Results 1 to 10 of 3964

Thread: மனதை கவரும் மதுர கானங்கள்: பாகம் -3

Threaded View

  1. #11
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    மிட் நைட் மசாலா – 2

    எழுதியவர் சின்னக் கண்ணன்

    **

    சிந்த்தால் சோப் கொடுப்பா
    எனக் கேட்டு வாங்கி
    சுத்தமாவதற்காக
    மங்கை நடக்க
    பார்த்த அவனுக்கோ
    அவளது சுத்தத்தை எண்ணி
    அழுக்கானது மனசு..

    என்றெல்லாம் கவிதை எழுதிப் பார்த்தவன் தான் நமது ஹீரோ..ராமகிருஷ்ணன்..இளம் வயது கல்லூரி முடித்த பருவம்..கனவில் கன்னியர்கள் ஃபேஷன் பரேட் செய்தபடி வலம் வரும் காலம்..

    இருந்தாலும் இப்போது அவன் குருடன்..ஓ. நோ..அவனுக்குக் கண்ணெல்லாம் போகவில்லை..கண்ணிருந்தும் குருடன்..ஹை..அப்படிச் சில மனிதர்களும் இருக்கிறார்கள் என்றெல்லாம் அவனுக்கு வேதாந்தம் பேசத்தெரியாது..காரணம் இளமை.. குருடனாய் இருப்பதற்குக் காரணம் யார் எனக் கேட்டால் அவனது பற்கள் கரகர எனத் தன்னைத் தாமே நற நறக்கும்..

    காரணம் சம்பந்தம்..

    சம்பந்தம் யார்.. அவரது முகத்தோற்றம் பார்த்தீர்களானால் பட்டைக் கண்ணாடி..(கறுப்பு) அதற்குப் பின் ஒளி வீசும் கண்கள்.. ஐம்பதைக் கடந்த வயது… லிப்ஸ்டிக் போடாமலேயே வெற்றிலை மெல்வதால் சிகப்பேறிய உதடு..

    ஒவ்வொருவருக்கும் ஒரு பொழுதுபோக்கு உண்டு..ராஜேஷ் எல்லா மொழிப் பாடல், வாசு சார் எஸ்.வி.சார் பழைய ஆவணங்கள் சேகரிப்பு, சி.க ஜொள் இப்படி நிறைய..

    ஆனால் இந்த சம்பந்தம் இருக்கிறாரே அவருக்கு உயிர்மூச்சு உயிர் பேச்சு எல்லாம் பெட் தான் பந்தயம் தான்..

    சூழ்நிலையில் ராமக்ருஷ்ணனிடம் ச்வால் விடுகிறார் சம்பந்தம்.. நீ என்பொண்ண லவ் பண்ணிக் காமி.. ராம்கி.. பண்ணிட்டேன்னா.. (சம்பந்தத்தின் மனது=அதைவிட ஒனக்கு ஒரு பெரிய தண்டனை தரமுடியதுடா) சம்பந்தம் – என் பொண்ணையே கட்டி வைக்கிறேன்..

    சரி சொல்லி நண்பர்கள் உதவியுடன் ஏற்றது தான் இந்தக் குருடன் வேடம்.. சம்பந்தத்தின் பெண்.. ராதா என வைத்துக்கொள்ளலாம்.. ராம்கியைக் குருடன் என நம்புகிறாள்..தனது வீட்டிற்கும் அழைத்து வந்து வைத்துக் கொள்கிறாள்..

    ஒரு நாள் என்ன ஆகிறது..

    காலை வேளை..

    சூரியனின் சுடர்பட்ட ரோஜா என்ன செய்யும்..பனித்துளியால் முகமலம்பும்..

    அது போலக் கண்விழித்த ராதாவும் என்ன செய்கிறாள்..

    சமர்த்தாய் கிச்சன் போய் திக்க்க் டிகாக்ஷனில் காஃபி போட்டுக் குடித்து பின் உடல் ஃபங்க்ஷன் ஆக அமெரிக்காவில் ரெஸ்ட் ரூம் என வழங்கப் படும் நம்ம ஊர் பாத்ரூமிற்குச் செல்கிறாள்..பின் குளிக்..கிறாள்..

    இங்கே நம் பையனும் குடித்தது காஃபி.. அதுவும் பைங்கொடி ராதா போட்டுக் கொடுத்த தண்ணீர்கலக்காத பாலில் சொட் சொட் டென இறக்கிய டிகாக்ஷன் ( சிக்கரிகலக்காத நரசுஸ் காஃபி) போட்டுச் செய்த கள்ளிச் சொட்டுக் காஃபி..

