A book written by MGR- How he derived an idea of Making Nadodi Mannan is recently released
Printable View
A book written by MGR- How he derived an idea of Making Nadodi Mannan is recently released
இனிய நண்பர் திரு பம்மல் சார்
மக்கள் திலகத்தின் மிகவும் புகழ் பெற்ற ''உலகம் சுற்றும் வாலிபன் '' ஸ்டில்
மற்றும் நாளை நமதே ஸ்டில் பதிவிட்டமைக்கு நன்றி .
மக்கள் திலகத்திற்கு புகழ் சேர்த்த ''மலர் மாலை -1 புத்தகம் மகத்தான வெற்றி தொடர்ந்து மேலும் மக்கள் திலகத்திற்கு நீங்கள் படைக்க போகும் புத்தகங்கள் விரைவில் வருவது குறித்து மிக்க மகிழ்ச்சி .
ஆவணத்திலகம் , மக்கள் திலகம் ரசிகர்களின் நெஞ்சங்களில் இடம் பெற்றதின் மூலம்''எங்கள் பம்மலார்''
என்று உரிமையோடு அழைக்கும் அளவிற்கு வந்த '' மலர் மாலை '' நிச்சயம் மக்கள் திலகத்தின் பெருமைக்கு
ஓர் வைரகிரீடம் .
மீண்டும் பம்மலார் -எம்ஜியார் அவர்களுக்கு நன்றி
https://www.youtube.com/watch?featur...&v=Or7wy-m0iwA
SARVATHIKARI TMS SONG
மக்கள் திலகம் அவர்கள் எழுதிய ''நான் ஏன் பிறந்தேன்'' புத்தகம் தற்போது கண்ணதாசன் பதிப்பகத்தின் மூலம் வெளி வருவது அறிந்து மிக்க மகிழ்ச்சி . தகவலுக்கு நன்றி ஜெய் சார் .
மக்கள் திலகத்தின் மருமகனும் ''மன்னாதி மன்னன் ' பத்திரிகை ஆசிரியரும் எங்கள் அன்பு நண்பரான திரு எம்ஜியார் விஜயன் அவர்களின் 5 ஆம் ஆண்டு நினைவு அஞ்சலி .[4.6.2013]
http://youtu.be/rvtkHuOkgUs
பெங்களூர்
சி .எஸ். குமார்
திருப்பூர் ரவிச்சந்திரன்
சிவகுமார் - சிமோகா
ஆரணி ரவி
மோகன் குமார்
ரவி
கணேஷ்
ஆசை
ரவிச்சந்திரன்
ராமு
மனித தெய்வம் மக்கள் திலகம் எம்ஜியார் மன்றம்
பெங்களூர் - 560021
Dear Pammalaar Sir,
THANK YOU SO MUCH FOR THE COMPLIMENTS GIVEN TO ALL OUR MAKKAL THILAGAM DEVOTEES. YOU ARE ASSURED OF OUR CO-OPERATION AT ALL TIMES WHENEVER YOU RELEASE ANY SOUVENIR OR PUBLISH ARTICLE / BOOK CONCERNING OUR BELOVED GOD M.G.R.
WELCOME TO THIS MAKKAL THILAGAM THREAD, AFTER A LONG TIME AND EXPECT MORE & RARE NEWS RELATING TO OUR BELOVED GOD M.G.R., FROM YOU REGULARLY.
Ever Yours
S. Selvakumar
Endrum M.G.R.
Engal Iraivan
தன் படங்களில் இடம் பெறும் பாடல்கள் விஷயத்தில், அதிக அக்கறையும், சிரத்தையும் எடுத்துக் கொள்வார் எம்.ஜி.ஆர்., தான் எதிர்பார்க் கும் விதத்தில், மெட்டு வரும் வரையில் இசையமைப்பாளர்களை ஓய விட மாட்டார். தான் நடிக்கும் படப் பாடல்களின் மெட்டுக்கள் மட்டுமின்றி, பாடல் வரிகளும் மிக சிறப்பாக இருக்க வேண்டும் என்பதில், எம்.ஜி.ஆர்., அதிக சிரத்தை எடுத்துக் கொள்வார்.
