NEXT IN THE FILMOGRAPHY THREAD
http://i1146.photobucket.com/albums/...ps210cd854.jpg
Printable View
NEXT IN THE FILMOGRAPHY THREAD
http://i1146.photobucket.com/albums/...ps210cd854.jpg
dear kannan. welcome to this thread. As a senior member I would like to give you some 'tips' for your safe documentation in future. You love NT and admire.... keep it by heart. If any other culprits write or comment bad about our NT don't get emotion and react enthusiastically but just remain a silent spectator! The moderator of this thread will erase your defensive writings too under the disguise of cleaning the thread! Just enjoy the fun and frolic in this thread, keeping a distance from comments since none of the members except a very few sensitive fans of NT will come to your help, when NT is mud-slung!
வாசு சார் அவர்களுக்கு,
உங்களின் பல பதிவுகளைப் பற்றி இந்த ஒரே பதிவில் பேச வந்துள்ளேன்.முதலில் உங்களின் என் கிராமம் என் மக்கள் பதிவு பற்றி. பலரும் சொல்லிவிட்டார்கள் நான் புதிதாக என்ன சொல்லி விட முடியும்? சினிமா அவ்வளவாக கலக்காத ஒரு தனி கிராமிய மனம் கமழும் பதிவை யாரும் சற்றும் எதிர்பார்க்காத நேரத்தில் பதிந்து அனைவரையும் ஒரு கிராமீய சுற்றுலா கூட்டிச் சென்ற உங்களுக்கு வாழ்த்துகள். அந்த பதிவின் மேன்மையே அதில் தொனித்த ஜீவன். எப்படி பாதுகாப்பு படப்பிடிப்பு பதிவில் ஒரு ஜீவன் இருந்ததோ, எப்படி சந்திப்பு ஓபனிங் ஷோ அனுபவ பதிப்பில் ஒரு ஜீவன் இருந்ததோ அதே உயிர் துடிப்பு இந்த பதிவிலும் எதிரொலித்தது. ராமாபுரத்திலும் நமது ரசிகர்கள் ராஜ்ஜியம்தான் என்பதை அழகாய் எடுத்துக் காட்டியிருந்தீர்கள்.
அடுத்து நடிகர் திலகத்தின் அரிய புகைப்பட வரிசை.அனைத்து படங்களுமே அருமை என்ற போதிலும் அந்த பாவை விளக்கு படப்பிடிப்பு நடைபெற்ற நேரத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் மனதை அள்ளிக் கொண்டு போகிறது.
நாயகியர் வரிசையில் மாலினி நல்ல தேர்வு. உங்களுக்கே உரித்தான பாணியில் அவரைப் பற்றிய கமன்ட் கூட ரசிக்க வைத்தது [ஆண் பிள்ளைத்தனமான உடல்வாகு].அது உண்மை என்ற போதிலும் அவரிடம் ஒரு ஈர்ப்பு சக்தி இருந்தது.
சண்டைக் காட்சிகளைப் பற்றிய உங்கள் தொடர் சொல்லவே வேண்டாம். எந்தெந்த சண்டைக் காட்சியை எப்போது எடுத்துப் போட வேண்டும் என்பது பற்றி உங்களுக்கு சொல்லித் தர வேண்டிய அவசியமில்லை. அதனால்தான் அந்த 57 வயதில் சண்டைக் காட்சியை ரசிக்க முடிந்தது.
இனி உங்களின் ஆதங்கப் பதிவிற்கு வருகிறேன். நானெல்லாம் நிறைய எழுதி விட்டதால் இப்போது என்னை தொந்தரவு செய்வது முறையாக இருக்காது என சொல்லியிருந்தீர்கள். நிறைய எழுதி விட்டதால் வர வேண்டாம் என்ற எண்ணம் எனக்கு என்றைக்குமே தோன்றியதில்லை. சொல்லப் போனால் இன்னும் நிறைய எழுத வேண்டும் என்று ஆசை எனக்கு இருக்கிறது. ஆனால் இடையில் இருக்க கூடிய தடை என்பது நேரக் குறைவுதான். இது அனைவருக்குமே பொதுவானது என்ற போதிலும் என் விஷயத்தில் அதிகமாகவே இருக்கிறது. பகலில் நமது மையம் இணைய தளத்தையோ நமது திரியையோ பார்க்கும் வாய்ப்பு கூட எனக்கு இல்லை.இரவில் வீட்டில் வைத்து மற்றுமே இவற்றை படிக்கவும் பங்கு பெறவும் முடியக் கூடிய சூழல். அந்த குறுகிய காலயளவில் தினந்தோறும் பங்களிப்பது பதிவிடுவது என்பது சற்று சிரமமான வேலை. ஆகையால்தான் பதிவுகள் குறைகிறதே தவிர மற்றப்படி வேறு எந்த காரணமுமில்லை. இதை முன்னரே பலமுறை இங்கே சொல்லியிருக்கிறேன். இந்த பதிலை நான் பதிவிட்டிருக்கும் நேரத்தை பார்த்தாலே அது புரியும். எனினும் அடிக்கடி பதிவிட நிச்சயம் முயற்சிக்கிறேன். இங்கே மட்டுமல்ல, நீங்கள் அடிக்கடி வேண்டுகோள் விடுக்கும் filmography திரியிலும் பங்களிப்பு செய்ய முயற்சிக்கிறேன்.
