Originally Posted by
kaliaperumal vinayagam
நண்பர் கண்பத் அவர்களுக்கு நன்றி . உண்மையை நன்றாக சொன்னீர்கள் .
நான் புதுவை கலியபெருமாள் . மக்கள் திலகம் ரசிகன் . என் அபிமான மக்கள் திலகத்தின் படங்களை பல்வேறு நிலையில் எடுத்து பதிவிட்டேன் ..தற்போதைய நவீன தொழில் நுட்பத்தில் மக்கள் திலகத்தின் முக பரிணாமங்களை பார்க்க எண்ணினேன்..அதை என் போன்ற ரசிகர்களுக்கு காட்டவே பதிவு செய்தேன்..இதில் தவறு ஒன்றும் இல்லை. மேலும் திரியின் பக்கங்களை நிரப்ப வேண்டும் என்ற நிலை மக்கள் திலகத்தின் ரசிகர்களுக்கு ஏற்படாது என்று தங்களுக்கே தெரியும்.. தினந்தோறும் நடைபெறும் மக்கள் திலகத்தின் நிகழ்வுகளை நாங்கள் பதிவு செய்தால் ஒரே மாதத்தில் 10 பகுதிகளை தாண்டி விடுவோம்..என்னுடைய பதிவை மறைமுகமாக கிண்டல் செய்து இந்த திரியில் பற்ற வைத்த திரு ஆதி ராம் பற்றி தெரிய வேண்டிய சில கேள்விகள் .
1. ஆதிராம் என்பவர் யார் ?
2. சாரதா - கார்த்திக் - கல்நாயக் - vankv - என்ற பல பெயரில் எல்லா திரிகளிலும் வந்து , நல்ல திறமைகள் இருந்தும் சாரதா என்ற id-இழந்து , கார்த்திக் என்ற பெயரில் அத்தி பூத்தார் போல் வந்து , vankv-என்ற பெயரில் நடிகர் திலகம் திரியில் பல நல்ல பதிவாளர்களை பெண்ணாக நடித்து ஏமாற்றி , கல்நாயக் என்ற பெயரில் கிண்டலும் கேலியும் செய்தவரும் - தமிழே தெரியாதது போல நடிக்கும் ஆதிராம் என்ற பெயரிலும் எல்லோரையும் பற்றவைத்து ரசித்தவர்தானே இந்த அவதார ஆதிராம் .
நானாவது மக்கள் திலகத்தின் ஒரு படத்தை பல படங்களாக மாற்றி திரியின் பக்கத்தை நிரப்பினேன் .
ஆதிராமோ ஒரே மனிதர் - பல பெயரில் பல திரியில் பல பக்கத்தை நிரப்பியும் , சிலரை பிரித்தும் தான் யார் என்பதை இந்த உலகத்துக்கு காட்டாமல் ஏமாற்றி வருவது எல்லோரும் அறிந்ததே.
வீணாக மக்கள் திலகத்தின் ரசிகரை சீண்ட வேண்டாம் பன்முக ஆதிராமே .
இந்த சூழலில் எந்த காலத்திற்கும் பொருந்தும் என் தலைவனின் பாடல் வரிகள்தான் நினைவுக்கு வருகிறது 'நேருக்கு நேராய் வரட்டும்..நெஞ்சில் துணிவிருந்தால்..என் கேள்விக்கு பதிலைத் தரட்டும் நேர்மை திறமிருந்தால்'