எவ்வளவு பெரிய கவிஞராக இருந்தாலும், எம்.ஜி.ஆர்., போதும் என்று சொல்லும் வரை, அவர் எதிர்பார்ப்புக்கு ஏற்ப, பாடல் வரிகளை அடித்துத் திருத்தி, எழுதிக் கொண்டே இருக்க வேண்டும். எம்.ஜி.ஆர்., படங்களுக்கு மெட்டுப் போடுவதில் இருந்து, பாடல் எழுதுவது வரை, இசையமைப் பாளர்கள் மற்றும் பாடலாசிரியர்களுக்கு மிகுந்த பொறுமையும், சகிப்புத்தன்மையும் அவசியமாக இருந்தது. அந்த அளவுக்கு, எம்.ஜி.ஆர்., கசக்கிப் பிழிந்து விடுவார்.
அளவுக்கு அதிகமான எம்.ஜி.ஆரின் தலையீடும், சிரத்தையும் தான், மற்ற நடிகர்களின் பழைய பாடல்களை விட, எம்.ஜி.ஆரின் பழைய பாடல்கள், இன்றைய இளைஞன் முதல் முதியவர்கள் வரை ஆர்வத்துடன் விரும்பிக் கேட்பதற்கு அடிப்படை காரணங்களாக அமைந்தன என்றால், அது மிகையல்ல. எம்.ஜி.ஆர்., இரட்டை வேடத்தில் நடித்த படம், நினைத்ததை முடிப்பவன்.
இந்தப்படத்தில், எம்.ஜி.ஆர்., கொள்ளைக் கூட்டத்தின் மத்தியில், அவர்களை வேவு பார்க்க வந்து, மாறு வேடத்தில் நின்று கொண்டிருக்கும் போலீஸ்காரர்கள் மத்தியில், பாடுவதாக ஒரு பாடல் காட்சி.
அருமையான ஒரு மெட்டமைத்து, எம்.ஜி.ஆரிடம் பாடிக் காட்டினார் எம்.எஸ்.வி., அந்த மெட்டு எம்.ஜி.ஆருக்கு மிகவும் பிடித்துப் போயிற்று.
ஒரு பிரபலமான கவிஞரை, அந்த மெட்டுக்கு பாடல் எழுதச் சொன்னார் எம்.ஜி.ஆர்., காட்சிச் சூழலை நன்கு கேட்டு, தெரிந்த கொண்ட அந்த கவிஞர், பாடல் எழுதி முடித்ததும், எம்.ஜி.ஆரிடம் படித்துக் காண்பித்தார். பாடல் வரிகள் நன்றாக இருந்தும், எம்.ஜி.ஆரின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப அந்த வரிகள் அமையாததால், மீண்டும் புதிதாக சில பல்லவிகளையும், சரணங்களையும் எழுதச் சொன்னார்.
ஆனாலும், எம்.ஜி.ஆர்., முகத்தில் திருப்தி இல்லை. வேறு ஒரு பிரபல கவிஞரை அழைத்து, இதே மெட்டுக்கு எழுத வைத்தனர்.
அந்தப் பாடலும் திருப்தி இல்லை. இதே போல், அந்த நாளில் பிரபலமாக இருந்த ஆறு கவிஞர்கள், அந்த மெட்டுக்கு பாடல் எழுதப் பணிக்கப்பட்டனர். எந்த வரிகளுமே, எம்.ஜி.ஆரை வசீகரிக்கவில்லை.
