-
23rd July 2014, 10:09 AM
#11
Senior Member
Diamond Hubber
இன்றைய ஸ்பெஷல் (3)
'அமர்ஜோதி' மூவிஸ் அளித்த 'உயிரா மானமா' என்ற படத்தின் ஒப்புயர்வில்லாத பாடல். டி.எம்.சௌந்தரராஜன் மற்றும் சுசீலாவின் இணைவில் வந்த மிகச் சிறந்த பாடல் வரிசைகளில் இப்பாடலும் ஒன்று.

நடிக, நடிகையர்கள்: ஜெய்சங்கர், முத்துராமன், நம்பியார், நாகேஷ், 'ஞானஒளி' விஜயநிர்மலா, கிருஷ்ணகுமாரி, டி.கே.பகவதி. எஸ்.வரலஷ்மி
பாடல்கள்: கண்ணதாசன்
இசை: மெல்லிசை மன்னர். உதவி: கோவர்த்தனம்
கதை, வசனம், டைரக்ஷன்: 'இயக்குனர் திலகம்' கே.எஸ். கோபாலகிருஷ்ணன்.
ஊட்டி மலை ஹேர்பின் வளைவுகளில் மோட்டார் பைக்கில் ஜெய்சங்கரும், அவருடன் அவர் தங்கை மல்லிகாவும் பாடி வரும் பாடல். (இப்படத்தில் ஜெய்க்கு 'பொசுக் பொசுக்' என்று கோபம் வந்து எல்லோரையும் 'பொட் பொட்'டென்று அடித்து விடுவார்) மல்லிகா அதிகம் தெரியாத நடிகை. ஆனால் நன்றாக முகபாவங்கள் காட்டுவர்.
படம் டைட்டில் முடிந்தவுடனேயே இப்பாடல் தொடங்கும். படம் பார்க்கும் நமக்கு ஜெய்யும், மல்லிகாவும் ஜோடியோ என்று தோன்றும். படத்தில் இந்த ஜோடியைப் பார்க்கும் 'லூஸ்' மோகன் கோஷ்டியும் அப்படி தப்பாக நினைத்து ஜெய்யிடம் சொல்லப் போக கோபத்தில் ஜெய் நாங்க 'அண்ணன் தங்கைடா' என்று சொல்லி அடிக்கும் போதுதான் நமக்கே இவர்கள் அண்ணன் தங்கை என்று தெரியும். (கொஞ்சம் நெருக்கத்தைக் குறைத்திருந்தால் இந்த சந்தேகம் எழுந்திருக்க வாய்ப்பில்லை)
அண்ணன் தங்கை டூயட் என்று கார்த்திக் எழுதுவாரே! அம்மாதிரி ஒரு அருமையான பாடல். இயற்கை அழகை ரசித்து, அம்மா போல தங்களை வளர்க்கும் அண்ணி எஸ்.வரலஷ்மியை நினைத்துருகிப் பாடி வரும் பாடல்.
இப்பாடலின் உண்மையான நாயகன் யார் தெரியுமா?

பாடகர் திலகம் தான். அடடா! என்ன ஒரு வாய்ஸ். என்ன ஒரு வெளிப்படுத்தும் திறமை! அத்தோடு சேர்ந்த அந்த இனிமையான ஆண்மகனுக்கென்றே முழுமை பெற்ற குரல்வளம். பாடும் தொனி,
பாடலைப் புரிந்து அவர் நன்கு அதை உள்வாங்கி பின் நூறு சதம் அதை அருமையாக பிரசெண்ட் பண்ணும் விதம், ஏற்ற இறக்கங்கள், ஜால வித்தைகள் என்று பாடல் முழுதையும் ஆக்கிரமித்து விட்டார். சுசீலா அருமை என்றாலும் சௌந்தரராஜன் வெகு ஈசியாக அவரை ஓவர் டேக் செய்து விடுகிறார்.
'பறவைகளே! பறவைகளே!'
என்று அவர் குரலை சற்றே உள்வாங்கி பின் வெளிவிடுவது அருமையிலும் அருமை.
உச்ச்கட்டம் எது தெரியுமா?
'அம்மா என்னும் தெய்வம் எம்மை' வரிகளில் அவர் 'அம்மா' என்று பாடும் போது அதில் அவர் காட்டும் அன்பு, பாசம், நேசம், பக்தி, நேர்த்தியை எப்படிப் புகழ்வது? கண்களைக் குளமாக்கும் குரல் பாவம்.
இப்பாடல் நமது நடிகர் திலகத்திற்கு அமைந்திருந்தால் எப்படியெல்லாம் இருந்திருக்கும் என்று கற்பனையில் நான் அடிக்கடி நினைத்துக் கொள்வதுண்டு.
கார்த்திக் சார் மற்று வினோத் சாரின் நட்புக்காக இப்பாடலை முழு விருப்பத்துடன் அளிக்கிறேன்.

கொடியில் இரண்டு மலருண்டு
மலரில் பனியின் துளி உண்டு
பனியில் கதிரவன் ஒளியுண்டு
எதிலும் புதுமை மணம் உண்டு
அஹஹாஹஹாஹஹஹா
அஹஹாஹஹாஹஹஹா
கொடியில் இரண்டு மலருண்டு
மலரில் பனியின் துளி உண்டு
பனியில் கதிரவன் ஒளியுண்டு
எதிலும் புதுமை மணம் உண்டு
கோடை வரும் வெய்யில் வரும்
கோடைக்குப் பின்னே மழையும் வரும்
கோபம் வரும் வேகம் வரும்
கோபத்தின் பின்னே குணமும் வரும்
மேகங்களே மேகங்களே வான்மீதிலே
உங்கள் தேரோட்டமா
வானமென்னும் அன்னை தந்த
பாசத்தினால் வந்த நீரோட்டமா
கொடியில் இரண்டு மலருண்டு
மலரில் பனியின் துளி உண்டு
பனியில் கதிரவன் ஒளியுண்டு
எதிலும் புதுமை மணம் உண்டு
பன்னீரிலே தாலாட்டவும்
கல்யாணப் பெண்ணாக சீராட்டவும்
அண்ணன் உண்டோ தங்கை உண்டோ
எங்கள் அண்ணி என்னும்
அன்னை அங்கே உண்டோ
பறவைகளே பறவைகளே
பாசத்தை என் வீட்டில் பாருங்களேன்
அம்மா என்னும் தெய்வம் எம்மை
அரசாளும் கோலத்தை காணுங்களேன்
கொடியில் இரண்டு மலருண்டு
மலரில் பனியின் துளி உண்டு
பனியில் கதிரவன் ஒளியுண்டு
எதிலும் புதுமை மணம் உண்டு
அஹஹாஹஹாஹஹஹா
அஹஹாஹஹாஹஹஹா
Last edited by vasudevan31355; 23rd July 2014 at 10:12 AM.
நடிகர் திலகமே தெய்வம்
-
23rd July 2014 10:09 AM
# ADS
Circuit advertisement
Bookmarks