http://i812.photobucket.com/albums/z...s55ca05fa.jpeg
Printable View
டியர் கார்த்திக் சார்,
தங்கச்சுரங்கத்தின் நான் பிறந்த நாட்டுக்கு எந்த நாடு பெரியது பாடலைப் பற்றி அற்புதமாக கவர் செய்து மகிழ்வித்துள்ளீர்கள். பாடல் முழுதுமாக வரும் நடிகர் திலகத்தின் உற்சாகத் துள்ளல்களை அழகாக ரசிக்கும் வகையில் படைத்து விட்டீர்கள்.
தங்களுக்கு ஒஅர் உற்சாகமான செய்தி. வேலன் பிக்சர்ஸ் வெளியிடும் 'தங்கச் சுரங்கம்' 2014 ஜனவரி மாதம் 3 ம் தேதி அனேகமாக சென்னை மகாலஷ்மியில் வெளியாகலாம் என்று தகவல் கிடைத்துள்ளது. பிரிண்டின் தரம் மிக நன்றாக உள்ளதாம். நமது சுப்பு சார் இந்த தகவலை அளித்துள்ளார்.
மேலும் 'நான் வாழ வைப்பேன்' படத்திற்கு நான் என்னால் முடிந்த அளவிற்கு ஒரு ட்ரைலர் உருவாக்கிக் கொடுத்தேன். சமீபத்தில் 'நான் வாழ வைப்பேன்' மகாலஷ்மி திரையரங்கில் ஓடிகொண்டிருந்தபோது அந்த ட்ரைலரை சென்னை லோக்கல் தனியார் தொலைகாட்சி ஒன்றில் ஒளிபரப்பி அதற்கு நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்ததாம். சுப்பு சார்தான் இந்தத் தகவலையும் அளித்தார். இதற்குக் காரணமாய் இருந்த சுப்பு சாருக்கும், வேலன் பிக்சர்ஸ் உரிமையாளருக்கும், ட்ரைலரை ஒளிபரப்பிய அந்த தனியார் தொலைக்காட்சிக்கும் நமது திரியின் சார்பில் எனது மனமார்ந்த நன்றி!
கார்த்திக் சார்,
நீங்கள் விரைவில் சென்னை வருவதாகக் குறிப்பிட்டிருந்தீர்கள். தங்கச்சுரங்கம் பட வெளியீடு சமயத்தில் தாங்கள் வர முடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்! ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். தங்கச்சுரங்கத்தையும், உங்களையும் சேர்த்துதான்.
நன்றி!
நெய்வேலி டவுன்ஷிப்பில் கர்ணன் சிவாஜி நற்பணி இயக்கம் சார்பாக நடிகர் திலகத்தின் பிறந்தநாளுக்கு ஒட்டப்பட்ட போஸ்டர்.
http://i812.photobucket.com/albums/z...ps60901457.jpg
கர்நாடகாவில் முப்பெரும் விழா.
கர்நாடக சிவாஜி - பிரபு அறக்கட்டளை சார்பாக நாளை (6-10-2013) நடைபெறவிருக்கும் முப்பெரும் விழாவையொட்டி கர்நாடகா மாநிலத்தின் 'தினச்சுடர்' நாளிதழில் வந்துள்ள அட்டகாச விளம்பரம். விழா இனிதே நடைபெற கர்நாடக சிவாஜி - பிரபு ரசிகர்களுக்கு வாழ்த்துக்கள்.
http://i812.photobucket.com/albums/z...psd4794a92.jpg
Thank you Mr. Ragahvendra sir, for your Nellai kannan speech posting
'தினச்சுடர்' (6-10-2013)
http://i812.photobucket.com/albums/z...psc2290db6.jpg
பதிவுகளைப் பாராட்டிய முரளி சார், வாசுதேவன் சார், சின்னக்கண்ணன் சார் ஆகியோருக்கு நன்றி.
பதிவைப் பாராட்டியதோடு சுடச்சுட வீடியோவையும் பதித்த ராகவேந்தர் சார் அவர்களுக்கு நன்றி.
டியர் வாசுதேவன் சார்,
தங்களது அயராத பணிகளுக்கிடையே நான் வாழ வைப்பேன் படத்துக்கு ட்ரைலர் ஒன்றையும் தயாரித்து, அது தொலைக்காட்சி சேனலில் ஒளிபரப்பான செய்தி வியக்கவைத்தது. தங்கச்சுரங்கம் விரைவில் மகாலட்சுமியில் வெளியாக இருப்பது மிக்க மகிழ்ச்சி. அதைத்தொடர்ந்து மௌன்ட்ரோடு அண்ணா தியேட்டரிலும் திரையிட்டால் வெளியீட்டாளர்கள் நல்ல அறுவடை பார்க்கலாம்....
Vasudevan sir's trailer of Naan Vaazha Vaippen has been put in Behindwoods.com
http://www.behindwoods.com/tamil-mov...n-trailer.html
[QUOTE=Saraswathi Lakshmi;1080022]Vasudevan sir's trailer of Naan Vaazha Vaippen has been put in Behindwoods.com
Dear Vasudevan sir / SL Madam
Trailer is Very good. Really all class movie. Thalaivar looks majestic and colorful. Thanks
C.Ramachandran.
Dear Karnataka State Sivaji Prabhu Trust / Thangapathakkam Fans Group
Our Heartiest Wishes for your GRAND GALA MUPPERUM VIZHA ON 06-OCT-13 GRAND SUCCESS
THIS IS REAL CINEMA 100 YEARS FUNCTION
ALWAYS BANGALORE FANS ARE GREAT AND SMART. KEEP IT UP
C.Ramachandran
வாசு சார்
நெய்வேலி டவுன்ஷிப் போஸ்டர் அட்டகாசம். அதனை இங்கு நம்மோடு பகிரந்து கொண்ட தங்களுக்கு என் உளமார்ந்த நன்றி. தொடரட்டும் தங்கள் சேவை.
அதே போல் கர்நாடகா விழா பற்றிய போஸ்டரும் செய்தித் தாள் பக்கமும் நிழற்படங்களாக தங்கள் உபயத்தில் இங்கே இத்திரியில் இடம் பெற்றதற்கும் என் உளமார்ந்த நன்றிகள்.
கர்நாடகா சிவாஜி பிரபு அறக்கட்டளை 8ம் ஆண்டு விழா, தங்கப் பதக்கம் மன்றத்தின் 38வது ஆண்டு விழா இவற்றையும் நடிகர் திலகத்தின் 85வது பிறந்த நாளுடன் சேர்ந்து கொண்டாடும் கர்நாடக சிவாஜி ரசிகர்களுக்கு என் உளமார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.
பழைய விழாக்களைக் கொண்டாடும் போது சிறிது பழைய நினைவுகளும் நெஞ்சில் நிழலாடும். அதை நாமும் அனுபவிப்போமே.
சென்னை சாந்தி திரையரங்கில் வா கண்ணா வா திரைப்படம் ஓடும் போது தலைவரின் கட் அவுட்டைப் பாருங்கள். இந்த மாதிரி வயதான வேடத்தில் கட் அவுட் இடம் பெற்ற ஒரே நடிகர் நடிகர் திலகம் மட்டும் தான் இருக்க முடியும். இமேஜ் என்கிற வட்டத்தை உடைத்தெறிந்து கம்பீரமாக நடிகர் திலகம் நிற்பதைப் பாருங்கள்.
இக்காட்சி நெஞ்சங்கள் திரைப்படத்தில் இடம் பெற்றுள்ளது.
http://i1146.photobucket.com/albums/...ps71ef71f5.jpg
http://i1146.photobucket.com/albums/...psf7a287c2.jpg
மேலே உள்ள புகைப்படத்தில் நடிகர் திலகம் நிற்கும் இடத்தைப் பாருங்கள். அவருக்குப் பின்னே சுவற்றில் பல்வேறு விதமான போஸ்டர்கள் ஒட்டப் பட்டிருப்பதைக் காணலாம். இக்காட்சியின் படப் பிடிப்பு முடிந்த சில நாட்களுக்குள்ளேயே நாங்கள் நடிகர் திலகத்தின் படப் பட்டியலை இந்த இடத்தில் எழுதுவற்கான ஏற்பாடுகளைத் துவங்கி விட்டோம். சந்திப்பு படம் வெளியான அன்று அது திறக்கப் பட்டது. பின்னர் நடிகர் திலகத்தின் மறைவிற்குப் பின்னர் மற்றோர் சகோதர மன்றத்தின் உபயத்தால் கல்வெட்டாகப் பொறிக்கப் பட்டது மனதிற்கு மிகவும் சந்தோஷமான விஷயம்.
http://i1146.photobucket.com/albums/...psefa1fad6.jpg
http://i1146.photobucket.com/albums/...ps82a87322.jpg
வா கண்ணா வா வில் நான் இன்றும் நினைத்து சிரிக்கும் நகைச்சுவை:
ந.தி: என்னடா சோகமா இருக்க
நாகேஷ்: என்னோட பூனை செத்துப் போச்சுங்க
நடிகர்திலகம்: அச்சச்சோ ஆசையா வளர்த்தயேடா என்னாச்சு
நாகேஷ்: அது தண்ணில விழுந்துடுத்துங்க்
ந.தி: அப்புறம்
நாகேஷ்: நனைஞ்சுடுச்சேன்னு கொஞ்சம் பிழிஞ்சுட்டேன்!. ந.தி அடப்போடா என என்னவோ சொல்லி நகர்ந்து விடுவார்..
