
Originally Posted by
kaliaperumal vinayagam
நன்றி. பேராசிரியர் செல்வகுமார்.சார்.
திரு. ரவி கிரண் சூர்யா அவர்களுக்கு..
மக்கள் திலகத்தைப் பற்றிய எதிர்மறையான கருத்துகளை நாகரீகம் கருதி இங்கே பதிவிட வேண்டாம் என்று கேட்டுகொள்கிறேன். வசூல் சக்ரவர்த்தி என்பவர் யார் என்பது உலகறிந்த விஷயம். அதற்கேன் தேவையில்லாத சர்ச்சை. வெளியிட்ட நாள் முதல் தொடர்ந்து இன்னும் வெளிவந்து கொண்டிருப்பது மக்கள் திலகத்தின் படங்கள்தான் என்பது நீங்கள் அறியாததல்ல. இயற்கை நடிகர் என்று நாங்கள் சொல்ல தேவையில்லை. அப்போதைய திரை விமர்சனங்களைப் பார்த்தால் நீங்களே தெரிந்து கொள்ளலாம். நன்கு சண்டை வித்தை தெரிந்தவர் ஒரு ஆள் பத்து ஆளை அடிப்பது ஒன்றும் பெரிதல்ல. அதில் கையாள்கிற வித்தை நுணுக்கங்கள்தான் முக்கியம். அதைத்தான் மக்கள் திலகம் கையாண்டிருப்பார். இப்போது வருவது போல 50 பேர், 100 பேரை ஒரே ஆள் அடிப்பது போல அவர் என்றும் நடித்ததில்லை. நடிப்பில் உள்ள பரிணாமங்களான காதல், வீரம், சோகம், நகைச்சுவை சண்டை, நடனம், விளையாட்டுகள் என அனைத்தையும் திறம்படக்கற்று அதை திரையில் பிரதிபலித்தவர் புரட்சி நடிகர். எனவே அவரை குறை கூறுவதை இத்துடன் நிறுத்தினால் நீங்கள் பெருந்தன்மை கொண்டவர்கள் ஆவீர்கள் என நம்புகிறேன். மேலும், நடிகர் திலகம் சிறந்த நடிகர் என்பதை மக்கள் திலகமே பலமுறை கூறிவிட்டார். அதனால் அதில் தர்க்கமே தேவையில்லை.
இனிமேல் இந்த தர்க்கங்களை இந்த திரியில் பதிவிடாமல் இருப்பது நலம் என்றே கருதுகிறேன்.
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
Bookmarks