இது தவிர சில தவிர்க்க முடியாத வெளியூர் பயணங்களும் சில நேரங்களில் இது போன்ற சூழல் உருவாவதற்கு காரணமாகி விடுகிறது. அந்தக் காரணத்தினால் சென்ற ஞாயிறன்று தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பட்ட இருவர் உள்ளம் திரைப்படத்தையும் நமது NT FAnS அமைப்பின் சார்பில் திரையிடப்பட்ட ராமன் எத்தனை ராமனடி திரைப்படத்தையும் மிஸ் செய்ய நேர்ந்தது.
இறுதியாக உங்கள் வேண்டுகோள் பதிவு. Antony-ஐயும் Arun-ஐயும் என் கைவண்ணத்தில் படிக்க ஆசை என்று எழுதியிருந்தீர்கள். எனக்கு ஒரு நிமிடம் என்ன சொல்வதென்றே தெரியவில்லை. அவர்கள் இருவரும் உங்கள் ஊனோடும் உயிரோடும் ஒன்றாய் கலந்தவர்கள். நானும் அவர்களை மிகவும் ரசித்திருக்கிறேன், ரசித்துக் கொண்டிருக்கிறேன். ஆனாலும் உங்கள் அளவிற்கு அவர்களைப் பற்றி என்னால் எழுத முடியுமா என்பது சந்தேகமே. இதை சொல்லும்போது வேறு ஒன்று நினைவிற்கு வருகிறது. சிறிது கால அவகாசம் கொடுங்கள். முயற்சி செய்கிறேன்.
அனைத்திற்கும் மீண்டும் நன்றி.
அன்புடன்
டாய் ,
அது என்ன முரளியை கூப்பிட்டு ஞான ஒளி யை ஒப்படைக்கிறாய்? chekhov பாணியும் oscar Wilde இணைவில் வந்த இந்த அதிசயத்தை நான் எழுதாமல் உனக்காக உன் படமாயிற்றே என்று விட்டு வைத்தால் ,நீ என்ன இன்னொருத்தன் கையிலே குடுக்கிறது? மரியாதையாய் நீயே எழுது.
உனக்குத்தான் தனியே ஒரு திரியை ஒதுக்கி தனிக்குடித்தனம் வைத்தாயிற்றே! ஒழுங்கா குடித்தனம் பண்ணு. மாமியா வூட்டுக்கு அடிக்கடி வந்து தொல்லை கொடுக்காதே! நீ அங்கு என் தெய்வம் ஆண்டனியைப் பற்றி பிட்டு பிட்டு வை. விருந்தாளியாய் நானும் சில நாட்கள் வந்து உன்னுடனேயே தங்கி இருக்கிறேன்.
முரளி சார் எனக்கு (எல்லார்க்கும்) புரியும்படி அற்புதமாக box office உடன் எழுதுவார். எனக்கும் dictionary தேவையிருக்காது. உன் தூண்டில்ல அந்த மீன் மாட்டாது நைனா. (நைனான்னவுடனே தெலுங்குக்காரன் என்று பிரம்பெடுத்து வராதே) வெவ்வவ்வெவ்வே... வீடு பார்த்துக் கொடுத்தால் போக மாட்டேன் என்றால் உன்னை என்ன செய்வது? ம்ம்ம்ம்....சரி... சவுரி சார் தான் உன்னைக் கட்டி மேய்க்க சரியான ஆ(வா)ளு.
டியர் முரளி சார்,
தங்கள் உயரிய பாராட்டிற்கு என் தலைவணங்கிய நன்றிகள்.
தங்களுடைய நேரமின்மையை நன்கு அறிந்தவன் நான். அதனால்தான் தங்களை கைபேசியில் அழைக்க பலமுறை யோசிப்பேன். நாள் முழுவதும் ஆபிஸில் உழைத்துவிட்டு இரவும் வந்து பதிவிடுவது மிகச் சிரமமான ஒரு வேலை. (சில பேராட்டம் வெளிநாடுகளில் வேலை பார்க்கிறோம் என்று ஆபிஸ் கம்ப்யூட்டரில் அரட்டை அடிக்க தங்களாலும் முடியாது. என்னாலும் இயலாது. பலமுறை இரவு நேரங்களில் தாங்கள் பதிவிடுவதை பார்த்திருக்கிறேன். தங்கள் உடல்நலனும் மிக முக்கியமானது.
தங்களைப் போன்ற அனுபவசாலிகளின் எழுத்துக்களே எங்களையெல்லாம் வழி நடத்துகின்றன. தாங்கள் பாதை அமைத்துக் கொடுத்துள்ளீர்கள். நாங்கள் சுகமாக அதில் பயணித்து வருகிறோம்.
'இருவர் உள்ளம்' மிஸ் ஆனது பற்றி கவலை வேண்டாம். நான் பதிவு செய்து வைத்துள்ளேன். அடுத்த முறை தங்களை சந்திக்கையில் தருகிறேன்.
தாங்கள் சொன்னது போல நம் திலகத்தைப் பற்றி எழுத பத்து ஆயுள் இருந்தாலும் போதாது.
நேரம் கிடைக்கையில் 'ஞானஒளி' பற்றி எழுதுவதாக நீங்கள் சொல்லியிருப்பது எனக்குக் கிடைக்க இருக்கும் 'ஜாக்பாட்'. கோபால் அவர் பாணியில் பிய்த்து உதறுவார். மொத்தத்தில் எனக்குதான் கொண்டாட்டம்.
