்டு
படார் படார் படார்
படார் படார் படார்'
என்று துப்பாக்கியை எடுத்து சிலம்பமாகச் சுழற்ற, களேபரம் ஆரம்பம்.
'படார் படார் படார்
படார் படார் படார்
எட்டு ஊரு கேட்குமடி என் பாட்டு...
(டி.எம்.எஸ்.தொடர்ந்து தரும் 'அ அ அ அ ஆ' ஹம்மிங் கணீர் அருமை.)
இங்கு என்னை வந்து என்ன செய்யும் உன் பாட்டு?'
என்று எம்.ஜி.ஆர் எகிற, மேடமோ உடனே,
'நிப்பாட்டு'
என்று கட்டளை இடுவார். எம்.ஜி.ஆர் இப்போது பாடுவார்... இல்லை இல்லை...திட்டுவார்.:)
'அடி சூர்ப்பனகை ராணி
மூக்கறுந்த மூலி
நீ யாருகிட்ட காட்டுறது கைவரிச
காலை வாரி விட்டா கொட்டிப் போகும் பல்வரிசை'
ஜெயாவின் ஒரு காலைப் பிடித்து எம்.ஜி.ஆர் வாருவார். நமக்கு 'திக்'கென்று இருக்கும்.
நடக்கும் கூத்துக்களைப் பார்த்து ஊளையிடும் அசோகனை சமாதனப்படுத்திவிட்டு எம்.ஜி.ஆர் ஜெயாவிடம் வந்து நடிகர் திலகத்தின் 'தங்கப் பதுமை' படத்தின் புகழ் பெற்ற பாடலான 'முகத்தில் முகம் பார்க்கலாம்' பாடலை அதே டி.எம்.எஸ்.குரலில் பாடுவார். (இது அப்போது ஒரு அதிசயம்தான்)
http://padamhosting.me/out.php/i58871_RTS2.jpg
தன் விரலை அம்மு வாய்க்குள் எம்.ஜி.ஆர் விட, சின்னக் குழந்தை மாதிரி மேடம் அவர் விரல்களைக் கடிக்க, எம்.ஜி.ஆர் கோட், சூட், அவர் பாணி கண்ணாடி, தொப்பி சகிதம் பரத நாட்டிய அசைவுகள் தந்து பாடலுக்கு ஆட செம ரகளை.
'முகத்தில் முகம் பார்க்கலாம்
விரல் நகத்தில் கியூடெக்ஸின் நிறம் பார்க்கலாம்':)
எப்படி? நக பாலிஷ் 'கியூடெக்ஸ்' பவழத்திற்கு பதிலாக வந்து உட்கார்ந்து விட்டது நாகரீக காலத்திற்குத் தக்கவாறு. காமடிதானே!
நடுவே தனியாக இருக்க சந்தர்ப்பம் கிடைக்கும் போது 'லெட்டெர் கிடைச்சுதா? என்று மேடம் எம்.ஜி.ஆரிடம் வினவ, எம்.ஜி.ஆர் லெட்டெர் கிடைத்ததையும், காப்பாற்ற வந்திருப்பதையும் சொல்லுவார். மேடத்துக்குத் தெரிந்த பாட்டையெல்லாம் வேண்டுமென்றே பாட வேறு சொல்வார்.
'சத்தம் காணோமே' என்று சந்தேகப்பட்டு அசோகன் சக்கர நாற்காலியில் நகர்ந்து வர, இருவரும் உஷாராகி எம்.ஜி.ஆர் அதே பாடலைத் தொடருவார்.
'வகுத்த கருங்குழலை ஹேர் டிரெஸ்ஸிங் எனச் சொன்னால்:)
லிப்ஸ்டிக்கை இதழோடு இணை சேர்க்கலாம்'
இங்கே 'மழை முகிலு'க்குப் பதிலாக இங்கிலீஷில் 'ஹேர் டிரெஸ்ஸிங்' விளையாடும். சூப்பர் நகைச்சுவையாக வரியை மாற்றி இருப்பார்கள்.
