-
18th October 2015, 10:33 AM
#791
Senior Member
Seasoned Hubber
vaNakkam kaNNaa... I liked your dEvathai song... and here is a dhEvan magaL song.
It is different from the typical tfm song; but I hope you like this one!!! 
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
18th October 2015 10:33 AM
# ADS
Circuit advertisement
-
18th October 2015, 04:04 PM
#792
Senior Member
Senior Hubber
முக நூலில் படித்த இந்த விஷயத்தை இங்கு சொல்லக் காரணங்கள் சில
1. சுஜாதாவின் வாக்கியம் :“வாழ்க்கையே படிப்படியான சமரசங்களால் ஆனது.”
2. இந்த இடுகை எழுதியவர் ப்ரியா படத்தை திரும்பத்திரும்பப் பார்த்தோம் என எழுதியிருக்கிறார் ஆச்சரியமாக இருக்கிறது..ஏனெனில் குமுதத்தில் தொடராகப் படித்து விட்டு ஆவலாக ஸ்ரீதேவி தியேட்டருக்கு (ஆதிராம் ம்க்கும்
) ச் சென்று பார்த்து ஏமாற்றமடைந்த படம்..எஸ்பெஷலி க்ளைமாக்ஸில் அந்த அடுக்குமாடி அபார்ட்மெண்ட்ஸில் இருந்து பூச்சாடியை ஸ்ரீதேவி எத்துவாராம் படக்கென ஜன்னல் திறக்குமாம் அதைவைத்து ரஜினி காப்பாற்றுவாராம்..அட போங்கப்பா எனப் பார்த்த போதே தொன்றியது..
அப்படியே நாவல் வந்தது போலவே கொஞ்சூண்டு பாட்காட்சிகள் சேர்த்து எடுத்திருந்தால் வெகு நன்றாக வந்திருக்கும்..
3. இது பற்றி சுஜாதா சொன்னதை ஏற்கெனவே படித்திருக்கிறேன்..அதுபோல அவரது திரைக்கதை எழுதுவது எப்படி நூலில் அவரது எழுத்தின் மாற்றங்கள் நன்றாக வெளிப்படும்..உதாரணத்திற்குச் சொன்ன படம் உள்ளம் கேட்குமே..(வெகு அழகான படம்)
4. ம்ம்ம்.. பாடல் ஒன்று பார்க்க ஆவல் வந்தது 
முக நூலில் எழுதியிருந்தவர் ஜான் துரை அஸீர் செல்லையா..
//சுஜாதா பற்றிய சுவாரஸ்யமான தகவல் ஒன்று கண்ணில் பட்டது...
‘ப்ரியா’ ..
இந்தப் படம் 1978 இல் வெளியானது நன்றாக ஞாபகம் இருக்கிறது... ஆனால் திரும்ப திரும்ப திரையரங்குகளுக்குப் படை எடுத்த நாங்கள் , எத்தனை தடவை இந்தப் படத்தைப் பார்த்திருப்போம் என்பது எங்களுக்கே ஞாபகம் இல்லை...
எங்கள் எல்லோருக்கும் பிடித்த இந்த “ப்ரியா” ஒரே ஒருவருக்கு மட்டும் கொஞ்சம் கூடப் பிடிக்கவில்லை..
“ப்ரியா”வைப் பிடிக்காத அந்த ஒருவர்.... அந்தப் படத்தின் கதையை எழுதிய சுஜாதா..
இதோ..அது பற்றி சுஜாதா...
“.... ‘ப்ரியா’ சினிமாவானது ஒரு கூத்து...
பஞ்சு அருணாசலம் அது தொடர்கதையாக வந்தபோதே அதற்கு கர்ச்சீப் போட்டு வைத்திருந்தார். ஆனால் கதை இஷ்டத்திற்கு மாற்றப்பட்டது...
..இதெல்லாம் என் கதையில் எங்கே வருகிறது என்று கேட்பதை முதலிலேயே நிறுத்திவிட்டேன். சினிமா என்பது மற்றொரு பிராணி என்பதை என் குறுகிய கால சினிமா அனுபவமே உணர்த்தியிருந்தது...”
# “பிரியா” கதை , சினிமாவுக்காக சித்திரவதை செய்து கொல்லப்பட்டதை , சுஜாதாவால் கொஞ்சம் கூட ஏற்றுக் கொள்ள முடியவில்லை..
சிறிது காலத்திற்குப் பின் சுஜாதா எழுதிய 'உன்னைக் கண்ட நேரமெல்லாம்' என்ற கதையில் , கணேஷும், வசந்த்தும் இப்படி உரையாடுவது போல எழுதி தன் குமுறலைக் கொட்டித் தீர்த்துக் கொண்டார் சுஜாதா ...