கடைசியில், ஒரு மூத்த கவிஞரை கூப்பிட்டு எழுதச் செய்தனர். பாடல் வரிகளை கேட்ட எம்.ஜி.ஆர்., முகத்தில், பூரண சந்திரனாக புன்னகை பொங்கி வழிந்தது... "இது தான். இதே தான். நான் எதிர்பார்த்தது...' என்றார் எம்.ஜி.ஆர்., உடனே பாடல் ஒலிப்பதிவுக்கு, ஏற்பாடு செய்யுங்கள் என்றார் எம்.ஜி.ஆர்., உற்சாகம் பொங்க. அந்தப் பாடல் இது தான்...
கண்ணை நம்பாதே உன்னை ஏமாற்றும்
உன்னை ஏமாற்றும் நீ காணும் தோற்றம்
உண்மை இல்லாதது...
அறிவை நீ நம்பு! உள்ளம் தெளிவாகும் அடையாளம்
காட்டும் பொய்யே சொல்லாதது...
எம்.ஜி.ஆரின் எதிர்பார்ப்பை, பாடலில் கொண்டு வந்த அந்தப் பாடலாசிரியர் கவிஞர் மருதகாசி.
***
மாண்புமிகு மனிதநேய மணிமகுடம் மக்கள் திலகம் எம் ஜி ஆர்
அலைகள் அடங்குவதில்லை அடித்துக்கொண்டே இருக்கும் எம்ஜிஆர் புகழலை அடித்துக்கொண்டே இருக்கின்றது.
ஓராயிரம் ஆண்டுகள் போனாலும் எம் ஜி ஆர் புகழ் மங்காது..!
உள்ளமதில் ஈழவரைச் சுமந்தவரை அள்ளித்தந்த நல்லவரை விண்ணுலகம் அழைத்ததனால்
மண்ணுலகில் ஈழவர்கள் வேதனையில் விழுந்தனரே..!
ஓராயிரம் ஆண்டுகள் ஆகட்டுமே நம் பொறுமையின் பொருள் மட்டும் விளங்கட்டுமே நம் பரம்பரைகள் நாம் அடிமையில்லை என முழங்கட்டுமே..! என்று தீர்க்க தரிசனமாக சொன்னவர் கருணைவாரிதி புன்னகை மன்னன் பொன்மனசெம்மல் எம் ஜி ஆர்.
வள்ளுவன் இளங்கோ கம்பனைப்போல் விரியும் புகழுக்கு ஆளாகி, விரிந்து செல்லும் புகழுக்கு மனிதராகி, மக்களால் மறக்க முடியா அன்புக்கு சொந்தமாய் திகழ்பவர் அமரர் எம் ஜி ஆர்.
ஆறுகள் அடங்குவதில்லை ஓடிக்கொண்டே இருக்கும் அதுபோலவே எம் ஜி ஆரின் புகழாறும் ஓடிக்கொண்டே
இருக்கின்றது.
அலைகள் அடங்குவதில்லை அடித்துக்கொண்டே இருக்கும் அதுபோல் அவரின் புகழலை அடித்துக்கொண்டே இருக்கின்றது.
சத்திய தாயின் உத்தம மகனாய் பிறந்து தமிழர்கள் வீடுகளில் தெய்வமகனாகி விட்டார் அமரர் எம் ஜி ஆர் என்றால் மிகையில்லை.
சிறு வயதில் தான் பட்ட துன்பங்களை வசதிகள் வந்த பின்பு மறந்து விடாது தன்னைப்போல் சிறு பராயத்தில் கஷ்டங்களை சிறு பிள்ளைகள் படக்கூடாது என்றெண்ணி அவர்களுக்கு உணவு வழங்கி காத்து வந்தார்.
அவரின் மனித நேயமே அவரை எல்லோரும் மதிக்கும்படி செய்தது, அஞ்சா நெஞ்சமும் சோம்பல் இல்லா சுறுசுறுப்பும் அவரை மேலே மேலே உந்தித்தள்ளியது வெற்றிமேல் வெற்றிகள் மலர்களாய் விரிந்து அவருக்கு மணம் பரப்பியது.