'என்முன் வளைந்து இளம் தென்றலில்
தத்திம்தா தகதீம்தா தீம்தா
மிதந்து வரும் கைகளில்
தத்திம்தா தகதீம்தா தீம்தா
வளையலின் டியூன் கேட்கலாம்'
மேடமும், எம்.ஜி.ஆரும் பாட்டுக்குத் தக்கபடி பரதம் ஆட,
இதையெல்லாம் பார்த்து அசோகன் எரிச்சல் பட்டு ராமாராவிடம் 'மாமா' என்று கத்த,
இப்போது டான்ஸ் ட்விஸ்ட்டுக்கு மாறும்.
ராட்சஸி சும்மா புகுந்து விளையாடுவார். ஜெயா மேடமும்தான்.
'ட்விங்கிள் ட்விங்கிள் லிட்டில் ஸ்டார்
யூ ஆர் ஆல்ஸோ பிலிம் ஸ்டார்
ட்விங்கிள் ட்விங்கிள் லிட்டில் ஸ்டார்
யூ ஆர் ஆல்ஸோ பிலிம் ஸ்டார்'
என்று கலாய்த்துவிட்டு மேடம் எம்.ஜி.ஆரின் கைகளை தூக்கிப் பிடித்து நம்மிடம் போடுவாரே ஒரு போடு!
'லுக்கிங் மை ஸ்டார் M.G.R'
எப்படி! ஜோராவும், பொறுத்தமாயும் இல்லை?! அப்படியே தொடர்வதைப் பாருங்கள்.
'லவ்லி பியூட்டி கமான் சார்!'
எம்.ஜி.ஆருக்கு உடனே அதுவரை பாடகர் திலகத்தின் குரல். இப்போது ஆங்கில வார்த்தைகள் என்பதால் சாய்பாபா வந்து உதவுவார். எம்.ஜி.ஆர் 'பார்பி டால்' கணக்கா நடந்து நகர்ந்து வருவார்
'மீட் மீ மீட் மீ ஸ்வீட்டி கேர்ள்'
என்று சாய்பாபா ஆங்கிலத்தில் பாடி தொடர்வார். (இன்னும் இருக்கு...எழுத கஷ்டம்)
அப்படியே இசை மாறும்.
ஈஸ்வரி,
'போய்யா போய்யா போய்யா போய்யா... தொடாதே
நீ மன்மதன் போல் அம்பெடுத்து விடாதே'
எம்.ஜி.ஆர் மேல் அம்பு விடுவது போல் ஆக்ஷன் பண்ணுவார் மேடம். அம்பு தொடுப்பதற்குக் கூட அருமையான மியூசிக் தந்திருப்பார் விஸ்வநாதன்.( டிரிடிரிடிரிடிரிடிங்.....)
பதிலுக்கு எம்.ஜி.ஆர்,
'வாம்மா வாம்மா வாம்மா வாம்மா போகாதே
நீ விலகி நின்னா உடம்புக்குத்தான் ஆகாதே'
இப்போது மேடம் டர்ன்.
'ஓ... போதும் போதும் போதும் ஆசையே
எனக்குக் கூடாதய்யா ஆம்பளைங்க வாடையே'
(அப்படிப் போடு அருவாள!):)
எம்.ஜி.ஆர் சமாதானப்படுத்துவார்.
'அட ஏம்மா ஏம்மா ஏம்மா ஏம்மா கோபமா?
நாம் இருவருமே காதலிச்சா பாவமா?'
ஈஸ்வரியின் அட்டகாசம் இப்போது.
'அஹ்ஹோ! பேலா பேலா பேலா பேலா டாங்கிரி டிங்காலே'
(இப்படி பாடலைன்னா ஈஸ்வரிக்கு அர்த்தம் ஏது?)
இப்போது சாய்பாபா குரல் எம்.ஜி.ஆருக்கு.
'லைலா லைலா லைலா லைலா டிங்கிரி டங்காலே'
மறுபடியும் பாடல் தொடர்ந்து பின் முடிவடையும்.