மீண்டும் தங்களுக்கு என் ஆழ்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ராகுல்,
'பாகப்பிரிவினை' பதிவை எதிர்பாராமல் அளித்து வியக்க வைத்து விட்டீர்கள். அருமையான தேர்வு. தங்கள் தந்தைக்கு எங்கள் வணக்கங்களைத் தெரிவியுங்கள். வசூலில் இமாலய சாதனை புரிந்த படம். மறு வெளியீடுகளில் வசூலில் மிரட்டிய படம். இருபது வருடங்களுக்கு முன் பண்ருட்டி புவனேஸ்வரி திரையரங்கில் மறு வெளியீட்டில் பேயோட்டம் ஓடியது. தினத்தந்தி கடைசி பக்கத்தில் half பக்கத்திற்கு ஒரு அருமையான விளம்பரம் அளித்திருந்தார்கள். புவனேஸ்வரி திரையரங்கு ஜனத்திரளில் நிரம்பி வழியும் புகைப்படத்துடன் இரண்டாவது வாரம் வந்த விளம்பரம் அது. எங்கேயோ மிஸ் ஆகி விட்டது. பண்ருட்டியில் வெளிவந்த இரண்டாவது ரிலீஸ் படங்களில் பாகப்பிரிவினையை இதுவரை எந்தப் படமும் மிஞ்சியதாகத் தெரியவில்லை. அருமையான பழைய நினைவுகளை தங்கள் பதிவு மூலமாக ஞாபகப்படுத்தியதற்கு நன்றி!
இன்னும் தமிழில் கோர்வையாய் எழுதுங்கள். உங்களால் முடியும். நீங்கள் எங்களுக்குக் கிடைத்த செல்லப்பிள்ளை.
சம்சாரம் அது மின்சாரம் ரகுவரன் போல, தனி குடித்தனம் போனாலும் லீவ் நாட்கள்,ஓய்வு நாட்களில் வந்து உங்களோடுதான் சாப்பிட்டு(ஓசியில்தான்),கழுத்தறுத்து விட்டு செல்வேன்.
சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தில் உள்ள கண்ணியமான சௌரி சாரை, இந்த மாதிரியா அடியாள் range க்கு use பண்ணுவது?
முரளி ,
உன் வருகைக்கு நன்றி. உன் நேரமின்மை புரிகிறது. ஆனால் நீ எனக்கு தனி குடித்தனம் ஏற்பாடு செய்ததும் இங்கு வருவது பலவித யூகங்களுக்கு இடமளிக்கிறது.
jokes apart , உன் எழுத்துக்கள் எப்பவுமே திரிக்கு உத்வேகம் கொடுக்கும் சக்தி கொண்டது. சனி,ஞாயிறுகளில் கொஞ்சம் நேரம் ஒதுக்கு. கார்த்திக் சாரையும் அழைத்து வா.
ராகுல்,
வாழ்த்துக்கள். paa பேச்சை கேட்டு பா வரிசை வரிசை படங்களை பார்ப்பது சந்தோசம்.
ஆதிராம் சார்,
ரொம்ப நாள் கழித்து தமிழை கை பிடித்து அழைத்து வந்ததற்கு நன்றி. தங்கள் குறை எனக்கும் உண்டு.பம்மலார் ,வாசு,வேந்தர் மனசு வைத்தால் மார்க்கமுண்டு.
வேந்தரே,
தங்களுக்கு நான் பட்ட கடனை அடைக்க இன்னொரு பிறவி வேண்டும். நான் மொத்தம் எழத எடுத்து கொண்டதை விட அதிக நேரம் எடுத்து ஒழுங்கு படுத்தி உதவியுள்ளீர்கள். மிக்க நன்றி.
திரு.கண்ணன் அவர்களே,
வருக! வருக!
திரு.முரளி சீனிவாஸ் அவர்களே,
சிவாஜியின் சாதனை சிகரங்கள் திரியில் தங்களுடைய பதிவுகளை தற்போதுதான் படித்தேன். மிகவும் சிறப்பான அரிய தகவல்களுடன் கூடிய பதிவு. நன்றி.
திரு.ராகுல் அவர்களே,
தங்களுடைய பாகப்பிரிவினை பதிவும், தங்களுடைய தந்தையார் பற்றிய தகவலும் சிறப்பு.
திரு.ராகவேந்திரன் அவர்களே,
தங்களுடைய மோகனப்புன்னகை பாடல் இணைப்பும் அதற்கு தங்களுடைய கருத்துக்களும் அரு
திரு.வாசுதேவன் சார்,
புகைப்பட வாரம், சண்டைக் காட்சிகள், நடிகர்திலகத்தின் நாயகியர் என்று தங்களுடைய தொடர்கள் அனைத்தும் அசத்தல். நன்றி.
Dinamalar & Malaimalar - Thanjavur News
http://i1234.photobucket.com/albums/...ps5a0eb56b.jpg
http://i1234.photobucket.com/albums/...pse110efb3.jpg
எஸ்வி சார்,
திரும்ப திரும்ப சீண்டும் பதிவுகள் தொடர்கின்றன. தங்கள் பதிவில் நடிப்புலக மாமேதையை நீக்கி விடுவது நல்லது. ஏனென்றால் நடிகர்திலகம் பெற்றதுதான் திறமையால் மட்டுமே அடைந்த உண்மையான மக்கள் செல்வாக்கு. மாய பிம்பங்களின் ஏமாற்று விளையாட்டல்ல.
தங்களை பற்றி நல்ல image உள்ளது. விதண்டா வாதம் தலை தூக்க விடாதீர்கள்.அப்புறம் கண்ணதாசன் இடை பட்ட காலத்தில் எழுதியவைகளை நினைவு கூற வேண்டியிருக்கும்.
