Thanks to Adiram Sir, Sivaji Senthil,Vanaja madam, Grouch,Parthasarathy,Ganpat Sir,Chandra sekar Sir,S.Vasudevan .
Printable View
Thanks to Adiram Sir, Sivaji Senthil,Vanaja madam, Grouch,Parthasarathy,Ganpat Sir,Chandra sekar Sir,S.Vasudevan .
WARNING
We have found out that some members posting in this thread have been misusing Hub facilities by creating duplicate id's and have started to create trouble in this peaceful thread. We will not tolerate such trouble mongers and give 24 hours for them to own up by sending a PM to the moderators on their duplicate ids, which will then be deleted.
If this is not done within the next 24 hours, we will ban all the id's including the original ones. Please do not take this warning lightly!
அனைவருக்கும் இனிய.... தைப்பொங்கல் வாழ்த்துக்கள்
Vanaja Madam, Ragavendran Sir, Murali, Pammalar,vasudevan,S. vasudevan (Ney), adiram,Kalnayak,karthik, saradhaji, Muthram, Parthasarathy , ganpat, Nov,joe,Grouch, Subbu, Barrister,Siva, K.C.sekar,Venkiram,Radha sir,Esvee sir,P_R,plum,satish,harish,rangan.rahulram.
Wishing you Happy Pongal and Maha Shankranti to all.Best Regards from Gopal
Vanaja Madam, Ragavendran Sir, Murali, Pammalar,vasudevan,S. vasudevan (Ney), adiram,Kalnayak,karthik, saradhaji, Muthram, Parthasarathy , ganpat, Nov,joe,Grouch, Subbu, Barrister,Siva, K.C.sekar,Venkiram,Radha sir,Sasi,
Esvee Sir,P_R,plum,satish,harish,rangan.rahulram.
Wishing you Happy Pongal and Maha Shankranti to all.Best Regards from Gopal
௨
இந்தியாவின் தவப்புதல்வன்.
சில நாட்களுக்கு முன் கணினியில் “There will be blood” எனும் ஆங்கில படம் பார்த்துக்கொண்டிருந்தேன்.அதில் உச்ச காட்சியில்,அதன் கதாநாயகன் டேனியல் டே லூயிஸ் நடித்த விதத்தைப்பார்த்து அதிர்ந்துபோனேன்.அப்படியே நம் தலைவரின் “தெய்வமகன்” நடிப்பு.
ஆம் இந்தியாவின் தெற்கு கோடியில் மறைந்திருந்த ஒரு மகா கலைஞனின் புகழ ஹாலிவுட வரை பரவி உள்ளது எனும் உண்மை சட்டென்று எனக்கு மட்டற்ற மகிழ்வை கொடுத்தது.அதே சமயம் இந்த கலைஞனை நாம் எவ்வளவு குறைவாக பயன்படுத்தியுள்ளோம் என்ற ஆதங்கமும் எனக்குள் எழுந்தது.
படையப்பா படத்திற்கு இவருக்கு சம்பளம் ஒரு கோடி ரூபா என செய்தி கேட்டு நம்மில் பல ரசிகர்கள் ஆனந்தமடைந்திருக்கலாம்.ஆனால் எனக்கு அது ஒரு செய்தியாகவே படவில்லை.ஆம்! பராசக்தி க்கு ஒரு கோடி ரூபா பெற தகுதி வாய்ந்த ஒரு நடிகனை நாம் கெளரவித்தது ஒரு ஐம்பது ஆண்டுகளுக்குப்பின்.!
அதை விடுங்கள் அவருக்கு நாம் இழைத்த இன்னொரு பெரிய அநீதி அவரை பக்கம் பக்கமாக வசனம் பேச விட்டு ரசித்தது தான்.உலகத்திலேயே உடல் மொழி பேசுவதில் இவருக்கு இணையான நடிகர் கிடையாது.இவரைப்போன்ற கற்பனா சக்தி படைத்த இன்னொரு நடிகரும் கிடையாது.பராசக்தியை எடுத்துக்கொள்ளுங்கள் ..இவரின் முதல் படம்.என்ன ஒரு உடல் மொழி!!
எங்கே அய்யா பார்த்தார் இதையெல்லாம்? குண சேகரனாக இவர் படுக்கையை விட்டு எழுந்து கொள்ளும் பொழுதுதானே தமிழ் திரையுலகமே எழுந்துகொண்டது.அன்று எழுந்த அம்மேதை மீண்டும் படுத்தது ஜூலை 21 2002 இல் அன்றோ! சுமார் ஐம்பது ஆண்டுகள் சக்கரவர்த்தியாக அல்லவோ ஆட்சி செய்தார்!
ஒரு விடுதி அறைக்குள் நுழைந்து அதை கண்ணால் சுற்றி பார்ப்பது ஆகட்டும்,பெட்டி கொண்டு வந்த ரூம் பையனுக்கு இனாம் அளிக்கும் ஸ்டைல் ஆகட்டும்,வங்கியில் செக்கை கொடுத்துவிட்டு காத்திருக்கும் ஒரு பாவம் ஆகட்டும்.பணத்தை பெற்றுக்கொண்டு அதை எண்ணாமல் ஒரு முறை விரல்களால் பிரித்து அந்த கட்டை பையில் போடும் ஒரு லாகவமாகட்டும்.மீண்டும் தன் அறைக்குள் நுழையும் போது அங்கு ஒரு யுவதியைக்கண்டு கண்ணில் காட்டும் மிரட்சி ஆகட்டும்.என்ன ஒரு தொழில்நேர்த்தி!
நண்பர் கோபால் தன்னுடைய சவாலே சமாளி விமரிசனத்தில் மிக அழகாக சொன்னதைப்போல "தலைவருக்கு எந்த உடை அணிவித்தாலும் ஒரு பாங்கு இருக்கும்.அவர் வேட்டியை உடுத்தும் விதமே அந்த கதாபாத்திரத்தை நமக்கு விளக்கிவிடும்".நான் மேலும் ஒரு படி மேலே சென்று சொல்வேன்:தலைவர் கண்களை மட்டுமே பார்த்தால் போதும் அவர் இடுப்பில் என்ன உடை இருக்கும் என்று கூட ஊகித்து விடலாம்.ஒரு ஆண் 20 வயதிற்கு மேல் அரை நிஜார் போடவேண்டும் என்றால் ஒன்று அவர் foreign returned ஆக இருக்கவேண்டும் அல்லது அரைகுறையாக இருக்கவேண்டும்.ராமன் எத்தனை ராமனடியில் தலைவர் தன் கண்களைகொண்டே தன் அரை நிஜாரை நமக்கு காண்பிப்பார்.அதே ஒரு கிராம வாசியாக பாகப்பிரிவினையில் அவர் வேட்டி அணியும்போது அந்த அப்பாவித்தனத்தை வேறு மாதிரி காண்பிப்பார்.
எதற்கு இத்தனை முகாந்திரம் என்று கேட்டால்,தன் முதல் படம் பராசக்தியில் இதனை மிக சிறப்பாக செய்திருப்பார்.பணக்கார இளைஞன்,வஞ்சிக்கப்பட்டு ஓட்டாண்டி ஆனா இளைஞன்,சமுக அவலங்களை கண்டு வெகுண்டெழுந்து எதிர்க்கும் இளைஞன்,தன் இன்னல்கள் அனைத்தும் நீங்கி மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பும் இளைஞன் என்ற அனைத்து நிலையிலும் அவருடன் சேர்த்து அவர் trousers trousers and shirt உம் நடித்திருக்கும்.
சரி சரி பொங்கல் திருநாளில் உங்கள் நேரத்தை அதிகம் எடுதுக்கொள்கிறேனோ?
மீண்டும் சந்திப்போம்.
I too felt the same :-D and mentioned it here
http://www.mayyam.com/talk/showthrea...t-here/page168
Even in the movie 'The Devil's Advocate' during the scene when Pacino delivers, 'Look but don't touch, touch but don't taste, taste but don't swallow' there's a shade of NT. Now, I don't know if these gentlemen watched NT, but, think it's one style of acting which NT was so fluent and we are all so used to it and associate with NT himself.
வனஜாவிற்கு ஜவாப்..
//உங்களுக்கு மட்டுமா?//
:-D
//பந்தம் படத்தில் break down ஆன காரிலிருந்து இறங்கி ஒன்றும் சொல்லாமல் அந்த driver ஐ ஒரு பார்வை பார்த்துவிட்டு நடந்து போவார். //
தன் தம்பி மகள் (குழந்தை) நடனமாட அதை ரசித்துக்கொண்டே ,ஏதோ சொல்லவரும் தன் தம்பி மனைவியை தன் வலது மணிக்கட்டு அசைவிலேயே dispose செய்யும் "வீர பாண்டிய கட்டபொம்மன்"
புது வேலைக்காரன் தவறு செய்து விட்டான் என்று தன் மனைவி அவனைக்காய்ச்சி எடுத்துக்கொண்டிருக்கும்போது,கையில் ஒரு செய்தித்தாள் சகிதம் அமர்ந்து அதை கேட்காமல் கேட்டு ரசிக்கும் "உயர்ந்த மனிதன்"
தன் நண்பன் அவன் காதலியுடன் பேசிக்கொண்டிருக்கையில்,சற்றே தள்ளி சங்கோஜத்துடன் நின்றுகொண்டு கையில் உள்ள suitcase handle ஐ இரண்டு கைகளாலும் பிடித்திருக்கும் அக்காட்சி நம் "நெஞ்சிருக்கும் வரை" அகலுமா?
தன் உடல், மனைவி யாக நடிக்கும் பெண்ணை நோக்கி இருக்க ,முகமோ தான் நேசிக்கும் "புதிய பறவையை" நோக்கி இருக்க முன்னவள் சொல்லும் பொய்யை பின்னவள் நம்பி விடபோகிறாளே என்ற பதட்டம் உடலில் தெரிய கண்களால் காதலியை கெஞ்சும் கோபால்.
.
"தில்லானா மோகனம்பாள்" உள்ளே நுழைய,அவளை சைட் அடித்து விட்டு தன் தவில் சகாவைப்பர்த்து 'என்ன பார்த்தீரா?" என கண்சிமிட்டும் நாதஸ்வர வித்வான்,
வயது பெண் ஒருத்தியின் பின்புறத்தை தட்டும் செயல் ஒன்று காதலை அல்லது காமத்தை, மட்டுமே வெளிக்காட்டும் செயல் என்ற நியதியை மாற்றி அதன் மூலம் உரிமையையும் வெளிக்காட்டலாம் என உணர வைத்த அந்த மஹா கலைஞனுக்கு அல்லவோ நாம் "முதல் மரியாதை" செய்யவேண்டும்.
//இது என்ன படத்தில்? //
பராசக்தி! வனஜாவா இதை கேட்பது ? சான்ஸே இல்லை!(இது positive usage).
//இன்னும் தொடருங்கள் //
அதாவது முரளி,கோபால்,வாசு போன்றோருடன் என்னையும் எழுதசொல்கிறீர்கள்:(
சான்ஸே இல்லை!(இது negative usage).
சகோதரி வனஜா, சகோதரர் கண்பட்(புனை பெயர்!!!???)
ஏதேது ,உங்கள் இருவரின் எண்ண ஓட்டங்களுக்கு எல்லையே இல்லை போலிருக்கிறது ? இருவரும் late ஆ வந்தாலும் latest ஆ தான் வந்திருக்கீங்க!!
பேஷ், பேஷ், கச்சேரி களை (கலை) கட்டி விட்டது.
நன்றி பிரபோ* (!)
பொதுவாக "Great men think alike" என பகர்வர்..
அது உண்மையில் "Men think about great alike" என்று இருக்கவேண்டும் போலும்.
ஒன்று சொல்கிறேன் குறித்துக்கொள்ளுங்கள்..
கி.பி 2062 இல் ஓரு AV software இருக்கும்.உலகின் எந்த ஒரு திரைப்படத்தையும் எடுத்து, change 'so and so' to 'so and so' என்ற command கொடுத்துவிட்டால் அந்த நடிகரையோ,பாடகரையோ அது மாற்றி விடும்.
உதாரணத்திற்கு நம் சந்திரலேகா வீடியோவைப்போட்டு change M.K ராதா to சூர்யா என்று தட்டினால் பின்னவர் நடித்த சந்திர லேகாவை நாம் பார்க்கலாம்.
அப்போ Sidney Poitier,Marlon Brando,Alec Guiness,Lawrence Olivier,Peter"O'Toole,Burt Lancaster,Jack Nicholson,Spencer Tracy,Charles Laughton,Al Pacino,போன்றவர்கள் நடித்த படங்களை நான் மாற்றி பார்த்து ரசித்து கொண்டிருப்பேன்.(அந்த software ஐ வாங்கும் அளவிற்கு பணம் மட்டும் 'அப்பொழுது'என்னிடம் இருந்தால்!:smokesmile: (எச்சரிக்கை:புகை பிடித்தல் உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கானது))
"யாரை வைத்து மாற்றி என சொல்லவில்லையே" என வினா எழுப்புவர்களுக்கு.......
................................
.......இன்றுதான் பொங்கல்.
*இந்த மாதிரி பெயர் வைத்து கொள்வது நன்றாக உள்ளதே.நான் கூட என் பெயரை "mannaa" என்று மாற்றிவிடலாமா என தோன்றுகிறது..எனக்கு ஏற்கனவே 'bunமுகம்' வேறு....அதோ சொர்கத்திலிருந்து ஒரு குரல்..,,"மாமா! இதுவும் நல்ல யோசனையாகத்தான் தெரிகிறது"
என்ன தலைவரே கண்பட் ,
Full form போலிருக்கிறதே? நல்ல பந்தையெல்லாம் கூட sixer திருப்பி கொண்டிருக்கிறீர்கள்? இந்த வரிசையில் அகிரா குரசோவாவின் Favourite hero ஐ சேர்க்கவும்.(Seven samurai பார்த்தால் புரியும்)
நான் நினைப்பதுண்டு. எப்படி இந்த மாதிரி cliched ஆக படங்களில் காட்சியமைப்புகள் வருகின்றனவே என்று!! என்னதான் காதலியை சந்திப்பது இதம் என்றாலும் ,அன்று கதாநாயகனுக்கு குடும்ப பிரச்சினை காரணமாய் mood -out ஆகியிருந்தாலோ, அல்லது constipation போன்ற உடல் உபாதைகள் இருந்தாலோ, அவனால் காதல் காட்சியில் எப்படி romantic ஆக இருக்க முடியும்?
ஆனால் எனக்கொரு பெரிய surprise பந்தபாசம் (1962)படத்தில்.
காதலியை, வழக்கமான பார்க்கில் சந்திப்பார். ஆனால் குடும்ப பிரச்சினை சம்பந்தமாக குழப்பத்தில் இருப்பார். காதலி பேச பேச,பதில் கூட பேசாமல் ,கடு-கடுவென்று உட்கார்ந்திருந்து ,நகர்ந்து விடுவார்.
NT is always a wonder and much ahead of his time !!!
துணையில், மருமகள் தந்த பிரச்சினையால், சோர்ந்து பொய், சிந்தனையில், அலுவலகத்தில் அமர்ந்திருக்கும் போது ,அங்கு மகன் வந்து அப்பா என்று அழைக்கும் போது ,தன நிலையில் இல்லாது, குரல் வந்த திசை கூட அறியாமல், ஒரு வினாடி, தவறான திசையில் பார்த்து சமாளிப்பது......
ஆட்டுவித்தால் பாடலில் ,ஆரம்பம். ஏதோ சிந்தனையில் உள்ள போது ,கண்ணன் வேஷத்தில் வந்த ,நண்பனின் குழந்தையை, ஆச்சார்ய பார்வை பார்த்து சுதாரிப்பது.....
பாசமலர் ,வாராயென் தோழி வாராயோ பாடலில், மலராத பெண்மை மலரும், வரிகளில், தங்கை மற்றும் அவளின் நண்பிகளை கடந்து செல்லும் போது , வெட்கம், embarassment , பெருமிதம் கலந்த 10 வினாடி shot ......
என்னது? என்ன 'வா' வா?
உங்களுக்கு பார்த்தால் பசி தீரும் சாவித்திரிக்கு ஆரம்பித்து போல ஆரம்பிக்கவேண்டும் போல இருக்கே?(அ..ன்னா அ.அ...;ஆ ...வன்னா ஆ. ஆ.)
ஒளவையே,இப்பூலோகத்தில் நாம் நன்கு அறிந்திருந்தாலும் அறவே அறியாதது போல கண்பித்துக்கொள்ள வேண்டிய இரண்டினை கூறுக..
முருகா..சரவணா ஸ்டோர்ஸும்,ஷேர் ஆட்டோவும்..