தப்பு என்றால் அவர் எவராயினும் தட்டிக்கேட்க்க தயங்கியதில்லை மனதில் பக்குவம் நல்லவர்கள் கூட்டு செய்கையில் நேர்மை ஆற்றல் உள்ளவர்களை மதிக்கும் பண்பு கண்ணீர் சிந்தியோரை சிரிக்க செய்தார்.
சிரித்தவர்களை சிந்திக்க செய்தார் அரசு பார்க்கட்டும் அது நம்ம வேலையில்லை என்று ஒதுங்கி வாழவில்லை.
ஆபத்து காலங்களில் மக்கள் துயர் துடைக்க அலையாய் எழுந்து அல்லலுற்றோரை அணைத்தார் ஆறுதல் சொன்னார் அன்னமிட்டார், வாத்தியார் வந்துவிட்டார் என்று அறிந்தவுடன் பசியால் மெலிந்தவர்கள் முகங்களில் புன்னகை பூத்தது பொன்மனம் அவர்கள் பசியை ஆற்றியது.
“ஆற்றுவார் ஆற்றல் பசியாற்றல் அப்பசியை மாற்றுவார் ஆற்றலின் பின்னே” என்ற அய்யன் திருவள்ளுவன் குறளுக்கு தக்கபடி வாழ்ந்து காட்டினார்.
பசியை பொறுத்து தவமிருக்கும் வலிமை மிகுந்த முனிவர்களை காட்டிலும் பசித்தவர்கள் பசியை போக்குபவரே மிகவும் சிறந்தவர் என்பது அக்குறளின் பொருளாகும்.
பணத்துக்கும் பதவிக்கும் யாரையும் பின்பற்றியதில்லை அவரின் செயல்த்திறன் கண்டு பட்டங்களும் பதவிகளும் தேடி வந்தன.
நாடி வந்தோருக்கு நல்விருந்தளித்து நல்மனதுடன் கோடி நன்மைகள் செய்தார் கொண்டோர் கொண்டாடினர் கோலமகன் கொடையுள்ளம் கண்டு.
தனது நாடகக்குழுவில் நடித்த நலிவுற்ற கலைஞர்களுக்கு சுமார் 35 ஆண்டுகள் ஒவ்வொரு மாதமும் சம்பளம் அனுப்பிக்கொண்டிருந்தார்.
தன் கலைக்குழுவினர் நிலையுணர்ந்து, அதிசய மனிதராக அற்புத மனிதராக உலகத்துக்கு தன் செயலால் உணர்த்தினார் .
இன்னல்பட்ட ஈழமக்களுக்கும் உதவிகள் செய்தார் அவர்கள் விடிவுக்கு பல வழிகளிலும் கைகொடுத்தார்.
தமிழர்கள் எல்லோரும் இன்று அவர் புகழை அறிவார்கள் அவரை கேலி செய்தோர் கிண்டல் செய்தோர் எல்லோரும் இன்று அவரை சொந்தங்கொண்டாடுகின்றார்கள் என்றால் தர்மத்தின் வலிமை எத்தகையது என்பதனை அறியலாம்.
அவரைப்போல் கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளான நடிகன் முன்புமில்லை இன்றளவுமில்லை ஆனால் புகழில் அவருக்கு இணையாக எவரும் நெருங்க முடியவில்லை இன்றளவும் இனியும் வரப்போவது இல்லை.
தொழில்களை நேசித்தார் தொழிலாளிகளை போற்றினார் அவர்கள் பெருமைகளை நாட்டு மக்களுக்கு தனது நடிப்பாலும் பாட்டாலும் எடுத்துரைத்து விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
வானத்து நிலவாய் சிலர் இருப்பார் அந்த வரிசையில் முதல்வன் தொழிலாளி..
என்ற அவரின் பாட்டை கேட்டு உற்சாகம் கொண்ட தொழிலாளிகள் ஓடியோடி உழைத்தனர்..