'அத்தையின் மகளே ஏன் இந்த ரகளே
அத்தானின் பக்கத்திலே வேறென்ன கவலே'
யாஹூம் வாஹூம் யாஹூம்
வாஹூம் யாஹூம் வாஹூம்
வாஹூம் யாஹூம் வாஹூம்
வாஹூம் யாஹூம் வாஹூம்
பலே பலே பலே பலே பலே
பலே பலே பலே பலே பலே
வெட்டாத கண்ணைக் கொண்டு
முட்டாத நெஞ்சைக் கொண்டு
கட்டாயம் காதலுண்டு
திட்டாதே என்னைக் கண்டு
யாஹூம் வாஹூம் யாஹூம்
வாஹூம் யாஹூம் வாஹூம்
யாஹூம் யாஹூம் யாஹூம்
வாஹூம் யாஹூம் வாஹூம்
அத்தையின் மகளே ஏன் இந்த ரகளே
அத்தானின் பக்கத்திலே வேறென்ன கவலே
யாஹூம் வாஹூம் யாஹூம்
வாஹூம் யாஹூம் வாஹூம்
யாஹூம் யாஹூம் யாஹூம்
வாஹூம் யாஹூம் வாஹூம்
ஓ.பி.நய்யர் பாணி மியூசிக்கிற்கு எம்.ஜி.ஆரும், மேடமும் செம ஜோராக ஆடுவார்கள்.
அப்பாடா!
பாடல் முடிவடையும்.
எம்.ஜி.ஆரும், மேடமும் மூச்சு வாங்க விதவிதமான டியூன்களுக்கு அமர்க்களம் பண்ணுவாங்க. எம்.ஜி.ஆர் ரிலாக்ஸாக மாறுதலாக வித்யாசமாக பண்ணியிருப்பார். ஈஸ்வரி குரலில் மேடம் கேட்கவே வேணாம். பணால் பணால்தான்.
பாடகர் திலகமும், சாய்பாபாவும் காமெடியில் கலக்குவார்கள்.
எம்.ஜி.ஆரின் வழக்கமான காதல் பாடல்களுக்கும், கருத்துள்ள அறிவுரைப் பாடல்களுக்கும் மத்தியில் அவருக்கு இப்படி ஆறுதலாக, தமாஷாக ஒரு பாடல். அவரும் வழக்கத்தையெல்லாம் மறந்து ஜாலியாகப் பண்ணியிருப்பார்.
எம்.ஜி.ஆர், ஜெயா இணைவு இப்பாடலில் செமையாக ஒர்க் அவுட் ஆகும்.
பாடலில் தெரியாமல் ஒரு சிறு குறையைப் பண்ணியிருப்பார் டி.எம்.எஸ்.
'நீ யாருகிட்ட காட்டுறது கைவரிச
காலை வாரி விட்டா கொட்டிப் போகும் பல்வரிசை'
வரிகளை அவர் பாடும் போது 'கைவரிச' என்று சற்று கொச்சையாக உச்சரித்துவிட்டு அடுத்த வரியில் வரும் 'பல்வரிசை' யைத் தூய தமிழில் சுத்தமாக உச்சரிப்பார்.:) 'கைவரிச' என்பது போல் 'பல் வரிச' என்று சாதரணாமாக உச்சரித்து இருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். இது என் கருத்துதான். பரவாயில்லை. காமெடி பாடல்தானே! ரொம்ப நோண்ட வேண்டாம். ஓ.கே!
நான் அப்போதிலிருந்தே கேட்டும், பார்த்தும் ரொம்ப ரசிச்சிக் கொண்டிருக்கும் பாடல்.
நீங்க எப்படி? பார்த்துட்டு சொல்லுங்கோ!
https://youtu.be/B86Gk92C7MM
வாசுஜி....
படார் படார்னு இப்பவே தீபாவளியை ஆரம்பிச்சுட்டீங்க.... எப்படி புகழ்வேன் ? என் உள்ளம் உந்தன் ஆராதனை.. என் கண்ணில் வைத்தேன் அன்பால் உன்னை !!
சிக்கா... சுஜாதா சொன்னது அக் மார்க் நிஜம்... புரிந்து கொள்வதுதான் சிரமம்.
வாசு ஜி...