    இருந்தாலும் அவனுக்குள் கலங்குகிறது..காஃபி செய்த வேலையில்லை..

    துளிதான் பெய்தாலும் தூங்காதே ரோஜா
    குளித்ததால் சாரலில் தான்..

    என்பது போலவும்..

    ஓடையிலே ஓர் தாமரைப்பூ நீராடையில் நீர் அதைப் பாத்தீஹளா என பாடகி தன் காதுக்கடியில் சொல்வதைப் போலவும்.,

    நினைத்ததால் மனதிற்குள் ஒரு மிக்க சந்தோஷம்.. கூட்டமாய் இருக்கும் பஸ்ஸில் உட்கார சீட் கிடைத்தாற்போல…

    அவனுக்குபிற்காலத்திரைப்பாடலாய்

    குளிக்குது ரோஜா நாத்து தண்ணிகொஞ்சம் ஊத்து ஊத்து வரும் என்றெல்லாம் தெரியாது..தெரிவது என்ன ஊகிக்கவே முடியாது..ஏனெனில் பயல் ஒருபிரமையில் சிக்கியிருந்தான்.. இருந்தாலும் சங்க காலப் புலவராய்ப் போங்கடித்த கவிஞர் சின்னக் கண்ணனார் அவனுக்கு நினைவுக்கு வந்தார்!

    கோமகள் அழகுடன் சென்றாள் சென்றாள்
    …கொண்டநல் லுடலினைக் காப்ப தற்காக
    சாமரம் வீசிய தென்றல் தவிர்த்தே
    …தக்கதாய் அறையினில் புகுந்தாள் மேலும்
    வாமனத் தோற்றமாய்க் குனிந்தே நீரை
    …வக்கணை யாகவே நிறைக்க பின்பு
    தாமரை அழகியல் கூட்டி அங்கே
    ..தட்டென நீரினில் குளிர்ந்ததே நன்றாய்..

    என்ன செய்வது எனத் தெரியவில்லை.. நேரில் போய் நங்கையைப் பார்க்கலாமா..ம்ஹூம் தப்பு..அவளுடைய தகப்பனுடன் செய்து கொண்ட ஒப்பந்தம் அப்படி..

    இருந்தாலும் சும்மா இருக்க முடியவில்லையே.. காற்றில் யார் கரும்புச் சாற்றுடன் தேன் கலந்து காதில் ஊற்றுவது..

    கொஞ்சம் உற்று கவனிக்கையில்… அவள் தான்..அந்த ரா ரா ராதா தான்.. மெல்லிய ல ல ல ஹம்மிங்க்..

    இங்கோ ராமகிருஷ்ணன் தன்னுடைய கூலிங்க்ளாஸிற்குள் துடிக்கும் கண்ணைக் கண்ட்ரோல் செய்கிறான்..மெல்லக் கண் மூட அவனுக்குள் ராதாவின் பிம்பம் எழுகிறது..உளத்திலிருந்து பாடல் எழுகிறது..குளிக்கிற அவளுடைய அங்கங்கள் அவன் கண்முன் தோன்றுவது போலப்ரமை..

    பாடுகிறான்..

    **
    இது கே.பாலச்சந்தர் இயக்கத்தில் வந்த பொய்க்கால் குதிரையின் கதைச் சுருக்கம்..பின்கதை வேறென்ன பந்தயத்தில்வென்று பாவையை மாலை சூடுகிறான் ஹீரோ..

    கலகலவென இருக்கும் என மிக எதிர்பார்த்துச் சென்ற படம்.மிக எதிர்பார்த்ததாலேயே அந்தக் காலத்தில் கொஞ்சம் ஏமாற்றத்தை த் தந்த படம்.. முதலில் பார்த்ததற்கப்புறம் இந்தப் படத்தைக் கண்டதில்லை

    கதா நாயகனாக ராமகிருஷ்ணன்(கன்னடம்) சம்பந்தமாய் வாலிப வாலி, ஹீரோயின் ராதாவாய் (பெயர் நினைவிலில்லை) விஜி..