அத்தோடு தங்கள் பதிவு கலைஞானி கமல், சூப்பர் ஸ்டார் ரஜினி ரசிகர்களையும் மிக வேதனையடைய செய்யும். எல்லோரும் நல்ல திறமையை காட்டி புகழ் பெறத்தான் திரையுலகிற்கு வந்தார்களேயன்றி ,திரை புகழை வைத்து அரசியல் லாபம் அடைய அல்ல.
மாசானம் சார்,
நீங்கள் எங்கள் திரிக்கு வந்து போதனை செய்து விட்டு போனதை நினைவு கூறுகிறோம். யாரை எப்படி வேண்டுமானாலும் புகழ்ந்து கொள்ளுங்கள். ஆனால் உலக தமிழர்களில் உன்னதம் கண்ட எங்கள் திரையுலக தெய்வத்தை சீண்டாதீர்கள். ஆயிரம் நீதி போதனை பாடல் கேட்டும் மற்றவர்களுத்தான் அறிவுரை என்று வாழ்ந்தால்?
எஸ்வி சாரின் பதிவுகளில் எங்களுக்கு ஆட்சேபிக்க வேண்டிய பகுதிகள் உள்ளன. அதை நீங்கள் reply with quote செய்துள்ளது உங்களின் போதனையை நீங்களே மீறுவதை காட்டுகிறது. மக்கள் சமூகம் ,சரியான புரிதல் இல்லாத காலத்தில் எவ்வளவோ நடந்திருக்கலாம். popularity அளவை மட்டுமே வைத்து பார்த்தால் காந்தியை விட ஹிட்லர் ,இடி அமீன் முன்னணியில் வர வாய்ப்புண்டு.(அவர்கள் காலத்திலேயே பொய் பிரசாரத்தின் மூலம் அவர்கள் அடைந்த மக்கள் செல்வாக்கை விடவா மற்றவர்கள் அடைய போகிறார்கள் ?)
நாங்களும் புத்தகங்களில் இருந்து மேற்கோள் காட்டலாமா? நீங்களே சொல்வதற்கு பதில் ஆள் வைத்து சொன்னால் ,அது உங்கள் சார்பில் எழுத பட்ட புத்தகங்களில் இருந்தென்றால்?
இணைய தளத்திலும்,குப்பை புத்தகங்களிலும் இருந்து உங்களை பற்றி மேற்கோள் காட்டி கொண்டு உங்களுக்குள்ளே பேசி கொண்டிருங்கள். எங்கள் உலக தமிழர்களின் ஒப்பற்ற நடிப்பு தெய்வத்தை வீணில் இழுக்க வேண்டாம்.அதை பம்மலாரே விரும்ப மாட்டார் என்று நினைக்கிறேன்..
ஆனாலும் நண்பர்களை பாராட்டத்தான் வேண்டும். நேருவை பற்றிய பதிவுகளில் இமேஜ் உருவாக்க படும் விதம் பற்றி குறிப்பிட்டு ,ஒப்புதல் வாக்குமூலங்கள் வழங்கியதற்காக.
திரையுலக செல்வாக்கை பொறுத்த வரை நடிகர் திலகம் பெற்ற ,பெற்று கொண்டிருக்கும் ,பெற போகும் செல்வாக்கை மற்றவர்களால் கனவு கூட காண முடியாது.
ஒப்பீடு செய்யும் போது பாதிக்கப் பட்டவர் குரல் கொடுப்பது ஜனநாயகத்தில் மட்டுமல்ல, பகுத்திறிவிலும் உலகெங்கும் ஒப்புக் கொள்ளப் பட்ட விஷயம். மீண்டும் மீண்டும் நடிகர் திலகத்தை சீண்டும் விஷயம் வரும் போது அமைதியாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது எந்த விதத்தில் நியாயமாக இருக்க முடியும். செல்வாக்கு என்பது தேர்தலை வைத்து அளக்கப் படும் விஷயமல்ல என்பதை பல முறை கூறியாகி விட்டது. நடிகர் திலகம் யாருக்காக தான் கஷ்டப் பட்டு வளர்த்த இயக்கத்தை விட்டு விலகினார், யாருக்காக தேர்தலில் ஓட்டுக் கேட்டார் என்பதையெல்லாம் மனசாட்சியுள்ள ஒவ்வொரு எம்.ஜி.ஆர் அவர்களின் ரசிகரும் மறக்க மாட்டார்கள். அதையெல்லாம் மறந்து விட்டு அவர்கள் திரும்பத் திரும்ப நடிகர் திலகத்தின் செல்வாக்கை குறைத்துக் கூறுகிறார்கள் என்றால் அது அவர்களின் மனசாட்சி தான் எடுத்துரைக்க வேண்டும். இதை யார் உணருகிறார்களோ இல்லையோ வினோத் சார் போன்று எம்.ஜி.ஆர். அவர்களின் உண்மையான பக்தர்கள் நினைத்துப் பார்ப்பார்கள் என்று நம்புவோம்.
http://i1146.photobucket.com/albums/...ps765af029.jpg
இந்த முகம் போதுமய்யா எங்களுக்கு ...
போற்றுவோர் போற்றட்டும் தூற்றுவோர் தூற்றட்டும்....
தொடர்வோம் எங்கள் பணியை ...
எம் கடன் தங்கள் புகழ் பாடிக் கிடப்பதே...
