புண்பட்டோர் நோய்தீர்க்க புறப்பட்ட புகழ்மணியே !
http://i62.tinypic.com/2nuhpvl.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
Printable View
புண்பட்டோர் நோய்தீர்க்க புறப்பட்ட புகழ்மணியே !
http://i62.tinypic.com/2nuhpvl.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
MaPoSi Birth day - today
http://i58.tinypic.com/nqvehh.jpg
Thanks very much for this posting Vinod Sir. Any news regarding MKT and PUC album sir, as I was informed earlier that Mr. Pammalar is publishing Albums Seniority wise [ so MKT & PUC etc albums would have been released much earlier]. I am only interested in MKT & PUC images HD images from Ashokkumar, Rathanakumar, Raja Mukthi sir.
Raghavendra Sir has posted that NT Album is also due for release soon. Hope both are released at the same time and same venue sir, that is the best Landmark/Trendsetter for everyone sir.
Daily Thanthi Friday Ad from FB
http://i62.tinypic.com/o8uzxf.jpg
Thanks to Mr. Chandran Veerasamy, FB
http://i60.tinypic.com/2mpxw7m.jpg
நீண்ட இடைவெளிக்கு பின்பு இத் திரியினில் பதிவுகளை அசுர வேகத்தில் பதிவு செய்ய வந்திருக்கும் சகோதரர் திரு. வேலூர் ராமமூர்த்தி அவர்களை வரவேற்கும் இத்தருணத்தில் அவர் 2000 பதிவுகள் மேற்கொண்டு அசத்தியமைக்கு பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
http://i58.tinypic.com/qz5650.jpg
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
சமீபத்திய நக்கீரன் (25 - 27 ஜூன் தேதியிட்டது) இதழில் நம் மன்னவனை பற்றிய ஒரு செய்தி. !
http://i59.tinypic.com/35a6j2p.jpg
நம் புரட்சித்தலைவர் தம் உடல் நிலையினையும் பொருட்படுத்தாமல், தம் நண்பருக்காக சிரத்தை மேற்கொண்டு பயணித்த நிகழ்வு, சிறந்த நட்புக்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. " நட்பை வளர்ப்பதே என் லட்சியமாகும் "என்ற தான் பாடிய பாடலுக்கேற்ப வாழ்ந்து காட்டியவர் தான் நம் மனிதர் குல மாணிக்கம். .
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
நம் மக்கள் திலகத்தின் "ஆயிரத்தில் ஒருவன் " காவிய 100வது நாளினையொட்டி, சென்னை முகப்பேர் எம்.ஜி. ஆர். பக்தர்கள் அச்சடித்து விநியோகித்த நோட்டீஸ் ( NOTICE ) முதல் பக்கம் :http://i59.tinypic.com/2qi8ttz.jpg
http://i58.tinypic.com/2nrkk1z.jpg
http://i57.tinypic.com/307oksw.jpg
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
நம் மக்கள் திலகத்தின் "ஆயிரத்தில் ஒருவன் " காவிய 100வது நாளினையொட்டி, சென்னை முகப்பேர் எம்.ஜி. ஆர். பக்தர்கள் அச்சடித்து விநியோகித்த
நோட்டீஸ் ( NOTICE ) இரண்டாவது பக்கம் http://i61.tinypic.com/5agcup.jpg
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
திரு. வினோத் அவர்கள் அறிவது -
நம் ஒப்பற்ற இதய தெய்வம் நடித்த " புதிய பூமி " பற்றிய பதிவுகள் வெகு அருமை. " சின்னவளை முகம் சிவந்தவளை " என்ற இனிமையான பாடலில், " வளை " என்ற சொல் 17 முறை இடம் பெறுகிறது ..
பொய்யும், புரட்டும் துணையாய் கொண்டு அன்றைய தினம் ரசிகர்களை ஏமாற்றி புளுகு மூட்டைகளை அவிழ்த்து விட்ட பத்திரிகை செய்தியினை உதாசீனப்படுத்தும் படி தாங்கள் கேட்டுக் கொண்டதை நான் ஆமோதிக்கிறேன். பி.ஆர். பந்துலு, ஜி. என். வேலுமணி ஆகியோர் தங்கள் இறுதி காலம் வரை தொடர்ந்து தயாரித்து வந்த படங்களின் நாயகன் நம் மக்கள் திலகம் தான். இந்த ஒரு உண்மையே போதும் அந்த பத்திரிகை எந்த அளவுக்கு காழ்ப்புணர்ச்சி கொண்டு செய்திகள் வெளியிட்டது என்று.
நம் மக்கள் திலகத்தின் புகழை பரப்பும் விதமாக, பம்மலாரின் மற்றுமோர் மலர் மாலை வெளிவருவது மகிழ்ச்சிக்குரியது. திரியினில் தங்களின் பங்களிப்பு பிரமிக்க வைக்கிறது. நன்றி திரு. வினோத் அவர்களே !
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
MY DEAR BROTHER KALIYAPERUMAL,
YOU ARE RIGHT. WE HAVE BEEN CULTIVATED AND DEVELOPED BY OUR BELOVED GOD M.G.R. IN SUCH A NICE MANNER. WE NEVER INTERVENE IN OTHERS' AFFAIRS. INSPITE OF OUR REPEATED ADVICES THEY CONTINUE TO ACT IN A LUNATIC MANNER. IT INDICATES THAT THEY ARE NOT ABLE TO DIGEST WITH THE GRAND SUCCESS OF OUR BELOVED GOD's "AYIRATHTHIL ORUVAN" AND IT's WORLD RECORD, CREATED ON SUNDAY, the 22nd JUNE 2014 DURING 100th DAY CELEBRATIONS, ON ITS RE-RELEASING AFTER DIGITALISED.
