Page 28 of 35 FirstFirst ... 182627282930 ... LastLast
Results 271 to 280 of 341

Thread: veNbA vadikkalAm vA

  1. #271
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Oct 2005
    Location
    My
    Posts
    1,485
    Post Thanks / Like
    எலிக்குமே கோபியரோ எங்கே?உம் நெஞ்சம்
    களிக்கவே காரணமே உண்டு.


    களிப்புடன் தந்தீர் கவிதை! விழிப்புடன்
    அப்பணி மேல்தொடர் வீர்.

    வெண்பா எழுதி விரைவில் இலக்கியமே
    அன்பாய் அமைப்பீர் எலிக்கு.

    நான் முன் எழுதியிட்ட இதுபோன்ற மூன்று பாடல்கள் மீண்டும் வந்தபோது காணப்படவில்ல.
    ஆகவே கூடியவரைக்கும் மீட்டுருவாக்கி எழுதியுள்ளேன்.
    B.I. Sivamaalaa (Ms)

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #272
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    மீண்டுவந்து அழகிய வெண்பாக்கள் அளித்தமைக்கு நன்றி.. நான் தான் தவறாக எழுதியிருக்கிறேனோ என சற்றுப் பயந்திருந்தேன்..
    *
    அதையேன் கேட்கிறீர்கள்..அவ்வப்போது வருகிற்து..சரியான ரஜினி ரசிகர் போல இருக்கிறது.. எப்படி வருகிறது எப்போது வருகிறது எனத் தெரியவில்லை..ஆனால் வருகிறது.. விளக்குகளை இரவு முழுவதும் எரியவிட்டால் வருவதில்லை.. கொஞ்சம் அணைத்தால் எப்படியோ வந்து (பாவம் பசி போலும்) மூடியிருக்கும் சமையலறைக்கதவைச் சுரண்டிப் பார்த்துப் போகிறது.. என் மனைவி ‘ஆமை வடை பண்ண்ட்டா..உங்களுக்கும் எலிக்கும் சேர்த்து!’ என்றாள்.. வேண்டாம் என்றுவிட்டேன்..
    சில அட்டைகளில் கோந்துபோல ஏதோ தடவி வைத்தாள் நேற்று இரவு ..ம்ம் வரவில்லை.. ஆனால் இரவில் அவ்வப்போது எழுந்து அது வருவது போல் , நடப்பது போல சத்தம் கேட்பதாக நினைத்துப் பார்த்துக் கொண்டிருந்தோம்..

    வந்தே மிரட்டிய வ்ல்ல எலியுந்தான்
    பந்தமென எண்ணியே போகாமல் தான்படுத்த
    வேட்டையிட வைத்த மருந்தும் மறைந்துபோய்
    கேட்கிறது காலின் ஒலி

  4. #273
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    சிற்பக்கலைஞர் கணபதி ஸ்தபதி காலமானாராம் இன்று..பொய் சொல்கிறார்கள்.. அவர்தான் வள்ளுவர் கோட்ட்த்திலும் திருவள்ளுவர் சிலையிலும் நிலைத்து நிற்பவராயிற்றே...

    உளிகள் உணர்விழந்து உள்ளம் கலங்கி
    விழிகளிலே கட்டும் குளத்தை – ஒளிமங்கி
    கற்களும் மென்மேலும் கல்லாகி எங்கெங்கும்
    சிற்பியைச் சிந்தித் திடும்..

  5. #274
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    சுற்றும் சுழன்றிடும் சுண்டிணா லேதுள்ளும்
    மற்றும் மதிமயக்கும் வண்ணமுள்ள பம்பரமும்
    கண்பட்டுத் தோற்று அடிவாங்க நெஞ்சமோ
    புண்ணாகிப் போனதே பார்..

    ஓட்டலாம் சைக்கிளென ஓர்பையன் கூறிவிட
    நாட்டமாய்க் கால்களை நன்றாக வைத்தெதிரே
    பாயப் பயப்பட்டுக் கீழ்விழ மாறவில்லை
    காயத்தில் வந்த வடு

    (பல வருடங்களுக்கு முன்னால் எழுதிப் பார்த்த பாட்டு...)

  6. #275
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Oct 2005
    Location
    My
    Posts
    1,485
    Post Thanks / Like

    வருடம் பலமுன்.....

    Quote Originally Posted by chinnakkannan View Post
    சுற்றும் சுழன்றிடும் சுண்டிணா லேதுள்ளும்
    மற்றும் மதிமயக்கும் வண்ணமுள்ள பம்பரமும்
    கண்பட்டுத் தோற்று அடிவாங்க நெஞ்சமோ
    புண்ணாகிப் போனதே பார்..

