-
22nd March 2013, 06:30 AM
#11
Junior Member
Platinum Hubber
எம்.ஜி.ஆர். திரை உலகின் முடிசூடா மன்னரானார். நாடோடி மன்னன் மூலம் சரோஜாதேவி பெரும் புகழ் பெற்றார். ஏராளமான படங்களில் நடித்தார். நாடோடி மன்னன் வெற்றி விழா சென்னையில் நடந்தபோது, அதில் பேரறிஞர் அண்ணா கலந்து கொண்டு பேசினார். "நடிக மணிகளிலே எம்.ஜி.ஆர். ஒரு வீரர். விவேகம் நிரம்பிய தோழர். இல்லாதோரிடம் கருணை சுரக்கும் இயல்புடையவர்.
இந்தக்கனி தங்கள் மடியில் விழாதா என்று பலர் எதிர்பார்த்தார்கள். அது என் மடியில் வந்து விழுந்தது. அதை என் இதயத்தில் எடுத்து வைத்துக் கொண்டேன்" என்று புகழாரம் சூட்டினார், அண்ணா. "நாடோடி மன்னன்" படத்துக்கு பிறகு, "இன்பக்கனவு" என்ற நாடகத்தை எம்.ஜி.ஆர். நடத்தி வந்தார். கும்பகோணத்தில் இந்த நாடகம் நடந்தபோது, நடிகர் குண்டுமணியை தூக்கி எறியும் கட்டத்தில் எம்.ஜி.ஆரின் கால் எலும்பு முறிந்தது.
சிகிச்சைக்குப்பின் குணம் அடைந்தார். "எம்.ஜி.ஆரின் கால் முறிந்ததால், இனி முன்போல் அவரால் சண்டை போட முடியாது" என்று பலர் நினைத்தார்கள். ஆனால் இந்த கணிப்பை பொய்யாக்கி விட்டு, முன்பை விட விறுவிறுப்பான சண்டைக் காட்சிகளில் நடித்தார். பி.ஆர்.பந்துலு தயாரித்த "ஆயிரத்தில் ஒருவன்" படத்தில் ஜெயலலிதாவுடன் ஜோடியாக நடித்தார்.
அதன்பின் பல படங்களில் இருவரும் இணைந்து நடித்தனர். பெரும்பாலும் சரித்திரப் படங்களில் நடித்து வந்த எம்.ஜி.ஆர், கோட்டு _சூட்டு போட்டு நடித்து சமூகப்படங்களில் வெற்றி பெற முடியுமா என்ற கேள்வியை சிலர் எழுப்பினார்கள்.
"திருடாதே" படத்தின் மூலம், சமூகப்படங்களிலும் தன்னால் சாதனை புரிய முடியும் என்று நிரூபித்தார். விஜயாவின் "எங்க வீட்டுப்பிள்ளை" மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது. சின்னப்பதேவர் தயாரித்த பல சமூகப் படங்களில் நடித்தார்.
-
22nd March 2013 06:30 AM
# ADS
Circuit advertisement
Bookmarks