AS POINTED OUT BY YOU, LET US ALL IGNORE THEIR BASELESS AND TRUTHLESS ARGUMENTS & DEBATE.
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! ! அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
http://i59.tinypic.com/hs515i.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
Dear Brother Ramamoorthy,
LET US NOT CHALLENGE WITH PEOPLE WHO REFUSED TO THINK AND INDIGESTIVE NATURE. THE SAME " TIMES OF INDIA " IN ITs NEXT DAY EDITION AFTER ' AYIRATHTHIL ORUVAN ' 100th DAY CELEBRATIONS, CROWNED OUR BELOVED GOD M.G.R. REMARKING BOLDLY WITH RED LETTERS AS " RETURN OF THE KING " AND MUCH TRIBUTE & COMPLIMENTS WERE GIVEN TO OUR MAKKAL THILAGAM M.G.R.
YOU CONTINUE YOUR POSTINGS AS USUAL IN A SPEEDY MANNER. THANK YOU FOR YOUR LARGE NUMBER OF POSTINGS ON THE 100th DAY CELEBRATIONS OF ' AYIRATHTHIL ORUVAN" AT ALBERT THEATRE.
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
DEAR BROTHER LOGANATHAN,
YOU HAD IMPRESSED THE VIEWERS OF MAKKAL THILAGAM THREAD BY PUBLISHING THE PHOTOGRAPHS TAKEN DURING THE 100th DAY CELEBRATIONS OF OUR BELOVED GOD M.G.R.'s ' AYIRATHTHIL ORUVAN ' HELD AT ALBERT THEATRE, CHENNAI ON 22nd JUNE 2014.
TO A GREATER EXTENT YOU ERASED OUT THE FEELINGS OF MANY M.G.R. FANS & DEVOTEES WHO COULD NOT ATTEND THE FUNCTION FOR VARIOUS REASONS, ON THAT DAY, AS POINTED OUT BY Mr. KALIYAPERUMAL.
THANK YOU FOR THE INTEREST SHOWN IN YOUR EFFORTS OF EXHIBITING THE IMAGES, IMMEDIATELY AFTER THE FUNCTION.
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
http://i59.tinypic.com/2pzjqcn.jpg
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
பாவம் ...முகப்பைர் சகோதரர்கள் ஆதங்கம் புரிகிறது !
முதற்க்கண் சகோதரர்கள் அறிந்துகொள்ளவேண்டியது - படம் பார்க்க வந்தது சபா, பள்ளி, விளம்பர கம்பெனி என்ற கட்டிடங்கள் அல்லவே ?
சபா, பள்ளி விளம்பர கம்பெனி இவைகள் அனைத்திலும் இருப்பது மனிதர்கள்தான். மிருகங்கள் அல்ல.
ஒரு பள்ளியில் படிக்கும் குழந்தைகளை அந்த பள்ளி இந்த காலத்தில் ஒரு திரைபடத்திற்கு அழைத்து வருகிறார்கள் என்றால் இந்த மாணவ சமுதாயம் கர்ணன் திரைப்படத்தில் கற்றுக்கொள்ள எவ்வளவோ நல்ல விஷயங்கள் இருக்கிறதென்று பொருள் !
இது கூட புரிந்துகொள்ள முடியாமல் குற்றம் காணும் மடமையை காழ்புணர்ச்சியை என்னவென்று சொல்வது ?
ஒவொருவராக வந்தால் என்ன ஒரு குழுவாக வந்தால் என்ன ? பொத்தம் பொதுவாக ஏதோ கூறவேண்டும் என்பதற்காக ஒரு நோட்டீஸ் !
1964 இல் கர்ணன் படம் வெளிவந்ததில் இருந்து இப்படி காழ்புணர்ச்சி தாங்கிய நோட்டீஸ் கலாசாரம் !
எந்தெந்த சபாக்கள் எந்த தேதியில் வந்து பார்த்தார்கள் ?
எந்தெந்த பள்ளிகள் எந்த தேதியில் வந்து பார்த்தார்கள் ?
எந்த விளம்பர கம்பெனி எந்த தேதியில் வந்து பார்த்தார்கள் ?
அப்படி வந்தாலும் அதில் ஏதாவது தவறு உள்ளதா ? அல்லது வரகூடாது என்ற சட்டமா ?
தரமான திரைப்படம் என்றால் பள்ளி, சபாக்கள் என்ன...ஐநா சபாவே வந்தாலும் ஆச்சர்யபடுவதற்கில்லை. !
கர்ணன் திரைப்படத்தை பார்க்கவேண்டும் என்ற ஆவல் கொண்ட அனைவரும் அது சபா என்றாலும் பள்ளி என்றாலும் அணுகியதால் சிறப்பு காட்சிகள் காட்டப்பட்டது !
MOREOVER , FOR YOUR INFORMATION...It was only special shows that was conducted over and above the regular shows ! Please understand this first !
For Sabaa (or) for Schools only special additional shows was screened and this was NOT part of regular shows !
So...the underlined component in the notice is just another blough just to quench their own irritation !
ஏதோ உங்களுடைய ஆதங்கத்தை இப்படி நோட்டீஸ் விநியோகம் , போஸ்டர் ஒட்டுதல் மூலமாக தீர்த்துகொள்கிறீர்கள்.