Dear Raghavendra Sir,
Thanks for uploading the video of 85th Birthday Celebrations. Can you upload the full video and it will be pleasant to watch Nellai Kannan's full speech.
I trust you can upload.
Anand
Dear Murali Sir,Excellent details with lot of inputs about the re-release problems faced by the movies,which were unforeseen.Anyway let us hope further movies ,overcome these problems and give successful results for the investors,though the movies need not prove anything,since already they have established their class..
[QUOTE=RAGHAVENDRA;1080061]பழைய விழாக்களைக் கொண்டாடும் போது சிறிது பழைய நினைவுகளும் நெஞ்சில் நிழலாடும். அதை நாமும் அனுபவிப்போமே.
சென்னை சாந்தி திரையரங்கில் வா கண்ணா வா திரைப்படம் ஓடும் போது தலைவரின் கட் அவுட்டைப் பாருங்கள். இந்த மாதிரி வயதான வேடத்தில் கட் அவுட் இடம் பெற்ற ஒரே நடிகர் நடிகர் திலகம் மட்டும் தான் இருக்க முடியும். இமேஜ் என்கிற வட்டத்தை உடைத்தெறிந்து கம்பீரமாக நடிகர் திலகம் நிற்பதைப் பாருங்கள்.
இக்காட்சி நெஞ்சங்கள் திரைப்படத்தில் இடம் பெற்றுள்ளது.
மேலே உள்ள புகைப்படத்தில் நடிகர் திலகம் நிற்கும் இடத்தைப் பாருங்கள். அவருக்குப் பின்னே சுவற்றில் பல்வேறு விதமான போஸ்டர்கள் ஒட்டப் பட்டிருப்பதைக் காணலாம். இக்காட்சியின் படப் பிடிப்பு முடிந்த சில நாட்களுக்குள்ளேயே நாங்கள் நடிகர் திலகத்தின் படப் பட்டியலை இந்த இடத்தில் எழுதுவற்கான ஏற்பாடுகளைத் துவங்கி விட்டோம். சந்திப்பு படம் வெளியான அன்று அது திறக்கப் பட்டது. பின்னர் நடிகர் திலகத்தின் மறைவிற்குப் பின்னர் மற்றோர் சகோதர மன்றத்தின் உபயத்தால் கல்வெட்டாகப் பொறிக்கப் பட்டது மனதிற்கு மிகவும் சந்தோஷமான விஷயம்.
Dear Ragavendran Sir
Thanks for Thalaivar's Vaa Kanna Vaa Cutout photo. Nice memories. If possible please arrange to display SANTHIPPU AND RAJAKUMARAN release cutout also
Thanks a lot
C.Ramachandran
நடிகர்திலகத்தின் படங்களில் ஐட்டம் நடிகையர் (4)
'லிட்டில் ப்ளவர்' ராஜஸ்ரீ
ஒரு கதாநாயகி நடிகையை ஐட்டம் லிஸ்ட்டில் சேர்க்கலாமா என்று சிலரது புருவங்கள் உயரக்கூடும். கதாநாயகியரில்கூட ஐட்டம் டைப் கதாநாயகியாக வந்து போனவர்தான் இவர். இவர் திரைக்கு வந்தபோது ஒரேயடியாக சாந்தம் காட்டிய சாவித்திரி, ஒரேயடியாக கொஞ்சிவழிந்த சரோஜாதேவி, ஓவராக வீரம்பேசிய விஜயகுமாரி, தேவைக்குமேல் அழுது தீர்த்த சௌகார்ஜானகி இவர்களுக்கு மத்தியில் ரசிகர்களுக்கு கிளுகிளுப்பு ஊட்டி கவர்ச்சி விருந்தளித்தவர் ராஜஸ்ரீ. (கவர்ச்சி என்றதும் உடனே அனுஷ்காவோடெல்லாம் கம்பேர் பண்ணிடக்கூடாது. சேலையை இழுத்துப் போர்த்திக்கொண்டு நடித்த காலத்தில் இறுக்கமான சுடிதார், டைட்பேன்ட்,
ஷர்ட்டெல்லாம் கூட கவர்ச்சிதான்). காதலிக்க நேரமில்லையில் (அன்றைய) கவர்ச்சி உடையில் இவர் பண்ணிய அலம்பலில் தூக்கத்தைத் தொலைத்த அன்றைய இளைஞர்கள் பலர். கொஞ்சம் பொக்கைவாயாக இருந்தாலும் 'மற்ற சில' விஷயங்களுக்காக இவரை விரும்பினர். இனி நடிகர்திலகத்தின் படங்களில் என்ன செய்தார் என்று பார்ப்போம்....
'நீலவானம்'
நடிகர்திலகத்தின் காதலியாக ராஜஸ்ரீ நடித்த ஒரே படம் (என்று நினைக்கிறேன்). அண்ணியைக் கரம் பற்றுவதற்கு முன்பாக இவரைத்தான் அண்ணன் லவ்வுவார். அதிர்ஷ்ட வசமாக இருவருக்கும் உடல்வாகு கெமிஸ்ட்ரி நன்றாகவே இருந்தது. நீச்சல் குளத்தில் 'ஓ லக்ஷ்மீ... ஓ ஷீலா' பாடல் ரொம்ப ரசிக்கக்கூடியதாக இருந்தது என்றால், நடிகர்திலகம் மட்டும் பாட இருவரும் ஆடும் 'ஹோய் லிட்டில் ப்ளவர்' பாடலும் பிரேக் நடனமும் படு அட்டகாசமாக அமைந்து விட்டது. டைட்டான பேண்ட், ஷர்ட்டை மாட்டிக்கொண்டு, அடிக்கடி திரும்பித் திரும்பி ஆடி ரசிகர்களை படாதபாடு படுத்தினார். சந்தர்ப்ப வசத்தால் இவரைக்கைவிட்டு அண்ணியை மணக்க நேர்ந்ததும், காதலனுக்கு வில்லியாக மாறினார். நடிகர்த்திலகத்தைக் காதலிக்கும்போது, சாந்தி தியேட்டருக்கு திரைப்படம் பார்க்க வருவதும், அங்கே நடிகர்திலகம் வாசலில் டிக்கட் கிழிப்பவராக(????) வேலை செய்வதை கண்டுபிடிப்பதும் சுவாரஸ்யமான காட்சிகள். இந்த காட்சியிலும் ராஜஸ்ரீயின் உடைகள் சூப்பராக இருக்கும். கொடைக்கானல் காட்சிகளிலும் நடிகர்திலகம்-ராஜஸ்ரீ கெமிஸ்ட்ரி படு ஓ.கே.
சொர்க்கம்
சொர்க்கம் படத்தில் கதாநாயகியை பார்த்து ஏமாந்தவர்களின் வாட்டம் போக்க சில அடிஷனல் அட்ராக்ஷன்களை இணைத்து அட்ஜஸ்ட் செய்திருந்தார் இயக்குனர் ராமண்ணா. அதில் ஏற்கெனவே விஜயலலிதாவை பார்த்தோம். 'அழகுமுகம் பழகுசுகம்' பாடலில் வரும் ஐந்து கவர்ச்சி பாம்களைப் பற்றி கோபால் அவர்களும் வாசுதேவன் அவர்களும் விளக்கியிருந்தார்கள். அப்படத்தில் இன்னொரு அட்ராக்ஷன் 'அஞ்சனா' என்ற பாத்திரத்தில் வரும் ராஜஸ்ரீ. நடிகர்திலகத்தின் ஜோடி அல்ல. தொழிலதிபர் தர்மலிங்கமாக வரும் (நல்ல) மனோகரின் மகள். இவருக்கும் நடிகர்திலகத்துக்கும் காம்பினேஷன் காட்சி என்று பார்த்தால், நல்ல மனோகரைக் கடத்திவிட்டு, அவரைப்போல நடிக்கும் கெட்ட மனோகரைப் பற்றி ராஜஸ்ரீயிடம் எச்சரிக்கும் காட்சியைச் சொல்லலாம். அவளுடைய தந்தையாக வீட்டில் இருப்பவர் அவள் தந்தை அல்ல. அதுவரை அவளே பார்த்திராத அவளுடைய சித்தப்பா என்று உஷார் படுத்தும் சீன்.
கதாநாயகி விஜயா பாடும் 'ஒரு முத்தாரத்தில் முப்பது முத்து' பாடலின்போது, ராஜஸ்ரீயையும் தக தக உடையில் (சில நடனமாதருடன்) ஆட விட்டு பாடலுக்கு அடிஷனல் அட்ராக்ஷன் சேர்த்து சுவையூட்டி இருப்பார் இயக்குனர்.