### “வசந்த் அதிகக் கோபத்தில் மேலும் கீழும் நடந்து கொண்டிருந்தான்.
ஏராளமான காகிதங்களின் மத்தியில் 77 உறிஞ்சிக் கொண்டிருந்த கணேஷ் அவனை நிமிர்ந்து பார்த்து "எதுக்காக இப்படி வெட்டியா நடக்கிறே? என்ன ஆச்சு வசந்த்?"
"அந்த ஆள் மேல கேஸ் போடணும் பாஸ்."
"எந்த ஆள்? எந்த கேஸ்?"
"எழுத்தாளர் சுஜாதா! இந்த மாதிரி நம்ம ரெண்டு பேரையும் கேலிக்கிடமா படம் எடுக்க அனுமதிச்சதுக்கு."
"என்ன படம்?"
"ப்ரியா."
"எழுத்தாளர் என்ன செய்வார்? அவர் புஸ்தகத்திலே சரியாத்தானே எழுதியிருந்தார்?"
"படம் எடுத்தவர்கள் பேரில போடலாம்னு பார்க்கிறேன்."
"அவுங்க என்ன செய்வாங்க? புஸ்தகத்திலே இருந்த மாதிரி படம் எடுத்தா படம் போண்டி ஆயிடும்...... .......இதுக்கெல்லாம் கோவிச்சுண்டா என்ன ஆறது? விட்டுத் தள்ளு. படம் ஓடறது பாரு. கிளி, டால்பின்னு என்னமோ கலந்து கட்டி இருக்காங்களாமே?"
கணேஷ் வாய்விட்டுச் சிரித்தான்.
"என்ன இருந்தாலும் எனக்கு சமாதானமாகலே பாஸ். நீங்க அந்தப் படத்தைப் பார்த்தீங்கன்னா..."
"முதல்ல ஒண்ணு தெரிஞ்சுக்க. ஒரு லாயர் கேஸ் போடவே கூடாது. கேஸ் போட வைக்கணும்."
# இப்படி எழுதித் தன் குமுறலைக் குறைத்துக் கொண்டிருக்கிறார் சுஜாதா.... கொந்தளிப்பு குறைந்த பிறகு கொஞ்சம் கொஞ்சமாக யோசிக்க ஆரம்பித்தார்...
சினிமாவின் சூத்திரங்களுக்கு ஏற்ப தன்னை “அப்டேட்” செய்து கொண்டார்...
அவரின் அசத்தல் வசனங்கள் அனைவரையும் கவரும் அளவுக்கு , சினிமாவை தன் வசப்படுத்திக் கொண்டார்...
# இதோ..சில சாம்பிள்கள்.....
# அந்நியனில் தன் உள்ளங்கையில் முத்தமிட்ட நந்தினியிடம் ரெமோ: “ஹேய் என்ன கைல முத்தம் குடுக்கிற .... நான் என்ன போப்பாண்டவரா..?”
#“தப்புல ஸ்மால், லார்ஜ், எக்ஸ்ட்ரா லார்ஜெல்லாம் சொல்ல, அது என்ன பனியன் சைஸா?”
# சரி... சினிமாவை அடியோடு வெறுத்த சுஜாதா , காலப்போக்கில் அந்த சினிமாவுக்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொண்டு வெற்றியும் பெற்றது எப்படி..?
சுஜாதா ஒருமுறை சொன்னது நினைவுக்கு வருகிறது...
“வாழ்க்கையே படிப்படியான சமரசங்களால் ஆனது.”
# நிஜம்தானே...!!!
எவ்வளவு பெரிய உண்மையை , எவ்வளவு எளிமையாகச் சொல்லி விட்டார் சுஜாதா..?!!
ஆம்...“வாழ்க்கையே படிப்படியான சமரசங்களால் ஆனது.”//
Last edited by chinnakkannan; 18th October 2015 at 04:09 PM.
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
18th October 2015, 04:49 PM
#793
Senior Member
Diamond Hubber
ரிலாக்ஸ் பாடல்
ரிலாக்ஸ் பாடல்.
ரொம்ப நாளைக்கு அப்புறம்.
கொஞ்சம் வித்தியாசமான பாடல். அதுவும் எம்.ஜி.ஆர் அவர்களின் படத்திலிருந்து.

காலையிலிருந்து 'அழகான மலையாள' ஈஸ்வரியே ராட்சஸத்தனமாக மன ராட்டினத்தில் சுற்றிக் கொண்டிருக்கிறார்.
சரி! இன்னொரு பாடலைத் தந்துவிடலாம் என்று யோசித்தால் 'படார்' என்று இந்தப் பாடல் மூளையை மின்சாரமாய்த் தாக்கியது.
பாடலும் படார் படார்தான்.