கர்ணனுக்கு அணுகியவர்கள் ஏன் ஆயிரத்தில் ஒருவன் திரைபடத்திற்கு சபாவோ, பள்ளிகளோ வரவில்லை ? சிறப்பு காட்சிக்கு அணுகவில்லை ? இப்படி ஒரு கேள்வி இந்த நோட்டீஸ் படிப்பவர் மூலம் அவர்கள் மனதில் எழும் !
எழட்டுமே ! விடை அப்போது தானாக கிடைத்துவிடும் !
மக்கள் திலகம் அவர்கள் போலீஸ் உடையில் நின்றபடி உள்ள ஒரு போஸ்டர் அதில் கர்ணனின் வெற்றி பொறுக்க முடியாத வாக்கியங்கள். உலகமே வெற்றியை கொண்டாடியபோது, உங்களுடைய போஸ்டர் மட்டும் சென்னையில் காழ்புணர்ச்சியை பறைசாற்றி ஒட்டப்பட்டது.
இப்போது அதே போஸ்டரில் உள்ள POINTS உங்களுக்கு என்று வரும்போது அது தவறான தகவல்...அது BASELESS இப்படி பல வார்த்தை ஜாலங்கள் !
தவறு யார் செய்தாலும் தவறுதான் !
மறைமுகமாக இப்படி நோட்டீஸ் விதரணம் ! போஸ்டர் வழி பொய் இப்படி எப்படி கர்ணன் திரைப்படத்தை பற்றி யார் அவதூறு கூறினாலும் கர்ணனின் வெற்றியை உலகம் அறிந்துள்ளது...விநியோகஸ்தர்கள் உணர்ந்துள்ளனர் !
இரு திரைப்படங்களை பற்றியும் அனைவருக்கும் தெரிந்துள்ளது..! பிறகு ஏன் இந்த நிலைமை !
Dear Yukesh Sir,
You know what would happen if the mail are not allowed to publish immediately.
I hope you had seen...that screen shot...will be published after moderation or something it was written in that screen...
I will re-inforce it again..by this weekend. please send me a mail reminder on Friday, so that i shall send a mail on saturday morning
Thanks for asking
regards
RKS
அன்பு சகோதரர் திரு. ரவிச்சந்திரன் அவர்கள் அறிவது
கோவை மாநகரத்தில் நம் எழில் வேந்தன் எம். ஜி. ஆர்.அவர்களின் காவியங்கள் படைத்து வரும் சாதனை தகவல்களையும், அழகிய வடிவமைப்புடன் காலத்தை வென்ற காவிய நாயகனின் புகைப்படங்களையும், நிழற்படங்களையும் வெளியிட்டு மக்கள் திலகம் திரியின் பார்வையாளர்களை களிப்புக் கடலில் மூழ்கடித்து விடுகிறீர்கள். ! என்னே தங்கள் கை வண்ணம் ! வெகு சிரத்தையுடன் தாங்கள் மேற்கொள்ளும் பதிவுகள் அனைத்தும் வெகு அருமை.
தொடரட்டும் தங்கள் சீரிய பணி !
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
MAKKAL THILAGAM M.G.R IN MANTHIRIKUMARI -24.6.1950
65TH ANNIVERSARY BEGINS 25.6.2014
மந்திரிகுமாரி (1950)
1950-ம் ஆண்டு மாடர்ன் தியேட்டர்ஸ், வடுவூர் துரைசாமி ஐயங்கார் எழுதிய ""திகம்பர சாமியார்'' கதையை, அதே பெயரிலும், மந்திரிகுமாரி என்ற இன்னொரு படத்தையும் தயாரித்தது. இரண்டு படங்களுமே வெற்றிப் படமானது என்றாலும், மந்திரிகுமாரியில், எம்.ஜி.ஆர். நடிப்பும், கலைஞரின் வசனமும், மக்களை அதிகம் கவர்ந்தது. மந்திரிகுமாரியின் கதை ஒரு புராண கதையின் பின்னணியில் உருவாக்கப்பட்டிருந்தது.
கொள்ளை அடிப்பதையும், கொலை பாதகம் செய்வதையும் தொழிலாக செய்து வருகிறான் ஒரு கொடியவன். அந்த நாட்டு மக்கள் அரசனிடம் சென்று முறையிடுகிறார்கள். அந்தக் கொடியவனையும், அவன் கூட்டத்தையும் கூண்டோடு பிடிக்க, தளபதி வீரமோகன் நியமிக்கப்படுகிறான். அவனது முயற்சிகளுக்கு முட்டுக்கட்டை போட்டு கெடுத்து வருகிறார் ராஜகுரு.
அரசனின் மகள் ஜீவரேகா, ஒரு பேரழகி. மந்திரியின் மகள் அமுதாவும், அவளும் நெருங்கிய தோழிகள்.
தளபதி வீரமோகனின் தோற்றத்தையும் அவனது வீரதீரச் செயல்களிலும் மனதைப் பறிகொடுத்த ராஜகுமாரிக்கு அவன் மேல் காதல் பிறக்கிறது. ராஜகுருவின் மகன் பார்திபனோ, ஜீவரேகாவை ஒருதலையாகக் காதலிப்பதோடு, அவளது அன்பையும் காதலையும் பெற பல வழிகளில் முயற்சிக்கிறான்.