"நன்னா சொன்னேள் போங்கோ!" னு உங்ககிட்ட சிவாஜி சொல்லிக்கொண்டே சிரிப்பது போல இருக்கு.
இந்த மாதிரி புகழ்வதற்கு பதில் திட்டியே எழுதலாமே? நடிகர்திலகம் ,"அவரை மாதிரி செலக்ட் பண்ணி நடிச்சிருக்கணுமாம்.". இதை விட insult தேவையே இல்லை.அப்படியெல்லாம் செய்யாததனால்தான் அவர் உலகத்தில் எந்த நடிகனும் கனவு காண கூட முடியாத அளவு வித விதமான character கள் செய்து உலக புகழ் அடைந்து இந்தியாவிலேயே முதன் முறையாக international Award வாங்கி,அமெரிக்க அரசாங்கத்தால் கௌரவிக்க பட்ட முதல் இந்திய கலைஞர் ஆகி , Chevaliar பெற்று அன்றும் இன்றும் என்றுமே எல்லோரும் போற்றும் படி அவர் தொழிலில் No 1 ஆக விளங்கினார்.அவர்தான் உலகத்துக்கே role model . அவர் வேறு யாரையும் role model ஆக கொள்ள வேண்டிய அவசியமில்லை.
அவர் அடைந்திருக்க வேண்டிய உயரம் இன்னும் அதிகம் என்று ஒப்பு கொள்கிறோம். அதை அடைய விடாமல் செய்த "முறைகளும் " எங்களுக்கு தெரியும்.
ராகவேந்தர் சார் சொன்ன படி தேர்தல் வெற்றிகளை வைத்து தீர்மானிக்க படுவதில்லை சாதனைகளும்,உன்னதங்களும்.
நட்புடன் - உரிமையுடன் உரியவருக்கு
நடிகர் திலகம் அவர்களின் நடிப்பை பற்றி மக்கள் திலகம் பல முறை மக்கள் மத்தியிலும் - சினிமா விழாக்களிலும் -புகழ்ந்து பேசியுள்ளார் . கடைசி வரை இருவரும் நட்புடன் இருந்து வந்தனர் .
தொழில் ரீதியாக இருவரின் நிலையும் , நடிப்பும் இருவகையாக இருந்ததால் இரண்டு ரசிகர்கள் குழுவாக பிரிந்தது இயற்கையே.
மக்கள் திலகத்தின் தனிப்பட்ட நடிப்பு
அவரது கொள்கை சார்ந்த கதா பாத்திரங்கள்
கதைக்கு ஏற்ற வசனங்கள் - பாடல்கள் அவருக்கு பொருத்தமாக இயற்கையாகவே அமைந்த காரணத்தால் அவர் படங்கள் மீது மக்களுக்கு ஒரு தனி ஈர்ப்பு இருந்தது .
அவரது புகழ் பற்றி சில முரண்பாடான கருத்துக்கள் - விமர்சனங்கள் வருவது தவிர்க்க முடியாதது .
''யாருடைய உயர்வையும் - முன்னேற்றத்தையும் - வளர்ச்சியினையும் கண்டு பொறாமை படவோ - தடுக்கவோ ''
இல்லை . மீண்டும் மீண்டும் அதே கருத்தை கூறுவது
ஏமாற்றத்தின் '' உச்சத்தில் இருக்கும் ஒருவரின் மன நிலை குறித்து பரிதாப படுவதை தவிர வேறு என்ன செய்ய முடியும் .
நடிகர் திலகம் அவர்களின் படங்கள் - அவரது பட சாதனைகள்
தனிப்பட்ட அவரது புகழ் மீது எங்களுக்கு மதிப்புள்ளது .
பத்திரிகைகள் - ஊடகங்கள் - இணயதளம் - மற்றும் பொது மக்கள் ;''விமர்சனம் என்று வரும்போது ,காரணங்களை அலசும்போது ஒப்பீடு செய்யும்போது மாறுபட்ட கருத்துக்கள்
கூறுவார்கள் . அதை தாங்க கூடிய பக்குவம் இல்லாதவரின்
மறு முனை கிண்டல் தாக்குதல் மூலம் அவரது அறியாமையை
வெளிபடுகிறது .
''கூட்டு குடும்பத்தில் இருந்தால் கலகலப்புடன் மகிழ்ச்சியாக வாழலாம் . என்ன செய்வது என் நண்பரை தனிக்குடுத்தனம் வைத்துவிட்டார்கள் . தனிமை அவரை இந்த நிலைமைக்கு தள்ளிவிட்டது .''
எப்படியோ 24 x 7 நம் தலைவரின் நினைவுகள் அவரது நெஞ்சிலும் அலைபாய்கிறது என்பதை அறியும்போது
அனுமன் இதயத்தில் ராமன் உள்ளது போல் நம் நண்பரின் இதயத்திலும் மக்கள் திலகம் இருப்பது அறிந்து மிக்க மகிழ்ச்சி
''கடல் கடந்து வாழும் பத்மநாப பாரதவிலாசே ''.
எஸ்வி சார்,
உங்கள் வருகைக்கு நன்றி. நீங்களே பார்த்திருப்பீர்கள் ,எங்கள் திரியில் யாரையும் குறித்து எந்த எதிர் மறையான கருத்தும் வராமல் கவனமாக தவிர்க்கிறோம். அந்த மாதிரி லட்ச கணக்கில் எதிர்மறை கருத்துக்கள் குவிந்துள்ளன. ஆனால்,எங்கள் நடிகர்திலகத்தை புகழ எங்களுக்கு கோடி விஷயங்கள் குவிந்துள்ள போது , குப்பைகளை தவிர்த்தே வருகிறோம்.
