-
11th May 2012, 12:17 PM
#11
Senior Member
Veteran Hubber
அன்பு நண்பர்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள்.
கடந்த நான்கு மாதங்களாக ஒரு ரிமோட் ஏரியாவில் பணிக்கு அனுப்பப்பட்டதால் திரியில் தொடர்ந்து பங்கேற்காத சூழ்நிலையில் சிக்கிக்கொண்டு, மூன்று நாட்களுக்கு முன்பே மீண்டு வந்தேன். அன்றைக்கே திரிக்கு வந்து விட்டேன். விட்டுப்போன பக்கங்களனைத்தையும் படித்த பின்பே பதிவிட வேண்டும் என்ற எண்ணத்தில், இன்றுதான் படித்து முடித்தேன்.
இடையிடையே திரியில் பெரிய பெரிய புயல்கள் அடித்து ஓய்ந்தது போல தெரிகிறது. அதன் காரணமாக திரியின் முக்கிய பங்கேற்பாளர்களான அன்புச்சகோதரர் வாசுதேவன் போன்றவர்கள் ஒதுங்கியிருப்பது மனதுக்கு வருத்தமளிக்கிறது.
விடைபெறும் வேளையிலும் கூட என்னை மறவாமல் திரிக்கு திரும்ப அழைத்து விட்டுச்சென்றிருக்கும் அந்த நல்ல இதயம் திரும்பவும் திரிக்கு திரும்பி தனது அதிரடி பதிவுகளால் திக்குமுக்காடச்செய்ய வேண்டும்.
இது எனது அன்பான மற்றும் உரிமையான வேண்டுகோள். (பணியின் காரணமாக ஒதுப்க்கியிருப்பின், அவ்வப்போது வந்து சிறு சிறு பதிவௌகளையாவது தந்து எங்களுக்கு தெம்பூட்ட வேண்டும்). மின்னஞ்சல் மூலம் பம்மலார அவர்கள் வழியாக இடும் பதிவுகளை இங்கே நேரடியாக இட்டு பம்மலார் அவர்களின் சிரமத்தைக் குறைக்க வேண்டும்.
நமது ஒரே நோக்கம் நடிகர்திலகத்தின் புகழ் பரப்புவதே. அதனை எந்த வித மனமாச்சரியங்களையும் வென்று தொடருவோம்.
-
11th May 2012 12:17 PM
# ADS
Circuit advertisement
Bookmarks