பார்திபன், ஜீவரேகாவுக்கு தன்னைச் சந்திக்க வரும்படியாக கடிதம் எழுதி, ஒரு சேவகனிடம் கொடுக்கிறான். தற்செயலாக, அந்தக் கடிதத்தைப் பார்த்த மந்திரிகுமாரி அமுதா அதிர்ச்சியடைகிறாள். காரணம், பார்திபன் அவளை காதலிப்பதாகவும், கல்யாணம் செய்து கொள்வதாகவும் உறுதியளித்திருந்தான். கடிதத்தைப் பார்த்த அவளுக்கு ஒருவேளை இருவருக்கும் காதல் இருக்குமோ என்று சந்தேகம் தோன்றுகிறது.
ஒருநாள் ஜீவரேகாவைப் பின்தொடர்ந்து உண்மையை தெரிந்து கொள்ளச் சென்ற "அமுதா'வை, பார்திபன் எதிர்பாராமல் சந்திக்கிறான். காதல் மொழி பேசி, அவளை மயக்கி தன் வலையில் விழச் செய்து விடுகிறான் அவன்.
வீரமோகன், கொள்ளைக் கூட்டத் தலைவனை கையும் களவுமாகப் பிடித்து விடுகிறான். அவன் வேறு யாருமல்ல, ராஜகுருவின் மகன் பார்திபன்தான். பொதுமக்களுக்கோ மகிழ்ச்சி. ஆனால் அரசவையில் குழப்பம். விவரம் அறிந்த மந்திரிகுமாரி அமுதா துடிக்கிறாள். எப்படியும் அவனுக்கு மரணதண்டனை நிச்சயம் கிடைக்கும்.
அவனைத் திருத்திவிடலாம், என்ற எண்ணத்தில் தன் தந்தை மந்திரி நீதிதேவனிடம் கெஞ்சுகிறாள். ஆனால் அவரோ பாசத்துக்காக நீதியை பலியிட விரும்பவில்லை என்று கண்டிப்பாகச் சொல்லி விடுகிறார். அவனுக்குத் தீர்ப்பளிக்குமாறு மந்திரி நீதிதேவனிடம் கூறுகிறார் அரசர். அவர் ஒரு தேவி பக்தர் என்பதால் தெய்வத்திடம், நீதி கேட்டு வேண்டி நிற்கிறார். அவனுக்கு தூக்குத் தண்டனை விதிக்க முடிவு செய்யப்படும் நேரம், தேவியின் சிலையில் ஒரு அசரீரி குரல் ஒலிக்கிறது.
""பார்திபன் குற்றமற்றவன். அவனை விடுதலை செய்'' என்ற அருள்வாக்கு உத்தரவிடுகிறது. அவர் அதை உண்மை என்று எண்ணி, மன்னரிடம் சென்று கூறி அவனை விடுதலை செய்து காப்பாற்றுகிறார். தளபதி வீரமோகனுக்கு ஒரே குழப்பம்.
ராஜகுருவின் சூழ்ச்சியால் வீரமோகன் நாடு கடத்தப்படுகிறான். பார்திபன் தளபதியாக்கப்படுகிறான். மந்திரிகுமாரி அமுதவல்லிக்குக் கணவனாகிறான்.
நாடு கடத்தப்பட்ட வீரமோகனை ராஜகுரு கொடுமையான முறையில் நடத்தி அதிகார பலத்தால் அடித்து விடுகிறார். இந்தச் சம்பவம், மன்னருக்கும் ராஜகுருவுக்கும் இடையே மனக்கசப்பை ஏற்படுத்துகிறது. ராஜகுருவுக்கு மன்னனாகும் ஆசை துளிர்விட்டு வளர்கிறது. ஒரு கொடியவன் அவர் எண்ணத்திற்கு தூபம் போடவே, அவர் எண்ணம், வலுவடையத் தொடங்குகிறது.
அரசகுமாரி ஜீவரேகா நாடு கடத்தப்பட்ட தன் காதலன் வீரமோகனைத் தேடிப் புறப்படுகிறாள். பார்திபன், மந்திரிகுமாரியை மணமுடித்த பின்பும் ஜீவரேகாவை, அடைய வேண்டும் என்ற எண்ணத்தை மாற்றிக் கொள்ளவில்லை.
வீரமோகன் இருக்கும் இடம் தனக்குத் தெரியும் என்று யாரோ ஒருவன் மூலம் சொல்ல வைத்து அவளை தனது குகைக்கு வரவழைத்து விடுகிறான்.
அங்கே, அவள் கற்புக்கு களங்கம் ஏற்படப் போகும் தருணத்தில் ஆண் உடை தரித்து அவளைப் பின் தொடர்ந்து வந்த மந்திரிகுமாரி அமுதா, பார்திபனுடன் மோதுகிறாள். ஜீவரேகாவைக் காப்பாற்றித் தன் வீட்டுக்கு அழைத்துச் செல்கிறாள்.
அமுதாவை பழிவாங்க திட்டம் தீட்டுகிறான் பார்திபன். காதல் மொழி பேசி, மலை உச்சிக்கு அழைத்துப் போய், அங்கிருந்து அவளை தள்ளிவிட்டு- விபத்து என்று சொல்லிவிடும் திட்டத்தில் அவளை அழைத்துக் கொண்டு மலைஉச்சிக்குப் போகிறான். உச்சியில், அமுதாவை கொன்று விடும் திட்டத்தை சொல்லவே, அவள் இறக்கப் போவதில் வருத்தமில்லை, என் கணவரை, நான் வணங்க வேண்டாமா? அதனால் உங்களை மூன்று முறை சுற்றி வணங்கிய பின்பு தங்கள் விருப்பம் போல என்னை தள்ளிக் கொலை செய்து விடுங்கள் என்று சொல்லி, மூன்றாவது சுற்று முடியும் போது தன் கணவனை அங்கிருந்து தள்ளி கொன்று விடுகிறாள்.