உழைப்பால் பிழைப்போர் தாழ்ந்திருந்தாலும் உயர்ந்தவர் ஆவார் குணத்தாலே என்றொரு பாட்டினால் பொருளாதாரத்தால் நொந்த ஏழைத்தொழிலாளிகள் இதயத்துக்கு ஒத்தடம் கொடுத்தார்.
பாடுபட்ட கை இது பாட்டாளிக்கை என்று தொழிலாளி பெருமையினை எழுச்சியுடன் பறைசாற்றினார்.
தனது நடிப்பால் அவர் கைவீசி புன்னகைத்து எழுச்சி கூட்டி நடிக்கும் அழகு பொலிவு அவருக்கு மட்டுமே வரும் கலை.
என்றும் அவர் இரசிகர்கள் அவர் நினைவாகவே வாழ்கின்றார்கள் அவர் சொன்ன நல்ல பாதையில் அனைவரும் நடத்தலே உண்மையில் அவரின் ஆன்மாவுக்கு மேலும் மேலும் மகிழ்வைத்தரும்
எம் ஜி ஆர் நாமம் வாழ்க.
courtesy; PANBALAI.COM
தக்க சமயத்தில் t.m.s. அவர்களை நினைவு கூர்ந்து அவர் பங்கு பெற்ற "அடிமைப்பெண் " பட வெளியீட்டு விழா செய்தியினை பதிவிட்ட திரு. திருப்பூர் ரவிச்சந்திரன் அவர்களுக்கு நன்றி !
வழக்கமாக ஆங்கில மொழியில் தான் இப்படிப்பட்ட பிரம்மாண்டமான படங்களை எடுக்க முடியும். ஆனால் நமது தமிழ் மொழியில் அந்த பிரம்மாண்டத்தை வெளிப்படுத்தியவர் மக்கள் திலகம் தான் என்று y.g. மகேந்திரன் அன்று பேட்டி அளித்து நமது புரட்சித்தலைவருக்கு புகழாரம் சூட்டியது மறக்க முடியாத ஒன்று. அனபன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம் ஜி ஆர்.
எங்கள் இறைவன்
வினோத் சார்,
கண்ணை நம்பாதே பாடலின் வரலாற்றை பதிவு செய்ததற்கு நன்றி. மேலும் ஒரு தகவல். கவிஞர் மருதகாசி அவர்கள் இந்தப் பாடலில் முதலில் எழுதிய வரிகள்
பொன்பொருளைக் கண்டவுடன் வந்த வழி மறந்து விட்டு தன்வழியே போகிறவர் போகட்டுமே
மக்கள் திலகம் இவ்வரிகளைக் கேட்டவுடன் தன்வழி என்பது நல்ல வழியாக இருக்கலாமே. அந்த வார்த்தையை மாற்றினால் நன்றாக இருக்கும் எனக் கூறியவுடன் தன்வழியே போகிறவர் என்ற வார்த்தைகளை மாற்றி கண்மூடிப் போகிறவர் போகட்டுமே என கிராம வழக்கில் உள்ள வாக்கினை அமைத்து பாடலை திருத்தியமைத்தார் மருதகாசி அவர்கள். இது பற்றி அவரே குறிப்பிட்டுள்ளார். மக்கள் திலகத்தின் புலமைக்கும் திறமைக்கும் இது ஒரு சான்று.
பொன் பொருளை கண்டவுடன் வந்த வழி மறந்து விட்டு
கண் மூடி போகிறவர் போகட்டுமே
என் மனதை நான் அறிவேன்
என் உறவை நான் மறவேன்
எது ஆன போதிலும் ஆகட்டுமே
நன்றி மறவாத நல்ல மனம் போதும்
என்றும் அதுவே என் மூலதனம் ஆகும்
மக்கள் திலகத்தின் அரசியல் மற்றும் திரை உலக வாழ்க்கையில் மேற்கண்ட பாடல் வரிகள் எத்தனை பொருத்தமாக அமைந்துள்ளது என்பதை நினைத்தால் மக்கள் திலகத்தின் தீர்க்கதரிசனம் புரிகிறது .
