Mughal-E-Azam ஒரு அற்புதமான படம் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. அவ்வளவு அருமையான படம் அது. பிரம்மாண்டத்தின் மறு வடிவம். கிட்டத்தட்ட இரண்டரை ஆண்டுகள் பல லட்சங்கள் செலவு செய்து பல வெளிநாட்டு தொழில் நுட்ப வல்லுனர்களை வைத்து புதுப்பிக்கப் பட்டது அந்தப் படம். ஒவ்வொரு காட்சிகளும் இழைத்து இழைத்து செதுக்கப் பட்டும் திரு பார்த்தசாரதி அவர்கள் சொன்னது போல் படத்தின் உயிர்நாடியான இசை மற்றும் பின்னணி இசை பாழடிக்கப் பட்டிருந்தது. படமும் ரீ -ரிலீசில் அவுட். மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கிடையே புஸ்வாணமாகி போனது அப்படம்.
ஆனால் கர்ணன் அப்படியல்ல. Mughal-E-Azam அளவிற்கு பிரம்மாண்டத் தயாரிப்பல்ல. ஆனால் பிரம்மாண்ட வெற்றி. காரணம் ஊருக்கே தெரியும். உலகத்திற்கே தெரியும். நடிகர் திலகம்...நடிகர் திலகம்...நடிகர் திலகம். அங்கே புகழ்க் கொடி நாட்டிய திலீப் குமார், பிருதிவிராஜ்கபூர், மதுபாலா ஆகியோர் இருந்தும் படம் எதிர்பார்த்த வெற்றி இல்லை. ஏனெனில் நடிகர் திலகத்தின் உயிர்த்துடிப்பான நடிப்பு அங்கு இல்லை. இறுகிய ஒரே முக பாவனைத் தோற்றத்துடன் திலீப் குமார். நல்ல நடிகர் தான். ஆனால் கம்பீரத் தோற்றமும், கர்ஜனை நடிப்பும் மிஸ்ஸிங்.
அது பிரம்மாண்டத் தயாரிப்பானாலும் சரி, பிரம்மாண்டம் இல்லாவிட்டாலும் சரி. எப்படிப்பட்ட பிரம்மாண்டங்களையும் தன் உயரிய நடிப்பால் விழுங்கி ஏப்பம் விட்டு விடுபவர் நடிகர் திலகம் மட்டுமே.
Mughal - E - Azam படத்தில் மிக பிரம்மாண்டமாய் எடுக்கப்பட்ட, திரு.நவ்ஷாத் அவர்களின் மயக்கும் இசையில் உருவான 'Pyar Kiya To Darna Kya' என்ற லதா அவர்களின் இனிய குரலில் ஒலிக்கும் காலத்தை வென்ற அற்புதமான பாடல். பாடல் காட்சியின் பின்னணியில் தெரியும் பிரம்மாண்டத்தைப் பாருங்கள்!
http://www.youtube.com/watch?v=TdOS-0sIW-Y&feature=player_detailpage
அன்புடன்,
வாசுதேவன்.