-
7th October 2013, 12:12 AM
#11
சவாலே சமாளி - சினிமா நூற்றாண்டு விழா சிறப்பு காட்சி
படத்திற்குள் போகும் முன் ஒரு சில நிகழ்வுகளை பகிர்ந்து கொள்ள நினைக்கிறேன். சினிமா நூற்றாண்டு விழாவின் பாகமாக சவாலே சமாளி திரைப்படம் இரண்டு முறை திரையிடப்பட்டது. முதன் முறை உட்லண்ட்ஸ் சிம்பனி அரங்கிலும் இரண்டாம் முறை சத்யம் அரங்கில் செப் 22-ந் தேதி ஞாயிறு அன்றும் பகல் காட்சியாக நடைபெற்றது.
ஞாயிறு noon show-விற்கு சென்றிருந்தோம். நிகழ்ச்சி நடந்து இரண்டு வாரங்கள் ஆகி விட்டன என்ற போதினும் அப்போது அங்கே நிகழ்ந்த சில விஷயங்களை பற்றி சொல்லலாம் என நினைக்கிறேன். அரங்க வளாகத்திற்கு சென்ற போது நல்ல கூட்டம். ஆனால் யாரிடமும் டிக்கெட் இல்லை. என்னவென்று கேட்டால் அரங்க நிர்வாகத்தினர் அரங்கின் capacity -க்கு கொடுத்து விட்டோம் என்கிறார்கள். ஆனால் உள்ளே இருந்து வரும் செய்தியோ வித்தியாசமாக இருக்கிறது. ஒரு குறிப்பிட்ட அமைப்பை சேர்ந்தவர்கள் en bloc ஆக டிக்கெட்டுகளை முன்னரே வாங்கி விட்டனர் என்றும் ஆனால் அவர்கள் படத்திற்கு வர மாட்டார்கள் என ஒரு செய்தி பேசப்படுகிறது. அதற்கு என்ன காரணம் என்று கேட்டால் படத்தின் கதையமைப்பின்படி நாயகனும் நாயகியும் மோதிக் கொள்ளும் காட்சிகள் நிறைய வரும். அதிகமான அளவில் சிவாஜி ரசிகர்கள் இருந்தால் அரங்கத்தில் reaction வேறு விதமாக இருக்கும். அதை தவிர்க்கவே இப்படி என்று விளக்கம்.
படம் ஆரம்பித்து விட்டது. ஆனால் ரசிகர்கள் திரும்பி போகவில்லை. அரங்க நிர்வாகத்தினரோடு ஒரு வாக்குவாதம் நடைபெறுகிறது. அரங்கத்தின் உள்ளே இருக்கைகள் free யாக இருக்கின்றன. அந்த நிலையில் எங்களை அனுமதித்தால் என்ன? என்பது ரசிகர்களின் வாதம். நிரவாகதினரோ நாங்கள் ஏற்கனவே திரையிடப்பட்டிருக்கும் அரங்கத்தின் capacityகேற்ப அனுமதி சீட்டுகளை வழங்கி விட்டோம். அதை வாங்கியவர்கள் வரவில்லையென்றால் அதற்கு நாங்கள் பொறுப்பல்ல. அவர்கள் வரவில்லை என்பதால் வேறு ஆட்களை அனுமதிக்க முடியாது என்கிறார்கள். ரசிகர்கள் விடவில்லை. காசு கொடுத்து அனுமதி சீட்டு வாங்கியவர்கள் வரவில்லையென்றால் நீங்கள் சொல்வது சரி.ஆனால் இன்றைய சூழல் அதுவல்ல. ஏற்கனவே வாங்கி சென்றதாக நீங்கள் சொல்லும் நபர்களும் complimentary டிக்கெட்தான் வாங்கி போயிருக்கிறார்கள்.இப்படி ஒரு சூழலில் இலவச அனுமதி சீட்டு பெற்று சென்றவர்கள் வரவில்லை எனும் போது எங்களை அனுமதிப்பதில் தவறொன்றுமில்லை என்ற வாதத்தை ரசிகர்கள் முன் வைக்க அனுமதி சீட்டு பெற்றவர்கள் வந்தால் நாங்கள் என்ன பதில் சொல்வது என்று நிர்வாகத்தினர் கேட்க, அப்படி அவர்கள் வந்தால் நாங்கள் எழுந்து இருக்கைகளை அவர்களுக்கு தந்து விடுகிறோம் என்று ரசிகர்கள் பதிலளிக்க அதன் பின்னரே அந்த நிபந்தனையின் பேரில் ரசிகர்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.இதனால் படம் தொடங்கி 20-30 நிமிடங்களுக்கு பின்னரேஒரு கணிசமான கூட்டத்தினரால் உள்ளே வர முடிந்தது ஒரு கட்டத்திற்கு பிறகு அனுமதிக்க மாட்டார்கள் என நினைத்து கணிசமான பொதுமக்களும் ரசிகர்களும் திரும்பி சென்று விட்டனர். மிக மிக வேதனையான சம்பவம் இது.