மக்கள் திலகம் வாழ்ந்த காலத்தில் அவரால் பயன் அடைந்தவர்கள் சோதனை காலத்தில் அவரை விட்டு பிரிந்து சென்று பின்னர் வருத்தப்பட்டவர்கள் பலர் .
மக்கள் திலகத்தின் உண்மையான ரசிகர்கள் மட்டும் அன்றும் இன்றும் என்றும் அவர் புகழ் பாடிக் கொண்டே
இருந்தார்கள் - இருக்கிறார்கள் - இருப்பார்கள் .
மக்கள் திலகத்தை விரும்பாதவர்கள் கூட அவரை பற்றி சிந்திக்கவும் -பாராட்டவும் துவங்கி இருப்பது
மக்கள் திலகத்தின் புகழுக்கும் அவரது தூய்மையான ரசிகர்களுக்கு கிடைத்த .வெற்றியாகும்
VERY NICE DISCUSSION ABOUT MAKKAL THILAGAM CHARISMA.
http://youtu.be/R-UVuC2_sHE
மக்கள் திலகம் அவர்களின் ''நம்நாடு '' திரைப்படம்
தற்போது திருப்பரங்குன்றம் - லக்ஷ்மி அரங்கில் நடை பெறுகிறது .
Man of the masses-M.G.R
The very mention of the name M.G.R send shivers down the spine of the opponents, whereas it brought nostalgia’s memories of the ever green hero and belligerence and elation to million of his ardent admirers. M.G.R was the equal length of Marudhur Gopala Ramachandran was a native of Palghat district whereas he was born in Kandy in the central province of SriLanka on 17th January 1917 .His father Gopla Menon was serving as a magistrate of Kandy district where he expired. Thereafter M.G.R along with his elder brother M.G Chakrapani and with their doting mother Sathyabama came to India in the year 1924 and they found perch in Kumbakkonam
MGR and Chakrapani with their good looks participated in many dramas to augment the monetarily resources of the family. Chakrapani meanwhile started acting in films and M.G.R was quite avid in following Chakrapani’s footsteps. M.G.R’s endeavors bore foot when he was selected to play the role of an inspector of police, Vaingaiya Naidu, in Sathililavati, in 1937 which had M.K Radha as the hero. Thus M.G.R achieved his ambition of acting in films and began playing many major roles before making his debut as hero in Rajakumari in 1946. Later he began to play the chief role in Malaikallan, Manthrikumari and Thaikku Pin Tharam (the very 1st film of the grand producer M.A chinappa thevar.). All these films were smashing hits which propelled as the Numero Uno of the Tamil film land. Then there was no stopping MGR was equivalent to success.
M.G.R’s second major role in public life as a politician began to assume great importance in the 5th and 6th decades of the 20th century. M.G.R initially was a congress supporter, but he was inspired very much by C.N Annadurai’s vitriolic speech defending the Tamils and their importance in India. Like wise C.N Annadurai was also very much bowled over by the handsomeness and magnificence of M.G.R, which he thought would bring a lot of vote banks to the DMK and eventually will propel it to rule the state. Here we can recollect wants Annadurai once said of mgr when mgr offered 1lakh Rs to the DMK as his election contribution “thambi Ramachandra we need not get this monitory help from you but permit us to print your profile and circulate it all over Tamil Nadu so that it may bring lakhs of votes to the D.M.K”. Thus was established M.G.R’s charisma in not only the film world but also in the political field.