இசையும் படார் படார்தான்
நடிப்பும் படார் படார்தான்
குரல்களும் படார் படார்தான்
ஒட்டு மொத்தப் பாடலும், காட்சிகளும் 'படார் படார்'தான்.
எம்.ஜி.ஆர் அவர்கள் படங்களில் இத்தகைய பாடல்களை அதிகம் காண முடியாது. அப்படியே காண நேர்ந்தாலும் அவருடைய பெரும்பான்மையான ஹிட்களுக்கிடையே இத்தகைய பாடல்கள் அடங்கி, அமுங்கி மறைந்து போய்க் கிடக்கும். அத்தகைய பாடல் ஒன்றை தூசி தட்டி எழுப்பி எடுத்தால் என்ன தோன்றியது. விளைவு...
நினைவுக்கு வந்தது ராட்சஸி, பாடகர் திலகம் கலக்கும் 'ராமன் தேடிய சீதை' படத்தின் 'படார் படார் படார்' பாடல்.

கால்கள் இருந்தும் சக்கர நாற்காலியில் அமர்ந்து நொண்டியாய் நடிக்கும் கோமாளி வில்லன் அசோகன். அவரிடம் மாட்டிக் கொண்ட ராமாராவின் வளர்ப்பு மகள் பேதை ஜெயா மேடம் தன்னை அசோகனிடமிருந்து காப்பாற்றிக் கொள்ள பைத்தியமாய் நடிக்கிறார். தன்னை எப்படியாவது காப்பாற்றச் சொல்லி ஹீரோ எம்.ஜி.ஆர் அவர்களுக்குக் கடிதம் அனுப்புகிறார்.
விவரமறிந்த எம்.ஜி.ஆர் அசோகன் வீட்டிற்குள் மேடத்தைக் காப்பாற்ற பைத்திக்கார டாக்டராக உள்ளே நுழைகிறார். ஜெயாவின் பைத்தியத்தை தன்னால் குணப்படுத்த முடியும் என்று கூறுகிறார். பைத்தியத்தை பைத்தியத்தால்தான் குணப்படுத்த முடியும் என்று கூறி வில்லன் முன் மேடத்திடம் பைத்தியம் போலவே தானும் நடித்து ஆட்டம் ஆடி பாட்டுப் பாடி நாடகம் ஆடுகிறார். ஜெயாவுடன் அசோகனுக்குத் தெரியாமல் கூட்டு வைத்துக் கொண்டே கூத்தடிக்கிறார்.
'ராணி எங்கே? என்று எம்.ஜி.ஆர் கேட்க,
ஜெயலலிதா 'கௌ கேர்ள்' ரேஞ்சில் பேன்ட், ஷர்ட், குல்லாய், கம் பூட் சகிதம் ஒற்றைகுழல் துப்பாக்கி எடுத்து சுட்டுக் கொண்டே வர, அவரை அடக்க வேஷம் கட்டும் எம்.ஜி.ஆர்.
இந்த ரகளையான பாடல் ராட்சஸி குரலில் ரசிக்கத்தக்கபடி ஆரம்பிக்கும்.
'படார் படார் படார்
படார் படார் படார்
படார் படார் படார்'
'தென் இலங்கை மன்னனுக்கு தங்கை இந்த மங்கை
எந்தன் மூக்கறுக்க வந்ததென்ன மூடா!
உன் மூளை கெட்டுப் போனதென்ன போடா!
வில்லொடித்த ராமனுக்கு பல்லொடித்து காட்டுதற்கு
அண்ணனுண்டு என்னிடத்தில் வாடா'
அடேயப்பா! என்ன வரிகள்!
அடுத்த வரி டாப்.
தொண்டை வற்ற மேடம் பாடி விட்டார்களாம். அதனால்,
'தொண்டை காய்ஞ்சி போச்சு கொண்டு வாடா சோடா' (ஈஸ்வரி என்னமா 'சோடா" சொல்லிக் கேட்கிறார்.)
மேடம் அசோகனை உலுக்கி, தொண்டை கனைத்துக் கொண்டு, 'ஜாவ்' ஆவார்.
அசோகன் அவரது பாணியில் ஓலமிட்டபடியே எம்.ஜி.ஆரிடம் 'என்ன டாக்டர் இது? என்று கேட்க,
எம்.ஜி.ஆர் நகைச்சுவையாக அசோகனிடம்,
'விடிய விடிய ராமாயணம் கேட்டிருப்பா போல இருக்கு
... இருங்க என் கண்ட்ரோலுக்கு கொண்டு வரேன்'
என்று சொல்வது நமக்கு உண்மையாகவே சிரிப்பை வரவழைக்கும்.
