-
8th October 2014, 10:02 AM
#11
Junior Member
Newbie Hubber
முக்தாவின் பதிவுகளை போட்டால், அதே முக்தா ,ஏ.பீ.என் படபிடிப்பில் நடந்ததை சொன்ன பதிவை நாங்கள் போட வாய்ப்புண்டு. பல தருணங்களில் உயர் ரக கொள்கைகள் எவ்வளவு மேம்போக்கானவை என்று விமர்சிக்க பட்ட ஏராள விஷயங்கள் உள்ளன. அவற்றை போட்டால் பெருந்தன்மையாளர்கள் தாங்குவார்களா?என்னிடம் ஏக பட்ட சர்ச்சை பதிவுகள் உண்டு.ஆனால் யாரையும் வம்புக்கு இழுக்க வேண்டாம் என்று அமைதி காக்கிறேன்.
கலை வேந்தன்,
ஆனந்தன் கூட மூன்று படங்களில் காதல் காட்சிகள்,நடனம்,சண்டை என்று அசத்தியுள்ளார். ஒன்றிரண்டு கருத்து பாடல்களும் பாடியுள்ளார். முதல்வராகும் தகுதி கொண்டவர் என்றால் ஒப்பு கொள்வீர்களா? நாங்களும் ரங்கராவ்,பாலைய்யா,ராதா போன்றவர்களின் ரசிகர்களே.
அவர்களின் உயரங்கள் ஒரு சில பாத்திரங்களோடு சுருங்கி விடுபவை.
அது சரி,சில நேரங்களில் தங்கள் எழுத்தில் ஒரு பளிச் இருக்கிறது. சில நேரங்களில்??? நீங்கள் ஒருவரா? அல்லது ஒரே ஐ.டியில் பலரா என்ற வியப்பு கூட தோன்றியதுண்டு. எங்கள் ரசிகர்கள் கூட தொடராத என் எழுத்தை தொடரும் தங்கள் ரசனை,சிவாஜியை அறிந்து எங்களுடன் இணையும் நாள் அருகில் என்று என் மனத்தில் படுகிறது.
தங்களுக்கு முன் கூட்டிய வரவேற்பளிக்கிறோம்.
-
8th October 2014 10:02 AM
# ADS
Circuit advertisement
Bookmarks