Such was the magnificent popularity enjoyed by M.G.R. This type of ecstasy was again in evidence in 1985 when M.G.R was taken to Brooklyn in the U.S.A where M.G.R was having his kidney transplantation, when one of the nephrologists, Dr Sridhar said “I must really thank my stellar constellation as I was a very avid fan of M.G.R during my school and college days and that I am providing him treatment. I will never forget this moment.”
Nandamuri Tharaka Ramarao, avidly known as M.T.R, when he assumed the post of chief minister of Andra Pradesh he said “M.G.R has been my inspiration and role model in films as well as politics when he played a prominent role in both these fields. I also made it certain that I will follow him suite. These were the ecstasies and appreciations raised by these doyens of various fields of human activities…..to be continued ….
courtesy'
T.S Sriraman
மக்கள் திலகம் எம்ஜியார் பற்றிய செய்திகள் -அவருடன் ஏற்பட்ட அனுபவங்கள் - அவரின் ஆளுமைகள் - என்று அவரின் புகழ் தினமும் இணையதளத்திலும் - பத்திரிகைகளிலும் வந்த வண்ணம் உள்ளது .
ஒரு தனி மனிதரின் புகழ் இந்த அளவிற்கு உலகளவில் உலா வருவது நம் மக்கள் திலகம் ஒருவருக்கே என்பது வரலாற்று உண்மையாகும் .
ஆராய்ச்சியாளர்கள் கட்டுரைகளும் இதைதான் நிருபிக்கிறது .
எம்ஜியார் என்ற ஒரு தனி மனிதர்
எம்ஜியார் ஒரு நடிகர்
எம்ஜியார் அரசியல் சாணக்கியர்
எம்ஜியார் மனிதநேய பண்பாளர்
எம்ஜியார் ஏழைகளின் தெய்வம்
எம்ஜியார் உலகமெங்கும் வாழும் ரசிகர்களின் தெய்வம்
என்று எப்படி பார்த்தாலும் அவரின் புகழ் எல்லா துறைகளிலுமே கொடிக்கட்டி பறக்கிறது .
என்னுடைய பார்வையில் மக்கள் திலகம் அவர்களை ஒரு தலை சிறந்த நடிகராக பார்க்க முடிகிறது .
மக்கள் திலகத்தின் நடிப்பு என்பது
மக்கள் மனதில் நீங்க இடம் பெற்றது
சாந்தமான நடிப்பு
வீரமான சண்டைகாட்சிகள்
எழிலான தோற்றம்
புதுமையான காட்சிகள் மூலம் மக்கள் மனதை கொள்ளை கொண்டது .
அருமையான பாடல்கள் - நடிப்பின் மூலம் வெற்றி கண்டது
எந்த ஒரு நடிகரின் சாயல் இல்லாமல் , யாருடனும் ஒப்பீடு இல்லாத நடிகராக , நடிக பேரசராக வலம் வந்தவர் .
மக்கள் திலகத்தின் எல்லா படங்களும் '' பாடங்கள் ''
எல்லா ஆராய்சிகளுக்கும் அப்பாற்பட்ட எளிமையான
இனிமையான நடிப்புலக மன்னன் எங்கள் எம்ஜியார்
நடிப்பு -சாதனைகள்
எல்லோருக்கும் புரியும் வகையில்
எளிய தமிழில்
விரைவில்.........
புதுச்சேரி நியூ டோனில் புதன் முதல் (05.06.2013) புரட்சித்தலைவர் இரு வேடங்களில் கலக்கிய நினைத்ததை முடிப்பவன் தினசரி 4 காட்சிகளாக வெற்றி நடை போடுகிறது.
http://i43.tinypic.com/5yg8c8.jpg
THANKS KALIYAPERUMAL SIR
PONDY MGR FANS IS LUCKY THIS WEEK
http://youtu.be/ao4lKDDA2O4
மக்கள் திலகம் எம்ஜியார் '' தலை சிறந்த நடிகர்''
1936- 1947 திரை உலக அறிமுக படங்களில் கௌரவ தோற்றங்கள் .