வீரமோகன் ஜீவரேகாவைத் தேடி அரண்மனைக்கு வருகிறான். அரசனைக் கொல்ல ராஜகுரு முயல்கிறான். மந்திரிகுமாரி மேல் கத்தி வீசப்பட்டு விடுகிறது. தேவி சிலைக்கு பின்னால் அருள்வாக்கு பேசியது முதல், தன் கணவன் பார்திபன் தன்னை கொல்ல முயற்சித்தது.
ஜீவரேகாவை, அவனிடமிருந்து காப்பாற்றியது போன்ற எல்லா உண்மைகளையும் சொல்லி, ஜீவரேகாவையும் வீரமோகனையும் இணைத்து வைத்து விட்டு இறந்து விடுகிறாள். ராஜகுருவின் சூழ்ச்சி அம்பலமாகி விடுகிறது. அவர் சிறைப்படுத்தப்படுகிறார்.
கனல் பறக்கும் வீரமான வசனங்களைப் போலவே, கருணாநிதியின் காதல் வசனங்களும், பாராட்டும்படி இருந்தது படத்தின் வெற்றிக்கு ஒரு முக்கிய காரணமாகும்.
பார்திபனாக நடித்த எஸ்.ஏ. நடராஜன் தனக்கே உரித்தான, தனித்தன்மையான குரலாலும் வித்தியாசமான நடிப்பாலும், பாராட்டுக்களைத் தட்டிச் சென்றார். ராஜகுருவாக, எம்.என். நம்பியார் சிறப்பாக நடித்திருந்தார். வீரமோகன் பாத்திரத்தில் எம்.ஜி.ஆர். தன் நடிப்பாலும், சண்டைக் காட்சிகளில் தனது வாள் வீச்சாலும் புகழை வளர்த்துக் கொண்டார். அவருக்கு ஜோடியாக ஜி. சகுந்தலா. மந்திரிகுமாரி டைட்டில் ரோலில் நடித்த மாதுரிதேவி, சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.
"உலவும் தென்றல் காற்றினிலே'. "அந்தி சாயிர நேரம்', "எருமைக் கன்னுக்குட்டி', "வாராய், நீ வாராய்', "அன்னமிட்ட வீட்டிலே' போன்ற அத்தனை பாடல்களும் இன்றைய கால கட்டத்திலும் விரும்பிக் கேட்கும் பாடல்களாகும்.
தரமான படப்பிடிப்பும் திறமையான டைரக்ஷனும், வசனமும், பாடல்களும் நடிப்பும், ஒன்றோடு ஒன்று இணைந்து விட்டதால், மந்திரிகுமாரி மறக்க முடியாத படமாகவும் வெற்றிப் படமாகவும் அமைந்துவிட்டது.
நடிக, நடிகையர்
எம்.ஜி. ராமச்சந்திரன், எம்.என். நம்பியார், எஸ்.ஏ. நடராஜன், சி.வி. நாயகம், சிவசூரியன், கே.வி. சீனிவாசன், ஏ. கருணாநிதி, மாதுரிதேவி, ஜி. சகுந்தலா, டி.பி. முத்துலட்சுமி, அங்கமுத்து மற்றும் பலர்.
திரைக்குப்பின்னால்...
கதை வசனம் : மு. கருணாநிதி
இசை : ஜி. ராமநாதன்
தயாரிப்பு : மாடர்ன் தியேட்டர்ஸ்
டைரக்ஷன் : டி.ஆர். சுந்தரம்,
எல்லிஸ். ஆர்.டங்கன்.
COURTESY - CINEMA EXPRESS
Email PrintDelicious Digg Facebook கருத்துக்கள்
மந்திரிகுமாரியின் கதாநாயகனாக யாரைப் போடுவது என்று சுந்தரம் யோசித்துக் கொண்டிருந்தார். ஏற்கனவே கருணாநிதி வசனம் எழுதிய ராஜகுமாரி, மருதநாட்டு இளவரசி ஆகிய படங்களில் எம்.ஜி.ஆர். நடித்திருந்ததால், அவருக்கும், கருணாநிதிக்கும் நெருங்கிய நட்புறவு ஏற்பட்டிருந்தது. எனவே, கதாநாயகன் வேடத்துக்கு எம்.ஜி.ஆரை கருணாநிதி பலமாக சிபாரிசு செய்தார்.
“ராஜகுமாரி” படத்தில் எம்.ஜி.ஆர். கதாநாயகனாக நடித்திருந்தாலும், தொடர்ந்து அவருக்கு கதாநாயகன் வேடம் கிடைக்கவில்லை. சுந்தரமும் உடனடியாக அவரை கதாநாயகனாகத் தேர்வு செய்யாமல், “அவருக்கு தாடையில் பெரிய குழி இருக்கிறதே” என்றார். “அங்கு சிறிய தாடியை ஒட்ட வைத்து விட்டால் சரியாகிவிடும். தளபதி வேடத்துக்குப் பொருத்தமாக இருப்பார். சண்டைக் காட்சிகளில் பிரமாதமாக நடிப்பார்” என்று கருணாநிதி எடுத்துக் கூறினார். அதன்பின் எம்.ஜி.ஆரை ஒப்பந்தம் செய்தார் சுந்தரம்.