நன்று,நன்று..நாம் அறவே அறியாதிருந்தாலும் நான்கு அறிந்தது போல கண்பித்துக்கொள்ள வேண்டிய இரண்டு?
அகிரா குரசோவாவும்,Sigmund Freud உம்..
இரும்புத்திரை (iron curtain )- 1960- பகுதி-1
எனக்கு சிறு வயதில் கம்யுனிச கோட்பாட்டில் மயக்கம் உண்டு. தொழிலாளர் 19ஆம் நூற்றாண்டில் நடத்த பட்ட விதங்களை படித்தால் தூக்கமே வராது.அடிப்படை உரிமைகளான வேலை நேரம்,குறைந்த பட்ச கூலி,கொத்தடிமை,குழந்தை தொழிலாளர், சம உழைப்பு சம கூலி,அடிப்படை பாதுகாப்பு,தொழிற்சங்கம்,முதலாளி-தொழிலாளி உறவு, கூலி உயர்வு,அடிப்படை உரிமைகளுக்கான தொழிற்சங்க கூட்டு பேச்சு வார்த்தை,வேலை நிறுத்தம் போன்ற உரிமைகளை பெற ,வளர்ச்சி பெற்ற நாடுகளிலேயே பலர் ரத்தம் சிந்தி உலக தொழிலாளர் கூட்டு நிறுவனம்(I .L .O ) உறவான பின்புதான் ,தொழிற்புரட்சியின் சிறிதளவு பலனாவது உழைப்பாளிகளை வந்தடைந்தது. நான் வளர்ந்த நெய்வேலியில் தொழிற்சங்க அமைப்புகள் வலுவானவை. ஆனால் அன்றும் ,நம் நாட்டில் விவசாய தொழிலாளர்கள்,தனியார் நிறுவன தொழிலாளர் நிலை பரிதாபத்துக்கு உரியது. முக்கியமாக ஆலை தொழிலாளர் நிலை.கீழ் வெண்மணி போன்ற நிகழ்வுகள் சர்வ சாதாரணம். நான் முதல் முதலில் இரும்பு திரை பார்த்தது ,எனது அப்பாவின் நண்பர் ஒருவர் சொல்லி, 1971இல். சவாலே சமாளி பார்த்து ஆஹோ ஓஹோ என்று புகழ்ந்து தள்ளி கொண்டிருந்த போது , இதை விட வலுவாக,realistic ஆக பிரச்சினை பேசும் படம் ,இதற்கு மூலம்,அதனால்தான் வாசன் படத்தை போட்டு மல்லியம் மரியாதை செய்தார் என்று சொல்லி,இப்படத்தை பார்க்க தூண்டினார்.அதிர்ஷ்ட வசமாக,சொரத்தூர் ஜோதி என்ற டூரிங் கொட்டாயில் ,இந்த படம் டிசம்பர் 1971இல் வெளியானது.
படம் பார்த்து,அந்த பாதிப்பில் சவாலே சமாளி மோகம் சற்றே குறைந்தது.
மாணிக்கம் ,ரிக்ஷா இழுத்து ,அந்த உழைப்பில்,தொழிற்கல்வி கற்கும் மாணவன். ஜெயந்தி என்ற அம்மாவுடன் தனியாக வாழும் ஏழை பெண்ணுக்கு ஒரு அவசர நேரத்தில் உதவி அறிமுகம் ஆகிறான். ஜெயந்தி பட்டதாரி .மாலதி என்ற பணக்கார ,மில் முதலாளி பெண்ணில் சிபாரிசில் ,அவள் மில்லிலேயே டைபிஸ்ட் ஆக வேலை கிடைக்கிறது. அதே ரங்கநாதா மில்லில் ,மோகன ரங்கம் என்ற முதலாளியின் கீழ் விசுவாசமான தொழிலாளி தான் மாணிக்கத்தின் அண்ணன் சரவணன். அம்மா, மனைவி,பிள்ளை,பெண்ணுடன் வாழ்ந்து வருகிறான்.பெண்ணுக்கு ,நடராசன் என்று ஒரு பையனுடன் நிச்சயம் செய்கிறான்.படிப்பு முடிந்து ஊருக்கு அண்ணனை பார்க்க வந்த மாணிக்கத்தை சரவணன் மில்லுக்கு அழைத்து செல்ல ,மாணிக்கம் ஒரு பெரும் பிரச்சினையை,இறக்குமதி செய்ய அவசியமின்றி ,சுமுகமாக தீர்க்க ,முதலாளி chief mechanic ஆக வேலை போட்டு கொடுக்கிறார். அங்கேயே வேலை செய்யும் ஜெயந்தியுடன் காதல் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் ஆக வளர்கிறது.முதலாளி மகள் மாலதியும்,மாணிக்கத்தை ஒருதலை பட்சமாக விரும்ப தொடங்குகிறாள்.
தீபாவளி போனஸ் சமயம் பிரச்சினை துவங்குகிறது. மூன்று மாத போனஸ் என்று கையெழுத்து வாங்கி,ஒரு மாத போனஸ் கொடுக்கும் பொது,மாணிக்கம் அதை வாங்க மறுத்து கேள்வி கேட்கிறான். அண்ணனோ ,தம்பிக்கு எதிர் நிலை. முதலாளி விசுவாசத்தில் தம்பியுடன் மோதுகிறான்.இன்னொரு சந்தர்ப் பத்தில் வேலை நேரத்தில் விபத்தில் சிக்கும் தொழிலாளிக்கு நியாயமாக கொடுக்க பட வேண்டிய compensation தர படாமல் முதலாளி சூழ்ச்சி செய்ய மாணிக்கம் வேலை நிறுத்தம் செய்து,தொழிற்சங்கம் ஆரம்பிக்க வேண்டிய நிர்பந்தத்திற்கு தள்ள படுகிறான்.சரவணன் ,மாணிக்கத்தை வீட்டை விட்டு போக சொல்ல,சரணன் பெண் கல்யாணம் தடை பட,மாணிக்கம் உறுதியாக தொழிலாளர் பக்கமே நிற்கிறான்.இடையில்,மாணிக்கம்-ஜெயந்தி காதலிப்பதை அறிந்து,மாலதி ஜெயந்தியை வேலையை விட்டு நீக்குகிறாள். மோகன ரங்கம் மில்லுக்கு அருகிலேயே ஒரு மளிகை கடையும் நடத்தி கலப்பட வியாபாரம் செய்கிறார்.இடையில் முதலாளியை தற்செயலாக சந்திக்கும் ஜெயந்தியின் அம்மா தன்னை ஏமாற்றி விட்டு போன காதலன்தான் மோகன ரங்கம் என்று அறிந்து,ஊரை விட்டு போக முயன்று வழியில் உயிர் பிரிகிறது. தன தகப்பனே மில் முதலாளி என்று அறிந்து ,வீட்டுக்கு சென்று அவருடன் மோத ,மோகன ரங்கம் சூழ்ச்சியை அறிந்து ,ஜெயந்தி கோபத்துடன் மில்லை கொளுத்த முயல,மாணிக்கம் அங்கு வந்து தீ பந்தத்தை கையில் வாங்கி ,பழியை ஏற்கிறான்.
இறுதியாக,முதலாளியின் கோர முகத்தை அறியும் சரவணன் மனம் மாற, ஜெயந்தி தன் சகோதரி என்று தெரிந்து மாலதி மனம் மாற,நீதி மன்றத்தில் உண்மை தெரிந்து மாணிக்கம் விடுதலை யாகிறான்.முதலாளி-தொழிலாளி உறவு சீர்படுகிறது.
சுபம்.
(தொடரும்)
இரும்பு திரை- 1960- பகுதி-2
நடிகர் திலகத்தின் திரை வாழ்வை பொறுத்த வரை 1959,1960,1961,1964,1972,1978 ஆகியவை மறக்க முடியாத வருடங்கள். மிக அதிக அளவில் வெற்றி படங்கள்,தரமான படங்களால் அவர் கோப்பை நிரம்பி வழிந்த வருடங்கள். இரும்பு திரை 1960 இல் ஜெமினி நிறுவனம் தயாரித்து வெளி வந்த படம்.யதார்த்த நடிப்பில் நடிகர் திலகம் கொடி பறந்த பொற்காலம். இந்த வகை realism (அ )naturalism பாணி நடிப்பில் என்னை மிக மிக கவர்ந்தவை அந்த நாள், முதல் தேதி,ராஜா ராணி, பாக பிரிவினை, படிக்காத மேதை, தெய்வ பிறவி, இரும்பு திரை, கப்பலோட்டிய தமிழன், இருவர் உள்ளம்,மோட்டார் சுந்தரம் பிள்ளை,தில்லானா மோகனாம்பாள், ராஜபார்ட் ரங்கதுரை, துணை, முதல் மரியாதை, தேவர் மகன் ஆகியவை. இந்த படங்களில் அவர் நடிப்பு stylised method acting பாணியில் இருக்காது. ஆனால் சிவாஜியை பொறுத்த வரை எந்த வகை நடிப்பாக இருந்தாலும் ,அவரை தவிர யாரையும் கற்பனை செய்து பார்க்க முடியாத அளவு perform செய்து விடுவார்.