1947-1954 கதானாயகனாக பல படங்களில் பல அற்புதமான
கதாபாத்திரத்தில் நடித்து புரட்சி நடிகராக புகழ் பெற்றது
1954-1960 மலைக்கள்ளன் முதல் மன்னாதி மன்னன் வரை
மக்கள் மனதில் பதிந்த மக்கள் திலகம் .
1960- 1977 - தமிழ் திரை உலகில் இந்த 17 ஆண்டுகளில் முடி சூடா மன்னனாக சுமார் 80 படங்களுக்கு மேல் பல வெற்றி படங்களை தொடர்ந்து வழங்கி பல விருதுகள் - விழாக்கள - பெற்று இந்திய அரசாங்கத்தின் உயரிய விருது பெற்று சரித்திர சாதனைகள்
உலகுக்கு தந்த புரட்சி தலைவர் எம்ஜியார் .
115 படங்களில் மூலம் அவர் பெற்ற புகழ் -பட்டங்கள் - மக்கள் செல்வாக்கு - உலகில் வேறு எந்த ஒரு நடிகருக்கும் கிடைக்காத பெருமையாகும் .
அவர் நடிப்பை பற்றி பல் வேறு கருத்துக்கள் இருந்தாலும்
மக்கள் ஏற்று கொண்ட ஒரு மாபெரும் நடிக வேந்தர் எம்ஜியார் .
இனி மக்கள் திலகத்தின் நடிப்பை பற்றி பார்ப்போம் ........
சதிலீலாவதி -1936 - ஸ்ரீமுருகன் -1946
பத்து ஆண்டுகளில் 14 படங்களில் ஓரிரு வேடங்களில் மக்கள் திலகம் அவர்கள்
தனது நாடக அனுபவம் கொண்டு நடித்த படங்கள் அவரை ஒரு சாதாரண
நடிகராகவே பார்க்க முடிந்தது .
தன்னை முழு கதாநாயகனாக '' ராஜகுமாரி -1947'' மூலம் அடையாளம் காட்டி
தமிழ் திரை உலகில் கொடிக்கட்டி பரந்த
பியு சின்னப்பா - தியாகராஜா பாகவதர் - ரஞ்சன் - எம் கே ராதா -மகாலிங்கம்
t .ராமச்சந்தர் போன்ற நடிகர்களின் மத்தியில் அடையாளம் காட்டப்பட்டார் .
மக்கள் திலகத்தின் 10 ஆண்டுகள் தொடர்ந்து சந்தித்த போராட்டங்கள்
மற்றும் போட்டி நிறைந்த திரை உலகில் கண்ட அனுபவம் மூலம் தன்னை ஒரு
பக்குவப்பட்ட நடிகராக - கொள்கை பிடிப்பு நடிகராக மாற்றி வெற்றி பெற
துவங்கிய நேரம்......
1950 -1953 வரை
மருத நாட்டு இளவரசி
மர்மயோகி
மந்திரிகுமாரி
சர்வதிகாரி
அந்தமான் கைதி
குமாரி
என் தங்கை
நாம்
பணக்காரி
ஜெனோவா
படங்களின் மூலம் தன்னுடைய நடிப்பாற்றலை பல பரிமாணங்களில்
சிறப்பாக நடித்து ரசிகர்களின் ஆதரவை பெற்று தமிழ் திரை உலகில் முன்னனி
நடிகராக வலம் வந்தார் .
புதுச்சேரி நகரில் நினைத்ததை முடிப்பவரின் போஸ்டர் அணிவகுப்பு..என்ன அழகான ஓவியம்...இதை படம் பிடிக்கும்போது ஒருவர் கூறிய வார்த்தை..என்ன அழகுடா...இவரால்தாண்டா இந்த போஸ்டரே அழகா இருக்கு...இனிமேலும் ஒருவர் பிறக்கமாட்டார்டா இவரைப்போல்..
http://i41.tinypic.com/11l3oma.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்