மந்திரிகுமாரியில் வில்லன் வேடம் முக்கியமானது. அதற்கு நாடக நடிகர் எஸ்.ஏ.நடராஜன் தேர்வு செய்யப்பட்டார். மற்றும் ராஜகுமாரி வேடத்துக்கு ஜி.சகுந்தலா, மந்திரிகுமாரி வேடத்துக்கு மாதுரிதேவி, ராஜகுரு வேடத்துக்கு எம்.என். நம்பியார் ஒப்பந்தமானார்கள்.
“மந்திரி குமாரி”யின் கதை, திருப்பங்கள் நிறைந்தது. முல்லை நாட்டு மன்னரின் மகள் ஜீவரேகவும் (ஜி.சகுந்தலா) மந்திரியின் மகள் அமுதாவும் (மாதுரிதேவி) ஆருயிர் தோழிகள். தளபதி வீரமோகனை ராஜகுமாரி காதலிக்கிறாள்.
மன்னரை ஆட்டிப்படைக்கும் ராஜகுருவின் (எம்.என்.நம்பியார்) மகன் பார்த்திபன் (எஸ்.ஏ.நடராஜன்) கொடூரமானவன். பகலில் ராஜகுருவின் மகன். இரவில் பயங்கர கொள்ளைக்காரன். “கொள்ளையடிப்பது ஒரு கலை” என்பது அவன் கொள்கை.
மந்திரிகுமாரி அமுதாவைக் கண்டதும் அவளை அடையத்துடிக்கிறான். அவனுடைய சுயரூபத்தை அறியாத அவள், அவனை மணக்கிறாள். கொள்ளைக் கூட்டத்தைக் கண்டு பிடிக்கும் முயற்சியில் தளபதி ராஜமோகன் ஈடுபட்டு, பார்த்திபனை பிடித்து அரசவையின் முன் நிறுத்துகிறான். ஆனால் ராஜகுருவின் சூழ்ச்சியால் பழி ராஜமோகன் மீது விழுகிறது.
தன் கணவன் கொடியவன் _ கொள்ளைக்காரன் என்பதை, அமுதா அறிந்து கொள்கிறாள். அவனைத் திருத்த முயல்கிறாள். உண்மையை அறிந்து கொண்டு விட்டாளே என்ற ஆத்திரத்தில், அவளைத் தீர்த்துக்கட்ட பார்த்திபன் முடிவு செய்கிறான்.
“வாராய் நீ வாராய்” என்று பாட்டுப்பாடி, அவளை மலை உச்சிக்கு அழைத்துச் செல்கிறான். அங்கிருந்து அவளைத் தள்ளிவிட அவன் முயற்சி செய்யும்போது, “சாவதற்கு முன் உங்களை மூன்று முறை சுற்றி வந்து வணங்க அனுமதியுங்கள்” என்று வேண்டுகிறாள், அமுதா.
அதற்கு அவன் சம்மதிக்கிறான். மூன்றாவது முறை சுற்றி வரும் போது, அவனை மலை உச்சியில் இருந்து கீழே தள்ளி விடுகிறாள். அவள் மூலம், உண்மையை அறிகிறார், அரசர். ராஜகுரு சிறைப்படுத்தப்படுகிறார். அரசகுமாரியும், தளபதியும் ஒன்று சேருகின்றனர்.
ஆரம்பத்தில் “மந்திரிகுமாரி”யை எல்லிஸ் ஆர்.டங்கன் டைரக்ட் செய்தார். அவர் அவசரமாக அமெரிக்கா போக வேண்டி இருந்ததால், டைரக்ஷனை டி.ஆர்.சுந்தரம் தொடர்ந்தார். சென்சார் கெடுபிடியை சமாளித்து, 1950_ல் படத்தை வெளியிட்டார், டி.ஆர்.சுந்தரம். படம் மகத்தான வெற்றி பெற்றது.
கதை, வசனம், நடிப்பு, இசை எல்லாமே இதில் சிறப்பாக அமைந்திருந்தன. குறிப்பாக, கருணாநிதியின் வசனங்கள் கூர்மையாக அமைந்திருந்தன. “அனல் பறக்கும் வசனம்; கனல் தெறிக்கும் நடிப்பு” என்று விளம்பரம் செய்தார்கள்.
நம்பியாருக்கும், எஸ்.ஏ.நடராஜனுக்கும் இடையே நடைபெறும் ஒரு உரையாடல்:
“பார்த்திபா! நீ கொள்ளையடிப்பதை விட்டுவிடக் கூடாதா?”
“கொள்ளை அடிப்பதை விட்டு விடுவதா? அது கலையப்பா, கலை!”
“என்ன! கொள்ளையடிப்பது கலையா?”
“ஆம் தந்தையே! அது கலைதான். வில்லில் இருந்து புறப்படும் அம்பு எத்தனையோ உயிர்களைக் குடிக்கிறது. ஆனால், வில்வித்தை என்ற பெயரால், கொலை அங்கே கலையாகிறது. ஓவியக் கலைஞன், பெண்ணின் அங்கங்களை வரைந்து காட்டுகிறான். ஓவியக் கலையின் பெயரால், காமம் அங்கே கலையாகிறது. அதுபோல இதுவும் ஒரு கலைதான்!”
“இந்தக் கலையை விட்டுவிடக் கூடாதா?”
“கொக்கு மீனைப் பிடிக்காமல் இருந்தால், பாம்பு தவளையை விழுங்காமல் இருந்தால், நானும் என் கலையை விட்டு விடுவேன்.” இத்தகையை வசனங்கள் ஏராளம்.
“கொள்ளை அடிப்பதை கலை என்று கருணாநிதி கூறுகிறார்” என்று மாற்றுக் கட்சியினர் எதிர்ப்புக் குரல் எழுப்பினர்.