ஒரு நல்ல இயக்குனர், வசனகர்த்தா, கூட நடிக்கும் நடிகை/நடிகர்களின் நல்ல பங்களிப்பு இருந்தால் ,நம்மவருக்கு கேட்கவா வேண்டும்?அப்படி ஒரு scope நிறைந்த படம் இரும்புத்திரை.அவருடைய பாத்திர படைப்பிலேயே,மிக கவனம் எடுத்து செதுக்கியிருப்பார்கள்.ஒரு அடக்கமான,உதவும் தன்மை நிறைந்த ,சுயமாய் தன்னை உருவாக்கி கொள்ளும் ஒரு கீழ் மத்திய வகுப்பை சார்ந்தவர். பிரச்சினைகளை ஆழமாக ஆராய்ந்து ,யாருக்கும் பாதிப்பில்லாமல் தீர்க்க நினைக்கும் லட்சிய-யதார்த்த வாதி.உறவுகளை,நட்பை அது சார்ந்த பிரச்சினைகளை மென்மையாய் அணுகும் ஒரு இதமான பிள்ளை/சகோதரன்/காதலன்/நண்பன்.இதை உள்வாங்கி நடிகர் திலகம் நடிக்கும் பாங்கு இருக்கிறதே அடடா!! என்னவென்று சொல்ல!!??
ஆரம்ப காட்சியிலேயே ,வைஜயந்தி மாலா அம்மாவின் உடல் நிலைக்காக ,ரிக்ஷா தேடும் போது , உதவி செய்து(பண உதவியும்தான்) அறிமுகம் ஆவதிலிருந்து அவர் கொடிதான்.அண்ணன் ,முதலாளியுடன் அறிமுக படுத்த அழைத்து செல்லும் போது ,ஒரு முக்கிய யந்திரம் பழுதாகி விட,அதை ஒரு சவாலாக எடுத்து சரி செய்யும் காட்சியில் வசனங்கள், அத்தனை ஆழம்.ஒரு கிண்டல் தொனியிலோ அல்லது சவால் விடும் தொனியிலோ யாரையும் புண் படுத்தாமல் , நம்பிக்கை விதைத்து எதிராளிகளையும் தன மேல் நம்பிக்கை கொள்ள செய்வார்.அந்த gearwheel தயாரிப்பிலும் , இசை கருவியை கையாளும் போது காட்டும் அதே perfection காட்டுவார்.(ஒரு பொறியாளனாக நானே வியந்த காட்சி).எல்லோரிடமும் அதே மென்மை ,நயம் கொண்டு ஒரு மதிப்போடு நடுத்துவார் தன் நிலை தாழாமல்.
இந்த படத்தில் மிக மிக சிறப்பான காட்சிகள் வைஜயந்தி-சிவாஜி சம்பத்த பட்ட அற்புதமான காட்சிகள்.(இந்த ஜோடி அம்பிகாபதி,தில்லானா மோகனாம்பாள்,புதிய பறவை போன்ற படங்களிலும் சேர்ந்திருந்தால்???)அப்படி ஒரு இழைவு, இசைவு,அனுசரணை,chemistry தமிழ் பட உலகம் சில படங்களில் மட்டுமே கண்டிருக்க கூடிய அதிசயம். முதலில் அவர்களின் சோலை சந்திப்பில்,நயமான கிண்டலுடன்(தனக்கு புல்லாங்குழல் வாசிக்க தெரியாதது போல்) காதல் அரும்புவதாகட்டும்,தனது சிறு வயது infatuation அனுபவத்தை ரசித்து சொல்வதில் ஆகட்டும்(வைஜயந்தியின் reaction பத்மினியை தூக்கி சாப்பிட்டு விடும்),கண்ணில் குடியிருக்கும் பாடல் ----ஆஹாஹா துளிக்கூட காமம்,விரசம் இன்றி காதலை இப்படி ஒரு ரசனையான அனுபவம் ஆக்க முடியும் என்று ரசவாதம் புரிவார்கள் சிவாஜியும்,வைஜயந்தியும்.
சரோஜா தேவி,தன ஒரு தலை காதலை சொல்ல வலிய பேச்சு கொடுக்கும் போது ,அவரை புண் படுத்தாமல், நயமாக,நாகரிகமாக பதில் பேசி, இடையில் வரும் வைஜயந்தியிடன் எரிந்து விழும் நயம்.(பிறகு அவரிடம் வேவு பார்க்கத்தானே வந்தே என்ற சீண்டல்).இப்படி ஒரு மறுப்பை,எதிர் நிலையை நயமாக வெளியிடும் அழகு .... என்ன சொல்ல?முதலாளியிடம் பேசும் முறையிலும் ,அந்த மதிப்பை குறைக்காமல்,பிரச்சினையை நயமாக உரைத்து,அதை தீர்ப்பதிலேயே கவனம் காட்டுவாரே அன்றி ,எடுத்தேன் கவிழ்த்தேன் பாணியில் பேசவே மாட்டார். இந்த காட்சிகளில் சிறிய எதிர்ப்பை உடல் மொழியில்,எதிராளி மனம் புண் படாமல் காட்டும் நயம் அத்தனை மெருகோடு இருக்கும்.பின்னொரு காட்சியில், இழப்பீடு வாங்க தங்கவேல் செய்த மோசடியை தான் ஒப்பு கொள்ளவில்லை என்பதை உணர்த்தி ,அவரை இடிக்காமல் ,சரியான பாதைக்கு திருப்புவார்.ஒரே ஒரு இடத்தில்தான் தன்னை மறந்து உணர்ச்சி வச படுவார். அண்ணன் பெண் திருமணம் பிரச்சினையில் உள்ள போது .(அப்போதும் ஒரு நம்பிக்கை தொனிக்கும்)
தான் சிறையிலிருக்கும் போது ,அன்னையின் சவ ஊர்வலம் போகும் போது , தன துக்கத்தை மிக மிதமாக,அமைதியாக வெளியிடுவார்.(இந்த மேதை ,துக்கத்தை கூட, பாத்திர தன்மையறிந்து,சந்தர்ப்ப சூழ்நிலை அறிந்து ,பல விதங்களாக,பல படங்களில் ,வித,விதமாக நடித்து காட்டியுள்ளார்.பொத்தாம் பொதுவாக ஒரே விதமாக நடித்த சராசரிகளின் மேல் நமக்கு ஈர்ப்பு உண்டாகாமல் இருக்க, இந்த மேதைதான் முழு காரணம்)
இந்த மாணிக்கம், வைரத்தை விட அதிகமாக ஒளி வீசுவதில் ,என்ன ஆச்சர்யம்?
(தொடரும்)
இரும்பு திரை-1960 -பகுதி-3
இரும்பு திரையில் வைஜயந்தி மாலா ,தன் பங்கை செம்மையாய் செய்து ,நடிகர்திலகத்துக்கு ஈடு கொடுத்திருப்பார். சரோஜா தேவி, பொறாமை நிறைந்த பணக்கார பெண் பாத்திரத்தை ,உணர்ந்து நடித்திருப்பார். ரங்கா ராவ், சுப்பையா,வசுந்தரா(வைஜயந்தியின் உண்மை தாயும் கூட.),முதலியோர் நல்ல பங்களிப்பை,இந்த படத்திற்கு அளித்திருப்பார்கள்.