எம்.ஜி.ஆரிடம் 'ஹய்ய்யா' என்று துள்ளிக் குதித்து மேடம்,
'படார் படார் படார்
படார் படார் படார்'
என்று கைகள் நீட்டி குத்துக்கள் விட,
எம்.ஜி.ஆர் பதிலுக்கு பாடகர் திலகத்தின் குரலில்,
'பாடாதே பாடாதே நிப்பாட்டு
அடி பாடாதே பாடாதே நிப்பாட்டு
உன் பாட்டுக்குப் பாடப் போறேன் எதிர்பாட்டு
உன் பாட்டுக்குப் பாடப் போறேன் எதிர்பாட்டு
படார் படார் படார்
படார் படார் படார்'
என்று துப்பாக்கியை எடுத்து சிலம்பமாகச் சுழற்ற, களேபரம் ஆரம்பம்.
'படார் படார் படார்
படார் படார் படார்
எட்டு ஊரு கேட்குமடி என் பாட்டு...
(டி.எம்.எஸ்.தொடர்ந்து தரும் 'அ அ அ அ ஆ' ஹம்மிங் கணீர் அருமை.)
இங்கு என்னை வந்து என்ன செய்யும் உன் பாட்டு?'
என்று எம்.ஜி.ஆர் எகிற, மேடமோ உடனே,
'நிப்பாட்டு'
என்று கட்டளை இடுவார். எம்.ஜி.ஆர் இப்போது பாடுவார்... இல்லை இல்லை...திட்டுவார்.
'அடி சூர்ப்பனகை ராணி
மூக்கறுந்த மூலி
நீ யாருகிட்ட காட்டுறது கைவரிச
காலை வாரி விட்டா கொட்டிப் போகும் பல்வரிசை'
ஜெயாவின் ஒரு காலைப் பிடித்து எம்.ஜி.ஆர் வாருவார். நமக்கு 'திக்'கென்று இருக்கும்.
நடக்கும் கூத்துக்களைப் பார்த்து ஊளையிடும் அசோகனை சமாதனப்படுத்திவிட்டு எம்.ஜி.ஆர் ஜெயாவிடம் வந்து நடிகர் திலகத்தின் 'தங்கப் பதுமை' படத்தின் புகழ் பெற்ற பாடலான 'முகத்தில் முகம் பார்க்கலாம்' பாடலை அதே டி.எம்.எஸ்.குரலில் பாடுவார். (இது அப்போது ஒரு அதிசயம்தான்)

தன் விரலை அம்மு வாய்க்குள் எம்.ஜி.ஆர் விட, சின்னக் குழந்தை மாதிரி மேடம் அவர் விரல்களைக் கடிக்க, எம்.ஜி.ஆர் கோட், சூட், அவர் பாணி கண்ணாடி, தொப்பி சகிதம் பரத நாட்டிய அசைவுகள் தந்து பாடலுக்கு ஆட செம ரகளை.
'முகத்தில் முகம் பார்க்கலாம்
விரல் நகத்தில் கியூடெக்ஸின் நிறம் பார்க்கலாம்'
எப்படி? நக பாலிஷ் 'கியூடெக்ஸ்' பவழத்திற்கு பதிலாக வந்து உட்கார்ந்து விட்டது நாகரீக காலத்திற்குத் தக்கவாறு. காமடிதானே!
நடுவே தனியாக இருக்க சந்தர்ப்பம் கிடைக்கும் போது 'லெட்டெர் கிடைச்சுதா? என்று மேடம் எம்.ஜி.ஆரிடம் வினவ, எம்.ஜி.ஆர் லெட்டெர் கிடைத்ததையும், காப்பாற்ற வந்திருப்பதையும் சொல்லுவார். மேடத்துக்குத் தெரிந்த பாட்டையெல்லாம் வேண்டுமென்றே பாட வேறு சொல்வார்.
'சத்தம் காணோமே' என்று சந்தேகப்பட்டு அசோகன் சக்கர நாற்காலியில் நகர்ந்து வர, இருவரும் உஷாராகி எம்.ஜி.ஆர் அதே பாடலைத் தொடருவார்.
'வகுத்த கருங்குழலை ஹேர் டிரெஸ்ஸிங் எனச் சொன்னால்
லிப்ஸ்டிக்கை இதழோடு இணை சேர்க்கலாம்'
இங்கே 'மழை முகிலு'க்குப் பதிலாக இங்கிலீஷில் 'ஹேர் டிரெஸ்ஸிங்' விளையாடும். சூப்பர் நகைச்சுவையாக வரியை மாற்றி இருப்பார்கள்.