ராஜஸ்ரீ நமது படங்களில் அதிகம் நடித்ததில்லை. 'அந்தப்பக்கம்' தான் அதிகம் வாய்ப்புப் பெற்றுள்ளார். இருப்பினும் ஒருமுறை தொலைக்காட்சியில் சிறப்பு தேன்கிண்ணம் வழங்கியபோது நடிகர்திலகத்தை பற்றி மிக மிக உயர்வாகப்பேசி 'ஹோ... லிட்டில் ப்ளவர்' பாடலை ஒளிபரப்பினார். அந்த நன்றிக்காகவே ராஜஸ்ரீயைப் பற்றிய இப்பதிவு.....
//கதாநாயகி விஜயா பாடும் 'ஒரு முத்தாரத்தில் முப்பது முத்து' பாடலின்போது, ராஜஸ்ரீயையும் தக தக உடையில் (சில நடனமாதருடன்) ஆட விட்டு பாடலுக்கு அடிஷனல் அட்ராக்ஷன் சேர்த்து சுவையூட்டி இருப்பார் இயக்குனர். //
நல்ல writeup கார்த்திக் சார்..பட் ஐட்டம் நடிகையர் என ராஜஸ்ரீயை ஏற்க முடியவில்லை. நீலவானம் டூ.. நன்றாகத் தான் நடித்திருப்பார்..! சொர்க்கத்தில் அடிஷனல் அட்ராக்*ஷன் தான்.. நீங்கள் சொன்னதுபோல.
//.இருப்பினும் ஒருமுறை தொலைக்காட்சியில் சிறப்பு தேன்கிண்ணம் வழங்கியபோது நடிகர்திலகத்தை பற்றி மிக மிக உயர்வாகப்பேசி 'ஹோ... லிட்டில் ப்ளவர்' பாடலை ஒளிபரப்பினார். அந்த நன்றிக்காகவே ராஜஸ்ரீயைப் பற்றிய இப்பதிவு...// ஓகே. அப்ப சரி
Our heartiest felicitations for KARNATAKA SIVAJI PRABHU MUPPERUM VIZHA and thangapathakkam release mela. all the very best colleques you are always doing the best to keep up our NT FLAG VERY HIGH ALWAYS.
KINDLY LOAD THE PHOTOS IN THE HUB.
GOOD LUCK AND GOOD EVENING.
டியர் ராகவேந்திரன் சார்,
'நெஞ்சங்கள்' படத்தில் இடம்பெறும் நம் கண்ணனின் 'வா கண்ணா வா' கட்-அவுட் பதிவிற்கு நன்றி.
இப்போது இன்னொன்று. 'எமனுக்கு எமன்' படத்தில் எமனாக நடிகர் திலகம் சித்ரகுப்தன் தேங்காயோடு பூலோகத்திற்கு வந்து சுற்றிப் பார்ப்பது போன்ற சீனில் தலைவர் சாந்தி திரையரங்கில் நின்று பேசுவது போல ஒரு ஷாட்
எடுத்திருப்பார்கள். அப்போது எந்தத் திரைப்படமும் இதுவரை விஞ்ச முடியாத வசூலை அள்ளிக் கொட்டிய நமது தலைவரின் 'திரிசூலம்' படம் சாந்தியில் ஓகோவென ஓடிக் கொண்டிருப்பதைக் காணலாம். தலைவர் 'குரு' பாத்திரத்தில் பின்னி எடுக்கும் போஸ் பின்னால் கட்-அவுட்டாக நிற்பதைக் காணுங்கள். அதே போல ஜெய்கணேஷ், தேங்காய், புஷ்பலதா, வி.கே.ஆர், நம்பியார் ஆகியோர் வரையப்பட்ட பேனரையும் நாம் காணலாம்.
வசனகர்த்தா திரு ஏ.எல்.நாராயணன் அவர்கள் தலைவருடன் நடிக்கும் சீனையும் இங்கு காணலாம்.
http://i812.photobucket.com/albums/z...ps2c1a1b9c.jpg
http://i812.photobucket.com/albums/z...ps639540ab.jpg
http://i812.photobucket.com/albums/z...psca4c1cf9.jpg
'குரு' கட்-அவுட்
http://i812.photobucket.com/albums/z...psd7062089.jpg
வசனகர்த்தா திரு ஏ.எல்.நாராயணன் அவர்கள் தலைவருடன்
http://i812.photobucket.com/albums/z...ps68d11eed.jpg
சவாலே சமாளி - சினிமா நூற்றாண்டு விழா சிறப்பு காட்சி
படத்திற்குள் போகும் முன் ஒரு சில நிகழ்வுகளை பகிர்ந்து கொள்ள நினைக்கிறேன். சினிமா நூற்றாண்டு விழாவின் பாகமாக சவாலே சமாளி திரைப்படம் இரண்டு முறை திரையிடப்பட்டது. முதன் முறை உட்லண்ட்ஸ் சிம்பனி அரங்கிலும் இரண்டாம் முறை சத்யம் அரங்கில் செப் 22-ந் தேதி ஞாயிறு அன்றும் பகல் காட்சியாக நடைபெற்றது.
ஞாயிறு noon show-விற்கு சென்றிருந்தோம். நிகழ்ச்சி நடந்து இரண்டு வாரங்கள் ஆகி விட்டன என்ற போதினும் அப்போது அங்கே நிகழ்ந்த சில விஷயங்களை பற்றி சொல்லலாம் என நினைக்கிறேன். அரங்க வளாகத்திற்கு சென்ற போது நல்ல கூட்டம். ஆனால் யாரிடமும் டிக்கெட் இல்லை. என்னவென்று கேட்டால் அரங்க நிர்வாகத்தினர் அரங்கின் capacity -க்கு கொடுத்து விட்டோம் என்கிறார்கள். ஆனால் உள்ளே இருந்து வரும் செய்தியோ வித்தியாசமாக இருக்கிறது. ஒரு குறிப்பிட்ட அமைப்பை சேர்ந்தவர்கள் en bloc ஆக டிக்கெட்டுகளை முன்னரே வாங்கி விட்டனர் என்றும் ஆனால் அவர்கள் படத்திற்கு வர மாட்டார்கள் என ஒரு செய்தி பேசப்படுகிறது. அதற்கு என்ன காரணம் என்று கேட்டால் படத்தின் கதையமைப்பின்படி நாயகனும் நாயகியும் மோதிக் கொள்ளும் காட்சிகள் நிறைய வரும். அதிகமான அளவில் சிவாஜி ரசிகர்கள் இருந்தால் அரங்கத்தில் reaction வேறு விதமாக இருக்கும். அதை தவிர்க்கவே இப்படி என்று விளக்கம்.
படம் ஆரம்பித்து விட்டது. ஆனால் ரசிகர்கள் திரும்பி போகவில்லை. அரங்க நிர்வாகத்தினரோடு ஒரு வாக்குவாதம் நடைபெறுகிறது. அரங்கத்தின் உள்ளே இருக்கைகள் free யாக இருக்கின்றன. அந்த நிலையில் எங்களை அனுமதித்தால் என்ன? என்பது ரசிகர்களின் வாதம். நிரவாகதினரோ நாங்கள் ஏற்கனவே திரையிடப்பட்டிருக்கும் அரங்கத்தின் capacityகேற்ப அனுமதி சீட்டுகளை வழங்கி விட்டோம். அதை வாங்கியவர்கள் வரவில்லையென்றால் அதற்கு நாங்கள் பொறுப்பல்ல. அவர்கள் வரவில்லை என்பதால் வேறு ஆட்களை அனுமதிக்க முடியாது என்கிறார்கள். ரசிகர்கள் விடவில்லை. காசு கொடுத்து அனுமதி சீட்டு வாங்கியவர்கள் வரவில்லையென்றால் நீங்கள் சொல்வது சரி.ஆனால் இன்றைய சூழல் அதுவல்ல. ஏற்கனவே வாங்கி சென்றதாக நீங்கள் சொல்லும் நபர்களும் complimentary டிக்கெட்தான் வாங்கி போயிருக்கிறார்கள்.இப்படி ஒரு சூழலில் இலவச அனுமதி சீட்டு பெற்று சென்றவர்கள் வரவில்லை எனும் போது எங்களை அனுமதிப்பதில் தவறொன்றுமில்லை என்ற வாதத்தை ரசிகர்கள் முன் வைக்க அனுமதி சீட்டு பெற்றவர்கள் வந்தால் நாங்கள் என்ன பதில் சொல்வது என்று நிர்வாகத்தினர் கேட்க, அப்படி அவர்கள் வந்தால் நாங்கள் எழுந்து இருக்கைகளை அவர்களுக்கு தந்து விடுகிறோம் என்று ரசிகர்கள் பதிலளிக்க அதன் பின்னரே அந்த நிபந்தனையின் பேரில் ரசிகர்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.இதனால் படம் தொடங்கி 20-30 நிமிடங்களுக்கு பின்னரேஒரு கணிசமான கூட்டத்தினரால் உள்ளே வர முடிந்தது ஒரு கட்டத்திற்கு பிறகு அனுமதிக்க மாட்டார்கள் என நினைத்து கணிசமான பொதுமக்களும் ரசிகர்களும் திரும்பி சென்று விட்டனர். மிக மிக வேதனையான சம்பவம் இது.