மறுபடி... ஹி ஹி.. இன்னொரு பாட்டு பற்றி டவுட்டு ( சத்தியம் தவறாதே என்றதும் ஏனோ இந்தப் பாட்டு நினைவுக்கு வந்தது )
"பல்லாக்கு போல வண்டி பாதையிலே ஓடட்டும் தள்ளம்மா தள்ளம்மா தள்ளம்மா" என்ற பாட்டு எந்தப் படம் ? ( ஏற்கனவே கேட்டுட்டேனா ? அதுவும் மறந்து போச்சு )... ராகவ்ஜி ... ப்ளீஸ்
ஒரு பாரா அரை குறையாக நினைவில் இருக்கு..
மாடல் இது கொஞ்சம் புதியதம்மா - எங்க
மாமியாரைப் போல இது பெரியதம்மா
காரு முன்னாலே ரெண்டு காளையக் கட்டு - அட
காளை இல்லேன்னா என் மாமியைக் கட்டு
( சிக்காவுக்கு ரொம்ப பிடிக்கும் :) )
Enjoy this monotony breaker though not related to GG!
முளைத்து மூணு இலை விடாத காதல் (பயிர்) மன்னன் ?!
பாய் படுக்கையில் மூச்சா போகும் வயதில் ஒரு ஸ்மூச்சர் Smoocher Boy !!
https://www.youtube.com/watch?v=ug3-Q7eLSz4
வாசு சார்
மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி.யின் அற்புதமான பின்னணி இசையோடு அவருடைய புகழ்க்கிரீடத்தில் மற்றோர் வைரமாக மின்னும் திரைப்படம் ராமன் தேடிய சீதை. அதில் இடம் பெற்ற படார் படார் பாடலை இதுவரை பார்க்காதவர்களையும் பார்க்கத் தூண்டும் வண்ணம் தங்கள் எழுத்து வன்மையால் ஈர்த்து விட்டீர்கள்.
பாராட்டுக்கள்.
நன்றி ராகவேந்திரன் சார்.
முற்றிலும் உண்மை. 'ராமன் தேடிய சீதை' படத்தின் பாடல்கள் சிரஞ்சீவியானவை, 'மெல்லிசை மன்னர்' தூள் கிளப்பிய படம் இது. எம்.ஜி.ஆர் அவர்களின் பாடல்களில் எனக்கு பிடித்த முதலிடத்தில் இருக்கும் பாடல் 'என் உள்ளம் உந்தன் ஆராதனை' என்று பலமுறை குறிப்பிட்டுள்ளேன். படமே கூட எம்.ஜி.ஆர் அவர்களின் படங்களில் இருந்து கொஞ்சம் மாறுபட்டதுதானே!
ஆமாம். சந்தேகமில்லை. வழக்கமான எம்.ஜி.ஆர். படங்களின் உடையலங்காரம் இந்தப் படத்தில் கிடையாது. முற்றிலும் வித்தியாசமாக, இன்னும் சொல்லப்போனால் என் உள்ளம் உந்தன் ஆராதனை பாடலை அடிக்கடி நடிகர் திலகம் வாணி ஜோடியை கற்பனை செய்து மகிழ்வேன். இன்னும் அட்டகாசமாக அமைந்திருக்கும். ராமன் தேடிய சீதை எம்.ஜி.ஆர். படங்களிலேயே காஸ்ட்யூமில் நம்பர் 1. குறிப்பாக ஈஸ்வரியின் குரலில் பாடும் இந்தப் பாடலை என் உள்ளம் என்றுமே ஆராதனை செய்து கொண்டே இருக்கும். நான் முன்னர் குறிப்பிட்டது போல் நடிகர் திலகம் நடித்திருக்க வேண்டிய பாடல்கள் என நாம் பட்டியலிட்டோமானால் இந்தப் பாடலுக்கு நிச்சயம் அதில் இடம் உண்டு.
ஒளிப்பதிவு, இசையமைப்பு, பின்னணி இசை, வெளிப்புறப் படப்பிடிப்பு இடங்கள், குறிப்பாக இந்தப் படத்தின் சிறப்பம்சமே அந்த கருப்புக்கண்ணாடி தான். ராமன் தேடிய சீதை படம் வந்த போது இந்த கூலிங்கிளாஸுக்கு நல்ல மவுசு ஏற்பட்டு அந்தப் பெயரைச் சொல்லியே பல கடைகளில் விற்பனை செய்தனர்.
