-
17th October 2015, 06:43 PM
#11
Senior Member
Diamond Hubber

Originally Posted by
adiram
வாசு சார்,
வீடியோவும் இல்லாமல் ஆடியோவும் இல்லாமல் எப்படி இவ்வளவு சுத்தமாக பாடல் வரிகளை டைப் செய்தீர்கள்?. பாட்டுப்புத்தகம் உதவி?.
'.
ஆதி சார்,
பாட்டுப் புத்தகம் இருந்திருந்தால் முதலில் அதைப் பதித்திருப்பேனே! ஆதி முதலே அந்தப் பாடல் எழுத்துக்கு எழுத்து மனப்பாடம்.
நான்கு வருடங்களுக்கு முன்' விஜய்' தொலைக்காட்சியில் 'சத்தியம் தவறாதே' முழுப் படமும் பார்த்தேன். அப்போது 'முத்துக் குளிப்பவரே' பாடல் மட்டும் ரிகார்ட் செய்தேன். மற்ற பாடல்களை துரதிருஷ்டவசமாக ரிகார்ட் செய்யாமல் மடத்தனம் செய்து விட்டேன். (அப்போது 'மதுர கானங்கள்' தொடங்கவில்லை) அதற்குப் பிறகு இப்படத்தை போட்டார்களா என்று தெரியவில்லை. இப்போது விஜய் தொலைக்காட்சியில் பழைய படம் போடுவதையே நிறுத்தி விட்டு அந்த சேனல் முழுநேரமும் ஆள் செலெக்ட் செய்யும் டிவி ஆகி விட்டது.
இவர்கள் நிறைய பழைய படங்களை கைவசம் வைத்திருக்கிறார்கள். என்ன செய்ய! அதற்கு முன்னர் தியேட்டரிலும் இப்படத்தைப் பார்த்திருக்கிறேன். அதுவும் 'முத்துக் குளிப்பவரே' பாடலும், 'சத்தியம் தவறாதே' பாடலும் சிறுவயதிலேயே நெஞ்சில் நிலைத்து விட்டன. காட்சி அப்படியே மனதில் ஓடுகிறது. பின் ரவி திரிக்காக இணையத்தில் நான் தரவேற்றிய (தரவேற்றிய நாள் Dec 19, 2011) 'முத்துக் குளிப்பவரே' பாடல் தவிர இப்படத்தின் வேறு வீடியோ இருப்பதாகத் தெரியவில்லை. அதன் பிறகு வேம்பார் மணிவண்ணன் அவர்கள் அப்பாடலை இந்த வருட ஆரம்பத்தில் 'யூ டியூபி'ல் தரவேற்றியிருந்தார். அவரும் இப்படத்தின் வேறு பாடல்களை தரவேற்றியிருக்கிறாரா என்று தேடினால் அதுவும் இல்லை. ம்...பார்ப்போம். கிடைக்காமலா போய் விடும்?
'முத்துக் குளிப்பவரே' பாடல் பற்றி ரவி திரியில் நான் எழுதிய பதிவுக்கான லிங்க். அதைப் பற்றி கார்த்திக் சார் கூட அழகாக தன் கருத்துக்களை வெளிப்படுத்தியிருந்தார்.
http://www.mayyam.com/talk/showthrea...HANDRAN/page15
Last edited by vasudevan31355; 17th October 2015 at 06:50 PM.
நடிகர் திலகமே தெய்வம்
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
17th October 2015 06:43 PM
# ADS
Circuit advertisement
Bookmarks