படம் முடிந்து வரும்போது நிர்வாகத்தில் உள்ள ஒருவருடன் ஆப் தி ரெகார்ட் ஆக பேசிய போது அவர் என்ன நடந்தது என்ற தகவலை சொன்னார். மற்ற அரங்குகளைப் போல் அல்லாமல் சத்யம் வளாகத்தில் reservation counter-லேயே இந்த சினிமா நூற்றாண்டு விழா சிறப்பு காட்சிகளுக்கும் டிக்கெட்கள் கொடுக்கப்பட்டிருகின்றன அந்த நேரத்தில் நிர்வாகத்தினரிடம் படம் இபப்டிப்பட்ட கதை சூழலை கொண்டது.படம் திரையிடப்படும் போது மாற்று தரப்பினரும் படத்திற்கு வந்திருந்தால் ஏதேனும் பிரச்சினைகள் வரலாம் என்று யாரோ போய் சொல்லியிருக்கின்றனர் அதை கேட்ட நிர்வாகம் உடனெ டிக்கெட் விற்பனையை நிறுத்தி விட்டது. காட்சிக்கு வந்தவர்களிடம் டிக்கெட் தீர்ந்து விட்டது என சொல்லி விட்டார்கள்.சிவாஜி ரசிகர்களை தவறாக நினைக்கவில்லை என்றும், 120 ரூபாய் டிக்கெட் விலை இருந்த போது கூட கர்ணன் படம் ஓடிய 153 நாட்களிலும் காசு கொடுத்து டிக்கெட் வாங்கி படம் பார்த்தவன் சிவாஜி ரசிகன். ஆகவே இது யாரோ சொன்ன செய்தியால் இல்லை வதந்தியால் வந்த குழப்பம் என்றார். நாங்கள் அவரிடம் சொன்னோம்.இரண்டு நாட்களுக்கு முன்பு உட்லண்ட்ஸ் சிம்பனி அரங்கில் இதே படம் திரையிட்ட போது சத்யம் ஸீசன்ஸ் அரங்கை விட அதிக capacity உடைய சிம்பனி அரங்கம் நிறைந்தது. ஆனால் படம் ஓடிய மூன்று மணி நேரமும் சிவாஜி ரசிகர்கள் நாகரீகம் காத்தார்கள். ஆரவாரம் அலப்பரை எல்லாம் இருந்த போதும் அனைத்தும் லிமிட்க்குள் இருந்தது. அப்படியிருக்க இங்கே எப்படி ஒரு மோதல் போக்கை கடைபிடிப்பார்கள் என்ற கேள்விக்கு அவரிடமிருந்து ஒரு சிரிப்பு மட்டுமே பதில்.
நடிகர் திலகம் இன்றில்லை.12 வருடங்கள் ஓடி விட்டன அவர் இப்பூவுலகை விட்டு நீங்கி.அவருக்கென்று ஒரு அரசியல் கட்சியோ, அமைப்போ,ஆட்சியில் அதிகாரத்தில் பங்கோ இல்லை. அவர் ரசிகர்களும் ஒரே அமைப்பை ஆதரிப்பவர்களில்லை.சிவாஜி மீது "மாறா அன்பு" கொண்டவர்கள் அவர் எந்த சாதனையையும் செய்யவில்லை என்றும் சொல்கிறார்கள்.அவர்கள் கூற்றுப்படியே எந்த சாதனையையும் புரியாத ஒருவரை எந்த அரசியல் அதிகார பின்புலமும் இல்லாத அவர்தம் ரசிகர்களை பார்த்து இத்துணை கோவமும் ஆத்திரமும் ஏன் ஏற்படுகிறது என்பதுதான் புரியாத புதிர். எதிர்ப்பிலே வளர்ந்த நடிகர் திலகம் இன்றும் அதே எதிர்ப்பையே சந்தித்துக் கொண்டிருக்கிறார். அன்றைய நாட்களில் அதிகமாக அவர் முகம் தாங்கிய போஸ்டர்கள்தானே உரம் போட்டு வளர்க்கப்பட்டது. இன்றும் அது வேறு வடிவத்தில் தொடர்கிறது எனபதுதான் வேதனை.
(தொடரும்)
அன்புடன்
சவாலே சமாளி - சினிமா நூற்றாண்டு விழா சிறப்பு காட்சி = Part II
இனி படத்திற்கு வருவோம். முழு படத்தையும் பற்றி பேசப் போவதில்லை. குறிப்பாக இரண்டே இரண்டு காட்சிகள். ஒன்று முதல் இரவில் சந்தர்ப்ப சூழ்நிலையால் தன் மனைவி ஆகி விட்ட நாயகியுடன் மனம் திறந்து பேசும் காட்சி. அதுவரை ஒரு பிடிவாத குணம் கொண்ட ரோஷகார இளைஞன் மாணிக்கம் என்ற முறையில் மட்டுமே பார்வையாளர்களுக்கு அறிமுகமாகியிருப்பார். அந்தக் காட்சியில்தான் தான் நாயகி மேல் கொண்டுள்ள காதலை வெளிப்படுத்துவார்.[உன்னை மொத மொத பார்த்தபோதே என் மனசை பறி கொடுத்துட்டேன்] தானும் அவளும் எப்படி இரண்டு வர்க்கங்களை சேர்ந்தவர்கள் என்பதை சொல்லுவார். நாம் இரண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கிறதுதான் உண்மையான ஜனநாயக சோஷலிசம். இதைதான் நம்ம தலைவர்கள் எல்லாரும் சொல்றாங்க.[இந்த வசனம் வரும்போது 1971 ஜூலை மாதம் ஸ்ரீதேவியில் எழுந்த கைதட்டல் இன்றைக்கும் நினைவில் இருக்கிறது]. உன்னளவிற்கு நானும் படிச்சிருக்கேன். ஆயிரம் வயலை உழுதவ்னும் ஆயிரம் புத்தகங்களை படிச்சவனும் ஒன்னும்பாபாங்க.
இந்த டயலாக் டெலிவரி எல்லாம் தியேட்டரில் கேட்கும் போது அவ்வளவு அருமையாக இருக்கும். அந்த modulation, முக பாவம், உடல் மொழி எல்லாமே அற்புதமாக இருக்கும். பேசிக் கொண்டே வெகு இயல்பாக தோளில் கை வைக்க அதை படாரென்று தட்டி விட்டு என்னை தொடாதீங்க என்று கோபாவேசமாய் பேசும் JJ-வை ஒரு நிமிடம் பார்த்துவிட்டு, இனி நீயா வந்து என்னை தொடரவரைக்கும் நான் உன்னை தொட மாட்டேன் என்று சொல்லி விட்டு போகும் அந்த look பிரமாதம். அன்றைய தினம் இந்தக் காட்சியோடு இடைவேளை விட்டதால் இதைப் பற்றியே நானும் சாரதியும் கிருஷ்ணாஜியும் பேசிக் கொண்டிருந்தோம்.
இரண்டாவது காட்சி கிணற்றில் குதித்து தற்கொலை செய்துக் கொள்ள போகும் JJவை கயிறு மூலம் பிடித்து இழுத்து அவரிடம் தான் உள்ளக் குமுறலையெல்லாம் கொட்டி தீர்க்கும் காட்சி. முழுப் படத்திலும் இந்தக் காட்சிதான் நடிகர் திலகத்தின் நடிப்பில் highlight ஆன காட்சி. எனக்கு உங்கிட்டே பிடிச்சதே அந்த பிடிவாதம்தான். ஏன்னா நானும் பிடிவாதக்காரன். உன்னை நான் உண்மையா நேசிச்சேன். என்னுடைய மனைவி ஆன பின்னாடி என்னுடைய வாழ்க்கைக்கு ஏத்த மாதிரி உன்னை மாத்தறதுக்கு உனக்கு பழக்கமில்லாத வேலையெல்லாம் செய்ய சொன்னேன். ஆனா நான் உன்னை கொடுமைப்படுத்தறதா நீ நினைச்சுக்கிட்டே. நான் எப்ப தூங்குவேன்னு நீ பார்த்துட்டிருந்தே நீ எப்ப ஏம்மாத்துவேனு நான் பார்த்துட்டிருந்தேன்.
இந்த வசனங்களை எல்லாம் [நான் மேலே எழுதின வசனங்கள் படத்தில் verbatim ஆக இருக்காது] அவர் பேசும் போது பார்க்க வேண்டுமே! இத்தனைக்கும் இரண்டு மூன்று ஷாட்களுக்குள் மொத்த காட்சியும் வந்து விடும். ஆனாலும் continuity miss ஆகாமல் உணர்வுகள் அப்படியே அந்த வார்த்தை பிரயோகங்களில் வந்து விழும் அந்த modulation! என்ன ஒரு மேதமை!
நான் உன் வாழ்க்கையை விட்டு விலகினா இல்லை நான் செத்து போயிட்டா உனக்கு சந்தோசம் கிடைக்கும்முனா, நீ இழந்த வாழ்க்கை கிடைக்கும்னுனா இதோ இதே கிணற்றிலே என்னை பிடிச்சு தள்ளிட்டு அந்த பாறங்கல்லையும் தூக்கி என் தலயிலே போட்டுடு. நான் பத்து எண்ணுவேன். பத்து எண்றத்துக்குள்ளே என்னை பிடிச்சு தள்ளி விட்டுடு என்று சொல்லிவிட்டு நடிகர் திலகம் ஏறி நிற்க நடுங்கும் கைகளினால் அவர் அருகில் கைகளை கொண்டு சென்று விட்டு முடியாமல் JJ திரும்பி நிற்க கிணற்றின் கைப்பிடி சுவரிலிருந்து இறங்கி வந்து சொல்வாரே நீ மட்டும் செத்து போயிருந்தா அடுத்த நிமிஷமே நானும் செத்துப் போயிருப்பேன் என்று தன மனதில் உள்ள காதலை வெளிப்படுத்துவாரே அந்த ஒரு காட்சியில் மொத்தப் படத்தின் credit-ஐயும் அவர் தட்டிக் கொண்டு போய் விடுவார்.
இதை சொல்வதற்கு காரணம் கிளைமாக்ஸ். அதுவரை மூன்றே மூன்று காட்சிகளில் கொல்லன் பட்டறையில் இரும்பை காய்ச்சி அடிக்கும் வேலையை மட்டும் செய்துக் கொண்டிருக்கும் முத்துராமன் கதாபாத்திரம் அந்த கிளைமாக்ஸ் scene-ல் புயலென உள்ளே புகுந்து வில்லனை அடித்து உதைத்து ஒரு ஹீரோ லெவலுக்கு செயல்பட, கதை மற்றும் திரைக்கதையின் போக்குப்படி அப்படிதான் முடிக்க வேண்டும் என்ற சரியான தீர்மானத்தின் காரணமாக முத்துராமனுக்கு விட்டுக் கொடுத்து விட்டு அமைதியாக நடிகர் திலகம் நிற்பார். என் தங்கச்சி மானம் போயிடக் கூடாதுதானே அடியெல்லாம் வாங்கிக்கிட்டு நான் பேசாமே நிக்கிறேன். நீ இப்படி எல்லார் முன்னாடியும் என் தங்கச்சி மானத்தை வாங்கிட்டேயேடா மாரிமுத்து என்று மனம் உருகி பேசுவார்.
எந்த நடிகர் விட்டுக் கொடுப்பார்? இரண்டு மூன்று படங்களில் ஹீரோவாக நடித்தவுடனே இயக்குனரிடம் இதை மாற்றி விடுங்கள். நான் அந்த கிளைமாக்ஸ் scene-ல் ஸ்கோர் பண்ணற மாதிரி மாத்திடுங்க என்று சொல்லக்கூடிய தமிழ் திரைப்பட உலகில், உச்சத்தில் நிற்கும் போதும் தன்னுடைய 150-வது படமாக இருந்த போதினும் கதையின் இயல்பான போக்குப்படியே கிளைமாக்ஸ் இருக்கட்டும் என்று விட்டுக் கொடுக்கும் பெருந்தன்மை நமது நடிகர் திலகத்தை விட்டால் வேறு யாருக்கு வரும்?
குறிப்பிடத்தக்க மற்றொரு நபர் நாகேஷ். சின்ன பண்ணையாக பெரிய பண்ணை T.S பகவதியுடன் கூடவே இருந்து குழி பறிக்கும் அந்த character-ஐ ஜாலியாகவும் வெகு இயல்பாகவும் செய்ய நாகேஷை விட்டால் யார் இருக்கிறார்கள்? பண்ணைக்கு ஆதரவாக பேசுவது போல் சிவாஜியின் மாணிக்கம் character-க்கு lead எடுத்துக் கொடுப்பது [ஏம்பா, தேர்தலிலே தோத்தா பணம் கொடுக்காம அவர் பெண்ணையா உனக்கு கொடுப்பார்?] எல்லாம் அக்மார்க் நாகேஷ். சரியாக மூன்று வருடங்களுக்கு ஒரு முறை நடிகர் திலகம் படங்களில் நாகேஷ் செமத்தியாக ஸ்கோர் செய்திருக்கிறார். 1965 ஜூலை திருவிளையாடல், 1968 ஜூலை தில்லானா, 1971 ஜூலை சவாலே சமாளி!
மொத்தத்தில் அந்த ஞாயிறு நண்பகல் சற்று கசப்புணர்வுடன் ஆரம்பித்தாலும் நடிகர் திலகம் என்ற மாபெரும் கலைஞனின் அற்புதமான பாத்திர சித்தரிப்பினால் மனம் குளிர்ந்து மகிழ்ந்தது.
அன்புடன்
உண்மைதன் முரளி சார்Quote:
Murali Srinivas
நான் உன் வாழ்க்கையை விட்டு விலகினா இல்லை நான் செத்து போயிட்டா உனக்கு சந்தோசம் கிடைக்கும்முனா, நீ இழந்த வாழ்க்கை கிடைக்கும்னுனா இதோ இதே கிணற்றிலே என்னை பிடிச்சு தள்ளிட்டு அந்த பாறங்கல்லையும் தூக்கி என் தலயிலே போட்டுடு. நான் பத்து எண்ணுவேன். பத்து எண்றத்துக்குள்ளே என்னை பிடிச்சு தள்ளி விட்டுடு என்று சொல்லிவிட்டு நடிகர் திலகம் ஏறி நிற்க நடுங்கும் கைகளினால் அவர் அருகில் கைகளை கொண்டு சென்று விட்டு முடியாமல் JJ திரும்பி நிற்க கிணற்றின் கைப்பிடி சுவரிலிருந்து இறங்கி வந்து சொல்வாரே நீ மட்டும் செத்து போயிருந்தா அடுத்த நிமிஷமே நானும் செத்துப் போயிருப்பேன் என்று தன மனதில் உள்ள காதலை வெளிப்படுத்துவாரே அந்த ஒரு காட்சியில் மொத்தப் படத்தின் credit-ஐயும் அவர் தட்டிக் கொண்டு போய் விடுவார்.
இதை சொல்வதற்கு காரணம் கிளைமாக்ஸ். அதுவரை மூன்றே மூன்று காட்சிகளில் கொல்லன் பட்டறையில் இரும்பை காய்ச்சி அடிக்கும் வேலையை மட்டும் செய்துக் கொண்டிருக்கும் முத்துராமன் கதாபாத்திரம் அந்த கிளைமாக்ஸ் scene-ல் புயலென உள்ளே புகுந்து வில்லனை அடித்து உதைத்து ஒரு ஹீரோ லெவலுக்கு செயல்பட, கதை மற்றும் திரைக்கதையின் போக்குப்படி அப்படிதான் முடிக்க வேண்டும் என்ற சரியான தீர்மானத்தின் காரணமாக முத்துராமனுக்கு விட்டுக் கொடுத்து விட்டு அமைதியாக நடிகர் திலகம் நிற்பார். என் தங்கச்சி மானம் போயிடக் கூடாதுதானே அடியெல்லாம் வாங்கிக்கிட்டு நான் பேசாமே நிக்கிறேன். நீ இப்படி எல்லார் முன்னாடியும் என் தங்கச்சி மானத்தை வாங்கிட்டேயேடா மாரிமுத்து என்று மனம் உருகி பேசுவார்.
எந்த நடிகர் விட்டுக் கொடுப்பார்? இரண்டு மூன்று படங்களில் ஹீரோவாக நடித்தவுடனே இயக்குனரிடம் இதை மாற்றி விடுங்கள். நான் அந்த கிளைமாக்ஸ் scene-ல் ஸ்கோர் பண்ணற மாதிரி மாத்திடுங்க என்று சொல்லக்கூடிய தமிழ் திரைப்பட உலகில், உச்சத்தில் நிற்கும் போதும் தன்னுடைய 150-வது படமாக இருந்த போதினும் கதையின் இயல்பான போக்குப்படியே கிளைமாக்ஸ் இருக்கட்டும் என்று விட்டுக் கொடுக்கும் பெருந்தன்மை நமது நடிகர் திலகத்தை விட்டால் வேறு யாருக்கு வரும்?
.