நடிகர் திலகம் நடித்திருக்க வேண்டிய படம் என்று எண்ணி எண்ணி நான் பல முறை ஏங்கியிருக்கிறேன்.
ராகவேந்திரன் சார், மதுண்ணா,
ராமன் தேடிய சீதை திரைப்படத்தில் திரைப்படத்தில் 'ஏன்னா நீங்க எங்கே போறேள்?' என்று ஒரு சூப்பர் பாடல் ஒன்று உண்டு. ('மெல்லிசை மன்னர்' பிய்த்து உதறி பேயாட்டம் ஆடிவிடுவார் விடுவார் இந்தப் பாடலில்). 'பத்ரகாளி' படத்தில் சிவக்குமாரிடம் ராணி சந்திரா அவர் வெளியே பார்த்த ஆட்டத்தை வீட்டிலேயே 'கேட்டேளே அங்கே அதப் பார்த்தேளா இங்கே' என்று பாடி ஆடிக் காட்டுவாரே. அதே காட்சியமைப்புத்தான் இந்தப் பாடலுக்கும். ஆனால் 'ராமன் தேடிய சீதை' முன்னாலேயே வந்து விட்டது.
எம்.ஜி.ஆர் அவர்கள் ஒரு நாடகத்திற்குத் தலைமை தாங்க நாடகத்தில் ஆடுபவர் மேடம். அவரது கணவனாக ராகினி ஆண் வேடத்தில் கோட் சூட் போட்டுக் கொண்டு தண்ணி அடிப்பார் விக்கிக் கொண்டே.
வெளியிலே ஹோட்டலில் கேபரே பார்த்துவிட்டு அதே போல ஆட்டத்தை மனைவி ஜெயாவிடம் ராகினி எதிர்பார்ப்பார். ஆச்சாரமாய் சேலை அணிந்திருக்கும் ஜெயா கணவர் ராகினியின் ஆசையை நிறைவேற்ற அதே போல நாகரீக உடை மாற்றி ஆடிக் காட்டுவார். (மேடம் அநியாயத்துக்கு கிளாமர்.):)
இதுதான் நாடகக் காட்சி.
ஜெயா மேடத்திற்கு வழக்கம் போல ராட்சஸி குரல் தந்து கலக்கல்.
இப்போதுதான் ஒரு சந்தேகம். நீங்கள் தீர்த்து வைக்க வேண்டும்.
ஆண் வேடம் போட்டிருக்கும் ராகினிக்கு குரல் தந்த பாடகி யார்?
அந்தக் குரல் நம் ஆச்சி மனோரமாவின் குரல் போல் உள்ளதே! (குறிப்பாக 'முடியுமா நீ முன்னாலே... நீ முடிஞ்சா ஆடு என் முன்னாலே').....அந்தக் குரல் ஆச்சியுடையதுதானே?
அந்தப் பாடலில் ஆச்சி கிடையாது. ஆனால் படத்தில் உண்டு. ஒருவேளை ஆச்சியே ஜெயாவுடன் அந்த நாடகக் காட்சியில் நடிக்க இருந்து பின் அதில் ராகினி நடித்தாரா? அதனால் முன்னமேயே மனோரமா பாடலைப் பாடி விட்டாரா?
அல்லது அது மனோரமா குரல் இல்லாமல் வேறு யாருடைய குரலாவதா? டைட்டிலில் பின்னணி பாடியவர்கள் பட்டியலில் ஆச்சி பெயர் இல்லை.
ஆனால் குரல் ஆச்சி குரல் போலவே இருக்கு.
நான்தான் குழம்புகிறேனா?
தெளிவுபடுத்தவும். ப்ளீஸ். வரலாறு தெரிந்து கொள்ள வல்லிய ஆசை. ஸ்கூலில் படிச்சப்ப கூட வரலாற்றை இப்படி புரட்டியதில்லை.:)
https://youtu.be/wLJDZvrmA0A