-
23rd May 2013, 09:36 PM
#11
Junior Member
Seasoned Hubber
பாகப்பிரிவினை
ஒரு குடும்பத்தின் மூத்த மகன் ஆன நடிகர் திலகம் தன 7 அவது வயதில் கரண்ட் ஷாக் அடித்தால் ஒரு கை மற்றும் கால் ஊனம் ஆகிறது .நடிகர் திலகம் தன பெரியப்பா (TS. Balaiah ) , பெரியம்மா (C. K. சரஸ்வதி), தன் அப்பா (S. V. Subbaiah ) , அம்மா (M. V. ராஜம்மா ) உடன் ஒரு கிராமத்தில் வாழ்கிறார் . நடிகர் திலகத்தின் தம்பி நம்பியார் ஒரு பட்டதாரி . CK சரஸ்வதி யின் தம்பி MR ராதா சிங்கப்பூர் ல் இருந்து தன் தங்கை உடன் வருகிறார் . அவர் ஒரு பாம்பு போல . அவர் வந்த உடன் குடும்பத்தில் பிரச்சனை வருகிறது இதனால் சொத்து பாகப்பிரிவினை செய்யபடுகிறது . நம்பியார் MR ராதா வின் தங்கையை கல்யாணம் பண்ணிக்கிறார் . சிவாஜி அவர் வீட்டில் வேலை செய்யும் சரோஜா தேவி யை கல்யாணம் செய்து கொள்கிறார் . இவர்களுக்கும் ஆன் குழந்தை பிறக்கிறது .
நம்பியாரும் , MR ராதாவும் சென்னை செல்கிறார்கள் . அங்கே MR ராதா ஒரு ஷோ நடத்தி காசு செலவு செய்கிறார் . அவர் பேச்சை நம்பி MN நம்பியார் தன் ஆபீசில் இருந்து 75000/- திருடி MR ராதா விடம் கொடுக்கிறார்.
சிவாஜி யும் சரோஜாவும் சென்னைக்கு சிவாஜியின் மெடிக்கல் treatment காக வருகிறார்கள் . வந்த இடத்தில MR ராதா சிவாஜியின் குழந்தை யை கடத்தி தன் ஷாவுக்கு பயன்படுத்தி கொள்கிறார் . இதை தடுக்கும் முயற்சில் சிவாஜிக்கு கரண்ட் ஷாக் அடித்து உடம்பு சரியாகிறது . குடும்பம் மீண்டும் ஒன்று சேர்கிறது.
ஒரு குடும்பம் அதுவும் கூட்டு குடும்பம் எப்படி இருக்க வேண்டும் அதுவும் இந்த மாதிரி பெரிய குடும்பத்தில் இருப்பவர்கள் , அதுவும் இந்த மாதிரி குடும்பத்தை வழி நடத்துவார்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு மிகவும் நன்றாக வாழ்ந்து காட்டி இருப்பர் பாலையா .தன் தம்பி மகன் சிவாஜியிடம் அவர் காட்டும் கரிசனம் , sv சுப்பையா தன் மகனுக்கு சில நாட்கள் மருந்து சாப்ட்ட வைத்தியர் சொன்ன மாத்திரைகளை வங்கி வரும் சொன்ன பொழுது அதுக்கு பாலையா அலட்டிகொள்ளாமல் சொல்லும் வார்த்தை என் உடம்பு குணமாக வரைக்கும் சாப்பிடட்டுமே .
பாகப்பிரிவினை அனா உடன் அதை வாங்க மறுத்தும் , அழுதும் தன்னால் தன் இது நடந்தது என்று கண்டு மறுகவதும் , அதே பாலையா தன் மனைவி சரோஜா தேவிக்கு மாம்பழம் கிடைக்காமல் செய்ததும் , டக் என்று இரண்டு மாம்பழத்தை எடுத்து சிவாஜியிடம் குடுத்து தன் மனைவியிடம் குடுக்க சொல்லும் இடம் மிகவும் எதார்த்தம் .