அதற்குக் கருணாநிதி கூறிய பதில்: “கொள்ளை அடிப்பதும் ஒரு கலை என்று, அப்படத்தில் தீயவன் ஒருவன்தான் கூறுகிறான். கடைசியில் அவன் அழிந்து போகிறான். ராமாயணத்தை எழுதியவர், கூனி பாத்திரத்தையும் படைத்தாரே, கூனியின் சுபாவம் அதை எழுதியவருக்கு சொந்தமானதா? மகாபாரதத்தை எழுதியவர், சகுனி பாத்திரத்தைப் படைத்தாரே. அப்படியானால் அவர் சகுனியின் செய்கைகளை ஆதரிப்பதாக அர்த்தமா?”
_ இவ்வாறு எதிர்ப்பாளர்களுக்குப் பதில் அளித்தார், கருணாநிதி.
எம்.ஜி.ஆர், நம்பியார், மாதுரிதேவி ஆகிய அனைவரும் நன்றாக நடித்திருந்தபோதிலும், புதிய பாணியில் பேசி நடித்த எஸ்.ஏ.நடராஜன் பெரும் புகழ் பெற்றார்.
(மந்திரிகுமாரியைத் தொடர்ந்து, எஸ்.ஏ.நடராஜனுக்கு நிறைய வாய்ப்புகள் வந்தன. கதாநாயகனாகவும் நடித்தார். ஆனால் அதில் அவர் சோபிக்க முடியவில்லை. மந்திரிகுமாரிக்குப் பிறகு, அவருக்கு பெயர் சொல்லும் படமாக “மனோகரா” மட்டுமே அமைந்தது.)
“மந்திரிகுமாரி”யின் பாடல்களை கா.மு.ஷெரீப், மருதகாசி ஆகியோர் எழுதினர். ஜி.ராமநாதன் இசை அமைத்தார். திருச்சி லோகநாதனும், ஜிக்கியும் பாடிய “வாராய், நீ வாராய்” என்ற பாடல், இன்றைய ரசிகர்கள் கூட விரும்பும் பாடலாக விளங்குகிறது
நன்றி : மாலை மலர்
"மந்திரிகுமாரி'யின் மூலம், பிரபலமான கதாநாயக அந்தஸ்துக்கு உயர்ந்தது எம்.ஜி.ஆர்., மட்டுமல்ல, வில்லனாக நடித்த எம்.என்.நம்பியாரும் தான். ஏற்கனவே, கதாநாயக அந்தஸ்தைப் பெற்று இருந்த எம்.ஜி.ஆர்., மிகவும் பிரபலமாகப் பேசப்பட்டது, "மந்திரிகுமாரி'யின் மூலம்தான். நம்பியாரும் அவ்வாறே தலையை மொட்டை அடித்தும், அவர் ராஜகுருவாக நடித்ததையும் எப்படி மறக்க முடியும்?
ஆக, மந்திரிகுமாரி மூலம் பலர், பிரபலமடைந்தனர் என்றால், அதை யாராலும் மறுக்கவோ, மறைக்கவோ முடியாது. ரிலீஸ் செய்யப்பட்ட தேதியிலிருந்து, அந்தப்படம் வசூலில் சாதனை படைத்தது எனலாம். இந்தப் படத்தின் பல பகுதிகள் எடுக்கப்படாமல் இருக்கும் போதே, எல்லீஸ்.ஆர்.டங்கன், ஏதோ அவசர வேலையின் காரணமாக அயல்நாடு சென்றுவிட, பாக்கி எல்லா வேலைகளையும் டி.ஆர்.சுந்தரம் தான் செய்தார். படம் சென்சாருக்குப் போன போது, சிறு பிரச்னைகள் தலைதூக்கின. அதையும் மிகவும் நன்றாக ஒழுங்குபடுத்தி, படத்தை ரிலீஸ் செய்தார் டி.ஆர்.சுந்தரம்.
கலைத்துறையிலே பெரிய வெற்றியைத் தந்த மந்திரிகுமாரி படம்
என்னுடைய அனுபவத்தையே சொல்ல வேண் டுமேயானால், எல்லோரும் நாடகங்களை, ஓரங்க நாடகங் களை எழுதி வானொலிக்கு அனுப்பி, வானொலி நாடகமாக நடத்தப்பட்ட அந்தக் கால கட்டத்தில் 1940 என்று கருதுகிறேன் - அப்போது நான் குண்டலகேசி இலக்கியத்தை அடிப்படை யாகக் கொண்டு ஓரங்க நாடகம் ஒன்றை எழுதி திருச்சி வானொலி நிலையத்திற்கு அனுப்பி வைத் திருந்தேன். அது வெளியிடப்படவும் இல்லை, திரும்பி வரவும் இல்லை.
திரும்பி வந்திருந்தால் நிம்மதி அடைந்திருப்பேன். ஆனால் வரும் வரும் என்று காத்திருந்து அது வராமலே நின்று விட்டது. அதற்குப் பிறகு அதை விரிவுபடுத்தி மந்திரி குமாரி என்ற பெயரில் நாடகமாக எழுதி, கே.என். ரத்தினம் என்ற நண்பருக்கு -அவருடைய நாடகக் குழுவிற்கு அதைத் தந்தேன். அவர்கள் அந்த நாடகத்தை குடந் தையிலே நடத்திய போது, அதைக் கண்ணுற்ற பிரபல இயக்குநர் சேலம் டி.ஆர். சுந்தரம் அவர்கள், அந்த நாடகத்தைப் பார்த்து வியந்து - இந்தக் கதையை யார் எழுதியது என்று கேட்டு - அருகிலே இருந்த என்னுடைய அருமை நண்பர்கள் கா.மு. ஷெரீப், மருதகாசி போன்றவர்கள் எல்லாம், நான் எழுதியது என்று சொன்ன பிறகு, அவர்கள் என்னை அழைத்து இதை நாங்கள் படமாக ஆக்குகிறோம், தருவீர்களா என்று கேட்டார்கள்.
