This was a coverage of the function to release 2 dvds on Nadigar Thilagam produced by Trichy Sivaji Fans, held recently.
Printable View
This was a coverage of the function to release 2 dvds on Nadigar Thilagam produced by Trichy Sivaji Fans, held recently.
"பொம்மை கல்யாணம்" வீடியோக்களுக்கு கனிவான நன்றிகள், ராகவேந்திரன் சார்..! [தங்களின் பதில்பதிவுக்கும் நன்றி..!]
திரை இசைத் திலகத்தின் இசையில், 'இன்பமே பொங்குமே' ஒரு அருமையான டூயட். இப்பாடலின் முதல் சரணத்தின் போது நமது ஸ்டைல் சக்கரவர்த்தி White & White Costumeல், White Hat, Cooling Glassல் ஆஹா..! ஆஹா..! வருணனைக்கு அப்பாற்பட்ட அழகு..! சிவாஜி-ஜமுனா ஜோடி Simply Superb..!
நடிகர் திலகம் மைனாவதியுடன் பாடும் 'ஆசை வெச்சேன் ஆசை வெச்சேன்' பாடலுக்கு பின்னணியில் பாடியிருப்பவர்கள், சீர்காழி கோவிந்தராஜன் மற்றும் டி.வி.ரத்தினம்.
இக்காவியத்தில் உள்ள இன்னொரு சிறந்த பாடல் : 'அன்பே நீ அங்கே நான் இங்கே'. ஏ.எம்.ராஜாவும், ஜிக்கியும், நடிகர் திலகத்துக்கும், ஜமுனாவுக்கும் பின்னணி பாடியிருப்பார்கள். சோகம் இழையோடும் ஒரு உணர்ச்சிமயமான பாடல் இது.
Attachment 1326
N.T. Sir with My Elder Cousin Brother when they were in Rome
Attachment 1327
My Aunt Serving Food To N.T Sir at Rome
"ராஜா ராணி(1956)" திரைக்காவியத்தில் இடம்பெற்ற ஈடுஇணையற்ற ஓரங்க நாடகமான 'சேரன் செங்குட்டுவன்' நாடகத்தின் வீடியோக் காட்சிக்கும், மேலதிக விவரங்களுக்கும் எனது மேன்மையான நன்றிகள், சிவாஜிதாசன் சார்..!
Sivaji V.C. Ganesan : The Greatest Actor Of The Universe.
திரு. பம்மலார் அவர்களுக்கு,
உங்களுடைய பதிவுகளுக்கு முன்னால் இது ரொம்ப சாதாரணம். இருப்பினும், சின்ன விஷயமாக இருந்தாலும் அதை பெரிதாக பாராட்டும் தங்களின் உயர்ந்த பன்பிற்கு என் நன்றி!
நட்புடன்,
டியர் சிவாஜி தாசன்
ராஜா ராணி சேரன் செங்குட்டுவன் ஓரங்க நாடகக் காட்சி யின் காணொளிக்கு உளமார்ந்த நன்றி. இது போல் மேலும் பலவற்றைத் தாருங்கள்.
அன்புடன்
டியர் பிரதீப் சார்,
நடிகர் திலகத்துடன் தங்கள் குடும்ப அங்கத்தினர்கள் கலந்துரையாடிய இக்காட்சி மிகவும் அபூர்வமானது. ரத்தபாசம் திரைப் படத்தில் இடம் பெற்ற ஓட்டம் கண்ட ராசாவே பாடல் படப்பிடிப்பின் போது ரோம் சென்றிருந்தார். அப்போது எடுக்கப் பட்டது என யூகிக்கிறேன்.
நடிகர் திலகத்துடன் தங்கள் தந்தை எடுத்துக் கொண்ட புகைப்படத்தைக் கிட்டத் தட்ட 35 ஆண்டுகளுக்கு முன்னர் பார்த்த நினைவு. அந்தப் படம் உள்ளதா. இருந்தால் அதை இங்கே பகிர்ந்து கொள்ள முடியுமா.
அன்புடன்
ராமருக்கு அணில் போல நடிகர் திலகத்தின் புகழ் பாடும் சேவகனாக என்றும் இருக்க விரும்பும் இந்த எளியேனுக்கு 2000 பதிவுகள் இடுகை செய்ய வாய்ப்பளித்த நமது மய்யம் இணைய தளத்திற்கும், நடிகர் திலகத்தின் ரசிகக் கண்மணிகளுக்கும், மற்றும் இத்திரியில் பார்வையிட வருகை புரியும் அனைத்து உள்ளங்களுக்கும் உளமார்ந்த நன்றியினை இத்தருணத்தில் சமர்ப்பிக்கிறேன்.