    ஓட்டலாம் சைக்கிளென ஓர்பையன் கூறிவிட
    நாட்டமாய்க் கால்களை நன்றாக வைத்தெதிரே
    பாயப் பயப்பட்டுக் கீழ்விழ மாறவில்லை
    காயத்தில் வந்த வடு

    (பல வருடங்களுக்கு முன்னால் எழுதிப் பார்த்த பாட்டு...)

    வருடம் பலமுன் வருடிவழி வெண்பா
    நெருடேதும் இன்றி நிகழ -- மருள்தீரத்
    தந்தவர்க்கு நன்றி தருகவே பல்சுவையால்
    இந்தநாள் முன்போல் இனி.
    B.I. Sivamaalaa (Ms)

  7. #276
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Oct 2005
    Location
    My
    Posts
    1,485
    Post Thanks / Like
    Quote Originally Posted by chinnakkannan View Post
    சிற&#............................................. .....etc 2980;ித் திடும்..

    செயற்கரிய நற்சிலைகள் செய்தார் அவர்க்குச்
    செயற்குரிய நன்றி செயல்.


    கலைவடிவம் காட்டி நலமே நயந்தார்,
    நிலைபெறுக அன்னார் புகழ்.


    உற்றார் உறவினர் உற்றார் துயரவரால்
    உற்றிலரோ வற்றாப் புகழ்.


    இரங்கும் மனமே இறப்பறிந்து நோவற்க
    பிறங்கும் உலகில் புகழ்.


    Note: If a veNpa does not measure up in poetics to the required standard, it may still be classified under other kinds of poem and accepted as such.
    B.I. Sivamaalaa (Ms)

  8. #277
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    ஒரு நடிகைக்கு அகங்காரம் வந்துவிடுகிற்து.. தான் நடிக்கும் திரைப்படங்கள் ஓடுவதெல்லாம் தன்னால் தான் என்பது.. தான் இருந்தால் குழம்பத்தான் வேண்டும். தானில்லாவிட்டால் தான் ரசம். நிறையப் பேருக்குத் தெரிவதில்லை இது..சில வருடங்கழித்து என்னாவாள் என்பதை யோசிக்கவே இல்லை அவள் (ஏதோ ஒருதொலைக்காட்சி நடன நிகழ்ச்சிக்கு வேண்டுமானால் நடுவராகச் சென்று இயற்பியல் வேதியியல் என உளறலாம்)..ம்ம் கொஞ்சம் யோசித்துப் பார்த்த்தில்..;

    என்னாட்டம் யாரிங்கே இப்புவியில் என்றங்கே
    பெண்ணாட்டம் போடுகின்றாள் பேதையும் தானறியாள்
    முன்னோட்டம் தந்தே முதுமை வராதென்ற
    கண்ணோட்டம் இல்லாத கண்

  9. #278
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    அம்மாவுக்கோ வெளியில்கொஞ்சம் வேலை.. சின்னப் பையனையும் தூக்கிச் செல்ல முடியாது..எனில் சொல்கிறாள்.. ஹேய்.. சமத்தா வீட்டுக்கணக்கைப் பொடு..உனக்குப் பிடிச்ச குட்டி இட்லி சின்ன வெங்காய சாம்பார் வெச்சிருக்கேன்.. எடுத்து நன்னா சாப்பிட்டுட்டுத் தூங்கு..தொலைக்காட்சியில் படம் பார்க்காதே. நான் வர்ற்ச்சே உனக்குப் பிடித்த குலோப்ஜாமூன் வாங்கிண்டு வர்றேன்.. சரிதானா செல்லம்..
    செல்லம் என்ன செய்யும்.. கணக்குப் போட்டுப் பார்த்த்து.. தொலைக்காட்சியை போட்டுப் பார்த்த்து..மனம் செல்லவில்லை.. பசிக்கிற மாதிரி இருக்கு.. ஆனா அம்மா இல்லை...போர்.. சாப்பிட்த் தோணவில்லை..மணி என்ன. சின்னமுள் ஒன்பது பெரிய முள் ஆறு.. ஒன்பதரையா. அட இன்னும் அம்மாவைக் காணோமே..எனக்குத் தூக்கம் வருதே பசிக்கிறதே என எண்ணும் போது தானாகவே அதன் கண்கள் கலங்குகின்றன..

    சமர்த்தாய் இருந்துவிடு சாப்பிட்டுத் தூங்கு
    கமகமக்கும் தின்பண்டம் கொண்டுதான் நான்வருவேன்
    என்றே சொலிச்சென்ற அன்னையும் வாராமல்
    கண்கள் கலங்கிடுமே காண்..