அன்புடன்
சிவாஜி என்ற மாமேதை
தன் நடிப்பில் அவருக்கு இருந்த தன்நம்பிக்கை
எதற்கும் யாரையும் கண்டு பயப்பட்டதில்லை
முரளி சார்,
தாங்கள் 'சவாலே சமாளி' சினிமா நூற்றாண்டு விழா சிறப்பு காட்சி பார்த்த ஒரு சில தினங்களுக்குள் நான் கை பேசியில் தங்களிடம் உரையாடும் போது தாங்கள் நடிகர் திலகத்தின் ஆளுமை கொடிகட்டிப் பறக்கும் அந்த கிணற்று சீனைப் பற்றி இன்று பதிவில் குறிப்பிட்டது போல் அவ்வளவு அழகாகச் சொல்லி சிலாகித்து மகிழ்ந்தீர்கள். இன்று தங்கள் கருத்தை பதிவின் மூலமாகக் கண்டதும் அந்த சுகத்தை வேறு கோணத்தில் அனுபவித்தேன். நான் அந்த காட்சியைப் பற்றி இதுநாள் வரையில் என்னென்ன மனதில் நினைத்திருந்தேனோ அதை அப்படியே தங்கள் பதிவில் வார்த்தெடுத்து விட்டீர்கள். எனக்கு அந்தக் காட்சியைப் பற்றி எழுத வேண்டும் என்று மிக மிக ஆசை.
நாம் செல்லில் பேசிய அன்று என்னைத் தூங்க விடாமல் செய்தீர்கள்.
இன்று அதிகாலை எழுந்து தங்கள் அருமையான பதிவைப் படித்துவிட்டு மீண்டும் படுத்த போதும் உறக்கம் வரவில்லை. அந்தக் காட்சியே மனத்திரையில் ஓடிக் கொண்டிருக்கிறது.
மிக்க நன்றி.
முரளி சார்
சவாலே சமாளி திரையீடு பற்றிய தங்கள் பதிவு நம் அனைவரின் உள்ளத்திலும் நிழலாடிக் கொண்டிருக்கும் எண்ணங்களே. 40 ஆண்டுகளுக்கு முன் நினைவுகள் செல்கின்றன. சென்னை சாந்தி திரையரங்கில் முதல் நாள் முதல் காட்சியிலேயே ஜெயலலிதா அவர்களிடம் நடிகர் திலகம் கிணற்றடியில் பேசும் காட்சி பலத்த வரவேற்பைப் பெற்றது. அதே போல் இறுதியில் நடிகர் திலகத்தை விட்டுக் கொடுக்காமல் பேசும் காட்சியிலும் ஏகப்பட்ட கரகோஷம். தமிழ்த் திரையுலகில் மிகச் சிறந்த நடிகையருள் ஒருவரான ஜெயலலிதா அவர்களின் சிறந்த நடிப்பிற்கு ஸ்கோப் அளித்த படங்களில் சவாலே சமாளியும் ஒன்று. நடிகர் திலகத்தைப் போலவே அவருடைய ரசிகர்களும் சிறந்த நடிப்பை யார் வழங்கினாலும் பாராட்டத் தயங்க மாட்டார்கள் என்பதற்கு முதல் நாள் அக்காட்சிகள் பெற்ற வரவேற்பே சாட்சி.
அன்றைய நாளில் சென்னை சாந்தி திரையரங்கில் ரசிகர்களின் திரையலங்காரங்கள் நெஞ்சில் நீங்கா இடம் பெற்று விட்டன. அரங்கு நுழைவாயில் அருகில் சற்றுத் தள்ளி சுவற்றில் ஆரம்பித்து வாசல் வரைக்கும் நீளமான பேனர் அமைத்து அதில் 150 படங்களும் பட்டியல் இடப் பட்டிருந்தன. ஒவ்வொரு படத்திற்கும் ஒரு சின்ன சதுர வடிவிலான பேனர் என சின்னச் சின்னதாய் 150 பேனர்கள். அரங்கு முழுவதும் தோரணங்கள், கொடிகள், ஸ்டார்கள் எனத் திருவிழாக் கோலம். இன்றும் அந்தத் திருவிழாக் கோலம் தொடர்கிறது என்பதே அவருடைய தாக்கத்தின் வலிமையைப் புரிந்து கொள்ளலாம். ஒரே ஒரு வித்தியாசம் அன்றை அளவிற்கு இன்று ஸ்டார்களும் தோரணங்களும் இடம் பெறுவதில்லை. நடிகர் திலகத்துடன் இணைந்து நடிக்கும் கலைஞர்கள் பாராட்டைப் பெறாமல் இருந்ததில்லை என்பது நிதர்சனமானது.
சவாலே சமாளி நடிகர் திலகத்தின் ரசிகர்களில் நீங்கா இடம் பெற்ற திரைக்காவியம். இப்படத்தைப் பற்றிய தங்கள் பதிவு என்னை அந்தக் காலத்திற்கு இட்டுச் சென்றதன் விளைவே இப்பதிவு.
மிக்க நன்றி முரளி சார், சவாலே சமாளியை நினைவு படுத்தியதற்கு. தங்களுக்கு எனது சிறிய அன்புப் பரிசு.
http://i812.photobucket.com/albums/z...pse8c48619.jpg
சின்ன கண்ணன் சார்,
நவராத்திரியும் அதுவுமாய், கஜுரஹோ ஞாபக படுத்தி தொலைத்த இக்கயவனின் இழி செயலை, அழகான நவராத்திரி பதிவினால் நேர்செய்து அம்மன் அருளை திரிக்கு மீட்டு கொண்டு வந்து விட்டீர்கள்.
கார்த்திக் சார்,
நான் பிறந்த நாட்டுக்கொரு பதிவாக ,அழகாக துள்ளி ,பெண்களை அழகாக மஞ்சளரைத்து ரசித்து விட்டீர்கள். இந்த பாடலும்,சக்தி தென்னாடு பாடலும் jamesbond படத்தின் மூட்,டோன் இரண்டையும் கெடுக்கும். வேறு எந்த படத்தில் வந்திருந்தாலும் மிக மிக ரசிக்க வைத்திருக்கும்.
உங்கள் ஐடம் ராஜஸ்ரீயை, காதல் காட்சி தொடரின் சின்ன மலராக விரிக்க (விறிக்க) போகிறேன்.
வேண்டுமென்றே ஆலத்தை கொண்டு வராமல் இதய துடிப்பை அதிக (படுத்துகிறீர்கள்).
வாசு,
உன்னுடைய பிறந்த நாள் பங்களிப்புகள்,முத்தமிழ் விழாக்களுக்கு நன்றி.
ராகவேந்தர் சார்,
எந்த பதிவு வந்தாலும் அதையொட்டிய தங்கள் பதிவுகள் சுவாரஸ்யம்.
முரளி,
சனி,ஞாயிறில் எங்களுக்கு விருந்து படைத்து ,எங்கள் விடுமுறை நாட்களை இனிதாக்கி விட்டீர்கள். இது வரை தனி காட்டு ராஜாக்களாக இருந்த நாங்கள்,தங்களின் இந்த சவாலை எப்படி சமாளிக்க போகிறோம்? எல்லா பதிவுகளுமே மிக மிக ரசிப்புக்குறியவை. தாங்கள் தர வேண்டிய செய்தியை package செய்யும் அழகு,பத்திரிகையாளர்களுக்கே பாடம் சொல்லும்.
Savale Samaali - Nadigar thilagam Sivaji's acting is very manly and superb.Quote:
இரண்டாவது காட்சி கிணற்றில் குதித்து தற்கொலை செய்துக் கொள்ள போகும் JJவை கயிறு மூலம் பிடித்து இழுத்து அவரிடம் தான் உள்ளக் குமுறலையெல்லாம் கொட்டி தீர்க்கும் காட்சி. முழுப் படத்திலும் இந்தக் காட்சிதான் நடிகர் திலகத்தின் நடிப்பில் highlight ஆன காட்சி.
dedicated to those who still abuse & try to establish false claims on nadigar thilagam:
இங்கு எரிந்து கொண்டிருக்கும் மின்சார பல்புகளை எல்லாம் அணைத்து விட்டாலும்கூட, இந்த இடத்தில் ஒரே ஒரு சின்னஞ்சிறு அகல் விளக்கு எரிந்து கொண்டிருக்கும். அந்தச் சொற்ப வெளிச்சத்தின் அடியில் அற்பர்கள் துணையின்றி ஒரே ஒரு உருவம் மட்டும் ஓடி வேலை செய்து கொண்டிருக்கும். அதுதான் இந்த ராஜு!
போ – மூலைக்கு மூலை நின்று முரசு கொட்டு........ திட்டு........கெட்... அவுட்’.
டியர் முரளி சார்,
சத்யம் அரங்கில் சவாலே சமாளி திரைப்படம் காணச்சென்ற தங்களது அனுபவம் மனதை வலிக்கச்செய்தது (அதாவது அரங்கில் நுழைவதற்கு முன் ஏற்பட்ட அனுபவம்). திரைப்பட நூற்றாண்டு கொண்டாட்டத்துக்கு நடிகர்திலகத்தின் பல சிறந்த திரைப்படங்கள் தேர்வு செய்யப்படவில்லை என்று ஏற்கெனவே பெரிய குற்றச்சாட்டும் மனவலியும் இருக்கும்போது, அப்படி தேர்ந்தெடுத்த படங்களைத் திரையிடுவதிலும் இத்தனை சங்கடங்களா?. இப்படத்தின் கதைப்போக்கு என்னவென்பது அவர்களுக்குத் தெரியாதா?. படங்களைத் தேர்வு செய்ததே "அவர்கள்தானே" . அப்படியிருக்க திரையிடப்படும்போது குளறுபடிகள் ஏன்?. ஒரு மாபெரும் கலைஞனை எந்த அளவுக்குத்தான் அவமானப்படுத்துவார்கள்?.
