முரளி சார்.. நன்றி..
நாட்டு மக்களுக்கோர்.அறிவிப்பு..ஒருவாரம் வெளியூர் செல்வதால் எதுவும் இடமாட்டேன்..ஹை ஜாலி சந்தோஷமாக இருங்கள் எனச் சொல்லி வி.பெறும்..
சி.க :) அப்பப்ப எட்டிப் பார்ப்பேன் சான்ஸ் கிடைத்தால்
Printable View
முரளி சார்.. நன்றி..
நாட்டு மக்களுக்கோர்.அறிவிப்பு..ஒருவாரம் வெளியூர் செல்வதால் எதுவும் இடமாட்டேன்..ஹை ஜாலி சந்தோஷமாக இருங்கள் எனச் சொல்லி வி.பெறும்..
சி.க :) அப்பப்ப எட்டிப் பார்ப்பேன் சான்ஸ் கிடைத்தால்
Dear Shri.Murali,
Thank you so much for making our day!
எந்த விருந்து பரிமாற ஆரம்பிக்கும்போதும் இலையின் கீழ் வலது கோடியில் சிறிது பாயசத்துடன் ஆரம்பிப்பார்கள்.
அந்த பாயசத்தை தொட்டு சுவைத்து ரசிக்கவே பல ஆண்டுகள் தேவைபட்டால்?
இன்னும் அந்த மகானின் முதல் படத்தையே தாண்ட நம்மால் முடியவில்லையெனில்....
A thing of beauty is joy forever என்ற John Keats இன் கூற்றுதான் எவ்வளவு உண்மை!
நன்றி.
பி.கு: இது வெளியான போது நீங்களோ நானோ ஏன் இந்த திரியை படிக்கும் 99.9% ஆட்களும் பிறக்கவில்லை.
இல்லையே..பலர் தங்கள் 40/50 வயதுகளில் இருந்து பார்த்து மகிழ்திருப்பார்கள்..தற்பொழுது அவர்களுக்கு அடுத்த ஜன்மத்தில்
30 / 40 வயதிருக்கும் :)
தன்னை கொலை செய்யவும் மனைவி தயங்க மாட்டாள் என்று மனதில் பட ஆரம்பித்தவுடன் அவளை வழிக்குக் கொண்டு வர அவள் கையில் இருக்கும் ஆயுதத்தைப் பறிக்க காதலில் தன்னிடம் உஷா மூழ்கிய அந்த நாளை ஆயுதமாகப் பயன்படுத்த ஆரம்பித்து, தன் நரித்தனப் பேச்சால் பெண்களின் பலவீனமான மனதை புரிந்த சாமார்த்தியசாலியாய் உஷாவின் மனத்தைக் குழப்பி, அவளுடைய சிந்தனையை டைவர்ட் செய்ய தேனொழுகப் பேசியபடியே அவளை நெருங்கும் தந்திரத்தின் குள்ள நரி.Quote:
மனைவியிடம் அன்று கடற்கரையில் சொன்னது நினைவிருக்கிறதா இன்பத்தின் எல்லை என்று,புரண்டு படுக்கும் போதும் முழிப்பாயே என்று மனைவியின் உணர்வை தூண்டி divert பண்ண பார்க்கும் போது சிறிதே உணர்ச்சி காதல் தலை தூக்கும்.
நீங்களே வீடியோவாகப் பாருங்கள். நான்கே முக்கால் நிமிடக் காட்சிக்குள் நான்கு லட்ச முக, உடல் பாவனைகள். அதனால்தானய்யா 'நடிகர் திலகமே தெய்வம்' என்று போட்டேன்.
http://www.youtube.com/watch?feature...&v=dvrE4ZeI-vI
எங்கே ஆதிராம் சாரையே காணோம்? ஆதிராம் சார்! உடனே வாருங்கள். திரியில் எல்லோரும் தூள் கிளப்பிக்கொண்டு இருக்கையில் நீங்களும் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்! உங்களுடைய அருமையான டிப்ஸ் இல்லாமல் என்னவோ போல் உள்ளது.
Dear Vasu sir,
HAts off for your efforts
One small request pl share info & pics like this on Meendum Gowravam
டியர் வாசுதேவன் சார்,
சத்ரபதி சிவாஜி டெலிபிலிம் பற்றிய அறிய தகவல்களும், அறிய நிழற்படங்களும் மிக மிக அற்புதம். தங்கள் உழைப்பில் மலர்ந்த மற்றொரு நல்முத்து. அதை நீங்கள் தொகுத்தளித்த விதம்தான் எத்தனை அழகு.
** சத்ரபதி சிவாஜி பற்றிய முன் வரலாறு.
** அதை டெலிபிலிமாக்க மும்பை தொலைக்காட்சி எடுத்த முயற்சிகள்.
** அதை செவ்வனே நிறைவேற்ற நடிகர்திலகத்தை தெரிவு செய்த விதம்.
** அதற்க்கான ஒப்பந்தமும் அதைத்தொடர்ந்த செயலாக்கங்களும்
** நடிகர்த்திலகமாக இருந்தவர் ஒப்பனையின்மூலம் படிப்படியாக சிவாஜியாக உருவெடுத்த விதம்.
** அந்த குறும்படம் பற்றி தஞ்சைவாணன் அவர்களின் விளக்கம்
** அந்த குறும்படத்தைப் பார்த்து பெருந்தலைவரும் மற்ற பிரபலங்களும் பாராட்டிய தகவல்
** இவையனைத்துக்கும் பக்கபலமாக பல்வேறு மிக அரிய நிழற்பட இணைப்புகள்
** முத்தாய்ப்பாக இந்த டெலிபிலிம் பற்றி 'பொம்மை' இதழில் வெளியான நிழற்ப்படங்கள்
.....என திகட்டத்திகட்ட தந்து அசத்தி விட்டீர்கள். இந்த டெலிபிலிம் பற்றி முன்பு முரளி அவர்கள் பதித்திருந்த முத்தான பதிவும் நினைவில் உள்ளது.
இத்தகைய அருமையான ஒரு ஆவணம் தற்போது காணவில்லைஎன்பது அதிர்ச்சி தரும் செய்தியாக இருந்தபோதிலும் அதன் பின்னணி பற்றி ஆராய வேண்டியுள்ளது. தொலைக்காட்சி துவங்குவதற்கு பல ஆண்டுகள் முன்னாள் திருமதி எம்.எஸ்.சுப்புலட்சுமி அவர்கள் ஐம்பதுகளில், அறுபதுகளில் பாடிய பல நிகழ்ச்சிகள் எல்லாம் தற்போதும் தொலைக்காட்சி நிலையத்தில் பத்திரப்படுத்தி வைக்கப்பட்டு, ஒளிபரப்பப் படுகின்றன என்னும்போது, தொலைக்காட்சிக்க்காகவே அதுவும் 1974-ல் எடுக்கப்பட்ட ஒரு ஆவணம் தொலைக்காட்சி நிலையத்திலேயே இல்லைஎன்றால் இதன் பின்னே ஏதோ ஒரு சதித்திட்டம் இருக்கிறது. முந்தைய, பிந்தைய ஆட்சியாளர்களின் கைவரிசையாக இருக்க அதிகம் வாய்ப்புள்ளது.
ஒரு பெரிய வரலாற்றை தோண்டியெடுத்து அகிலத்துக்கும் பறைசாற்றிய தங்களுக்கு இதயம் நிறைந்த நன்றி....