கதையை, ஜெமினி கதை இலாகா(மகாதேவன், வேப்பத்தூர் கிட்டு, கொத்தமங்கலம் சுப்பு,வாசன் அடங்கியது),வசனம் கொத்தமங்கலம் சுப்பு(தில்லானா மோகனாம்பாள் மூல கதாசிரியர்).இயக்கம் ஜெமினி அதிபர் இந்தியாவின் "செசில் பி டிமிலி" வாசன் அவர்கள். வசனங்களில் படு இயல்பான கூர்மை இருக்கும். பாத்திரங்கள் இயல்பு மீறாத நடிப்புக்கு வசனங்கள் துணை நிற்கும். முக்கியமாய், இந்திய பொறியாளர்களின் திறமை பற்றி சிவாஜி பேசும் வசனம். சிவாஜி-வைஜயந்தி காதல் காட்சி வசனங்கள். ரங்கா ராவ் உடன் எதிர்-நிலை வசனங்கள்.(வழிகாட்டி திருத்தும் உணர்வுடன் இருக்கும்.முதலாளியை irritate செய்வது போல் வரம்பு மீறாது. positive energy நிறைந்த வசனங்கள்.) வீட்டு பிரச்சினை,போராட்டங்கள் எல்லாமே படு பாந்தமாய் வசனங்களில் ஜொலிக்கும்.
இந்த படத்தில், சீரான விறுவிறுப்பு ,திரைகதையில் இருக்காது. ஆனால் ,ஒரு முக்கிய உலக பிரச்சினை கருவாகும் போது ,தவிக்க முடியாத குறை.
தங்கவேலு விற்கு நான்கு பாடல்கள். அவர் நகைச்சுவையும்,கல்யாண பரிசு,அறிவாளி தரத்தில் இருக்காது. ஆனால் கதையை ஒட்டிய நகைச்சுவையாய்(தொழிலார்களின் கடன் சுழல்) ,உயர்தரமாய், எதிர்மறை நிலையை விளக்கும்(misuse of compensation law )
பாடல்கள் பட்டத்துகோர் கும்பிடு, என்ன செய்தாலும் எந்தன் துணை நீயே, ஆசை கொண்ட நெஞ்சிரண்டு, நெஞ்சில் குடியிருக்கும் ,கையில வாங்கினேன் ஆகியவை நல்ல முறை கர்நாடக இசையை பின் பற்றியவை.(எஸ்.வீ.வெங்கட்ராமன்)மற்ற பாடல்கள் படு சுமார். எட்டு பாடல்கள் ,ஐந்தாக குறைக்க பட்டிருக்கலாம்.
பொதுவாக ,மிக சரியாக, சார்பின்றி, தொழிலாளர் பிரச்சினை பேசிய இந்த படம் , சுமாரான வெற்றி படம்.(ஆலைகள் நிறைந்த கோவை நகரில் வெள்ளி விழா).ஆனால் ஹிந்தியில் பிரம்மாண்ட வெற்றி.இந்த படத்தில் சிவாஜியின் ஈடுபாட்டையும்,நடிப்பு திறனையும் கண்ணுற்ற திலிப் குமார் ,சிவாஜி ரசிகர் ஆகி, நண்பராகவும் ஆனார்.(இவருக்காக அவர் ஆலய மணியும், அவருக்காக இவர் கங்கா ஜமுனாவும் பண்ணினார் என்று கேள்வி)
ஆனால், வாசன்-சிவாஜி உறவு சீராகவில்லை. ஒரு சின்ன பாத்திரத்துக்காக நேர்முக தேர்வுக்கு வந்த சிவாஜியை நிராகரித்து(சந்திரலேகா), மிக மோசமாக விமரிசித்த பார்ப்பன திமிரை ,சிவாஜி மன்னிக்கவே இல்லை என்று கேள்வி. ஜெமினி, திரைகதை தயாரித்து, தயாராக இருந்தவீரபாண்டிய கட்டபொம்மனுக்கு ஒப்பு கொள்ளாமல், பந்துலுவை எடுக்க வைத்தார். இரும்பு திரையிலும் நிறைய உரசல்கள்.(ஆனந்த விகடன் சக்தியறிந்து குழந்தை மனம் கொண்ட சிவாஜி விட்டு கொடுத்திருக்கலாம்). ஜெமினி கான்டீன் எழுதிய மணி,இதை குறிப்பிட்டு,உன் முதலாளிக்கு அல்வா கொடுத்து விட்டேன் என்று சிவாஜி குறிப்பிட்டதாக எழுதியுள்ளார்.(அவரும் சிவாஜி விசிறி). ஆனால் ,வாசன் சிவாஜியின் திறமையறிந்து , அவரின் மிக பிரம்மாண்ட மக்கள் செல்வாக்கு அறிந்து, இதற்கு பின்னும்,மோட்டார் சுந்தரம் பிள்ளை(1966),விளையாட்டு பிள்ளை (1970) என்ற படங்கள் எடுத்ததுடன், சிவாஜி உலகிலேயே சிறந்த நடிகர் என்று பாராட்டி(தில்லானா மோகனாம்பாள்,வியட்நாம் வீடு பார்த்து) ,125 வது விழாவிலும் கலந்து கொண்டார்.
மிக மிக ,உண்மையான பிரச்சினையை எடுத்து, எடுத்து கொண்ட கருவில் விலகாமல், சரியான தீர்வை, சரியான பொழுது போக்கு விகிதத்துடன் தந்த மறக்க முடியாத Nadigar thilagam உன்னத காவியங்களுள் ஒன்று.
(முற்றும்)
Quote:
Originally Posted by [B
Dear Gopal,
மிக நேர்த்தியாக,நேர்மையாக ஒரு நெடு விமரிசனம் எழுதுவது எப்படியென உங்களிடம் கற்றுக்கொள்ளலாம்.இந்த திரைப்படத்தை பார்த்த ஒரு உணர்வை உங்கள் எழுத்து ஏற்படுத்தியது.
oru simple linear story ஐ அதன் சுவை குறையாமல் நமக்கு அளித்திருப்பார் தலைவர்.ஒரு ஆற்றொழுக்கு ஒப்ப நடிப்பு..ஆர்பாட்டங்கள் ஆரவாரம் கிடையாது.ஆனாலும் அழுத்தமான முத்திரை உண்டு.
மேலும் நீங்கள் குறிப்பிட்டுள்ள, காமிராவிற்கு பின்னால் நிகழ்ந்த நிகழ்வுகளும் சுவையாகத்தான் உள்ளன."யாகாவாராயினும் நாகாக்க " எனும் பொய்யா மொழியை இன்னொரு மேதையான S S Vasan would have learned in the hard way.ம்ம்ம் விதி யாரை விட்டது! ஆமாம்..AV Meyyappan episode உம் நீங்கள் அறிந்ததுதானே!
மீண்டும் நன்றி!
ஜவாப் என்பது தமிழக எல்லையைத்தாண்டினால் அனைவராலும் அறிந்து கொள்ளப்படும் ஒரு இந்திய மொழிச்சொல்..அர்த்தம்=பதில்...(நான் ஜவாப்தாரி இல்லை எனும் கொச்சை தமிழையும் கேட்டிருப்பீர்கள்.)
இதற்கு பதில் சொல்ல வேண்டிய பொறுப்பு எனக்கில்லை என்பது பொருள்.
ஜவாபின் எதிர் சொல் சவால் அதாவது கேள்வி.(TMS அவர்களால் சில சமயம் கேழ்வி என்றும் சொல்லப்படுவதுண்டு)..challenge எனும் பொருளில் தமிழர்கள் மிகவும் விரும்பும் ஒரு சொல்.
"எனக்கா சவால் விடறே" என்பது தமிழர்களுக்கு பிடித்த ஒரு வாக்கியம்."சவாலங்க்கடி கிரி கிரி,சைதாபேட்டை வட கரி" எனும் சைதாபேட்டை ஸ்தல புராணத்தை விளக்க வரும் செய்யுளும்
இதை வேராக கொண்டு உதித்தது தான்.
நடிகர்திலகத்தின் உடல்மொழி:
கிருஷ்ணன் வந்தான் படத்தில் செல்வம் இழந்த நல்லவன் ஒருவனின் மன அழற்சியைக் காட்டும் அந்த வெறித்த பார்வை..
மருத்துவ மாணவனாய் அன்று நான் பார்த்த அந்த நடிப்புதெய்வத்தின் முகபாவம் -
பத்தி பத்தியாய் '' டிப்ரஷன்' பற்றிச் சொல்லும் நூல்கள் பலவற்றின் அத்தியாயங்களை வெல்லும் இதிகாசம்!
--------------------------------------------
நவராத்திரியில் ஆனந்த் தன் காதலி திரும்பியவுடன்
வறண்ட கோடை வானத்தில் திடீரென இருண்ட மேகங்கள் திரண்டாற்போல்
சிலநாள் தாடி அடர்ந்த சோகமுகபாவத்தைக் கீறிக் கிளம்பும் மின்னல்கள்....