இந்நேரத்தில் நம் அனைவருக்கும் என்றென்றும் நினைவில் நிற்கும் பாடலை காணிக்கையாக்க விரும்புகிறேன்.
http://youtu.be/5PYAmWkBwc4
உரிமைக்குரல் நிறுவனம் எங்கள் தங்க ராஜா திரைப்படத்தை புதுப் பொலிவுடனும் முன் பதிப்பில் விடுபட்டுப் போன பாடலுடனும் சிறப்பாக மறு வெளியீடு செய்துள்ளார்கள்.
http://i872.photobucket.com/albums/a...overs/etr2.jpg
நமது மய்யம் இணையதளத்தில் 2000 பதிவுகளை மிக வெற்றிகரமாக இடுகை செய்து பீடுநடை போட்டுக் கொண்டிருக்கும் நமது ராகவேந்திரன் சாருக்கு பொன்னான பாராட்டுக்களுடன் கூடிய பசுமையான நன்றிகள்..!
இத்திருத்தொண்டு மென்மேலும் பொலிவுடன் தொடர அவருக்கு எனது மனப்பூர்வமான வாழ்த்துக்கள்..!
Thanks a lot for the extremely rare stills, Pradeep Sir. We expect a lot more from You.
"பொம்மை கல்யாணம்" பதிவுகளுக்கு வாசு சார் வழங்கிய பாராட்டு:
அன்பு பம்மலார் சார்,
'பொம்மை கல்யாணம்' சுதேசமித்ரன் விளம்பரம் எங்கு தேடினாலும் கிடைக்காது. அவ்வளவு அரிய விளம்பரம் அது. உங்களிடம் இல்லாமல் போனால்தான் ஆச்சர்யம். தலைவர் பேண்ட் பாக்கெட்டுக்குள் கைகளை நுழைத்து சும்மா கெத்தாக நிற்பது சூப்பரோ சூப்பர். சிங்கப்பூர் மற்றும் சிலோன் விநியோகஸ்தர்கள் விவரமும் விளம்பரத்தில் குறிக்கப்பட்டுள்ளது அருமை. அரிய பதிவிற்கு அன்பு நன்றிகள்.
'பொம்மை கல்யாணம்' (விதி இதுவோ - ஜிக்கி, கல்யாணம் கல்யாணம் - ஜிக்கி, ஆசை வெச்சேன் ஆசை வெச்சேன்) முத்தான மூன்று வீடியோப் பாடல்களுக்காக அன்பு ராகவேந்திரன் சாருக்கு என்னுடைய சிறப்பு நன்றிகள். அவருடைய பாராட்டுதல்களுக்கும் என் மனம் கனிந்த நன்றிகள்.
வாசுதேவன்.
தங்களுக்கு எனது அன்பான நன்றிகள், வாசுதேவன் சார்....!
நயாகரா நகர மேயரின் மே மாத நற்காவியங்கள்
நல்லதொரு குடும்பம்
[3.5.1979 - 3.5.2012] : 34வது உதயதினம்
பொக்கிஷப் புதையல்
முதல் வெளியீட்டு விளம்பரம்
http://i1110.photobucket.com/albums/...GEDC5753-1.jpg
குறிப்பு:
சென்னை மற்றும் தென்னகமெங்கும் பல அரங்குகளில் 50 நாட்கள் முதல் 79 நாட்கள் வரை ஓடிய இக்காவியம் ஒரு நல்ல ஹிட்.
பக்தியுடன்,
பம்மலார்.
ராக(வேந்தரே),
இரண்டாயிரம் பதிவுக்கு எனது சிரம் தாழ்ந்த இரண்டாயிரம் வணக்கங்கள்.பத்தாயிரம் வணக்கங்கள் சொல்லும் நாளுக்காக காத்திருக்கிறேன்.
பம்மலார் அவர்களே,
தங்கள் பதிவுளுக்கான பாராட்டுகளை எழுதி எழுதி எங்கள் கைகள் ஓய்ந்தன.கேட்டு கேட்டு உமது செவியும் சாய்ந்தன. ஆனால் உங்கள் மனம் திறந்து அடுத்தவரை பாராட்டும் பெருந்தன்மையை குறிக்கா விட்டால் நான் நன்றி மறந்தவன் ஆவேன்.அடுத்தவருக்கு உதாரணமான உயர்ந்த குணம்.நீங்கள் குடும்பம் கண்டு ஆல் போல் பெருகி தழைத்து வாழ தங்களை விட சிறிதே மூத்தவன் (வயதில்)என்ற வகையில் வாழ்த்துகிறேன்.