    விஜி ஒரு சபிக்கப் பட்டதேவதை.. எவ்வளவு தான் அழகிருந்த போதிலும் அம்மணிக்கு பாவம் நடிப்பு மட்டும் கொஞ்சம் மெழுகுவர்த்தியில் காய்ச்சிய தோசைத்திருப்பியின் பின்புறக் காம்பினை வைத்துச் சுட்டாலும் ம்ஹூம் வரவே வராது.. பக்கத்தில் இடி விழுந்தாலும் இடி விழுந்துச்ச்சா என்பது போன்ற முகபாவம்.. ரியல் லைஃபுக்கு ஓ.கே..ரீல் லைஃபுக்கு க் கஷ்டம் தான்.. அதே போல் ரியல் லைஃபிலும் அடி வாங்கியிருக்க வேண்டாம்..பாவம் சின்ன வயதிலேயே சென்றுவிட்டார் மேலுலகம்

    படத்தில் ஹைலைட் வாலியின் முதல் படம், ராதாரவி, ரவீந்தர் நகைச்சுவையில் கலக்கிய படம்..அதுவும் ராதாரவி ரேடியோ மெகானிக்..அவரிடம் “ என்ன நாயரே.. என்ன கன்ஃப்யூஷன்”

    “ஒண்ணுமில்லை இந்த பார் இந்த ரேடியோவை ரிப்பேர்பண்ணினேனா கேட்டுப்பார்..” வைக்க “ ஹேய் த்ரீ நாட் டூ அந்த அக்யூஸ்ட செல்ல போடு” கொஞ்சம் திருப்ப “ விருது நகர் விருத்தாச்சலம் வழியாகச் செல்லும் மதுரை சென்னைபாண்டியன் எக்ஸ்பிரஸ்” ஓ.. இது என்ன ப்ராப்ளம்னே தெரியலை.. ரேடியோ ஸ்டேஷனுக்குப் பதிலா எல்லா ஸ்டேஷனும் எடுக்குது… எனச் சொல்ல தியேட்டரில் குபீர் சிரிப்பு வந்தது (மதுரை சிவம்)

    பாடல் எழுதியதுவாலி.. (பின்ன அவரில்லாமலா) பாடியவர் எஸ்பி.பி. இசை.எம்.எஸ்வி..

    ..
    பாடல் வரிகள்..

    எல்லாம் தெரிகிறது எனக்கு எல்லாம் தெரிகிறது
    எல்லாம் தெரிகிறது எனக்கு எல்லாம் தெரிகிறது

    மனக்கண்ணுக்கு முன்னாலே ஒரு கண்ணாடியைப் போலே
    அழகு எல்லாம் தெரிகிறது

    உயர்ந்து நிற்கும் மாமலையே உன்னை மேகம் தொடுகிறது
    கொஞ்சம் இறங்கி வந்தால் நானும் தொடுவேன் ஆசை சுடுகிறது
    ஓடிடும் ஓடையே பூமியின் ஆடையே
    உன்னைத்தான் தீண்டிட ஏங்குது வாடையே

    அழகு எல்லாம் தெரிகிறது
    எனக்கு எல்லாம் தெரிகிறது

    நனைந்து நிற்கும் தாமரையே எங்கும் தண்ணீர் வழிகிறது
    பக்கம் நெருங்கி வந்தாய் ஈரம் துடைக்க கைகள் துடிக்கிறது

    நாளெல்லாம் நீரிலே நூலிடை நீந்துமோ
    நான் அதைப் பார்க்கையில் என் மனம் தாங்குமோ
    திரண்டு நிற்கும் பால் நிலவே உன்னை வானம் அணைக்கிறது
    மண்ணில் தவழ்ந்து வந்தால் நானும் அணைப்பேன் தேகம் கொதிக்கிறது

    பார்வைகள் தேடிடும் பேரெழில் பிம்பமே
    நீ எனை சேர்ந்த பின் வேறெது இன்பமே

    அழகு எல்லாம் தெரிகிறது எனக்கு எல்லாம் தெரிகிறது
    மனக்கண்ணுக்கு முன்னாலே ஒரு கண்ணாடியைப் போலே
    அழகு எல்லாம் தெரிகிறது

    **



    பாடல் வீடியோ…

    ..

    *

    கன்னட ராமக்ருஷ்ணன் அதற்கப்புறம் மெளலியின் அந்தப்புரத்தில் நடித்ததாக நினைவு..
    *
    இது க்ருஷ்ணாஜிக்காக டெடிகேட் செய்யப்பட்ட பாடலாக்கும்..க்ருஷ்ணாஜி ஷூட் பி ஹேப்பி அண்ணாச்சி!

    *

    அடுத்த பாடல் கொடுக்கப் போவது நம் ராகவேந்தர் சாருக்காக..

    என்ன பாட்… க்ளூ.. .. Don’t worry my dear. I am here !

    ( நா போய்ட்டு நாளைக்கு வாரேன்!)

  2. Thanks vasudevan31355 thanked for this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •