தொடர்ந்து வெளியிடப்பட்டும், மறு வெளியீட்டில் ஆயிரத்தில் ஒருவனின் வெற்றியை பொறுக்க முடியாமல் வயிற்றெரிச்சலால் புலம்பும் இந்த நல்ல மன நிலையில் உள்ளவருக்கு? பதில் சொல்லும் நேரத்தை நம் திரியில் நல்ல ஆக்க பூர்வமான பதிவுகளுக்கு பயன்படுத்த்தலாமே. நம் தலைவன் அடுத்தவர் விஷயத்தில் தலையிட்டு அவதூறாக பொய் பிரசாரம் செய்ய சொல்லித் தரவில்லை. இது போன்ற நாகரீகத்தை இவர் எவரிடமிருந்து கற்றார்? எம்ஜிஆர் ரசிகர்கள் nt திரியில் இது போன்ற செயல்களில் ஈடுபடுகிறார்களா? அதை ஒரு போதும் செய்ய மாட்டார்கள். அதுதான் எங்கள் தலைவர் எங்களுக்கு கற்று தந்த நாகரீகம். நாகரீகம் தெரிந்திருந்தால் இது போன்ற தரமற்ற செயல்களில் ஈடுபடமாட்டீர்கள் என்று நம்புகிறோம். இதுவெல்லாம் ஒரு பிழைப்பா? நேருக்கு நேராய் வரட்டும் நெஞ்சில் துணிவிருந்தால் என்ற எங்கள் தலைவரின் பாடல் வரிகளுக்கேற்ப முதலில் உங்கள் உண்மையான முகத்தைக் காட்டுங்கள்?
இனிமேல் இது போன்றவர்கள் பதிவிடும் பதிவுகளை மேற்கோள் காட்டவேண்டாம் என்று நம் திரியின் நண்பர்களைக் கேட்டுகொள்கிறேன். மேலும் இவர் போன்றவர்களுக்கு பதில் சொல்லி யாரும் நேரத்தை வீணடிக்கமாட்டோம் என்று உறுதிகொள்வோம்.
திரு. வினோத் சார். குழப்பத்தை ஏற்படுத்தும் இது போன்ற தேவையில்லாத பதிவுகளை நீக்க இத்திரியின் உரிமையாளர்களுக்கு தாங்கள் வலியுறுத்த வேண்டுகிறோம்.
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்








Bookmarks