வாசு சார்,
ராமாயணத்தில்,கண்ணிலான் கண் பெற்று இழந்தது போல்,என்று குறிப்பார். நம் திரி கண்ணிருந்து ,அதை இழந்து,மீண்டும் பெற்றது போன்றது தங்கள் வருகை.பொன் மனமே,தொடரட்டும் உன் பணி.
Is Patikada Pattanama re releasing like Karnan? If so When ? Can u provide all the details sir?
பட்டிக்காடா பட்டணமா திரைக்காவியம் மே 6, 1972 அன்று வெளியானது. அதனை நினைவூட்டும் வகையில் விளம்பர நிழற்படம் விரைவில் எதிர்பாருங்கள் என்பதைத் தான் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
தாங்கள் விரும்புவது போல் நடக்காது என சொல்ல முடியாது. அதற்கான காலம் நேரம் சூழ்நிலை எல்லாம் வரவேண்டும்.
அன்பு நண்பர்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள்.
கடந்த நான்கு மாதங்களாக ஒரு ரிமோட் ஏரியாவில் பணிக்கு அனுப்பப்பட்டதால் திரியில் தொடர்ந்து பங்கேற்காத சூழ்நிலையில் சிக்கிக்கொண்டு, மூன்று நாட்களுக்கு முன்பே மீண்டு வந்தேன். அன்றைக்கே திரிக்கு வந்து விட்டேன். விட்டுப்போன பக்கங்களனைத்தையும் படித்த பின்பே பதிவிட வேண்டும் என்ற எண்ணத்தில், இன்றுதான் படித்து முடித்தேன்.
இடையிடையே திரியில் பெரிய பெரிய புயல்கள் அடித்து ஓய்ந்தது போல தெரிகிறது. அதன் காரணமாக திரியின் முக்கிய பங்கேற்பாளர்களான அன்புச்சகோதரர் வாசுதேவன் போன்றவர்கள் ஒதுங்கியிருப்பது மனதுக்கு வருத்தமளிக்கிறது.
விடைபெறும் வேளையிலும் கூட என்னை மறவாமல் திரிக்கு திரும்ப அழைத்து விட்டுச்சென்றிருக்கும் அந்த நல்ல இதயம் திரும்பவும் திரிக்கு திரும்பி தனது அதிரடி பதிவுகளால் திக்குமுக்காடச்செய்ய வேண்டும்.
இது எனது அன்பான மற்றும் உரிமையான வேண்டுகோள். (பணியின் காரணமாக ஒதுப்க்கியிருப்பின், அவ்வப்போது வந்து சிறு சிறு பதிவௌகளையாவது தந்து எங்களுக்கு தெம்பூட்ட வேண்டும்). மின்னஞ்சல் மூலம் பம்மலார அவர்கள் வழியாக இடும் பதிவுகளை இங்கே நேரடியாக இட்டு பம்மலார் அவர்களின் சிரமத்தைக் குறைக்க வேண்டும்.
நமது ஒரே நோக்கம் நடிகர்திலகத்தின் புகழ் பரப்புவதே. அதனை எந்த வித மனமாச்சரியங்களையும் வென்று தொடருவோம்.
அன்புள்ள பம்மலார் சார்,
ஆவணக்களஞ்சியமான தங்களது ஆவணப்பதிவுகள் எப்போதும்போல எங்கள் மனதை நிறைக்கின்றன. தங்களது பணிக்கு ஈடு இணையே கிடையாது. இதனை இதற்கு முன ஆயிரம் தடவை சொல்லியிருப்பினும், ஆயிரத்தோராவது தடவையாக இருக்கட்டும்.
மற்ற அனைவரும் நடிகர்திலகத்தின் அபார நடிப்பாற்றலை ஆராய்ந்து அவர் 'மிகச்சிறந்த திறமையாளர்' என்று (எல்லோரும் ஒப்புக்கொள்ளக்கூடிய விஷயத்தையே) விவாதித்துக் கொண்டிருக்கும்போது.....