மகிழ்ச்சி, உரிமை, கோபம், பரவசம், பச்சாதாபம்...
தளர்ந்த உடல்மொழி மெல்லமெல்லக் கிளர்ந்து கிளைத்து எழும் அந்த அன்பு ஊட்டத்தின் வெளிவேகம்...
இந்தக்கால இளசுகளின் மொழியில் -- சான்சே இல்லை !
ரோஜாவின் ராஜாவில் ,மன நோயின் ஆரம்ப அறிகுறிகளை காட்டும், யாரோ அருகில் தன்னோடு பேசுவதான பாவம்,
எங்கிருந்தோ வந்தாள் ,இறுதி காட்சியில், ஏதோ சொல்ல வரும் ஜெயலலிதாவின் பால் பரிவு,அதே நேரம் ஒன்றுமே நினைவில்லாத நிலை, ஒரு மைய்யமான blank expressions கொடுத்து ,ஜெயலலிதா தவறாக நினைக்காமல் இருக்க ஒரு ஆறுதல் பார்வை,ஆறுதல் சிரிப்பு.
அமர தீபம் படத்தில், amnesia நோயின் அறிகுறியை காட்டும், வெறித்த,சூன்ய பார்வை.
ராஜாவில் ,ஜெயலிலதா மற்றும் ,அவர் தாயுடன் பொய் பேசும் போது , வாயை மறைத்து பேசுவது.
அதே ராஜாவில், ஜெயலலிதா,பாலாஜி follow செய்வதை சொல்லும் போது ,சிறிதே திரும்பி, பிறகு பாலாஜிக்கு சந்தேகம் வராத படி, romance செய்ய குனிவது போன்ற பாவனை.
விண்ணோடும் முகிலோடும் பாடலில்(புதையல்) ,காதலின் இன்ப லாகிரியை உணர்த்தும் குட்டி கரணம்.
அதற்கு இது பதில் அல்லவே !!!
அதே பேசும் தெய்வத்தில், பத்மினி பிள்ளையை அழைத்து போகும் போது ,மாத்தி மாத்தி instructions மேல் instructions கொடுக்கும் போது ,தலைவரின் reaction .
நீலவானத்தில், ஓடும் மேகங்களே பாட்டில், வருடம் தோறும் வசந்தம் தேடி வருவோம் இங்கே என்ற வரிகள் இரண்டாம் முறை உச்சரிக்க படும் போது ,தலைவரின் reaction .
நான் வாழ வைப்பேன் படத்தில், போலீஸ் கேள்வி மேல் கேள்வி கேட்டு குடையும் போது , நினைவு படுத்தி கொள்ள முயலும் தலைவரின் action .
//Dig
En pEr Prabhu-nga....since that name is already taken, Prabo-nu maathitaen. Namma real name thaan nammalaala decide panna mudiyala, virtual name ennavaavathu vachika vaendiyathu thaan...who cares.
//
Neengalaam body language pathi discuss panrathaala, enakku pidicha oru clip. Hand acting is risky...it diverts attention to hands. But, this clip can be watched once for expressions, once for hand gestures, once for dialogue delivery and once for all at a time. Wonderful.
http://www.youtube.com/watch?v=vAE6xvRMn34
டியர் கோபால்,
Judgment at Nuremberg படம் பார்க்கும் போதெல்லாம் என் கற்பனை சிறகடித்துபறக்கும்.மானசீகமாக அதில் வரும் Spencer Tracy, Burt Lancaster & Maximilian Schell மூன்று ரோலிலும் தலைவர் நடிப்பதாக கற்பனை.ஆஹா தூள தூள கிளப்பியிருப்பார்.ஒரு உலக சாதனையே படைத்திருக்கலாம்.முதல் பாத்திரம் righteousness ,இரண்டாம் பாத்திரம் honesty, மூன்றாம் பாத்திரம்,patriotism இன் உருவகம்..இந்த படத்தை பார்த்தவர்கள் முன்வந்தால் மேலும் விவரிக்கலாம்.BTW my request to all..Pl.do not miss this movie for Heaven's sake.That too Bhakthas like us.
நன்றி.
[QUOTE=Vankv;1001093]so much for 'share autovum saravana storesum':?[/QUOTE]
:???: :banghead:
மன்னிக்கவும் வன்கவியே! என்ன இயம்புகிறீர்கள் எனப் புரியவில்லை.தயைகூர்ந்து சற்றே தெளிவு செய்வீர்!
தலைவரே,
இந்த படத்தை பார்க்காமல் விட்டிருப்பேனா? Judgement at nuremberg (By Stanley Kramer-1961)movie, சிக்ப்ரீத் லென்சின் (Siegfried Lenz)"நிரபராதிகள் காலம்" என்ற ஜெர்மன் நாடகத்தையும் இணைத்து, நான் ஒரு கற்பனை script (srilankan பிரச்சினையை முன்னிறுத்தி) பண்ணி அதில் சிவாஜிக்கு ஓமர் முக்தார் பாணியில் ஒரு ரோலும், J A N பட spencer tracy பாணியில் ஒரு ரோலும் கற்பனையில் உருவாக்கி மகிழ்ந்திருக்கிறேன். நீங்கள் சொல்லும் மூன்று ரோல் கற்பனை இன்னும் சூப்பர்.("You knew you were doing wrong the first time you condemned an innocent man.")
நண்பர் பிரபு,
அருமையான காணொளி பதிவிட்டிட்ட உங்களுக்கு,
நன்றி சொல்லிட விழைகிறேன்.
தலைவர் உச்சரிப்பை புகழ்ந்திடுவதா,
குரல் மாற்றங்களை புகழ்ந்திடுவதா,அல்லது
கலைஞர் எழுதிட்ட வசனங்களை புகழ்ந்திடுவதா என்று
நினைத்திட்டு,நினைத்திட்டு மனம் மருண்டிட்டதுதான் மிச்சம்.
கல் தோன்றிட்டு மண் தோன்றிடா காலத்தே,
முன் தோன்றிட்டு மூத்த செம்மொழியாம் தமிழ் மொழி தனக்கு,
ஆடைகள் பல சூட்டி,
ஆபரணங்கள் பல பூட்டி,
பூரண நிலவைக்காட்டி,
கொம்புத்தேனோடோடு கலந்திட்ட முக்கனி ஊட்டி,
உறங்கிட வைத்து போல இருந்திட்டது.
அயகோ மீண்டும் வந்திடுமோ அத்தகைய நாட்கள்!
கேட்டிடுமோ நம் செவிகள் இத்தகைய வசனங்களை!
பார்த்திடுமோ நம் நயனங்கள் இத்தகைய நடிப்பினை!
என தவித்திட்டு துடிக்குது நம் மனது.
வாழ்க தலைவர் புகழ்!
நன்றி கோபால்,நீங்கள் இந்தப்படத்தை பார்த்திருக்க மாட்டீர்கள் என நான் கனவிலும் நினைத்திருப்பேனா?
நான் சொன்னது மற்ற நண்பர்களுக்கு..
http://youtu.be/N3BwK51YFgQ
டியர் கண்பத்,
இந்தப் படத்தில் நீதிபதியாக வரும் ஸ்பென்சர் டிரேசி செய்யும் மேனரிஸம் அல்லது body language போன்றவற்றை, வேறு வகையில் சொன்னால் தாங்கள் கற்பனை செய்து வைத்துள்ளவற்றை, அவள் யார் படத்திலேயே நடிகர் திலகம் நீதிபதியாக வரும் காட்சிகளில் செய்து விட்டார். சொல்லப் போனால் Judgement at Nuremberg படம் வெளிவந்தது ஹாலிவுட்டிலேயே 1961ல் தான். ஆனால் நம் நடிகர் திலகமோ அதற்கு இரு ஆண்டுகளுக்கு முன்னரே 1959லேயே அவள் யார் படத்தில் செய்து விட்டார். நம் நாட்டு மனிதர் நீதிபதியாக இருக்கும் போது செய்யக் கூடிய மேனரிஸம் அல்லது பாடி லேங்குவேஜாக அது இருக்கும்.
இது மட்டுமல்ல. தான் ஏற்றுக் கொண்ட நீதிபதி கதாபாத்திரத்திடம் வரக் கூடிய வழக்குகளின் அடிப்படையில் நீதிமன்ற நடைமுறைகள்முடிந்த பின்னர் வழக்கை அணுகும் முறையில் கூட ஒவ்வொரு வழக்கினிற்கும் பாணி மாறுபடும் வகையில் அந்த கதாபாத்திரத்தின் நடை உடை பாவனைகள் அமைந்திருக்கும்.
