-
5th September 2013, 12:05 PM
#11
Senior Member
Senior Hubber
படத்திற்காக எழுதப் பட்ட வரிகள் என்றாலும் பாட்டை மட்டும் படம் பார்க்காமல் தனியாகக் கேட்டால் என்ன தோன்றும்..?
அந்தப் பெண் ஏதோ ஒரு சோகத்தில் உறக்கம் வராமல் இருக்கிறாள்..சோகத்திற்கு மருந்தாய் இசை வருகிறது..புல்லாங்குழல்..இசைப்பவன் அவன் மனதில் இருக்கும் கண்ணனா..தெரியவில்லை.. மீண்டும் மீண்டும் கேட்கிறாள்..சமயத்தில் நின்று விடும் இசை மறுபடியும் தொடர்கிறது..ம்ம் அவள் சோகமும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது..
இந்தப் பாடல் பாடியவர் இன்று நம்மிடம் இல்லை..அழகான மிக மென்மையான குரல்வளத்துக்குச் சொந்தக் காரி.. மேலோகக் கண்ணன், போதும்மா நீ நம்ம ஊர்ல பாடினது கம் வித் மி எனக் கூப்பிட்டிருப்பானோ என்னவோ..சின்ன வயதிலேயே சென்றுவிட்டார்.. ஸ்வர்ண லதா..
இனி பாடல்:
**
எவனோ ஒருவன் வாசிக்கிறான்...இருட்டிலிருந்து நான் யாசிக்கிறேன்
தவம் போல் இருந்து யோசிக்கிறேன் அதைத் தவணை முறையில் நேசிக்கிறேன்
கேட்டு கேட்டு நான் கிறங்குகிறேன் கேட்பதை எவனோ அறியவில்லை
காட்டு மூங்கிலின் காதுக்குள்ளே அவன் ஊதும் ரகசியம் புரியவில்லை
எவனோ ஒருவன் வாசிக்கிறான் இருட்டிலிருந்து நான் யாசிக்கிறேன்
புல்லாங்குழலே பூங்குழலே நீயும் நானும் ஒரு ஜாதி
உள்ளே உறங்கும் ஏக்கத்திலே உனக்கும் எனக்கும் சரி பாதி
கண்களை வருடும் தேனிசையில் என் காலம் கவலை மறந்திருப்பேன்
இன்னிசை மட்டும் இல்லையென்றால் நான் என்றோ என்றோ இறந்திருப்பேன்
எவனோ ஒருவன் வாசிக்கிறான் இருட்டிலிருந்து நான் யாசிக்கிறேன்
உறக்கம் இல்லை முன்னிரவில் என் உள் மனதில் ஒரு மாறுதலா
இரக்கம் இல்லை இரவுகளில் இது எவனோ அனுப்பும் மாறுதலா
எந்தம் சோகம் தீர்வதற்கு இது போல் மருந்து பிரிதில்லையே
அந்தக் குழலைப் போல் அழுவதற்கு அத்தனை கண்கள் எனக்கில்லையே
எவனோ ஒருவன் வாசிக்கிறான் இருட்டிலிருந்து நான் யாசிக்கிறேன்
**
வரிகள் வைரமுத்து.. அவருடைய முத்துக்களில் ஒன்று இந்தப் பாடல்..
-
5th September 2013 12:05 PM
# ADS
Circuit advertisement
Bookmarks