நீங்கள் மட்டுமே அவர் திறமையாளர் மட்டுமல்ல "மிகப்பெரிய சாதனையாளர்" என்று (பெரும்பாலோர் பாடுபட்டு மறைக்க முயலும் விஷயத்தை) தாங்கள் சிரமப்பட்டு சேகரித்து அளிக்கும், யாராலும் மறுக்க முடியாத பொன்னுக்கும் மேலான பொக்கிஷ ஆதாரங்களால் ஆணித்த்ரமாக உலகுக்கு அளித்து மிகச்சிறந்த தொண்டாற்றி வருகிறீர்கள். (உண்மையை சொன்னால், நான் தீவிர ரசிகனாயிருந்தும் 'வியட்நாம் வீடு' 100-வது நாள் விளம்பரங்களையெல்லாம் இப்போதுதான் பார்க்கிறேன்).
இடையில் தாங்களும் ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் ஓய்வில் அல்லது வேறு பணியில் இருந்ததால், பொங்கல் மற்றும் குடியரசு தின சாதனை வெளியீடுகளைக் கண்ணுறும் வாய்ப்பு எங்களுக்கு கிடைக்கவில்லை. இப்போது பருவம் தப்பியிருப்பினும் 'ராஜா' போன்ற சாதனைப்படங்களின் 100-வது நாள் விளம்பரங்களை மட்டுமாவது வெளியிட்டு எங்களது ஆர்வத்தை பூர்த்தி செய்யலாமே.
செய்வீர்கள் என்று எதிர்பார்க்கிறோம்.
டியர் பம்மலார்,
ஏப்ரல் மாதத்தை பொம்மை கல்யாணத்துடன் மங்களகரமாக நிறைவு செய்து, மே மாதத்தை நல்லதொரு குடும்பத்துடன் துவக்கி சளைக்காமல் ஆவணப் பதிவுகளை அள்ளி வழங்கி வரும் தங்களுக்கு வாழ்த்துக்கள், நன்றி.
திரு.ராகவேந்திரன் சார், பொம்மை கல்யாணம் வீடியோ பதிவுகள் அருமை.
திரு.கார்த்திக் அவர்களே, நான்கு மாதங்களுக்குப் பிறகு திரிக்கு வந்திருக்கும் தங்களை வருக வருக என வரவேற்கிறேன்.
பணியிருப்பினும் பம்மலார் மூலம் பதிவுகளை அளிக்கும் வாசுதேவன் அவர்களுக்கும், சுகமான சுமையாக அதனைப் பதிவேற்றும் பம்மலார் அவர்களுக்கும் நன்றி.
பாராட்டுக்களுக்கு நன்றி, திரு சந்திரசேகர் அவர்களே
அன்பு நண்பர்களே,
நடிகர் திலகத்தின் பொது நலத் தொண்டுகளைப் பற்றியும் தேசிய இயக்கத்தில் இருந்த போது நாடெங்கும் அவர் அமைத்துத் தந்த ஏராளமான படிப்பகங்கள், அதே போல் திறந்து வைத்த பொது கட்டிடங்கள், கொடி மரங்கள், கல்வெட்டுக்கள், அரங்குகள் உள்ளிட்ட வற்றைப் பற்றி அடுத்த தலைமுறைக்கு விளக்கமாக எடுத்துச் சொல்ல வேண்டும். அவருடைய எண்ணற்ற நற்செயல்களை நாடு முழுதும் ஏராளமான கல்வெட்டுக்கள் இன்றும் பறை சாற்றிக் கொண்டுள்ளன. அவர் ஒரு நடிகர் மட்டும் என்பதோடு நிறுத்தி விடாமல் இந்த நாட்டில் தேசியம் தழைத்தோங்க வேண்டும் நாட்டுப் பற்றில் நாம் சிறந்து விளங்கவேண்டும் என்ற முனைப்போடு நமது ரசிகர் மன்றங்கள் மற்றும் பிற பொது அமைப்புகள் மூலமாக செய்துள்ள காரயங்களுக்கு இந்த கல்வெட்டுக்களே அத்தாட்சி. எனவே இதன் மூலம் நாம் அனைத்து ரசிகர்களையும் தாழ்மையுடன் வேண்டுவது, தயவு செய்து ஆங்காங்கே தாங்கள் இருக்கும் பகுதியில் எந்தெந்த கல்வெட்டில் நடிகர் திலகத்தின் பெயர் காணப் படுகிறதோ அதனையெல்லாம் நிழற்படமாக இங்கே பகிர்ந்து கொள்ள வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். இந்தக் காலகட்டத்தில் இது கடினமாக இருக்காது. ஏனெனில் கிட்டத் தட்ட அனைத்து கைப்பேசிகளிலும் காமிரா இருக்கக் கூடும். எனவே இதனை ஒரு தவமாக மேற்கொண்டு அனைவரும் செயல் பட வேண்டும் என வேண்டுகிறேன்.,
தொடக்கமாக, நமக்கு கிடைத்த ஒரு நிழற்படத்தை இங்கே பகிர்ந்து கொள்வதில் மகிழ்வுறுகிறேன். புதுச்சேரி ராஜா திரையரங்கினை 1968ம் ஆண்டு நடிகர் திலகம் தலைமையில் அப்போதைய ஆளுநர் அவர்கள் திறந்து வைத்த படத்தை இங்கே காணலாம்.
