Results 1 to 10 of 4005

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 10

Threaded View

  1. #11
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by P_R View Post
    அடிக்கோடிடப்பட்ட பகுதியை நீங்கள் கீழே குடுத்த எடுத்துக்காட்டுகளையும் பொருத்திப் பார்க்க சிரமமாக இருக்கிறது.

    வசனங்கள் தட்டையாக உள்வாங்கப்பட்டு, வெளிப்படுத்தும்போது அந்தக்கணத்தின் (முன்தீர்மானம் இன்றி) உணர்ச்சியுடன் வெளிப்படத்தவேண்டும் (என்று இவ்வகை கூறுகிறது) என்று புரிந்துகொண்டேன்.

    குறிப்பாக உடன் நடிப்பவர்கள் காட்சியின் டைனமிக்ஸ் இவை சார்ந்து மேலெழும் performance என்பதை படிக்காத மேதை, ப.ம.போதுமா போன்றவற்றில் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் அப்பரை இத்துடன் பொருத்திப் பார்க்க முடியவில்லை.

    (நான் பார்த்தவரை) காட்சிகளின் கதியும் (pace), உடன் நடிப்பவர்களுடன் உள்ள interactionஸும் சட்சட்டென்று மாறிக்கொண்டே வரும் (because of the episodic nature of that film). உதாரணம்: ஒரு காட்சி முன்புதான் சந்தித்த முத்துராமன் குடும்பத்துடன் ஒரு துயரத்தில் பங்கெடுக்கவேண்டிய அடுத்த காட்சி. இதற்கு முன்: முற்றிலும் வேறுபட்ட ஞானசம்பந்தர் காட்சி. உடன் யாருமே நடிக்காத : மலை ஏறும் காட்சி.

    இவற்றில் உள்ள consistency அபாரமானது. அதில் ஒரு வித தீர்க்கமான முன்தீர்மானமும், சூழலுக்கு அப்பால் (மேலே உயர்ந்து!) இயங்கும் தன்மையும் எனக்குத் தெரிகின்றன.

    என் புரிதல் முழுமையில்லை என்று நினைக்கிறேன்...
    While Strasberg focused on the Sense Memory technique using events in one’s past as a way of emotionalizing, Meisner developed his technique using Stanislavski’s revised method. Rather than delving exclusively into one’s past memories as a source of emotion, one could more effectively summon up the character’s thoughts and feelings through the concentrated use of the imagination and the belief in the given circumstances of the text. Meisner defined acting as doing things truthfully under imaginary circumstances and his technique is still known for its depth, reliability and balanced approach.

    ஒரு முறை ,தேவர் மகன் வந்த போதில், NT இடம், ஒரு நிருபர் நீங்கள் அப்பராக நடிக்க காஞ்சி பெரியவர் போல்,கெளரவம் படத்தில் நடிக்க TVS கிருஷ்ணா போல், இந்த பாத்திரத்திற்கு யார் என்று கேட்க வந்ததே கோபம் அவருக்கு. நான் தேவனாக நடிக்க யாரையடா பாக்கணும், எங்க அப்பன் தேவன்,எங்க தாத்தன் தேவன் என்று பொரிந்து விட்டார்.

    Straberg பள்ளி, நினைவுகள் சார்ந்த Sense மெமரி முறை. அதனால் அவருடைய common man பாத்திரங்கள், தேவர் பாத்திரங்கள், கூத்து, கலை, அது சார்ந்த குழுக்கள், எல்லாம் இந்த வகை பள்ளியே.

    ஆனால், சிறிது observe பண்ணிய காஞ்சி பெரியவர் போன்ற பாத்திரங்களில் நடிக்க sense memory முறை ரொம்ப கடினம். improvisation முறையில் திறமை கலந்துதான் உணர்ச்சி வெளியீடு முடியும். மற்ற படி method acting ,Meisner இரண்டுமே பொதுப்படையானது. நான் அவரின் அந்நிய தன்மை வீசும் sophisticated பாத்திரங்கள், நீங்கள் சொன்னது போல் சில காட்சிகள் உடன் நடிப்பவரிடம் இருந்து scene capturing /stealing என்பவைஎல்லாமே Meisner தான்.(கமல் வயசான நாயகரில் அப்பர் நடையை கவர்ந்திருப்பதை கவனித்தீர்களா?)
    Last edited by Gopal.s; 6th April 2013 at 07:33 AM.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •