-
12th October 2013, 07:38 AM
#11
Senior Member
Diamond Hubber
மனைவியிடம் அன்று கடற்கரையில் சொன்னது நினைவிருக்கிறதா இன்பத்தின் எல்லை என்று,புரண்டு படுக்கும் போதும் முழிப்பாயே என்று மனைவியின் உணர்வை தூண்டி divert பண்ண பார்க்கும் போது சிறிதே உணர்ச்சி காதல் தலை தூக்கும்.
தன்னை கொலை செய்யவும் மனைவி தயங்க மாட்டாள் என்று மனதில் பட ஆரம்பித்தவுடன் அவளை வழிக்குக் கொண்டு வர அவள் கையில் இருக்கும் ஆயுதத்தைப் பறிக்க காதலில் தன்னிடம் உஷா மூழ்கிய அந்த நாளை ஆயுதமாகப் பயன்படுத்த ஆரம்பித்து, தன் நரித்தனப் பேச்சால் பெண்களின் பலவீனமான மனதை புரிந்த சாமார்த்தியசாலியாய் உஷாவின் மனத்தைக் குழப்பி, அவளுடைய சிந்தனையை டைவர்ட் செய்ய தேனொழுகப் பேசியபடியே அவளை நெருங்கும் தந்திரத்தின் குள்ள நரி.
நீங்களே வீடியோவாகப் பாருங்கள். நான்கே முக்கால் நிமிடக் காட்சிக்குள் நான்கு லட்ச முக, உடல் பாவனைகள். அதனால்தானய்யா 'நடிகர் திலகமே தெய்வம்' என்று போட்டேன்.
Last edited by vasudevan31355; 12th October 2013 at 07:43 AM.
நடிகர் திலகமே தெய்வம்
-
12th October 2013 07:38 AM
# ADS
Circuit advertisement
Bookmarks