'என்முன் வளைந்து இளம் தென்றலில்
தத்திம்தா தகதீம்தா தீம்தா
மிதந்து வரும் கைகளில்
தத்திம்தா தகதீம்தா தீம்தா
வளையலின் டியூன் கேட்கலாம்'
மேடமும், எம்.ஜி.ஆரும் பாட்டுக்குத் தக்கபடி பரதம் ஆட,
இதையெல்லாம் பார்த்து அசோகன் எரிச்சல் பட்டு ராமாராவிடம் 'மாமா' என்று கத்த,
இப்போது டான்ஸ் ட்விஸ்ட்டுக்கு மாறும்.
ராட்சஸி சும்மா புகுந்து விளையாடுவார். ஜெயா மேடமும்தான்.
'ட்விங்கிள் ட்விங்கிள் லிட்டில் ஸ்டார்
யூ ஆர் ஆல்ஸோ பிலிம் ஸ்டார்
ட்விங்கிள் ட்விங்கிள் லிட்டில் ஸ்டார்
யூ ஆர் ஆல்ஸோ பிலிம் ஸ்டார்'
என்று கலாய்த்துவிட்டு மேடம் எம்.ஜி.ஆரின் கைகளை தூக்கிப் பிடித்து நம்மிடம் போடுவாரே ஒரு போடு!
'லுக்கிங் மை ஸ்டார் M.G.R'
எப்படி! ஜோராவும், பொறுத்தமாயும் இல்லை?! அப்படியே தொடர்வதைப் பாருங்கள்.
'லவ்லி பியூட்டி கமான் சார்!'
எம்.ஜி.ஆருக்கு உடனே அதுவரை பாடகர் திலகத்தின் குரல். இப்போது ஆங்கில வார்த்தைகள் என்பதால் சாய்பாபா வந்து உதவுவார். எம்.ஜி.ஆர் 'பார்பி டால்' கணக்கா நடந்து நகர்ந்து வருவார்
'மீட் மீ மீட் மீ ஸ்வீட்டி கேர்ள்'
என்று சாய்பாபா ஆங்கிலத்தில் பாடி தொடர்வார். (இன்னும் இருக்கு...எழுத கஷ்டம்)
அப்படியே இசை மாறும்.
ஈஸ்வரி,
'போய்யா போய்யா போய்யா போய்யா... தொடாதே
நீ மன்மதன் போல் அம்பெடுத்து விடாதே'
எம்.ஜி.ஆர் மேல் அம்பு விடுவது போல் ஆக்ஷன் பண்ணுவார் மேடம். அம்பு தொடுப்பதற்குக் கூட அருமையான மியூசிக் தந்திருப்பார் விஸ்வநாதன்.( டிரிடிரிடிரிடிரிடிங்.....)
பதிலுக்கு எம்.ஜி.ஆர்,
'வாம்மா வாம்மா வாம்மா வாம்மா போகாதே
நீ விலகி நின்னா உடம்புக்குத்தான் ஆகாதே'
இப்போது மேடம் டர்ன்.
'ஓ... போதும் போதும் போதும் ஆசையே
எனக்குக் கூடாதய்யா ஆம்பளைங்க வாடையே'
(அப்படிப் போடு அருவாள!)
எம்.ஜி.ஆர் சமாதானப்படுத்துவார்.
'அட ஏம்மா ஏம்மா ஏம்மா ஏம்மா கோபமா?
நாம் இருவருமே காதலிச்சா பாவமா?'
ஈஸ்வரியின் அட்டகாசம் இப்போது.
'அஹ்ஹோ! பேலா பேலா பேலா பேலா டாங்கிரி டிங்காலே'
(இப்படி பாடலைன்னா ஈஸ்வரிக்கு அர்த்தம் ஏது?)
இப்போது சாய்பாபா குரல் எம்.ஜி.ஆருக்கு.
'லைலா லைலா லைலா லைலா டிங்கிரி டங்காலே'
மறுபடியும் பாடல் தொடர்ந்து பின் முடிவடையும்.
'அத்தையின் மகளே ஏன் இந்த ரகளே
அத்தானின் பக்கத்திலே வேறென்ன கவலே'
யாஹூம் வாஹூம் யாஹூம்
வாஹூம் யாஹூம் வாஹூம்
வாஹூம் யாஹூம் வாஹூம்
வாஹூம் யாஹூம் வாஹூம்
பலே பலே பலே பலே பலே
பலே பலே பலே பலே பலே
வெட்டாத கண்ணைக் கொண்டு
முட்டாத நெஞ்சைக் கொண்டு
கட்டாயம் காதலுண்டு
திட்டாதே என்னைக் கண்டு
யாஹூம் வாஹூம் யாஹூம்
வாஹூம் யாஹூம் வாஹூம்
யாஹூம் யாஹூம் யாஹூம்
வாஹூம் யாஹூம் வாஹூம்
அத்தையின் மகளே ஏன் இந்த ரகளே
அத்தானின் பக்கத்திலே வேறென்ன கவலே
யாஹூம் வாஹூம் யாஹூம்
வாஹூம் யாஹூம் வாஹூம்
யாஹூம் யாஹூம் யாஹூம்
வாஹூம் யாஹூம் வாஹூம்
ஓ.பி.நய்யர் பாணி மியூசிக்கிற்கு எம்.ஜி.ஆரும், மேடமும் செம ஜோராக ஆடுவார்கள்.