http://i872.photobucket.com/albums/a...NRAJAPONDY.jpg
Welcome back Mr.karthick.We missed you a lot.It is not same without your contributions.
டியர் mr_karthik,
WELCOME BACK ! IT IS GREAT TO HAVE YOU HERE, ONCE AGAIN !
தங்களது பதிவுகளைக் கண்டவுடன் எனக்கு புதுத்தெம்பு வந்துவிட்டது என்று கூறுவதோடு ஒரு யானைபலமும் வந்துவிட்டது என்று கூறுவதே சரியாக இருக்கும். கடந்த நான்கு மாதங்களாக தாங்கள் இன்றி இத்திரி வெறிச்சோடிக்கிடந்தது என்பது மறுக்க முடியாத உண்மை. தவிர்க்க இயலாத காரணங்களினால் தாங்கள் பதிவுகளை அளிக்க இயலவில்லை என்பது புரிந்திருந்தாலும், இவ்வளவு நீண்ட இடைவெளி விடமாட்டாரே, ஏன் இப்படி என்று ஒரு பதைபதைப்பும் இருந்தது. [வாசு சாரும், நானும் கைபேசியில் பேசும் போது இதுகுறித்தும், தங்களையும், சகோதரி சாரதா அவர்களைப் பற்றியும், தங்கள் இருவரது பொன்னான பதிவுகளைப் பற்றியும் பேசாத நாட்களே இல்லை]. தாங்கள் எப்படியும் திரியைப் பார்ப்பீர்கள் என்ற நோக்கத்தில்தான், இரண்டரை மாதத்திற்கு பிறகு நான் திரிக்கு மறுபிரவேசம் செய்த சில தினங்களில், நந்தன வருட தமிழ்ப்புத்தாண்டு பிறந்த சமயத்தில், தங்களையும், சாரதா அவர்களையும் மீண்டும் பதிவுகளை அளிக்க வருமாறு அன்புடன் அழைத்திருந்தேன். இதே போல நமது வாசு சாரும், புதுப்புயல் கோபால் சாரும் தங்களிருவருக்கும் அழைப்பு விடுத்திருந்தார்கள். இவற்றைத் தாங்கள் நிச்சயம் பார்த்திருப்பீர்கள், படித்திருப்பீர்கள். எங்கள் அன்பு வேண்டுகோளை ஏற்று ரிமோட் ஏரியாவில் இருந்து திரும்பிய உடனேயே நமது திரியைப் படித்துக் களித்ததோடு மட்டுமல்லாமல், தங்களின் இணையில்லாப் பதிவுகளையும் உடனே அளித்தமைக்காக தங்களுக்கு எனது ஆத்மார்த்தமான நன்றிகள் !
அன்புடன்,
பம்மலார்.
டியர் mr_karthik,
வான்மழை போன்ற தங்களின் பாராட்டுப்பதிவுக்கு எனது இதயபூர்வமான எண்ணிலடங்கா நன்றிகள் !
தங்களை மீண்டும் 'வருக ! வருக !' என உளமார வரவேற்கிறேன் ! இதேபோல் சகோதரி சாரதா அவர்களின் வருகையையும் ஆவலோடு எதிர்பார்க்கிறேன் !
திரைக்காவிய ரிலீஸ்மேளாவில் விடுபட்டுப் போன மாதங்களின் ஆவணப் பொக்கிஷங்களில் மிக முக்கியமானவற்றை விரைவில் தர முயற்சிக்கிறேன். தங்களுக்காகவும், இங்குள்ள அனைவருக்காகவும் "ராஜா"வின் சாதனைச் செப்பேடுகளை சில தினங்களில் பதிவிடுகிறேன்.
