Originally Posted by
NTthreesixty Degree
மக்களுக்கு தார்மீக ஆத்மார்த்த அடிப்படையில் அவர்களுக்கு நம்மால் இயன்ற நல்ல விஷயங்களை கொண்டுசெல்ல வேண்டும் என்று உண்மையான நோக்கத்தோடு
தமிழறிஞர்கள்,
தேசத்தலைவர்கள்,
விடுதலைக்கு வித்திட்ட வீரர்கள்,
விடுதலைக்கு பாடுபட்ட தலைவர்கள்,
வரலாறு மற்றும் இதிகாச நாயகர்கள்,
கலை விற்பன்னர்கள்,
புராண நாயகர்கள்,
சமுதாய சீர்திருத்தவாதிகள்
என பல கதாபாத்திரங்களை, நல்லவர்களை அவர்கள் ஆற்றிய அரும்பணிகளை மக்கள் முன் தன் திரைப்படம் வாயிலாக கொண்டுசென்றவர் நடிகர் திலகம் ஒருவர் தான் !
இந்த கால தலைமுறையினர், பொய்களை, போலிகளை, பித்தலாட்டங்களை அடையாளம் கண்டுகொண்டு, உண்மையான விஷயங்களை ஆதாரங்களோடு பார்த்து, படித்து நமது நடிகர் திலகம் என்ற உன்னத கலைஞனை, அவரின் அரும்பணியினை அவருக்கு சமுதாயத்தின் மேல் மற்ற எந்த நடிகரையும் விட ஒருபடி மேல் அக்கறை உள்ளது என்ற உண்மையை உணரும் விதமாக இந்த கட்டுரை புதிய மற்றும் இளைய தலைமுறயினர்களுக்கு, தமிழர்களுக்கு நடிகர் திலகம் ஆற்றிய தொண்டினை புரிந்துகொள்வதற்கு ஒரு அஸ்திவாரமாய் விளங்கும் என்று நினைகிறேன் :
தமிழ்த்தாய் தன்னுடைய மகன் இவன் ஒருவன்தான் என்றல்லவா தன்னுடைய ஆசிகளை பராசக்தியின் மாபெரும் வெற்றியையும், ஒரே இரவில் தமிழ் திரைஉலகின் நிரந்தர உச்ச நட்சத்திரம் என்ற அழியா நிலையையும் வழங்கினாள் !
அனைவரிலும் பெரியவராக தமிழ்த்தாய் விளங்குவதால் முதல் பெரியவர் வணக்கத்திற்கு உரிய தமிழ் தாய் பற்றிய கட்டுரை நிறைவு......
இதை எழுதும்போது என்னுடைய மெய்சிலிர்கிறது..ஏனெனில் ...
தொடரும் ....