அப்பாடா!
பாடல் முடிவடையும்.
எம்.ஜி.ஆரும், மேடமும் மூச்சு வாங்க விதவிதமான டியூன்களுக்கு அமர்க்களம் பண்ணுவாங்க. எம்.ஜி.ஆர் ரிலாக்ஸாக மாறுதலாக வித்யாசமாக பண்ணியிருப்பார். ஈஸ்வரி குரலில் மேடம் கேட்கவே வேணாம். பணால் பணால்தான்.
பாடகர் திலகமும், சாய்பாபாவும் காமெடியில் கலக்குவார்கள்.
எம்.ஜி.ஆரின் வழக்கமான காதல் பாடல்களுக்கும், கருத்துள்ள அறிவுரைப் பாடல்களுக்கும் மத்தியில் அவருக்கு இப்படி ஆறுதலாக, தமாஷாக ஒரு பாடல். அவரும் வழக்கத்தையெல்லாம் மறந்து ஜாலியாகப் பண்ணியிருப்பார்.
எம்.ஜி.ஆர், ஜெயா இணைவு இப்பாடலில் செமையாக ஒர்க் அவுட் ஆகும்.
பாடலில் தெரியாமல் ஒரு சிறு குறையைப் பண்ணியிருப்பார் டி.எம்.எஸ்.
'நீ யாருகிட்ட காட்டுறது கைவரிச
காலை வாரி விட்டா கொட்டிப் போகும் பல்வரிசை'
வரிகளை அவர் பாடும் போது 'கைவரிச' என்று சற்று கொச்சையாக உச்சரித்துவிட்டு அடுத்த வரியில் வரும் 'பல்வரிசை' யைத் தூய தமிழில் சுத்தமாக உச்சரிப்பார்.
'கைவரிச' என்பது போல் 'பல் வரிச' என்று சாதரணாமாக உச்சரித்து இருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். இது என் கருத்துதான். பரவாயில்லை. காமெடி பாடல்தானே! ரொம்ப நோண்ட வேண்டாம். ஓ.கே!
நான் அப்போதிலிருந்தே கேட்டும், பார்த்தும் ரொம்ப ரசிச்சிக் கொண்டிருக்கும் பாடல்.
நீங்க எப்படி? பார்த்துட்டு சொல்லுங்கோ!
Last edited by vasudevan31355; 18th October 2015 at 05:22 PM.
நடிகர் திலகமே தெய்வம்
-
Post Thanks / Like - 0 Thanks, 3 Likes
-
18th October 2015, 05:28 PM
#794
Senior Member
Diamond Hubber
வாசுஜி....
படார் படார்னு இப்பவே தீபாவளியை ஆரம்பிச்சுட்டீங்க.... எப்படி புகழ்வேன் ? என் உள்ளம் உந்தன் ஆராதனை.. என் கண்ணில் வைத்தேன் அன்பால் உன்னை !!
சிக்கா... சுஜாதா சொன்னது அக் மார்க் நிஜம்... புரிந்து கொள்வதுதான் சிரமம்.
வாசு ஜி...
மறுபடி... ஹி ஹி.. இன்னொரு பாட்டு பற்றி டவுட்டு ( சத்தியம் தவறாதே என்றதும் ஏனோ இந்தப் பாட்டு நினைவுக்கு வந்தது )
"பல்லாக்கு போல வண்டி பாதையிலே ஓடட்டும் தள்ளம்மா தள்ளம்மா தள்ளம்மா" என்ற பாட்டு எந்தப் படம் ? ( ஏற்கனவே கேட்டுட்டேனா ? அதுவும் மறந்து போச்சு )... ராகவ்ஜி ... ப்ளீஸ்
ஒரு பாரா அரை குறையாக நினைவில் இருக்கு..
மாடல் இது கொஞ்சம் புதியதம்மா - எங்க
மாமியாரைப் போல இது பெரியதம்மா
காரு முன்னாலே ரெண்டு காளையக் கட்டு - அட
காளை இல்லேன்னா என் மாமியைக் கட்டு
( சிக்காவுக்கு ரொம்ப பிடிக்கும்
)
Last edited by madhu; 18th October 2015 at 05:33 PM.
