-
31st January 2014, 12:54 AM
#11
Junior Member
Seasoned Hubber
சிவாஜி க்கு அடுத்தபடியாக நடிப்பில் முத்திரை பதிபவர்
திரு மேஜர் சுந்தர் ராஜன் , வழக்கமாக அவர் பேசும் இங்கிலீஷ் & தமிழ் கலந்த வசனம் இல்லை , கத்த வில்லை , மிகை நடிப்பு இல்லை இருந்தாலும் குணசித்திர நடிப்பில் முத்திரை பதிகிறார்
குடி போதையில் தப்பு செய்து விட்டு வாழ நாள் பூராவும் தவிக்கும் தவிப்பை நன்றாக பிரதிபலிக்கிறார் பின் சாந்த ஸ்வரூபமாக , வள்ளலாக , காட்சி அளிக்கிறார் , வேண்டா வெறுப்பாக நம்பியார் சொல்லுவதுக்கு உடன்பட்டு , சிவாஜியை உதாசினபடுதும் காட்சி , சிவாஜி தான் இவர் மகன் என்பதை அறிந்து துடிக்கும் காட்சி , கடைசியில் மனைவி யின் உயர்ந்த உள்ளதை அறிந்து கூனி குறுகி அழும் காட்சி இவர் நடிப்புக்கு சான்று
தவறு செய்யும் ஆண்கள் இவர் படும் அவஸ்தையை பார்த்தல் கொஞ்சம் யோசித்து செயல் படுவார்கள்
சிவகாமி என்ற கிராமத்து துடுக்கு பெண் பாத்திரத்தில் ஜெயலலிதா
துருதுரு பெண் பாத்திரம் என்றால் ஜெயலலிதாக்கு cake walk
சிவாஜி உடன் காதல் காட்சியில் இளமை குறும்பு , அதே சிவாஜியின் மேல் இருக்கும் காதல்யை தன்னை பெண் கேட்டு வரும் மேஜர்யிடம் அவர் எடுத்து வைக்கும் வாதம் சபாஷ்
வரலக்ஷ்மி :
படத்தின் ஆணிவேர் அவர் தான் , பாசமிகு தாய் நிஜமாகவே கண்ணுக்குள்ளே இருக்கிறார் , அவர் குரல் ஒரு பிளஸ்
வாழ்க்கையில் அடி பட்டு , தன் மகன் யை திட்டுவதும் , தன் மகன் தன்னை மதிக்காமல் யாரோ ஒரு பெரிய மனிதர் மேல் அன்பு கொண்டு உள்ளதை நினைத்து கொந்தளிப்பதும் , தன் நடத்தையின் மேல் சந்தேக படும் கணவர் , மகன் இருவருக்கும் தன் நிலைமையை விலகுவது என்று நன்றாக ஸ்கோர் செய்து விடுகிறார்
VKR யை பற்றி என்ன சொல்ல , வழக்கம் போலே டாப் பெர்போர்மன்சே
மனோரமா மலையாளம் கலந்த பெண் வேடத்தில் கலக்கி இருக்கார் , நம்பியார் வழக்கம் போலே
இது ஒரு under rated gem இது என் ஓட வில்லை , என்பது புரியாத புதிர்
-
31st January 2014 12:54 AM
# ADS
Circuit advertisement
Bookmarks