படம் முடிந்து வரும்போது நிர்வாகத்தில் உள்ள ஒருவருடன் ஆப் தி ரெகார்ட் ஆக பேசிய போது அவர் என்ன நடந்தது என்ற தகவலை சொன்னார். மற்ற அரங்குகளைப் போல் அல்லாமல் சத்யம் வளாகத்தில் reservation counter-லேயே இந்த சினிமா நூற்றாண்டு விழா சிறப்பு காட்சிகளுக்கும் டிக்கெட்கள் கொடுக்கப்பட்டிருகின்றன அந்த நேரத்தில் நிர்வாகத்தினரிடம் படம் இபப்டிப்பட்ட கதை சூழலை கொண்டது.படம் திரையிடப்படும் போது மாற்று தரப்பினரும் படத்திற்கு வந்திருந்தால் ஏதேனும் பிரச்சினைகள் வரலாம் என்று யாரோ போய் சொல்லியிருக்கின்றனர் அதை கேட்ட நிர்வாகம் உடனெ டிக்கெட் விற்பனையை நிறுத்தி விட்டது. காட்சிக்கு வந்தவர்களிடம் டிக்கெட் தீர்ந்து விட்டது என சொல்லி விட்டார்கள்.சிவாஜி ரசிகர்களை தவறாக நினைக்கவில்லை என்றும், 120 ரூபாய் டிக்கெட் விலை இருந்த போது கூட கர்ணன் படம் ஓடிய 153 நாட்களிலும் காசு கொடுத்து டிக்கெட் வாங்கி படம் பார்த்தவன் சிவாஜி ரசிகன். ஆகவே இது யாரோ சொன்ன செய்தியால் இல்லை வதந்தியால் வந்த குழப்பம் என்றார். நாங்கள் அவரிடம் சொன்னோம்.இரண்டு நாட்களுக்கு முன்பு உட்லண்ட்ஸ் சிம்பனி அரங்கில் இதே படம் திரையிட்ட போது சத்யம் ஸீசன்ஸ் அரங்கை விட அதிக capacity உடைய சிம்பனி அரங்கம் நிறைந்தது. ஆனால் படம் ஓடிய மூன்று மணி நேரமும் சிவாஜி ரசிகர்கள் நாகரீகம் காத்தார்கள். ஆரவாரம் அலப்பரை எல்லாம் இருந்த போதும் அனைத்தும் லிமிட்க்குள் இருந்தது. அப்படியிருக்க இங்கே எப்படி ஒரு மோதல் போக்கை கடைபிடிப்பார்கள் என்ற கேள்விக்கு அவரிடமிருந்து ஒரு சிரிப்பு மட்டுமே பதில்.
நடிகர் திலகம் இன்றில்லை.12 வருடங்கள் ஓடி விட்டன அவர் இப்பூவுலகை விட்டு நீங்கி.அவருக்கென்று ஒரு அரசியல் கட்சியோ, அமைப்போ,ஆட்சியில் அதிகாரத்தில் பங்கோ இல்லை. அவர் ரசிகர்களும் ஒரே அமைப்பை ஆதரிப்பவர்களில்லை.சிவாஜி மீது "மாறா அன்பு" கொண்டவர்கள் அவர் எந்த சாதனையையும் செய்யவில்லை என்றும் சொல்கிறார்கள்.அவர்கள் கூற்றுப்படியே எந்த சாதனையையும் புரியாத ஒருவரை எந்த அரசியல் அதிகார பின்புலமும் இல்லாத அவர்தம் ரசிகர்களை பார்த்து இத்துணை கோவமும் ஆத்திரமும் ஏன் ஏற்படுகிறது என்பதுதான் புரியாத புதிர். எதிர்ப்பிலே வளர்ந்த நடிகர் திலகம் இன்றும் அதே எதிர்ப்பையே சந்தித்துக் கொண்டிருக்கிறார். அன்றைய நாட்களில் அதிகமாக அவர் முகம் தாங்கிய போஸ்டர்கள்தானே உரம் போட்டு வளர்க்கப்பட்டது. இன்றும் அது வேறு வடிவத்தில் தொடர்கிறது எனபதுதான் வேதனை.
(தொடரும்)
அன்புடன்
Last edited by Murali Srinivas; 7th October 2013 at 12:14 AM.
-
7th October 2013 12:12 AM
# ADS
Circuit advertisement
Bookmarks