Thank you Ragavendar Sir. If K.J.Mahadevan listened to our NT and released the movie Aval Yaar at a later date(instead of placing it with Baga pirivinai) ,it should have been a hit and most talked about film like andha naal. Aval yaar is an exemplary performance.
Yes, It's the hurry shown by KJM that made the film Aval Yaar suffer. It was definitely another parallel to Andha Naal. See a hollywood judge and Indian judge in the following two films. The eyes speak more than words.
http://filmfanatic.org/reviews/wp-co...berg-Tracy.png
http://i1110.photobucket.com/albums/...GEDC4886-1.jpg
aval yaar image courtesy: our dear pammalar
சகோதரி,
ஒரு காலத்தில் எனக்கு இது ஒரு பொழுதுபோக்கு. நிறைய திரைக்கதைகள் அமைப்பேன்(படமானதில்லை.). எனக்கு பிடித்த எழுத்தாளர்கள் கதையை மூலமாக கொண்டு.
கரைந்த நிழல்கள்(அசோக மித்திரன்),ரிஷி மூலம்(ஜெயகாந்தன்), kaafka வின் விசாரணை, silence ,கோர்ட் in progress (டெண்டுல்கர்) இரண்டையும் இணைத்து ஒன்று, காகித மலர்கள்(ஆதவன்) ,கடல் புரத்தில்(வண்ண நிலவன்) இப்படியாக,
அந்த வகையில் நான் அமைத்த திரைக்கதை (1990).(judgement at nurenberg , நிரபராதிகள் காலம், இலங்கை பிரச்சினை எல்லாம் கலந்தது) NT கேரக்டர், சிறிது பிரபாகரன், சிறிது பாலசிங்கம், சிறிது ஓமர் முக்தார் கலந்தது. திரைகதை பாணியிலேயே எழுவதென்றால், 20 பக்கங்கள் செல்லும். சுருக்கம் இதோ.(1990 )
ஒரு கற்பனை தேசம். சிவந்த மண்ணின் வசந்தபுரி போல்.
முதல் காட்சி- பேச்சு வார்த்தை- சம உரிமை, தன்னாட்சி, மொழிக்கு அந்தஸ்து, கல்வியில் சம உரிமை கோரி ஒரு சிறுபான்மை இன தலைவருக்கும்((சிறு வயது சிவாஜி),ஒரு நாட்டு அதிபருக்கும்., ஒரு ஒப்பந்தம் கையெழுத்து. அடுத்து நடு வயது சிவாஜி, வேறு அதிபர். உதட்டசைவுகள் மட்டும், மீண்டும் ஒரு ஒப்பந்த கையெழுத்து. அடுத்து 55 வயது சிவாஜி. முதல் அதிபரின் மகன் . உதட்டசைவுகள். மீண்டும் ஒரு ஒப்பந்த கையெழுத்து. அடுத்த காட்சி. 65 வயது நடிகர் திலகம். ஒரு வட்ட மேஜை அதில் வெவ்வேறு கட்சி பெயர்கள் குறிக்க பட்டு. முதலில் விவாதிக்க பட்ட அதே பிரச்சினைகள் அதே வரிசையில் மீண்டும்.அப்போது எல்லோரும் அரசின் பாராமுகத்தை விவரித்து ஆயுத போராட்ட அவசியத்தை NT சக குழுக்களுடன் விளக்குவார். முதல் பணி ,தங்கள் இனத்தையே கோடரி காம்பாய், வெட்டி கொண்டிருக்கும் இனத்துரோகி governor ஒருவனை அழித்தொழிக்கும் பணி .
புதிதாக இயக்கத்தில் சேர்ந்த ஒருவனை(இளைய NT பாத்திரம்), நம்பிக்கை வைத்து இந்த வேலையை ஒப்படைக்கிறார்கள்.(Flashback சென்று முதிய சிவாஜியின் இளமை நாட்களில்,அவர் காதலில் விழுந்து,இயக்க நடவடிக்கைகளில் சோர்வதும், அந்த பெண் , வயிற்றிலிருக்கும் குழந்தையுடன், அவருடன் சொல்லாமல் வெளியேறுவதும், மகனுடன் தந்தையை பற்றி கூறுவதுடன், தந்தையிடம் இது பற்றி சொல்ல வேண்டாம் என தெரிவித்து விடுகிறாள்.அந்த வாலிபன்தான் சொல்லாமல் இயக்கத்தில் சேரும் புது வாலிபன். இது தமிழ் பட நியதிகளை முன்னிட்டும், NT க்கு duet கொடுக்கவும் செய்த திரைகதை சதி)).அந்த வாலிபன் ,பல வேலைகளை திறமையை கையாண்டு இயக்கத்தில் வளர்கிறான். ஒரு நட்பு நாட்டில், இன்னொரு இயக்கத்தை சேர்ந்த போராளி குழு ஒன்றை சேர்ந்த நால்வரை கொல்ல அனுப்பப்பட்டு, அந்த நாட்டின் காவலர்களால் பிடி பட்டு ,சொந்த நாட்டுக்கு அனுப்ப படுகிறான். பிடிபட்ட ஐந்து சக போராளிகளுடன், இளைய NT யும் சேர்ந்து ஒரு பாதுகாப்பான இடத்தில் வைக்க படுகிறார்கள். இவர்கள் இனத்தை சேர்ந்த ஒரு ஆறு நிரபராதிகளை(வக்கீல், பொறியாளர்,டாக்டர்,விவசாயி ,ஒரு நிறுவன தலைமை அதிகாரி, ஒரு செருப்பு தைக்கும் தொழிலாளி என கலந்து), தேர்ந்தெடுத்து(எந்த போலீஸ் complaint இலும் வராத,தன் வேலையுண்டு என்று இருக்கும் ஆட்கள்) இதே சிறையில் தள்ளி, உண்மையை வாங்கும் பொறுப்பை ஒப்படைக்கின்றனர். அல்லது, இவர்களை சித்ரவதை செய்து கொள்ளலாம் ,கொல்லலாம் என்றும் உரிமை வழங்க படுகிறது.ஆனால்,அது வரை, இந்த ஆறு பேருக்கும் சொட்டு தண்ணீர் கூட தரப்பட மாறாது,வெளியிலும் செல்ல முடியாது என்று அரசு காவலர்களால் சொல்ல பட்டு இந்த நிரபராதிகள் ,போராளிகளுடன் அடைக்க படுகிறார்கள். ஒரு மூன்று நாட்கள், battle of wits ,ஒருவர் பக்க நியாயத்தை இன்னொருவர் புரிந்து நடக்க அறிவுருத்த பட்டு,அவரவர் வழியில் அவரவர் வேண்டுதல்,மிரட்டுதல், அடிதடி என்று ஒரு கலந்து கட்டியான நிலை. ஒவ்வொரு இரவிலும் ஒரு போராளி,யாராலோ கொல்ல படுகிறார். இறுதியில் NT ,சிறையிலுருந்து தப்பிக்க, மற்ற ஐந்து போராளிகளும், ஆறு நிரபராதிகளால் கொல்ல படுகிறார்கள்.அரசு, ஆறு நிரபராதிகளையும், விடுவிக்கின்றனர்.
இறுதியில், போராளிகள் போராட்டத்தில் வென்று அரசமைக்க, periya NT ,இளைய NT ஐ ,நீதி துறைக்கு பொறுப்பாக்குகிறார் . அடுத்த காட்சி, முந்தைய முறை கண்ட ஆறு நிரபராதிகளும், தேடி பிடிக்க பட்டு,இளைய NT நீதிபதி பீடத்தில் அமர, விசாரணை. நடுவில்,ஒரு துப்பாக்கியை வைத்து, யார் வேண்டுமானாலும் தற்கொலை செய்து கொள்ளும்,யாரும் யாரையும் கொன்று கொள்ளும் , உரிமையும் நிரபராதிகளுக்கு வழங்க படுகிறது. விசாரணை,தீர்ப்பு, ..........
இந்த திரைக்கதையில், மூத்தவர் ஒரு cool devil type missionary .Focussed ஆக உணர்ச்சிகளுக்கு இடமளிக்காத பாத்திரம் ஆகவும், இளையவரை rebel போன்று, நிறைய பேச கூடிய,உணர்ச்சி வய படும், கொள்கைகளை கேள்விக்கு ஆட்படுத்தும், ஆர்ப்பாட்டமான பாத்திரமாக உருவாகியிருந்தேன்.