MN நம்பியார் நல்லவர் ஆனால் எடுப்பர் கைபிள்ளை அதனால்
MR ராதா விடம் ஏமாற்றபட்டு தன் தவறை உணர்கிறார் .அதே நம்பியார் MR ராதா வின் பேச்சை கேட்டு தன் தந்தை உடம்பு சரி இல்லாத பொழுது கல்யாணம் செய்து கொள்வதும் , சிவாஜியை அவமானம் படுத்தும் பொழுதும் , அதே சிவாஜியை சென்னையில் சந்திக்கும் பொழுது குற்ற உணர்வால் புழுங்கும் பொழுது நடிப்பில் ஸ்கோர் செய்து விடுகிறார் .
C. K. சரஸ்வதி எப்படி ஒரு பெண் இருக்க கூடாது என்பதற்கு ஒரு எடுத்துகாட்டு . இவ்வளவு கல் நெஞ்சம் படைத்த பெண்கள் இருபர்களா என்று ஆச்சர்யம் , கலந்த அதிர்ச்சி .
சரோஜா தேவி நம்ம நடிகர் திலகத்துடன் நடிக்கும் பொழுது அவருக்கு நல்ல நடிக்க வரும் என்பதை நிலை நாட்டி விதிக்கிறார் மிச்ச படங்களை போல் இல்லாமல் இதில் மிக நன்றாக நடித்து உள்ளார் .
நடிகர் திலகம் கல்யாணம் வேண்டாம் என்று மறுக்கும் பொழுது அதுக்கு அவர் கூறும் சில வார்த்தைகள் மிக இயல்பு .
அடுத்தது நம்ம சிங்கப்பூர் சிங்காரம்
எனக்கு பிடித்த MR ராதா .
அவர் நடிக்கும் நிறைய படங்களில் ஹீரோவை dominate செய்து ஸ்கோர் செய்து விடுவர் . இந்த படத்தில் சும்மா பிச்சு உதறி இருப்பர் .
முதலில் நடிகர் திலகம் உடன் சண்டை இடுவதும், வீட்டுக்கு வந்த உடன் பாலையா வின் முடியை பார்த்து இது என்ன குடுமி , எங்க அக்காவை சிங்கப்பூரில் கல்யாணம் செய்து குடுத்து இருக்கலாம் என்று சொல்லும் இடம் டாப் . MN நம்பியார் புட்டு சாப்பிட போகும் பொழுது வெளி நாட்டில் நீர் ஆவி யில் ராக்கெட் விடுறன் , நீங்க அதுல புட்டு சப்ப்டுகிரிங்க .தன் தங்கை சிங் சங் ஜாம் சபிடிவதும் , அது எதுல தயாரிக்க பட்டுஇருக்கு என்று கேட்கும் பொழுது கேட்காதே, அதை போட்டுகிட்ட தால மூஞ்சி யில் சுருக்கம் இல்லை .
