-
12th August 2014, 09:29 AM
#10
Senior Member
Diamond Hubber
ராகவேந்திரன் சார்,
இன்று என்ன ஆயிற்று? 'பொங்கும் பூம்புனல்' விஸ்வரூபம் எடுத்து விட்டது. எதை விடுவது எதை எடுப்பது என்று ஏகக் குழப்பம். சத்து சாத்து என்று சாத்தி விட்டீர்கள்.
அதிலும் குறிப்பாக 'ஜீவிதமெல்லாம் ஸ்வீட்டாக செய்யும் பிரேம டிங்டாங் பெல்' அட்டகாசம் போங்கள். என் ஐ பாடிலிருந்து இதுவரை நான் அழிக்காத ஒரு பாடல். அப்போதே தமிழில் கலந்த ஆங்கில வார்த்தைகள்.

'காதல்' படத்தில் எல்லாப் பாடல்களுமே அமரத்துவம் பெற்ற பாடல்கள். பானுமதி அம்மா பாடல்களையெல்லாம் நான் தொடவே இல்லை. அதற்கு தனி இழை ஒன்று தேவைப்படும் நிச்சயமாக.
'பிரேமா' என்று தெலுங்கில் வெளியான இந்தக் காவியம் தமிழில் 'காதல்' ஆனது.
'இன்பக் காவியம் ஆகும் வாழ்வே காதலினாலே
இருமனம் ஒன்றாய் கூடும் நாளிலே'
கண்டசாலாவும், அஷ்டாவதானியும் பாடும் பாடல் வாழ்வில் மறக்கவே முடியாதது.
இரவின் மடியில் கேட்டால் நூறு தூக்க மாத்திரைகள் போட்ட எபெக்ட்.
http://www.inbaminge.com/t/k/Kaadhal/
Last edited by vasudevan31355; 12th August 2014 at 09:38 AM.
நடிகர் திலகமே தெய்வம்
Posting Permissions
- You may not post new threads
- You may not post replies
- You may not post attachments
- You may not edit your posts
-
Forum Rules
Bookmarks