நானும் ஒப்பு கொள்கிறேன்.இருவரும் நட்புடன் இருந்ததை. மலைக்கள்ளன் படத்தில் நடிக்க சொல்லி பட்ஷி ராஜா நடிகர்திலகம் வீட்டு வாசலில் தவம் இருந்த போது ,adventure படத்திற்கு அண்ணனை போடுங்கள் ,எனக்கு தற்போது நேரம் இல்லை என்று தன் போட்டியாளரிடமும் பெருந்தன்மை காட்டியவர் நடிகர்திலகம்.பின்னாளில் இதே பட்ஷி ராஜா நடிகர்திலகத்தை வைத்தே தொடர்ந்து படங்கள் எடுத்தார்.
தாங்கள் செல்வாக்கு விஷயத்தில் தவறான ஒரு விஷயத்தை quote செய்ததால் நான் இடையூறு செய்ய நேர்ந்தது. தொடருங்கள்.
தனி குடித்தனம் என்பதெல்லாம் சரக்குள்ளவர்களுக்கே தகுதியான விஷயம்.அதை பற்றி தாங்கள் கவலை படவே தேவையில்லை.தற்காலத்துக்கு பொருத்தமானதும் கூட..
இன்றைய நாளை இனிய நாளாக்க இனிதாய்க் காண்போம் நம் இதய தெய்வத்தை
http://i1146.photobucket.com/albums/...psb8597571.jpg
http://i1146.photobucket.com/albums/...psd9ed5c98.jpg
http://i1146.photobucket.com/albums/...ps8e2c361b.jpg
http://i1146.photobucket.com/albums/...ps43a64f7d.jpg
http://i1146.photobucket.com/albums/...psff427102.jpg
http://i1146.photobucket.com/albums/...psf3586abd.jpg
இந்தப் படத்தின் ஒரிஜினல் கிடைக்குமா...
http://i1146.photobucket.com/albums/...ps7297cb4e.jpg
இந்த நாள் இனிய நாளாகும் என்பதில் ஐயமில்லை. அசத்தல் நிழற்படங்கள். அதுவும் பாலாஜியுடன். அசத்தல் ராகவேந்திரன் சார்.
என்னோட பாகபிரிவினை writeups க்கு hubbers குடுத்த feedbacks க்கு நன்றி .
பார்த்தல் பசி தீரும்
ஒவ்வொரு பா series படங்களும் ஒரு theme அதாவது ஒரு மைய கரு வின் அடிப்படையில் அமைந்து இருக்கும் . பாகபிரிவினையில் அண்ணன் தம்பி பாசம், கூட்டு குடும்பம்தின் நிறைகள் , இந்த பார்த்தல் பசி தீரும் படத்தில் நாடு பற்று, மற்றும் friendship தான் highlight மற்றும் under current theme .
இந்த படம் தின் கதை என்று பார்த்தல் வேலு(ஜெமினி) மற்றும் பாலு (சிவாஜி)வும் , airforce யில் வேலை பார்கிறார்கள் . யுத்தத்தில் அவர்கள் விமானம் ஜப்பான் வீரர்களால் சுடப்பட்டு , அஸ்ஸாம் எல்லையில் காயத்துடன் உயிர் தப்புகிறார்கள் .
இதுக்கு இடையில் ஒரு நாள் சிவாஜி ஜப்பான் வீரர்களால் கைது செய்ய படுகிறார்
இங்கே இந்திரா(சாவித்திரி)யை சந்திக்கும் ஜெமினி அவரை காதலித்து திருமணம் செய்து கொள்கிறார் .
சில நாட்களில் இந்திய ராணுவம் அவரை கண்டுபிடித்து திரும்பவும் பணிக்கு அழைத்து செல்கின்றனர் .
யுதத்தில் சாவித்திரி வின் கிராமம் அழிந்து விடுகிறது . சாவித்திரி மற்றும் சாவித்ரியின் தந்தையை தேடி செல்லும் வேலு இதை கண்டு அதிர்ச்சி அடைகிறார்.
II ND world வார் முடிந்த உடன் பாலு ஜப்பான் அரசாங்கத்தினால் விடிதலை செய்யப்பட்டு , நேதாஜியின் INA வில் பணியாற்றி விட்டு டெல்லி வந்து சேர்கிறார். அங்கே பேப்பர் விக்கும் ஒரு தமிழ் சிறுவனை சந்திக்கிறார் , அந்த சின்ன பய்யன் தான் கமல்ஹாசன் , அவர் மூலம் தன உடன் பிறவா சகோதரி (சாவித்திரி) உயிரோட இருபதை தெரிந்து கொண்டு , அவர்களுக்கு யாரும் இல்லை என்ற சூழ்நிலையில் அவர்களை தானே அடைக்கலம் தருகிறார் . கதை சென்னைக்கு நகருகிறது. அங்கே ஜெமினி வின் கம்பெனியில் வேலை செய்கிறார் .ஜெமினியை அவர் வீட்டில் சந்தித்து இந்திரா மற்றும் சிறுவன் பாலு உயிருடன் இருப்பதாய் சொல்லல வரும் பொழுது , ஜெமினி வின் மனைவி ஜானகி (சௌகார் ) மற்றும் குமார் ( again கமல் ) யை அறிமுகம் செய்து வைக்கிறார் ஜெமினி , கூடவே சௌகார் ஒரு இதய நோயாளி என்பதையும் தெரிவிக்கிறார் . இதனால் சிவாஜி சொல்ல வந்த உண்மையை சொல்லாமலே சென்று விடுகிறார் .