-
Post Thanks / Like - 1 Thanks, 2 Likes
-
18th October 2015, 06:22 PM
#795
Junior Member
Veteran Hubber
Enjoy this monotony breaker though not related to GG!
முளைத்து மூணு இலை விடாத காதல் (பயிர்) மன்னன் ?!
பாய் படுக்கையில் மூச்சா போகும் வயதில் ஒரு ஸ்மூச்சர் Smoocher Boy !!
-
19th October 2015, 06:54 AM
#796
Senior Member
Seasoned Hubber
வாசு சார்
மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி.யின் அற்புதமான பின்னணி இசையோடு அவருடைய புகழ்க்கிரீடத்தில் மற்றோர் வைரமாக மின்னும் திரைப்படம் ராமன் தேடிய சீதை. அதில் இடம் பெற்ற படார் படார் பாடலை இதுவரை பார்க்காதவர்களையும் பார்க்கத் தூண்டும் வண்ணம் தங்கள் எழுத்து வன்மையால் ஈர்த்து விட்டீர்கள்.
பாராட்டுக்கள்.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
Post Thanks / Like - 1 Thanks, 2 Likes
-
19th October 2015, 07:31 AM
#797
Senior Member
Diamond Hubber
-
19th October 2015, 07:35 AM
#798
Senior Member
Diamond Hubber

Originally Posted by
RAGHAVENDRA
வாசு சார்
மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி.யின் அற்புதமான பின்னணி இசையோடு அவருடைய புகழ்க்கிரீடத்தில் மற்றோர் வைரமாக மின்னும் திரைப்படம் ராமன் தேடிய சீதை. அதில் இடம் பெற்ற படார் படார் பாடலை இதுவரை பார்க்காதவர்களையும் பார்க்கத் தூண்டும் வண்ணம் தங்கள் எழுத்து வன்மையால் ஈர்த்து விட்டீர்கள்.
பாராட்டுக்கள்.
நன்றி ராகவேந்திரன் சார்.
முற்றிலும் உண்மை. 'ராமன் தேடிய சீதை' படத்தின் பாடல்கள் சிரஞ்சீவியானவை, 'மெல்லிசை மன்னர்' தூள் கிளப்பிய படம் இது. எம்.ஜி.ஆர் அவர்களின் பாடல்களில் எனக்கு பிடித்த முதலிடத்தில் இருக்கும் பாடல் 'என் உள்ளம் உந்தன் ஆராதனை' என்று பலமுறை குறிப்பிட்டுள்ளேன். படமே கூட எம்.ஜி.ஆர் அவர்களின் படங்களில் இருந்து கொஞ்சம் மாறுபட்டதுதானே!
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
19th October 2015, 08:00 AM
#799
Senior Member
Seasoned Hubber

Originally Posted by
vasudevan31355
நன்றி ராகவேந்திரன் சார்.
முற்றிலும் உண்மை. 'ராமன் தேடிய சீதை' படத்தின் பாடல்கள் சிரஞ்சீவியானவை, 'மெல்லிசை மன்னர்' தூள் கிளப்பிய படம் இது. எம்.ஜி.ஆர் அவர்களின் பாடல்களில் எனக்கு பிடித்த முதலிடத்தில் இருக்கும் பாடல் 'என் உள்ளம் உந்தன் ஆராதனை' என்று பலமுறை குறிப்பிட்டுள்ளேன். படமே கூட எம்.ஜி.ஆர் அவர்களின் படங்களில் இருந்து கொஞ்சம் மாறுபட்டதுதானே!
ஆமாம். சந்தேகமில்லை. வழக்கமான எம்.ஜி.ஆர். படங்களின் உடையலங்காரம் இந்தப் படத்தில் கிடையாது. முற்றிலும் வித்தியாசமாக, இன்னும் சொல்லப்போனால் என் உள்ளம் உந்தன் ஆராதனை பாடலை அடிக்கடி நடிகர் திலகம் வாணி ஜோடியை கற்பனை செய்து மகிழ்வேன். இன்னும் அட்டகாசமாக அமைந்திருக்கும். ராமன் தேடிய சீதை எம்.ஜி.ஆர். படங்களிலேயே காஸ்ட்யூமில் நம்பர் 1. குறிப்பாக ஈஸ்வரியின் குரலில் பாடும் இந்தப் பாடலை என் உள்ளம் என்றுமே ஆராதனை செய்து கொண்டே இருக்கும். நான் முன்னர் குறிப்பிட்டது போல் நடிகர் திலகம் நடித்திருக்க வேண்டிய பாடல்கள் என நாம் பட்டியலிட்டோமானால் இந்தப் பாடலுக்கு நிச்சயம் அதில் இடம் உண்டு.