பல கேள்விகள், அந்த பத்து பேரின் உணர்ச்சி மயமான சிறை காட்சியில், தேச பற்று, தீவிர வாதம், தியாகம், தனி ஒருவனின் மனசாட்சி, சமூக மனசாட்சி, மேலிடத்தின் அழுத்தத்தினால், குற்றமிழைக்க தூண்ட படுபவரின் குற்றத்தில் பங்கு பற்றிய விவாதம், பொறுப்புணர்ச்சி, என்று பல விஷயங்கள் விவாதத்துக்கு உள்ளாகி, NT க்கு மிக மிக வாய்ப்பு கொடுக்கும் வசனங்கள்,மௌனங்கள், action என்று தூள் பரத்தும் scope . என்ன செய்வது, அவர் பிறந்து, முப்பது வருடங்கள் பின் தங்கி பிறந்து விட்ட நான் ஏங்கத்தானெ ,முடியும்?
Ref:1491
ராகவேந்திரா ஸார்!
JAN படத்தின் ஒரு முக்கிய காணொளியை போட்டிருப்பது நீங்கள் அந்தப்படத்தை பார்த்து ரசித்திருக்கிறீர்கள் என்பதை தெரிவிக்கிறது.அந்த நம்பிக்கையில் தொடர்கிறேன்.
மனித வரலாற்றில் இதுவரை நிகழ்ந்திடா அக்கிரமம், ஜெர்மனி நாட்டில் ஒரு குறுகிய பத்தாண்டுகளில் நடந்தேறுகிறது.இது முடிந்து உண்மை வெளிவரும்போது ஜெர்மானியர்கள் தங்களுக்கும்,தங்கள் தந்தை நாட்டிற்கும், அழிக்கமுடியாத அவப்பெயர் ஏற்பட்டு விட்டதை எண்ணி கதி கலங்குகிறார்க்கள்.ஒவ்வொருவரும் நடந்த அக்கிரமங்களுக்கு, தாங்கள் பொறுப்பில்லை, அவை தங்களுக்கு தெரியாமல் நடந்தது.அதை தங்களால் தடுத்திருக்கமுடியாது எனும் சௌகரியமான பொய்யில் தங்களை தற்காத்துக்கொள்ள எண்ணுகிறார்கள்.
இந்நிலையில், நடந்தேறிய அக்கிரமங்களை விசாரிக்க அமெரிக்க தரப்பில் ஒரு நேர்மை மிக்க நீதிபதி(Spencer Tracy) தலைமையில் ஒரு விசாரணைக்குழு கூட்டப்படுகிறது.குற்றம் சாட்டப்படுள்ளவர்கள் அனைவரும் ஜெர்மனியின் முன்னாள் நீதிபதிகள்.தங்கள் தீர்ப்புகளின் வாயிலாக ஹிட்லரின் கொடுமைக்கு உதவியவர்கள்.இதில் ஒரே ஒரு நீதிபதி (Burt Lancaster) உலகப்புகழ் வாய்ந்தவர்.தன் நாட்டு மக்களால் பெரிதும் மதிக்க,நேசிக்கப்படுபவர்.இவர் தன் செய்தது குற்றமே என உணர்ந்து, குற்ற உணர்வில் வெம்பி மருகுகிறார் .ஆனால் இவர்களுக்காக வாதிடும் வழக்கறிஞரரோ (Maximilian Schell) தன் திறமையால், இவர்கள் செய்தது சட்டப்படி குற்றமில்லை என வாதிடுகிறார்.சாட்சியங்களை உடைக்கப்பார்க்கிறார்.இந்த நிலையில் அமெரிக்க அரசே பல்வேறு காரணங்களுக்காக அந்த ஜெமானிய நீதிபதிகள் தண்டிக்கப்படுவதை விரும்பாமல் அந்த விசாரணைக்குழு தலைவரை தங்கள் எண்ணப்படி தீர்ப்பு சொல்ல வைக்க முயல்கிறது.இப்படிப்பட்ட சூழ் நிலையில் அந்த விசாரணை குழுவின் தலைவர் என்ன செய்கிறார் என்பதே கதை.
இதில் இந்த மூன்று பாத்திரங்களும் மூன்று வெவ்வேறு பரிமாணத்தில் அமைந்தவை.அந்தந்த நடிகர்களால் மிக சிறப்பாக செய்யப்பட்டவை.இதில் ஒருபாததிரத்தை ஏற்று நடிக்கவே ஊர்பட்ட திறமை தேவை.ஆனால் நம் தலைவர் இந்த மூன்றையுமே தான் ஒருவராக ஏற்று நடிக்க வல்ல திறன் படைத்தவர் என்பதே என் கருத்து.
மனித மனதின் ஒழுக்கம்,வேகம், புழுக்கம் இம்மூன்றையும் அதனதன் உச்சத்தில் வெளிப்படுத்த இந்த மஹா கலைஞனை விட்டால் ஆள் எது?
மேலும் என் நோக்கில் இந்தபடத்திற்கும் நம் "அவள் யார்?" படத்திற்கும் எந்த ஒரு சம்பந்தமும் கிடையாது.உங்கள் கருத்துப்படி பார்த்தாலும் தலைவர் போடாத வழக்கறிஞர் வேடமா?
அதைத் தான் நானும் கூறியுள்ளேன். இந்த மூன்று வேடங்கள் மட்டுமல்ல மற்ற பாத்திரங்களையும் அவரிடம் தந்தால் கூட ஊதித் தள்ளி விடுவார் என்பதில் சற்றும் ஐயமில்லை. நான் சொல்ல வந்தது, Indianised situation, Indianised characterisation என்பதைப் போன்று நம் ஊரில் இந்த வழக்குகள் நடந்தால் எப்படி செய்வார் என்பதையே. இதே நீதிபதி பாத்திரத்தை அவர் நீதிபதி படத்திலும் செய்திருப்பார். அங்கே அவர் முற்றிலும் வேறு. சூழ்நிலை வேறு, வழக்குகள் வேறு. சந்தர்ப்பங்கள் வேறு. ஆனால் ஏற்று நடிக்கும் நடிகர் மட்டும் ஒருவரே.Quote:
மேலும் என் நோக்கில் இந்தபடத்திற்கும் நம் "அவள் யார்?" படத்திற்கும் எந்த ஒரு சம்பந்தமும் கிடையாது.
இதே JAN படத்தில் ந.தி. நடித்திருந்தால் என்பதைத் தான் தாங்கள் கற்பனை செய்து வைத்திருக்கிறீர்கள். இது போல் எண்ணற்ற படங்கள். இஸ்த்வான் ஜாபோ பட நாயகனை வடிவமைக்கும் போது நம்மால் ந.தி. யைக் கற்பனை செய்யாமல் இருக்க முடியாது. குறிப்பாக ஹங்கேரியன் ரப்சோடி படத்தில் சில காட்சிகளில் கண நேரமாவது நம் கண்முன் ந.தி. தோன்றி இதை இவர் செய்திருக்கலாமே என்கிற எண்ணம் வராமல் இருக்காது.
Madam,
This is just touching some of your problems. Not with the intention of passing judgements or comments or solutions. But you didn't go deep into the jail scene and the final judgement scene which warrants your attention more than shallow fillers. This is to question the innocense claimed by most of the people in collective responsibility and not dwell too much into actual issue, in line with original works I mentioned. I was honest in writing this as such as I conceived this in 1990. If the same has been written in 2000/2010,it would have taken a totally different dimension.
I am sorry if it hurted any of your feelings.
Ref # 1497
மிக்க நன்றி அம்மணி..
அதேசமயம்..
//பொதுவாக நான் hollywood இன் B &W படங்களைப் பார்ப்பதில்லை.//
இது என்ன விசித்திர கொள்கை? கிட்டத்தட்ட 'கூடை வச்சிண்டு இருக்கிறவங்களுக்கு,
நான் பெட்ரோமாக்ஸ் லைட் கொடுப்பதில்லை' என்பது போல!
உலகின் உன்னத படங்கள் என நூறை பட்டியலிட்டால்,
அதில் சுமார் எழுபது B&W ஆகத்தான் இருக்கும்.
நீங்கள் முதலில் JAN பார்த்து உங்கள் கருத்தை சொல்லுங்கள்.
வேறு நல்ல B &W படங்களை நான் சொல்கிறேன்.