தங்களின் 'முதல் வெளியீட்டு தின திரையரங்கு கொண்டாட்டப்' பதிவுகளை மீண்டும் காண மிகுந்த ஆவல். தொடர்ந்து அசத்துங்கள் !
பாசத்துடன்,
பம்மலார் என்கிற 'ஜீபூம்பா'.
தங்களின் பாராட்டுக்கு நன்றி, சந்திரசேகரன் சார்.
ஏப்ரல் மாதத்தில் 'பொம்மை கல்யாண்ம்', அதன்பின் மே மாதத்தில் 'நல்லதொரு குடும்பம்' துவக்கம் என்கின்ற ரீதியில் தங்களது பதிவில் வார்த்தைஜாலம் அர்த்தபுஷ்டியுடன் நன்றாகவே இருக்கிறது. இருப்பினும் "பொம்மை கல்யாணம்" மே மாதம் வெளியான காவியம். கலையுலக ஏஞ்சலின் ஏப்ரல் காவியங்கள் "தர்மராஜா"வோடு நிறைவுற்றது. நயாகரா நகர மேயரின் மே மாத நற்காவியங்கள் "காவல் தெய்வம்" காவியத்தோடு துவங்கியுள்ளது.
டியர் ராகவேந்திரன் சார்,
கல்வெட்டு ஐடியா சிறந்த ஒன்று !
இதுமாதிரி விஷயங்களில் நாம் முயற்சிக்க வேண்டும் என்று சென்ற வருடம்கூட ஒரு முறை mr_karthik அவர்கள் ஒரு பதிவு அளித்திருந்தார். [அவர் அதில் குறிப்பிட்டு சொல்லியிருந்தது திரையரங்கில் உள்ள நமது காவியங்களின் சாதனை ஷீல்டுகள் குறித்து..அவற்றை படம்பிடித்து இங்கே இடுகை செய்யலாம் என்று கூறியிருந்தார்].
பாண்டிச்சேரி (இன்றைய புதுச்சேரி) 'ராஜா' திரையரங்கம் மிக மிகப் பழமையான திரையரங்கம். 2000 இருக்கைகளைக் கொண்டது. நமது முழுமுதற் திரைக்காவியமான "பராசக்தி" இவ்வரங்கில் வெளியாகி 50 நாட்கள் மிக வெற்றிகரமாக ஓடியது. எனவே, இத்திரையரங்கம் 1950களின் ஆரம்ப ஆண்டுகளிலேயே இருந்துள்ளது என்பது புலனாகிறது. அப்படியிருக்க, கல்வெட்டில் 'OPENED ON 14TH JULY 1968' என்றுள்ளதே. 'REOPENED AFTER RENOVATION.........' என்றுதானே இருக்க வேண்டும். என்னுடைய தகவலில் ஏதேனும் பிழை இருக்கிறதா..?! இதற்கு தங்களின் மேலான பதில் தேவை.
அன்புடன்,
பம்மலார்.
நமது வாசு சாரின் மின்னஞ்சல் மடல்:
அன்பு பம்மலார் சார்,
மகிழ்ச்சியான செய்தியை பகிர்ந்து கொள்வோம். நாம் நீண்ட நாட்களாக ஆவலுடன் எதிர்பார்த்த நம் கார்த்திக் சார் வந்து விட்டார். அவரை நம் சார்பாக வருக வருக என வரவேற்போம்.
'நல்லதொரு குடும்பம்' முதல் வெளியீட்டு விளம்பரம் நல்லதொரு விளம்பரம்.
மூக்கைய்யா தேவர் என் கணினியின் desktop ஐ அலங்கரித்துக் கொண்டிருக்கிறார். நன்றிகள் பல.
'பட்டிக்காடா பட்டணமா' சாதனைகள் தங்கள் கைவண்ணத்தில் பட்டிதொட்டி முதல் பட்டணங்கள் வரை பட்டையைக் கிளப்பப் போவது நிஜம்.
vasudevan.
உண்மை, வாசு சார் ! mr_karthik அவர்களின் வருகை நமக்கு எல்லையில்லா மகிழ்ச்சியைத் தருகிறது. சகோதரி சாரதாவும் விரைவில் வருவார்கள் என்று நம்புவோம் !
நமது திரி தங்களையும் விடாது. 'மாறுவது மனம் சேருவது இனம்' என்ற கவியரசரின் வாக்கிற்கிணங்க தாங்களும் கூடிய விரைவில் இங்கு வந்தே தீருவீர்கள்..!
தங்களது பாராட்டுதல்களுக்கு எனது கனிவான நன்றிகள்..!