ஒன்று மட்டும் உண்மை. யாரும் கண்டுக்காத வரையில் எந்த இயக்கமும் வளராது. எதிர்க்க எதிர்க்கத்தான் வளர்ச்சியை நோக்கி முன்னேறும். நம்முடைய படையைக்கண்டு, அதிகாரத்தில் இருக்கும் பெரிய இயக்கங்களே பயப்படுவது நமக்குப்பெருமை.
அன்று தலைவரின் சுவரொட்டிகளில் சாணியடித்துக் கொண்டிருந்த படிக்காத பாமரனை விட, மெத்தப்படித்து விட்டு இன்று இணையத்தின் வழியாக சாணியடித்துக் கொண்டிருக்கும் 'மே(ல்) தாவிகள்' கேவலமாகிப்போன அவலத்தை என்ன சொல்வது?.
படத்தைப் பொறுத்தவரை, முதலிரவில் நடிகர்திலகம் பேசும் காட்சியும், அதைத்தொடர்ந்து வரும் 'நிலவைப்பார்த்து வானம் சொன்னது' பாடலும், அதேபோல அந்தக் கிணற்றடிக் காட்சியும் எப்போதுமே படத்தின் ஹைலைட். அதுபோல படத்தின் துவக்கத்தில், கணவனைப் பார்க்கப்போய் திரும்பி வரும் தங்கையிடம் பேசும் காட்சியும், கோயிலில் தேர்தல் ஒப்பந்தம் எழுதும் காட்சியும் ஹைலைட்தான். மொத்தத்தில் படம் துவக்கம் முதல் இறுதிவரை செம டெம்போதான், தொய்வே கிடையாது.
கடைசியில் ஒரு சவால் விட்டீர்களே அதுதான் உச்சமான ஹைலைட். படத்தின் பவர்புல் கிளைமாக்ஸ் சண்டையை சக நடிகனுக்கு விட்டுக் கொடுத்துவிட்டு சும்மா அமைதியாக நின்று ஸ்கோர் பண்ண வேறு யாருக்கும் தைரியம் இருந்ததா?. இருக்கிறதா?. இந்த சவாலை சமாளிக்க யாராலும் முடியாது.
நம்மைப் பார்த்து பயப்படுகிறார்கள் அல்லவா, அங்கேயே நாம் வென்று விட்டோம். "தம்பி நாமம் வாழ்க".......
கார்த்திக் சாரின் வேண்டுகோளை ஏற்று கஜுரஹோ factor குறைத்து என் காதல் தொடர் தொடரும்.
கீழ்கண்ட படங்கள் முக்கியமாக பரிசீலனையில்....
1)பராசக்தி
2)புதையல்
3)ராஜா ராணி
4)தெய்வ பிறவி
5)இரும்பு திரை
6)பாவை விளக்கு
7)கல்யாணியின் கணவன்
8)ஆண்டவன் கட்டளை
9)புதிய பறவை
10)சாந்தி
11)நீலவானம்.
12)கலாட்டா கல்யாணம்.
13)தங்க சுரங்கம்.
14)தெய்வ மகன்.
15)நிறை குடம்.
16)சிவந்த மண்.
17)சுமதி என் சுந்தரி.
18)வசந்த மாளிகை.
19)உத்தமன்
20)ரோஜாவின் ராஜா
21)திரிசூலம்.
22)முதல் மரியாதை
ஏதாவது ஆலோசனை இருந்தாலோ ,விட்டு போயிருந்தாலோ இணைக்கலாம்.
'சவாலே சமாளி' (கிணற்று சீன்)
'சவாலே சமாளி' யின் அந்த பாப்புலரான கிணற்று சீன் பலநாள் என் தூக்கத்தைக் கெடுத்த பெருமை உடையது. ஜெயலலிதா உயிரை மாய்த்துக் கொள்ளப் போகும் அந்த இடம்தான் படத்தின் உயிர்நாடியே! நடிப்பின் உயிர்நாடியும் கூட. ஜீவனுள்ள இக்காட்சி ஜீவன் உள்ளவரை மறக்காது.
தேர்தல் பந்தயத்தில் பண்ணையாரிடம் ஜெயிக்கும் மாணிக்கம் பந்தய பொருளாக அவர் மகள் சகுந்தலாவை பெற்று ஊரார் முன்னிலையில் தாலி கட்டி விடுகிறான் அவள் விருப்பமில்லாமலேயே. பணக்கார சகுந்தலாவுக்கும், ஏழை விவசாயி மாணிக்கத்திற்கும் பொருத்தமே இல்லாத திருமணம். பணக்காரத் திமிர் கொண்ட மனைவியை ஏழை மாணிக்கம் அடக்கி ஒடுக்க நினைக்கிறான் அவள் தனக்கேற்றவாறு இருக்க வேண்டும் என்று எண்ணி. தன் நிலத்து வேலைகளையும், வீட்டு வேலைகளையும் அவளைச் செய்யச் சொல்லி ஆணையிடுகிறான். முதலிரவில் கூட தொட அனுமதிக்காத சகுந்தலா கணவன் (இல்லை அவளைப் பொருத்தவரை அவன் கயவன்) இடும் பழக்கமில்லாத வேலைகளில் மனம் நொந்து போகிறாள். ஆனால் மாணிக்கத்திற்கோ உள்ளுக்குள் அவள் மீது உயிர். அவன் வெளிக்காட்ட மாட்டான். அவளுக்கோ அவன் ஒரு வஞ்சகன், பழி உணர்ச்சி கொண்டவன். அவனைப் பழிவாங்கவோ அல்லது தன மனதிற்குப் பிடிக்காதவனோடு வாழப் பிடிக்காமலோ அவள் தன் உயிரை தோட்டத்துப் பக்கம் உள்ள கிணற்றில் குதித்து மாய்த்துக் கொள்ள முற்படுகிறாள். மனைவியைப் பற்றி நன்கறிந்த மாணிக்கம் கண்கொத்திப் பாம்பாக அவளைக் கவனித்து அவளை காப்பாற்றுகிறான். தன்னவள் தன்னைப் பற்றி தெரிந்து புரிந்து கொள்ளாமலேயே உயிரை விட எத்தனித்து விட்டாளே... நமக்கு பழிபாவத்தைச் சேர்க்க இருந்தாளே என்று மனம் வெதும்பி அவளுக்குத் தன் நிலையை விளக்குகிறான். மனம் விட்டு தன் உள்ளத்தில் பொங்கும் உணர்ச்சிகளை அருவியாய் வார்த்தைகளில் அவளிடம் கொட்டித் தீர்க்கிறான். தான் குற்றமற்றவன்...அவள் மேல் தீராத அன்பு கொண்டவன் என்பதை அவளுக்குத் தன்னாலான மட்டில் புரிய வைக்க முயல்கிறான்.
இதுதான் சிச்சுவேஷன். மாணிக்கமாக மாசில்லாத நம் நடிப்புலக மாணிக்கம். மனைவி சகுந்தலாவாக ஜெயா மேடம்.
ஆஹா! எப்பேர்பட்ட பங்களிப்பு நடிகர் திலகத்துடையது.! கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொள்ளப் போகும் நேரத்தில் கயிற்றால் ஜெயலலிதாவை பிடித்து இழுத்துக் காப்பாற்றப் போகும் போது நடத்த ஆரம்பிக்கும் நடிப்பு சாம்ராஜ்யம் கொஞ்சம் கொஞ்சமாக விரிவடைந்து எல்லைகளின்றிப் பரவி ஆக்கிரமிக்கும் அதிசயத்தை என்னவென்று சொல்ல!