சில நாட்கள் கழித்து தற்செயலாக சிவாஜியின் வீட்டுக்கு வரும் ஜெமினி மற்றும் சௌகார் அங்கே சிறுவன் கமல் (பாலு) மற்றும் சாவித்திரி யை பார்த்து அதிர்ச்சி அடைகிறார்.
சிவாஜி தனிமையில் ஜெமினியிடம் , இந்திரா (சாவித்திரி)க்கு கண் பார்வை பறிபோய்விட்டது என்ற உண்மையை சொல்கிறார் . மேலும் சாவத்ரியின் தந்தை காலம் ஆகிவிட்டதையும் , தான் அவர்களுக்கு அடைக்கலம் தருவது பற்றி உண்மையை சொல்கிறார் .
இது தெரியாத சரோஜா (சரோஜா தேவி) சிவாஜியை காதலிக்கிறார் . சரோஜா ஜெமினியின் sister in law .
இந்த உண்மை தெரிந்த ஜெமினியால் எதிலும் concentrate செய்ய முடியவில்லை . பாலு மற்றும் குமாரும் நண்பர்கள் நண்பர்கள் ஆகி விடுகிறார்கள் .
பாலுவின் மூலம் சௌகார்க்கு சாவித்திரி தான் சிவாஜியின் மனைவி என்று நினைத்துகொண்டு ஜெமினிவிடம் சிவாஜி யை பற்றி தவறாக சொல்கிறார் .
ஜெமினி சிவாஜி பேரில் தன் குடும்பத்துக்காக சொத்து எழுதி வைக்கிறார் , இதுவும் சௌகார் க்கு பிடிக்கவில்லை .அவர் சரோஜாவுக்கு சிவாஜியை பத்தி சொல்லிவிடிகிறார் . சிவாஜி மற்றும் சரோஜா க்கு இடையில் வாக்குவாதம் வந்து அதை கமல் (பாலு) மற்றும் இந்திரா (சாவித்திரி) கேட்டு விடுகிறார்கள் .
இந்திரா மற்றும் பாலு ஜெமினி யின் வீட்டுக்கு வந்து விடுகிறார்கள் .ஜெமினி உண்ம்மையை உணர்ச்சியை கட்டு படுத்த முடியாமல் உண்மையை சொல்லி விடுகிறார் . அதிர்ச்சி அடைந்த சௌகார்யின் உயிர் பிரிகிறது .சிவாஜி மற்றும் சரோஜா , ஜெமினி மற்றும் சாவித்ரி இணைகிறார்கள் .
படம் இனிதே முடிகிறது
சிவாஜி இந்த படத்தில் சற்று பூசினது போல் இருக்கிறார். அது அவருக்கு , அவர் ஏற்ற்று கொண்ட கதாபாத்திறதுக்கு வலு சேர்க்கிறது . பொதுவாக ராணுவதில் இருந்து வருவோர்கள் இப்பிடி இருப்பதாய் நாம் பார்க்க முடியும் . இந்த படத்தில் அவர் கால் சற்று ஊனம், இருந்தாலும் அதில் ஒரு கம்பீரம் , அந்த நடையில் ஒரு ராஜா நடை . அவர் புருவம் சற்று தடியாக இருக்கிறது . இந்த படத்தில் அவர் கதாபாத்திரம் நட்புக்கும் அவர் எது கொண்ட பொறுப்புக்கும் இடையில் சிக்கி கொண்டு , ஆனால் அதை ஒரு சுமையாக கருதாமல் வாழ்கிறார் , திரையில் மட்டும் இல்லை நம் மனதிலும் தான் . அவர் நடிப்பை சொல்லுவதுக்கு என்னக்கு வயசு பத்தாது, சொல்லி சொல்லி வாய் வலிகிறது அனாலும் சொல்லாமல் இருக்க முடியவில்லை . எப்படி ஒரு நடிகர் எல்லா படத்திலும் தன்னோட பெஸ்ட் யை கொடுக்க முடியாதோ . குறிப்பாக பிள்ளைக்கு தந்தை ஒருவன் யில் அவர் நடிப்பு , கோடி அசைந்ததும் கற்று வந்தாதா என்ற டூயட் ல் அவர் உதடு அசைவு , இனிமையான பாடல் வரிகள் டாப் .
இந்த படத்தை பார்க்கும் பொழுது நமக்கும் இப்படி ஒரு நண்பர் இல்லை என்ற ஒரு வித பொறமை தொற்றி கொள்கிறதை தவிர்க்க முடியாதது.
ஜெமினி முதலில் காதல் வயபடும் காட்சிகள் நல்ல நகைச்சுவை , அது அப்புறம் அவர் இரு கொல்லி நெருப்பாக எறிகிறார். நடிகர் திலகத்துக்கு apt foil , puccka second fiddle . ஒரு வித ஈகோ வும் இல்லாமல் அவருக்கு குடுக்க பட்ட கேரக்டர் யை சும்மா பிச்சு உதறிக்கிறார் .
நடிகையர் திலகம் அசாம் பெண் அக introduce ஆகி , கண் தெரியாமல் நடிப்பில் ஸ்கோர் செய்து , அவரும் அழுது , நம்மளையும் அழ வைத்து விடுகிறார் . சௌகார் யின் பாத்திரம் இரு கோடுகள் , உயர்ந்த மனிதன் யின் செயல் தெரிகிறது . Of Course இந்த படம் தன் முதலில் வந்தது , இந்த படத்தின் பதிப்பு , வெற்றி யின் reach இந்த characters டிசைன் செய்ய பட்டு இருக்கும் என்று நினைக்கிறன் .
