-
5th April 2012, 10:00 AM
#11
Senior Member
Diamond Hubber
அதே போல இன்னொரு ஆதங்கம்.
கர்ணனின் ஆர்ப்பரிக்கும் வெற்றி தமிழ்த் திரையுலகையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. ஆனால் சிறு நடிகர்கள் முதல் பெரும் நடிகர்கள் வரை எதுவும் கருத்துச் சொல்லாமல் 'கப் சிப்'. இது ஏன்?... எல்லோரும் சந்தோஷப் பட வேண்டிய விஷயம் தானே! "நான் சிறு வயது முதற்கொண்டே சிவாஜி ரசிகன்... அவர் படங்களை முதல் ஷோவே பார்த்துவிடுவேன்" என்று பெரும்பான்மையான நடிகர்கள் பேட்டிகளில் கூறியுள்ளார்கள். அப்படியிருக்கையில் கர்ணனின் வெற்றியைப் பற்றி நடிக நடிகைகள் யாரும் 'மூச்' விடவில்லையே? படம் பிய்த்துக் கொண்டு போகிறதே என்ற கர்வத்திலோ, அகம்பாவத்திலோ இதைக் குறிப்பிடுவதாக தயவு செய்து யாரும் நினைத்து விட வேண்டாம். உலகிலுள்ள நடிகர்களுக்கெல்லாம் வழிகாட்டியாகத் திகழ்ந்த அந்த மாபெரும் கலைஞரின் இறப்புக்குப் பின்னரும் தொடரும் இறவாப் புகழ் வெற்றியை ஒரு மூத்த கலைஞன் என்ற முறையில் இன்றுள்ள இளம் நடிகர்கள் அவரை சிறப்பித்துப் போற்ற வேண்டாமா? எல்லோரும் வாய்மூடி மௌனியாக இருப்பதேன்?
நடிக நடிகையருக்கு ஒரு அன்பு வேண்டுகோள். நடிகர் சங்கத்தின் வாயிலாக நீங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து ஒருநாள் ஞாயிற்றுக் கிழமை கர்ணன் படம் பாருங்கள். எங்கெங்கோ உலகமெல்லாம் சுற்றுகிறீர்கள். எத்தனையோ மேடை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறீர்கள். குத்தாட்டம், குதியாட்டமெல்லாம் போடுகிறீர்கள். ஆனால் உங்கள் தொழிலில் உங்களை மேம்படுத்திக் கொள்ள அந்த நடிப்புலக பிரம்மாவின் இந்த காவியத்தைக் கண்டு நடிப்பென்றால் என்ன என்பதை முதலில் பாடம் கற்றுக் கொள்ளுங்கள். நடிகர்திலகத்தை மட்டுமல்ல. ஏனைய அனைத்து நடிகர்களும் இந்தக் காவியத்தில் எத்துணை சிறப்பாக ஏற்ற பாத்திரத்தை திறம்பட செய்திருக்கிறார்கள் என்பதனையும் கூர்ந்து கவனியுங்கள். நடிப்பு தானாய் உங்களை வந்து ஆட்கொள்ளும்.
அன்புடன்,
வாசுதேவன்.
Last edited by vasudevan31355; 5th April 2012 at 03:24 PM.
-
5th April 2012 10:00 AM
# ADS
Circuit advertisement
Bookmarks