ஒளிப்பதிவு, இசையமைப்பு, பின்னணி இசை, வெளிப்புறப் படப்பிடிப்பு இடங்கள், குறிப்பாக இந்தப் படத்தின் சிறப்பம்சமே அந்த கருப்புக்கண்ணாடி தான். ராமன் தேடிய சீதை படம் வந்த போது இந்த கூலிங்கிளாஸுக்கு நல்ல மவுசு ஏற்பட்டு அந்தப் பெயரைச் சொல்லியே பல கடைகளில் விற்பனை செய்தனர்.
நடிகர் திலகம் நடித்திருக்க வேண்டிய படம் என்று எண்ணி எண்ணி நான் பல முறை ஏங்கியிருக்கிறேன்.
Last edited by RAGHAVENDRA; 19th October 2015 at 08:03 AM.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
Post Thanks / Like - 1 Thanks, 2 Likes
-
19th October 2015, 08:03 AM
#800
Senior Member
Diamond Hubber
ராகவேந்திரன் சார், மதுண்ணா,
ராமன் தேடிய சீதை திரைப்படத்தில் திரைப்படத்தில் 'ஏன்னா நீங்க எங்கே போறேள்?' என்று ஒரு சூப்பர் பாடல் ஒன்று உண்டு. ('மெல்லிசை மன்னர்' பிய்த்து உதறி பேயாட்டம் ஆடிவிடுவார் விடுவார் இந்தப் பாடலில்). 'பத்ரகாளி' படத்தில் சிவக்குமாரிடம் ராணி சந்திரா அவர் வெளியே பார்த்த ஆட்டத்தை வீட்டிலேயே 'கேட்டேளே அங்கே அதப் பார்த்தேளா இங்கே' என்று பாடி ஆடிக் காட்டுவாரே. அதே காட்சியமைப்புத்தான் இந்தப் பாடலுக்கும். ஆனால் 'ராமன் தேடிய சீதை' முன்னாலேயே வந்து விட்டது.
எம்.ஜி.ஆர் அவர்கள் ஒரு நாடகத்திற்குத் தலைமை தாங்க நாடகத்தில் ஆடுபவர் மேடம். அவரது கணவனாக ராகினி ஆண் வேடத்தில் கோட் சூட் போட்டுக் கொண்டு தண்ணி அடிப்பார் விக்கிக் கொண்டே.
வெளியிலே ஹோட்டலில் கேபரே பார்த்துவிட்டு அதே போல ஆட்டத்தை மனைவி ஜெயாவிடம் ராகினி எதிர்பார்ப்பார். ஆச்சாரமாய் சேலை அணிந்திருக்கும் ஜெயா கணவர் ராகினியின் ஆசையை நிறைவேற்ற அதே போல நாகரீக உடை மாற்றி ஆடிக் காட்டுவார். (மேடம் அநியாயத்துக்கு கிளாமர்.)
இதுதான் நாடகக் காட்சி.
ஜெயா மேடத்திற்கு வழக்கம் போல ராட்சஸி குரல் தந்து கலக்கல்.
இப்போதுதான் ஒரு சந்தேகம். நீங்கள் தீர்த்து வைக்க வேண்டும்.
ஆண் வேடம் போட்டிருக்கும் ராகினிக்கு குரல் தந்த பாடகி யார்?
அந்தக் குரல் நம் ஆச்சி மனோரமாவின் குரல் போல் உள்ளதே! (குறிப்பாக 'முடியுமா நீ முன்னாலே... நீ முடிஞ்சா ஆடு என் முன்னாலே').....அந்தக் குரல் ஆச்சியுடையதுதானே?
அந்தப் பாடலில் ஆச்சி கிடையாது. ஆனால் படத்தில் உண்டு. ஒருவேளை ஆச்சியே ஜெயாவுடன் அந்த நாடகக் காட்சியில் நடிக்க இருந்து பின் அதில் ராகினி நடித்தாரா? அதனால் முன்னமேயே மனோரமா பாடலைப் பாடி விட்டாரா?
அல்லது அது மனோரமா குரல் இல்லாமல் வேறு யாருடைய குரலாவதா? டைட்டிலில் பின்னணி பாடியவர்கள் பட்டியலில் ஆச்சி பெயர் இல்லை.
ஆனால் குரல் ஆச்சி குரல் போலவே இருக்கு.
நான்தான் குழம்புகிறேனா?
தெளிவுபடுத்தவும். ப்ளீஸ். வரலாறு தெரிந்து கொள்ள வல்லிய ஆசை. ஸ்கூலில் படிச்சப்ப கூட வரலாற்றை இப்படி புரட்டியதில்லை.
Last edited by vasudevan31355; 19th October 2015 at 08:07 AM.
நடிகர் திலகமே தெய்வம்
-
Post Thanks / Like - 0 Thanks, 3 Likes
Bookmarks