-
8th July 2013, 12:14 PM
#11
Senior Member
Veteran Hubber
அன்புள்ள முரளி சார்,
அடிக்கடி தங்கள் வருகையும், அற்புதமான பதிவுகளும் மனதுக்கு நிறைவை அளிக்கின்றன. 'ரோஜாவின் ராஜா' பதிவு வெகு அற்புதம். பார்த்து நாளாகிவிட்ட படத்தை காட்சிவாரியாக விவரித்து மீண்டும் தங்கள் எழுத்துக்களால் காணவைத்து விட்டீர்கள்.
சென்ற ஆண்டு 'ரோஜாவின் ராஜா' வெளியீட்டு நாள் குறித்து நான் எழுதிய பதிவில்கூட, படம் வெளியான பிராட்வே தியேட்டர் நிகழ்வுகள் குறித்து அதிகம் எழுதியிருந்தேனே தவிர படத்தின் கதை, நடிப்பு, பாடல்கள் பற்றி அவ்வளவாக எழுதவில்லை. சும்மா கொஞ்சம் கொஞ்சம் தொட்டிருந்தேன். அவ்வளவுதான்.
தற்போது நீங்கள் மிக அருமையாக ரோஜாவின் ராஜா படத்தை அலசி விட்டீர்கள். மைசூர் அரண்மனை முன் படமாக்கப்பட்டிருந்த 'அலங்காரம் கலையாத சிலையொன்று' பாடலில் அட்டகாசமான காஸ்ட்யூமில் அண்ணனும் வாணியும் சூப்பரோ சூப்பர்.
(இந்த இடத்தில் தொலைக்கட்சி காம்பியர்கள் மற்றும் நிகழ்ச்சி தயாரிப்பாளர்களுக்கு ஒரு வேண்டுகோள் : 'மயக்கம் என்ன', ‘யமுனா நதியிங்கே’, 'மதன மாளிகையில்' போன்ற பாடல்களோடு நின்றுகொண்டிருக்காமல், 'அலங்காரம் கலையாத', 'செந்தமிழ் பாடும்', 'மாந்தோரண வீதியில்', 'சித்திர மணடபத்தில்' , 'நீ வரவேண்டும் என எதிர்பார்த்தேன்', 'வேலாலே விழிகள்' பாடல்களின் பக்கமும் கொஞ்சம் கவனத்தை திருப்புங்கள்)
படத்தின் ஜீவநாடியான பல காட்சிகளை தங்களுக்கே உரிய நயத்தோடு விவரித்துள்ளீர்கள். அவற்றில் ஒன்று 'அம்மா போயிட்டியா' என்று அசால்ட்டாக கேட்கும் காட்சி. 'ஜனகன் மகளை' பாடல் காட்சியில் வாணியின் அற்புத பெர்மாமென்ஸ் பற்றிய தங்கள் ஸ்பெஷல் மென்ஷன். அண்ணனின் ஜோடிகளில் அண்ணிக்கு அடுத்து வாணிதான் என்பது என் திண்ணமான எண்ணம். (சிலருக்கு வாணி முதன்மையாகத் தோன்றலாம்). ஆனால் நம் துரதிஷ்டம் இவர்கள் இருவரையும் விட 'என்னங்க' விஜயாவுடன் அதிகப்படங்களில் அண்ணன் ஜோடி சேர்ந்ததுதான்.
பாடல்கள் அனைத்தும் அருமைஎன்றாலும் 'நாளை நீ மன்னவன்' பாடல் தேவையில்லாத இடத்தில் வந்த இடைச்செருகல். சாம்ராட் அசோகனைத் தரிசிக்க ரெடியாக இருக்கும்போது இது என்ன சோதனையாக என்று சலிப்பூட்டியது உண்மை.
சுருக்கமாக தங்களின் 'ரோஜாவின் ராஜா' அலசல் அறுசுவை விருந்து.
-
8th July 2013 12:14 PM
# ADS
Circuit advertisement
Bookmarks