ஒப்புக் கொண் டேன். அதுதான் எம்.ஜி.ஆர். நடித்த மந்திரிகுமாரி - இது உங்களுக்கெல்லாம் தெரியும். அந்தப் படம் எவ்வளவு பெயர் பெற்றது, புகழ் பெற்றது, வசூலை அள்ளிக் கொடுத்தது என்பதெல்லாம் கலைத் துறையிலே உள்ள நண்பர்களுக்கு நன்றாகத் தெரியும். அதைப் பார்த்த ரசிகர்களிலே பலருக்கும் நன்றாகத் தெரியும்.
Courtesy - thiru mu.ka.
]http://i50.tinypic.com/2q3q26w.jpg[/QUOTE]
இனிய நண்பர் திரு சைலேஷ் சார்
மக்கள் திலகம் திரியில் தாங்கள் கேட்டிருந்த தியாகராஜாபாகவதர் - சின்னப்பா பட ஆல்பம் பற்றிய தகவல் .
திரு பம்மலார் அவர்கள் இதுவரை தியாகராஜாபாகவதர் - சின்னப்பா பட ஆல்பம் வெளியிடவில்லை .
மக்கள் திலகத்தின் மலர் மாலை -2 இன்னும் வெளியாகவில்லை .விரைவில் அதற்கான அறிவிப்பு வெளியாகும் .
அன்புடன்
வினோத்
http://i1170.photobucket.com/albums/...psc12ede16.jpg
அந்த காலம் தான் நன்றாக இருந்தது....!
பேருந்துகுள் கொண்டுவந்து மாலைமுரசு விற்பார்கள் .,
.
எந்த நிறுத்தத்தில் ஏறினாலும்
பேருந்தில் உட்கார இடம் கிடைக்கும் ..,
.
மிதி வண்டி வைத்திருந்தோம்.,
.
எம் ஜி ஆர் உயிரோடு இருந்தார்.,
.
கலைஞரின் அறிக்கைகளை தேடி படித்தார்கள்.,
.
எல்லா வீடுகளிலும்
முதல் மரியாதை பாடல் ஒலித்தது.,
.
வானொலி நாடகங்களை ரசித்து கேட்டோம்.,
.
எல்லோரும் அரசு பள்ளிகளில் படித்தோம்.,
.
சாலையில் எப்போதாவது வண்டி வரும்.,
.
மழை நின்று நிதானமாக பொழியும் ,
.
சாராய கடைகள் இருந்தன.,ஆனால்
இன்றைய கூட்டம் அன்று என்றுமே இருந்ததில்லை.,
.
தமிழ் ஆசிரியர்கள் தந்நிகரற்று விளங்கினர்.,
.
வேலைக்கு போகாதவன்
எந்த குடும்பத்திற்க்கும் பாரமாயில்லை.,
.
எளிதில் மணப்பெண் கிடைத்தாள்.,
.
வெஸ்ட் இன்டீசை வெல்லவே முடியாது.,
.
சந்தைக்கு போக பத்து ரூபாய் போதும்.,
.
முடி வெட்ட இரண்டு ரூபாய்தான்.,
.
பருவ பெண்கள் பாவாடை தாவணி உடுத்தினர்.,
சிலின்டர் மூடுதுணி போல் யாரும் நைட்டி அணிய வில்லை.,
.
சுவாசிக்க காற்று இருந்தது.,
.
குடிதண்ணீரை யாரும் விலைக்கு வாங்க வில்லை.,
.
தெருவில் சிருமிகள் பல்லாங்குழி ஆடுவார்கள்.
அவர்களை கலாய்த்து கொண்டே
நாங்கள் நுங்கு வண்டி ஓட்டுவோம்.,
.
மயில் இறகுகள் குட்டி போட்டன,புத்தகத்தில்.,
.
ஐந்து ரூபாய் தொலைத்ததற்க்கு
அப்பாவிடம் அடி வாங்கினேன் ..,
.
மூன்றாம் வகுப்பிலிருந்துமட்டுமே,ஆங்கிலம்.,
.
ஐந்தாம் வகுப்பு வரை அரைக்கால் டவுசர்.,
.
கடந்து தொலைந்து போனவை
நம் நாட்கள் மட்டுமல்ல.,நம் சுகங்களும்தான்..,
நம்பிக்கைகளும்தான்.........!!!!!!!!!!
MY FAVOURITE SONG IN PUTHIYA BOOMI
http://www.youtube.com/watch?v=jLfDQg4bAYA
WATCH THE CLIPPINGS FROM 3.25 ONWARDS
http://www.youtube.com/watch?v=-Jc7LNNz4yk
WATCH CLIPPINGS FROM 36.38 ONWARDS
http://www.youtube.com/watch?v=zrzcF...eature=related
MY FAVOURITE SONG IN MANTHIRIKUMARI
http://www.youtube.com/watch?v=9B5fPkL-vEo
Congrats to Vellore Ramamurthy for completing 2000 posts.
Yukesh did you checked facebook and the image I had sent.
i checked sir but not recd