-
12th October 2013, 12:38 AM
#11
கோபால்,
காதல் தொடரை அமர்க்களமாக தொடங்கியிருக்கிறீர்கள்! பராசக்தியை காதலித்து விட்டு அந்த நாளுக்கு போய் விட்டீர்கள். பராசக்தி பற்றி சொல்லும்போது அதிலும் குறிப்பாக காதல் காட்சிகளைப் பற்றி குறிப்பிடும் போது எப்போதும் நண்பர்களிடம் சொல்லி சிலாகிக்கும் ஒரு ஸீன் உண்டு. அதுதான் புது பெண்ணின் மனதை தொட்டு போறவரே பாடல் காட்சி.
பொதுவாகவே காதல் வயப்படும் போது தான் விரும்பும் ஆளை அடிக்கடி பார்க்க வேண்டும், பேசிக் கொண்டே இருக்க வேண்டும் என்று மனம் துடிப்பார்கள்.அதிலும் தனிமை கிடைக்கும் இடங்களாக யாரும் குறுக்கீடு செய்யாத இடங்களாக, அப்படிப்பட்ட பொழுதுகளாக அமைய வேண்டும் என்று எதிர்பார்ப்பார். காரணம் sweet nothings பேசுவதற்கு disturbance இல்லாமல் இருந்தால் நல்லது என்ற எண்ணம் ஒன்று மற்றொரு காரணம், ஆண் எப்போதும் தனிமையும் வாய்ப்பும் கிடைக்கும் போது சிற் சில குறும்புகளில் ஈடுபடுவது வழக்கம்.
நமது கதையில் நாயகனும் இந்த உணர்விற்கு விலக்கல்ல. படத்தில் நாயகனும் நாயகியும் சந்திக்கும் நேரத்திலே வரும் காதல் பாடல் புது பெண்ணின் மனதை தொட்டு போறவரே. நான் ஏற்கனவே சொன்னது போல் எப்போதும் ஆண்தான் தனிமையையும் இருட்டையும் விரும்புவான். இங்கே ஆண் அமைதியாக நிற்க பெண் மட்டும் பாடுகிறாள்.
முதல் சரணத்தில் நாயகி பாடிக்கொண்டே வரும்போது இரண்டு வரிகள் பாடுவாள்.
இருட்டு வேளையிலே
யாரும் காணாமலே
அந்த புதுமுக நடிகன் கணேசன் ஒரு மரத்தின் அருகில் நிற்பார். நாயகி அபிநயம் பிடித்துக் கொண்டே இந்த வரிகளை பாடும் போது அந்த புதுமுகம் காட்டும் reaction. ஒரு ஆண் நினைப்பதை ஆசைப்படுவதை ஒரு பெண் இப்படி வெளிப்படையாக பேசுகிறாளே, அவளுக்கே அந்த ஆசை இருக்கிறதோ, அழைப்பு விடுகிறாளோ என்று ஆணுக்கேயுரிய அந்த ஆசையை ஒரு விஷமத்தனமான புன்னகையுடன் வெளிப்படுத்தும் பாங்கு இருக்கிறதே, அதில் beauty என்னவென்றால் இந்த உணர்வையெல்லாம் முகத்தின் ஒரு பாகத்தை காட்டியே வெளிப்படுத்துவார். ஆம் படம் பார்ப்பவர்களுக்கு அந்த புதுமுக நடிகனின் profile போஸ் மட்டும்தான் தெரியும்.வலது பக்க கண், கன்னம் மற்றும் உதட்டின் ஒரு பகுதியை மட்டும் வைத்துக் கொண்டு ஒரு மனிதன் இப்படியெல்லாம் செய்ய முடியுமா? அதுவும் முதல் படத்திலேயே?
இந்தப் படம் வெளிவந்து வரும் அக்டோபர் 17-ந் தேதியோடு 61 வருடங்கள் நிறைவு பெறுகிறது. இது வெளியான் போது நீங்களோ நானோ ஏன் இந்த திரியை படிக்கும் 99.9% ஆட்களும் பிறக்கவில்லை. நாம் பிறப்பதற்கு முன்னரே இப்படி ஒரு ஆற்றலை வெளிப்படுத்தி நம்மையெல்லாம் ஜென்மஜென்மாந்தரங்களுக்கு கட்டி போடுவான் இந்த புதுமுக நடிகன் என்று தெரிந்ததானலோ என்னவோ இந்த பாடலை எழுதிய கவிஞர் இரண்டாவது சரணத்தில் இரண்டு வரிகள தீர்க்க தரிசனமாக எழுதி வைத்துவிட்டு போயிருக்கிறார்.
அன்புக் கயிறுடுவாய்
அறுக்க ஆராலும் ஆகாதையா!
நம்மையும் அந்த புதுமுக நடிகன் கணேசனையும் பிணைத்திருக்கும் அந்த அன்பு கயிறை யார் அகற்ற முடியும்? நம் வாழ்நாள் முழுக்க இணைந்திருக்க கூடியதன்றோ அது!
அன்புடன்
-
12th October 2013 12:38 AM
# ADS
Circuit advertisement
Bookmarks