அதே MR ராதா நம்பியார் பணம் கேட்கும் பொழுது என்ன கொள்ள செஞ்சுட்ட ஜெயில்க்கு போற சும்மா ஒரு 6 மாசம் நா வேணும் நா எ கிளாஸ் வாங்கி தரேன் . artists background யை பத்தி கேட்காதே
இப்படி சொல்லி கொண்டே போகலாம்
ஒரு கூட்டு குடும்பத்தில் மூத்த பயன் அக பிறகும் ஒரு பையன் எப்படி இருக்க வேண்டும் , எவ்வளவு விட்டு தர முடியுமோ அவ்வளவு விட்டு தர வேண்டும் அப்போ தன் அந்த குடும்பம் நல்ல இருக்கும் .இது தன் இந்த படத்தில் நடிகர் திலகத்தின் பத்திரத்தின் அடித்தளம் . basically நடிகர் திலகம் கூட்டு குடும்பத்தில் இருந்து வந்ததால் அவருக்கு இது ஒரு cakewalk . ஓவர் அக்டிங் என்ற பேச்சுகே இடம் இல்லாமல் தன் ஒரு complete டைரக்டர்'s ஆர்டிஸ்ட் என்பதை மீண்டும் ஒரு முறை அழுத்தமாக நிருபது உள்ளார் . இது புரியாமல் சில பேர் பேசும் பொழுது கோவம் வரவில்லை மாறாக சிரிப்பு தன் வருகிறது . எங்க எப்போ எப்படி நடிக்க வேண்டுமோ அதுக்கு அனுசரித்து நடித்து கொடுக்க குடியவர் இவர்
ஒரு படத்தில் ஒரு அழகான ஹீரோவை படம் பூராவும் இப்படி உடல் ஊனமுற்றோர் அக காட்டி இருப்பர்கள, அதுவும் ஒரு வில்லன் படம் பூராவும் அந்த ஹீரோவை நொண்டி என்று சொல்வதற்கு இடம் அளிக்கிறார் என்றால் நடிகர் திலகத்துக்கு நடிப்பு அவர் காட்டும் பக்தி , கேரக்டர் மீதும், அந்த கதை மீதும் இருக்கும் அசைக்க முடியாத
நம்பிக்கை யை காட்டுகிறது .
பொதுவாக ஒரு ஹீரோ ஒரு பாடல் காட்சியிலோ, ஒரு fight சீன் ல் , அறிமுகம் ஆவார் இதில் தன் வீட்டு தண்ணீர் தொட்டியில் விழுந்து , தன்னை காப்பாத்த சொல்லி கூப்பிடும் பொழுது அறிமுகம் ஆகிறார் .
ஒரு கிராமத்து படிப்பு வாசனை இல்லாத , தன் குறையை பெருசாக எடுத்த கொல்லாத , ஒரு மனிதர் , தன் அப்பாவுக்கு உடம்பு சரி இல்லை என்ற பொழுது முருகனிடம் வேண்டி கொள்வதும், வெள்ளந்தியாக MR ராதாவை சிங்கப்பூர் an என்று சொல்லி சண்டை போடுவதும் , தன் தம்பி தன்னை புரிந்து கொள்ளாமல் சென்றவுடன் உருகுவதும் , அதே தம்பியிடம் MR ராதா வின் தங்கையை திருமணம் செய்து கொள்ள வேண்டாம் என்று கெஞ்சுவதும், அதே தம்ப்பி தன் தவறை உணர்த்து தன் அண்ணனை தன் வீட்டுக்கு அழைத்ததும் , நாசுக்க மறுக்கும் இடம் இயற்கை நடிப்புக்கு ஒரு எடுத்துகாட்டு .
தன் தம்பியின் மனைவிக்கு குழந்தை பிறப்பதில் சிக்கல் இருப்பதை தெரிந்து கொண்டு தானாகவே ஒரு பெண் மருத்துவரை அழைத்து வருவது ஆபத்து காலத்தில் உதவுதுக்கு ஒரு உதாரணம் .
தன்னுடைய குழந்தையை பார்க்கும் பொழுது அதன் கை, கால் யை தடவி பாத்து அது normal aka இருப்பதை உறுதி படுத்தி கொள்வது என்ன வென்று சொல்வது இவர் நடிப்பை பற்றி .
பாடல்கள் அனைத்தும் குறிப்பாக
என் பிறந்தாய் மகனே என்ற பாடல் varigalum அதை compliment செய்யும் விதத்தில் இசை இருப்பதும், அதில் நடிகர் திலகம் ஒத்த கை உடன் தன் குழந்தையை தலாட்டும் தோரணை , rocking .
மொத்தத்தில் இந்த படத்தில் அனைவரும் கலக்கி இருகிறார்கள் .
-
23rd May 2013 09:36 PM
# ADS
Circuit advertisement
Bookmarks