கயிற்றால் ஜெயலலிதாவை கட்டி இழுத்துக் காப்பாற்றும் போது அவரது கண்களில் தெரியும் ஆழம் அளவுகோல் இல்லாதது. (எனக்குத் தெரியாம நீ எதுவும் செஞ்சுடுவியா...செய்யத்தான் விட்டுடுவேனா? உன் இஷ்டத்திற்கு நீ ஆட்டம் போடுவே! நான் பார்த்துகிட்டு சும்மா இருக்கணும்! ம்.... )
கயிற்றால் ஜெயா இவரை அடிக்க அடிக்க கயிற்றின் ஒவ்வொரு பகுதியாக பிடித்தபடி சிரிக்கும் சிரிப்பு. (பார்த்தியா! இங்கேயும் ஜெயிச்சது நான்தான்)
ஜெயலலிதா இவரை திட்டித் தீர்த்தவுடன் (ஒரு பெண்ணுங்கிற இரக்கம் கூட இல்லாம இப்படி அரக்கத்தனமா நடந்துக்குற நீங்க மனுஷனே இல்ல!) என்று குமுறி அழும் போது
"அழு... நல்லா அழு... வாய்விட்டுக் கதறு.... அப்பத்தான் உன் வெறி அடங்கும்...உன் சந்தோஷத்தையெல்லாம் குழி தோண்டிப் பொதச்சவன் நான். நான் உயிரோட இருக்கிற வரைக்கும் அது உனக்குக் கிடைக்காது... அதுதானே உன் குற்றச்சாட்டு.... சரி! உன் சந்தோஷத்தை யெல்லாம் அழிச்ச நானே அழிஞ்சி போயிட்டா....உனக்கு அது திரும்ப கிடைச்சுடுமில்லையா?" என்றபடி வயிற்றுப் பகுதியில் கைகளைக் கட்டியபடியே சாவின் வாயிலிலும் நிற்கும்போது கூட நிற்கும் அந்த ஆண்மை நிறைந்த கம்பீர போஸ்.
ஒன்று இரண்டு மூன்று எண்ணி பத்தைத் தொடும் போது கைகள் இவரைத் கிணற்றில் தள்ளத் தயார் நிலையில் இருந்தும் மனம் மறுத்த காரணத்தால் ஜெயலலிதா தோற்றுவிட நடிகர் திலகம் கீழே இறங்கி
"உனக்கு அந்த துணிச்சல் இல்ல. உன் மனசுல பலவீனம்தான் மண்டிக் கிடக்குது அதனாலதான் சாகத் துணிஞ்ச"..... என்று பேசிக் கொண்டே வருவார்.
"நீ என்கூட வாழ்ந்துதான் தீரணும்னு உன்னை நிர்ப்பந்தப்படுத்துறது உன் கழுத்துல கிடக்கிற இந்த மஞ்சக் கயிறுதானே! நான்தானே அதை உன் கழுத்தில கட்டினேன். இப்ப ஒரு நிமிஷம்... ஒரு நிமிஷம் உன்னைத் தொடரத்துக்கு அனுமதி கொடுத்தீனா நானே அந்தக் கயித்த அறுத்து எறிஞ்சிட்டுப் போறேன். அதுக்கப்புறம் உன் இஷ்டப்படி எப்பிடி வேணும்னாலும் வாழலாம்...என்று சொல்லி திரும்பவும்
'எப்பிடி வேணும்னாலும்'
என்று இரண்டாம் முறை அழுத்தம் கொடுப்பார். தான் அப்படி வழங்க இருக்கும் அனுமதியை ஆணித்தரமாக கூறுவதாக அர்த்தம் தொனிக்கும்படி வசங்களை டெலிவிரி செய்வார்.
"நீ எனக்கேத்த மனைவியாய் வாழணும்ங்கிற ஆசையினால உனக்குப் பழக்கமிலாத வேலைகளை செய்யச் சொல்லி உன்னைக் கட்டாயாப் படுத்தினேன். அது உனக்குக் கொடுமையாப் பட்டுது. நீ நெஞ்சு வெடிச்சு கதறி அழுகிறத பார்க்கும் போது உன்னைப் போலவே எனக்கும் கதறி அழுகணும் போல தோணுது... என்ன செய்யிறது? நான் ஆம்பிளயாச்சே! அதனாலதான் மனசுல இருக்கிற வேதனைகளையெல்லாம் வெளியே சொல்ல முடியாமே அப்படியே வாய்க்குள்ளேயே போட்டு மென்னு முழுங்கிக்கிறேன்.... முழுங்கிக்கிறேன்" என்று மனக்குமுறல்களைக் கொட்டித் தீர்ப்பார்.
இந்தக் காட்சியில் வசனங்கள் மிகப் பெரிய பலம். வசனங்களைச் சொல்லாமல் இந்தக் காட்சியை விவரிக்க இயலாது.
"உன்னதான் தொட முடியல்ல...உன் மனசையாவது தொடலாம்னு பாக்குறேன்". சொல்லி நிறுத்துவார். முடியல்ல என்பதை கைகளைக் கொட்டி உணர வைப்பார். ஒரு விசும்பு விசும்புவார்.
"நீ உன் மனசுல இருந்ததையெல்லாம் ஒளிவு மறைவு இல்லாம கொட்டித் தீர்த்த மாதிரி நானும் என் மனசுல இருந்ததையெல்லாம் ஒளிவு மறைவு இல்லாம கொட்டித் தீர்த்துட்டேன். ஒருவேளை உன்னை என்னால காப்பாத்த முடியாம போய் இருந்தா நான் உன்னப் பத்தி என் மனசுல நினச்சுக்கிறதெல்லாம் உன்கிட்ட விளங்க வைக்க முடியாமலேயே போயிருக்கும்". (உதடுகளை அவ்வளவு அழகாகக் குவித்து சோகத்தையும், துயரத்தையும் கண்களில் தேக்கிக் காண்பிப்பார்)
ஜெயலலிதாவிடம் முழுவதுமாகத் தன் நிலையை விளக்கிவிட்டு புயல் அடித்து ஓய்ந்து போன சூழ்நிலையைக் காண்பிப்பார். பேசி முடித்த பின் கிணற்றின் மேல் கால்களுக்கிடையில் கைகளை கொடுத்து அப்படியே ஒடுங்கிப் போய் உட்கார்ந்திருப்பார். ("இதுக்கு மேலே உனக்கு விளக்க என்னாலாகாது தாயே! புரிஞ்சா புரிஞ்சுக்கோ! இல்லைன்னா உன் இஷ்டம்" என்பது போல.)
போகும் போது,
" நீ செஞ்ச இந்த பைத்தியக்கரத்தனமான காரியத்தை நான் யாருகிட்டேயும் சொல்லல.... நான் வீட்டுக்குப் போறேன்...நீ வரற்தா இருந்தா வரலாம்" (இடது கை காது மடல்களை பிடித்து திருவியபடி ஒரு அற்புதமான மானரிசத்தைக் காட்டுவார்)
என்று சொல்லி விட்டு விரக்தியுடன் செல்லுவார்.
வாவ். என்ன ஒரு காட்சி. ஜெயலலிதாவிடம் கோபமாக வாதம் தொடக்கி, பின் ஜெயாவை பேச முடியாதபடி வாயடைக்கச் செய்து, கோப வார்த்தைகள் கொஞ்சம் கொஞ்சமாக மாறி. மனைவி மேல் கொண்ட உண்மையான அன்பை கனிவான வார்த்தைகளில் கொட்டி. அவள் புரிந்து கொள்ளாத நிலையை குரல்கள் உடைந்து நா தழுதழுக்க விளக்கி, அதுவரை அழாதவர் அதிகமாக அழுது புரளாமல் தேவையான அழுகையை மட்டுமே சிந்தி, அவ்வளவுதான் நம் விதி என்ற விரக்தியோடு இறுதியான ஒட்டிக் கொண்டிருக்கும் சிறு நம்பிக்கையில் 'அவள் திருந்தி வந்தால் வரட்டும்... இல்லையென்றால் அவள் இஷ்டம்' என்ற வெறுப்பு கலந்த விரக்தி சூழ்நிலையைக் காட்ட நம் நடிக தெய்வத்தைத் தவிர எவரால் முடியும்?
ஒரு நடிகன் என்பவன் நடித்து விட்டு சென்று விடுவான்.. அந்த நேரம் நாம் அவனைப் பார்ப்போம். அத்தோடு மறந்து விடுவோம். ஆனால் இந்த நடிகன் அப்படியா?
பாத்திரத்தை உணர்ந்து நடிப்பவனே மகாநடிகன்.
அந்த பாத்திரத்தின் தன்மையை பார்க்கிறவர்களுக்குப் புரிய வைக்கும் காரியத்தையும் வெற்றிகரமாகச் செய்து முடிக்கிறானே... அவன் உலக மகா நடிகன்.
அது மட்டுமல்ல. அந்த உணர்வை உயிருள்ள வரையில் நம் தசை நாளங்களில் பரவச் செய்து நம்மை உணர்வுகளின் சங்கமம் என்ற கயிற்றில் பின்னிப் பினைக்கிறானே... அவன்... அவனை என்னவென்று சொல்வது?!
அவரைத்தான்
நடிகர் திலகம் என்ற நடிப்பு மகான் என்கிறோம்.
டியர் கோபால் சார்,
பட்டியல் ஓ.கே.தான். ஆனால் எங்களை மறந்துவிட்டீர்களே என்று கர்ணனும் சுபாங்கியும் வருத்தப்படுவது கேட்கலையா? ('இரவும் நிலவும் வளரட்டுமே'). - இது எனக்காக.
அவன்தான் மனிதன் மஞ்சு எங்கே?. - இது வாசுவுக்காக.
உயர்ந்த மனிதனின் 'வெள்ளிக்கின்னம்தான்' எங்கே? - இது கோபால் உங்களுக்காக. ..