  10. #279
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    அம்மா வந்து பார்த்தால் வீடு வீடாக இல்லை.. உருளைக்கிழங்கு சிப்ஸ்பாக்கெட் அங்கெங்கே இறைந்திருக்கிறது.. புத்தகங்கள் மூடி வைக்கப் படவில்லை.. தொலைக்காட்சிப் பெட்டி இறைந்தபடி ஓடிக் கொண்டிருக்கிறது... சமையலறைய்ல் இட்லி வைத்த பாத்திரம் மூடிய படியே இருக்கிறது.. தொ.கா. பெட்டிக்கெதிரே இருந்த இருக்கையில் கண்மூடித் தூங்கிக் கொண்டிருக்கிறான் கடங்காரன். இவனை என்ன சொல்லித் திருத்த.

    நறுக்கென்று கிள்ளுகிறாள். பையன் மலங்க மலங்க முழிக்கிறான்..படவா சாப்பிடச் சொன்னேனில்லை.. நீதான் வரலை.. ஒன்பதரை ஆச்சா தூங்கிட்டேன்....அடேய் நான் வந்த்து ஒன்பது முப்பத்தொன்றுக்கு சரி எழுந்து சாப்பிடு..போம்மா தூக்கம் வ்ருது.. டேய்..அப்பாகிட்ட சொல்லிடுவேன். அவர் பத்தரைக்கு வந்துடுவார்.. போம்மா தூக்கம் வருது.. ஆ..அடிக்காதே சாப்பிடறேன்..
    வைத்திருந்த குட்டி இட்லிகள் வயிற்றுக்குள் சென்றவுடன் சாரிம்மா.இனி இப்படி செய்ய மாட்டேன் தூங்கட்டா.. அம்மாவிற்குச் சிரிப்பு வருகிறது. என் சமர்த்துக் குட்டி எனக் கொஞ்ச அவனுக்குத் தூக்கம் வருகிற்து. தூக்க்க் கலக்கத்தில் சிந்தனையும் வருகிறது..



    கோபமாய்க் கேட்ட்தற்கு கிஞ்சித்தும் கூறாமல்
    பாபமாய்ப் பார்த்தே பசியடங்கும் பையனும்தான்
    கொஞ்சுபவள் சற்றுமுன்னே கொந்தளித்த தேனென்று
    எண்ணித் துயில்கொண்டா னே..

  11. #280
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    கணவன் பத்தரைக்கு வந்தவன் கொஞம் முகம் மாறி இருந்தான்.. என்னப்பா பாஸ் திட்டினாரா..இல்ல...செக்ரட்டரி உன்கூட சினிமாக்கு வரமாட்டேன்னுட்டாளா..இல்ல.. ஏதாவது வெளியில் சாப்பிட்டாயா.. அடிப்பாவி எப்படிக் கண்டுபிடித்தாய்... ரெண்டு வெங்காய வடை..நண்பன் கொடுத்தான்..நெஞ்சுல்லாம் என்னவோ பண்ணுது..ஹேய் சும்மா இரு..தடவாதே. வேற என்னவோ தோணுது..பையன் தூங்கிட்டானா.. அது சரி..உடம்பு ச்ரியில்லாத போதே இப்படி..இந்தாங்க..இதக் குடிங்க சரியாய்டும்..
    என்ன இது..இப்படி நுரைச்சு மப்பும் மந்தாரமுமா இருக்குது..உன்னப் போல..யோவ்.. இது ஈனோ..குடிஎல்லாம் சரியாய்டும்.. ஹி.ஹி..இதுவா சரிபண்ணுமா...கொஞ்சமிரு வெண்பால்ல சொல்லப் பார்க்கறேன்..

    ஈனோ எனும்மருந்தை எள்ளாமல் உண்ணுவதும்
    வீணோ எனவே நினைக்காதே – ஏனோதான்
    நெஞ்செரிச்சல் போக்குவதை நோகாமல் செய்யுமிதை
    விஞ்சுதற்கு இல்லையே இங்கு...
    Last edited by chinnakkannan; 9th September 2011 at 01:28 AM.

Page 28 of 35 FirstFirst ... 182627282930 ... LastLast

Similar Threads

  1. veNba - oru muyaRchchi
    By prasan8181 in forum Poems / kavidhaigaL
    Replies: 8
    Last Post: 4th April 2005, 07:21 PM
  2. veNba (3)
    By prasan8181 in forum Poems / kavidhaigaL
    Replies: 0
    Last Post: 22nd March 2005, 11:51 PM
  3. veNba (2)
    By prasan8181 in forum Poems / kavidhaigaL
    Replies: 2
    Last Post: 19th March 2005, 03:20 PM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •