-
7th September 2014, 11:18 PM
#11
Junior Member
Diamond Hubber
விருதோ, கவுரவமோ அதற்கு முற்றிலும் தகுதியானவர்களை சென்று அடையும் போது நம்முடைய மகிழ்ச்சி இரட்டிப்பாகிறது. தமிழில் நாடகம், சினிமா மற்றும் தொலைக்காட்சிகளில், தன் தனித்தன்மையான நடிப்புத் திறமையால், இந்தியாவிலும், வெளிநாடுகளில் ஏகோபித்த பாராட்டுகளைப் பெற்ற நடிகர் ஏ.ஆர்.எஸ்., என்று அறியப்படும் ஏ.ஆர்.ஸ்ரீநிவாசன்,
தமிழ் நாடகத்துறையில், அளப்பரிய சாதனைகள் புரிந்த பம்மல் சம்பந்த முதலியார் (1959), டி.கே. சண்முகம் (1962), எஸ்.வி.சகஸ்ரநாமம் (1968), பூர்ணம் விஸ்வநாதன் (1992) போன்ற மாமேதைகள் வரிசையில், 20 நீண்ட ஆண்டுகளுக்குப் பின், ஏ.ஆர்.எஸ்சுக்கு, இந்தியாவின் மிக உயரிய விருதான சங்கீத நாடக அகாடமி விருது வழங்கப்பட்டது; இது, தமிழ் நாடக மேடைக்கு கிடைத்த கவுரவம். 2011ம் ஆண்டுக்கான, இந்த விருதை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, அக்., 9, 2012ல் ராஷ்ட்ரபதி பவனில் வழங்கினார்.
'நான் எந்த நாடகத்தையுமே முழுமையாகப் பார்த்ததில்லை. நான் முழுவதுமாக பார்த்த முதல் நாடகம் இது தான்...' என்று, 'இம்பர்பெக்ட் மர்டர்' என்ற நாடகத்தை குறிப்பிட்டு பாராட்டினார் சிவாஜி. இந்நாடகத்தில் எழுத்தாளர் விட்டல் என்ற பாத்திரத்தில் மிகச் சிறப்பாக நடித்து, அனைவரையும் கவர்ந்தவர் ஏ.ஆர்எஸ்.,
'போலீஸ் அதிகாரி என்றாலே தொப்பை, முறுக்கி விடப்பட்ட மீசை, பெல்ட் மற்றும் பூட்ஸ் என்ற அடையாளங்களை உடைத்தவர்.
'உங்கள் நடிப்பு நாடகத்திற்கு நாடகம் வித்தியாசமாகவும், புதுமையாகவும் இருக்கிறது...' என்று பிரபல இயக்குனர், ஏ.சி.திருலோக் சுந்தர் இவரைப் பாராட்டியுள்ளார்.
'இப்போதெல்லாம் வேலைப்பளுவில், முன்போல உங்கள் நாடகங்களை பார்த்து ரசிக்க முடியாமல் போய்விட்டது...' என்று, அப்போதைய தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர்., குறிப்பிடும் அளவுக்கு, சிறந்த நாடகங்களை இயக்கி நடித்தவர் ஏ.ஆர்.எஸ்.,
இப்படி பலரது பாராட்டுதல்களை பெற்றுள்ள ஏ.ஆர்.எஸ்., கல்லூரி படிப்பை முடித்த பின், ( பி.எஸ்சி., பி.எல்.,) பிலிப்ஸ் நிறுவனத்தில் விற்பனை அதிகாரியாக பணியாற்றினார். அப்போது, அலுவலக, மனமகிழ் மன்ற கிளப்பில் நடைபெற்ற நாடகங்களில் நடித்துக் கொண்டிருந்தவர், முதன் முதலில், 1964ல் பூர்ணம் விஸ்வநாதன் எழுதிய, 'அண்டர் செகரட்ரி' என்ற நாடகத்தில் நடித்தார். அந்த நாடகத்தில் ஒய்.ஜி.பி., - சோ மற்றும் சந்தியா (ஜெ., தாயார்) நடித்தனர். ஏ.ஆர்.எஸ்., போன்றே முதல்முறையாக அந்நாடகத்தில், நடிக்க வந்த மற்றொரு பிரபலம் ஜெயலலிதா.
இந்நாடக அனுபவம் குறித்து ஏ.ஆர்.எஸ்., கூறும் போது, 'அன்டர் செகரட்டரி' நாடகம் முடிந்ததும், கலைஞர்களை பாராட்ட மேடைக்கு வந்தார் எம்.ஜி.ஆர்., அப்போது, நான், 'மேக் - அப்' கலைத்துக் கொண்டிருந்தேன். எம்.ஜி.ஆர்., உங்களை கூப்பிடுகிறார் என்று சொன்னதும், அவசரமாக, 'மேக் - அப்' பை கலைத்துவிட்டு, ஒரு வித பயத்தோடு ஓடினேன். என் கைகளை கெட்டியாகப் பிடித்து, 'எனக்கு கே.பி.கேசவன் என்ற ஒரு நடிகர், குருவாக இருந்தார்; முழு சூட் போட்டால் அவருக்கு அவ்வளவு அழகாக பொருத்தமாக இருக்கும். இன்று உங்களைப் பார்த்ததும் அவர் ஞாபகம் வந்து விட்டது. முழு சூட் உங்களுக்கு, 'பர்பெக்டாக' பொருந்துகிறது...'' என்று கூறிய போது, எனக்குள் உற்சாக மின்சாரம் பாய்ந்த மாதிரி இருந்தது. அப்போதிருந்து, எந்த விழாக்களில் பார்த்தாலும் என் பேர் சொல்லி அழைத்து பேசுவார் எம்.ஜி.ஆர்., அப்போதெல்லாம் பத்மஸ்ரீ விருது பெற்றது போல் அப்படி ஒரு மகிழ்ச்சியும், பெருமையும் ஏற்படும்...' என்று கூறினார் ஏ.ஆர்.எஸ்.,
courtesy dinamalar varamalar
-
7th September 2014 11:18 PM
# ADS
Circuit advertisement
Bookmarks