இரும்பு திரை-1960 -பகுதி-3
இரும்பு திரையில் வைஜயந்தி மாலா ,தன் பங்கை செம்மையாய் செய்து ,நடிகர்திலகத்துக்கு ஈடு கொடுத்திருப்பார். சரோஜா தேவி, பொறாமை நிறைந்த பணக்கார பெண் பாத்திரத்தை ,உணர்ந்து நடித்திருப்பார். ரங்கா ராவ், சுப்பையா,வசுந்தரா(வைஜயந்தியின் உண்மை தாயும் கூட.),முதலியோர் நல்ல பங்களிப்பை,இந்த படத்திற்கு அளித்திருப்பார்கள்.
கதையை, ஜெமினி கதை இலாகா(மகாதேவன், வேப்பத்தூர் கிட்டு, கொத்தமங்கலம் சுப்பு,வாசன் அடங்கியது),வசனம் கொத்தமங்கலம் சுப்பு(தில்லானா மோகனாம்பாள் மூல கதாசிரியர்).இயக்கம் ஜெமினி அதிபர் இந்தியாவின் "செசில் பி டிமிலி" வாசன் அவர்கள். வசனங்களில் படு இயல்பான கூர்மை இருக்கும். பாத்திரங்கள் இயல்பு மீறாத நடிப்புக்கு வசனங்கள் துணை நிற்கும். முக்கியமாய், இந்திய பொறியாளர்களின் திறமை பற்றி சிவாஜி பேசும் வசனம். சிவாஜி-வைஜயந்தி காதல் காட்சி வசனங்கள். ரங்கா ராவ் உடன் எதிர்-நிலை வசனங்கள்.(வழிகாட்டி திருத்தும் உணர்வுடன் இருக்கும்.முதலாளியை irritate செய்வது போல் வரம்பு மீறாது. positive energy நிறைந்த வசனங்கள்.) வீட்டு பிரச்சினை,போராட்டங்கள் எல்லாமே படு பாந்தமாய் வசனங்களில் ஜொலிக்கும்.
இந்த படத்தில், சீரான விறுவிறுப்பு ,திரைகதையில் இருக்காது. ஆனால் ,ஒரு முக்கிய உலக பிரச்சினை கருவாகும் போது ,தவிக்க முடியாத குறை.தங்கவேலு விற்கு நான்கு பாடல்கள். அவர் நகைச்சுவையும்,கல்யாண பரிசு,அறிவாளி தரத்தில் இருக்காது. ஆனால் கதையை ஒட்டிய நகைச்சுவையாய்(தொழிலார்களின் கடன் சுழல்) ,உயர்தரமாய், எதிர்மறை நிலையை விளக்கும்(misuse of compensation law )
பாடல்கள் பட்டத்துகோர் கும்பிடு, என்ன செய்தாலும் எந்தன் துணை நீயே, ஆசை கொண்ட நெஞ்சிரண்டு, நெஞ்சில் குடியிருக்கும் ,கையில வாங்கினேன் ஆகியவை நல்ல முறை கர்நாடக இசையை பின் பற்றியவை.(எஸ்.வீ.வெங்கட்ராமன்)மற்ற பாடல்கள் படு சுமார். எட்டு பாடல்கள் ,ஐந்தாக குறைக்க பட்டிருக்கலாம்.
பொதுவாக ,மிக சரியாக, சார்பின்றி, தொழிலாளர் பிரச்சினை பேசிய இந்த படம் , சுமாரான வெற்றி படம்.(ஆலைகள் நிறைந்த கோவை நகரில் வெள்ளி விழா).ஆனால் ஹிந்தியில் பிரம்மாண்ட வெற்றி.இந்த படத்தில் சிவாஜியின் ஈடுபாட்டையும்,நடிப்பு திறனையும் கண்ணுற்ற திலிப் குமார் ,சிவாஜி ரசிகர் ஆகி, நண்பராகவும் ஆனார்.(இவருக்காக அவர் ஆலய மணியும், அவருக்காக இவர் கங்கா ஜமுனாவும் பண்ணினார் என்று கேள்வி)
ஆனால், வாசன்-சிவாஜி உறவு சீராகவில்லை. ஒரு சின்ன பாத்திரத்துக்காக நேர்முக தேர்வுக்கு வந்த சிவாஜியை நிராகரித்து(சந்திரலேகா), மிக மோசமாக விமரிசித்த பார்ப்பன திமிரை ,சிவாஜி மன்னிக்கவே இல்லை என்று கேள்வி. ஜெமினி, திரைகதை தயாரித்து, தயாராக இருந்தவீரபாண்டிய கட்டபொம்மனுக்கு ஒப்பு கொள்ளாமல், பந்துலுவை எடுக்க வைத்தார். இரும்பு திரையிலும் நிறைய உரசல்கள்.(ஆனந்த விகடன் சக்தியறிந்து குழந்தை மனம் கொண்ட சிவாஜி விட்டு கொடுத்திருக்கலாம்). ஜெமினி கான்டீன் எழுதிய மணி,இதை குறிப்பிட்டு,உன் முதலாளிக்கு அல்வா கொடுத்து விட்டேன் என்று சிவாஜி குறிப்பிட்டதாக எழுதியுள்ளார்.(அவரும் சிவாஜி விசிறி). ஆனால் ,வாசன் சிவாஜியின் திறமையறிந்து , அவரின் மிக பிரம்மாண்ட மக்கள் செல்வாக்கு அறிந்து, இதற்கு பின்னும்,மோட்டார் சுந்தரம் பிள்ளை(1966),விளையாட்டு பிள்ளை (1970) என்ற படங்கள் எடுத்ததுடன், சிவாஜி உலகிலேயே சிறந்த நடிகர் என்று பாராட்டி(தில்லானா மோகனாம்பாள்,வியட்நாம் வீடு பார்த்து) ,125 வது விழாவிலும் கலந்து கொண்டார்.
மிக மிக ,உண்மையான பிரச்சினையை எடுத்து, எடுத்து கொண்ட கருவில் விலகாமல், சரியான தீர்வை, சரியான பொழுது போக்கு விகிதத்துடன் தந்த மறக்க முடியாத Nadigar thilagam உன்னத காவியங்களுள் ஒன்று.
(முற்றும்)