பாகபிரிவினை படத்தில் சரோஜா விக்கு நடிப்பு scope அதிகம் இந்த படத்தில் இத்தனை ஸ்டார் performers க்கு இடையில் காணமல் பொய் விடுகிறார் .இருந்தாலும் சிவாஜி உடன் confrontation சீன் யில் கிடைத்த சான்ஸ் யை நன்றாக பயன்படுத்தி கொள்கிறார் .
சிறுவன் கமல் தோல் ரோல்யில் தன் மனசிக குரு நடிகர் திலகம் , ஜெமினி , சாவித்திரி , சௌகார் உடன் நடித்து கல்கி உள்ளார் .
தங்கவேலு காமெடி as usual டாப். குறிப்பாக அவர் ஜெமினி விடம் சிவாஜிக்கு வேலை கேட்கும் பாங்கு.
3 பாடல்கள் சாக வரம் பெற்று விட்டது .
இந்த படத்தின் கதை திரு AC Tirlok . பிற்காலத்தில் சிவாஜியை வெச்சு நிறைய படங்கள் , வெற்றி படங்கள் கொடுத்து உள்ளார்.
பார்தால் பசி தீரும் படத்தை பார்த்தல் பார்வையாளர்களுக்கு நல்ல படம் பார்த்த பசி தீரும் .
Hope my Tamil is better this time
நயாகரா மேயர் கௌரவம். ஜவஹர்லால் நேருவிற்குப் பிறகு கிடைக்கப் பெற்ற ஒரே செல்வாக்கான இந்தியன் எங்கள் மனித தெய்வம். நடிக தெய்வத்தின் காலடி எங்கள் மண்ணில் படவேண்டும் என்று வேண்டி விரும்பி அழைத்து கௌரவித்தது அமெரிக்கா.
'செவாலியே' தந்து தனக்கு செல்வாக்கைத் தேடிக் கொண்டது பிரான்ஸ். தலைசிறந்த நடிகர் விருது தந்து ஆசியாவும், ஆப்பிரிக்காவும் தலைவணங்கின. உலக நாடுகளில் தன் நடிப்பால் உன்னதப் புகழ் அடைந்த மமதை இல்லாத மாமேதை.
சென்ற இடமெல்லாம் செல்வாக்கு பெற்ற மாமனிதர்.
அந்நியர் மண் தூக்கி வைத்துக் கொண்டாடியது அவர் பெருமை கண்டு.
அவரை சீண்டி சீரழிந்து போனது நமது மண்.
நஷ்டம் அவருக்கல்ல...
எங்களுக்கல்ல...
இந்த பாழாய்ப் போன பூமிக்கு.
நடிகர் திலகத்தின் செல்வாக்கைக் கண்டு ஓடி ஒளிந்த வடநாட்டு நடிகர்.
http://i1087.photobucket.com/albums/...%20-2/1-39.jpg
http://i1087.photobucket.com/albums/...%20-2/2-38.jpg
Dear Ragavendran sir,
Photos are too good especially the black & white one , with pattu sattai, looks like smiling us, with a divine touch
இதுவரை எவரும் நினைத்துக் கூட பார்க்க முடியாத இமாலய வசூல் சாதனை புரிந்த, முந்தைய அனைத்து சாதனைகளையும் முறியடித்த திரிசூலம் 200-ஆவது நாள் வெற்றிவிழாக் கேடயம்.
http://www.oocities.org/vijayalakshm.../trisoolam.jpg
உங்களுக்குத் தெரியுமா - அபூர்வத் தகவல் தொடர்
http://insidecroydon.files.wordpress...id_lean460.jpg
David Lean என்ற புகழ் பெற்ற ஹாலிவுட் தயாரிப்பாளர்-இயக்குநர் நமது பாரத தேசத்திற்கு வருகை புரிந்தது தெரிந்திருக்கும். 1962-63 காலத்தில் நடிகர் திலகத்தை அன்னை இல்லத்தில் சந்தித்தார். நடிகர் திலகம் அவரை உபசரித்து விருந்தளித்ததோடு, பார் மகளே பார் திரைப்படத்தின் அரங்கத்திற்கும் அவரை அழைத்துச் சென்றார். அப்படத்தில் நடிகர் திலகத்தின் நடிப்பைப் பார்த்து டேவிட் லீன் மெய்ம்மறந்து நின்றதெல்லாம் வரலாறு. தெரியாத விஷயம். அந்த வருகைக்கான காரணம்.
http://www.eatsleeplivefilm.com/wp-c...0-13803-vf.jpg
தனது Lawrence of Arabia திரைப்படத்தில் நடிக்க நடிகர் திலகத்தை அழைப்பதற்கே. நடிகர் திலகம் தனது தாய் மொழியும் தாய்நாடும் பெரிது, அதில் நல்ல பெயர் கிடைத்தாலே போதும் என்ற மொழி உணர்வுடன் அந்த வாய்ப்பை மறுத்து விட்டார். அதன் பிறகு டேவிட் லீன் திலீப் குமார் அவர்களை அணுகியதெல்லாம் வேறு கதை.
நிறைகுடம் தளும்பாது என்பதற்கு மிகச் சிறந்த உதாரணம் நடிகர் திலகம்.