-
11th December 2014, 05:11 PM
#11
Junior Member
Platinum Hubber
அடிமைப்பெண் - 1969 நினைவலைகள்
மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்கள் நாடோடிமன்னன் [1958] படத்திற்கு பிறகு சொந்தமாக படம் தயாரிக்க திட்டமிட்டார் .1965ல் எம்ஜிஆர் பிச்சர்ஸ் சார்பாக ''அடிமைப்பெண் '' தயாரிப்பதாக அறிவிப்பை வெளியிட்டார் . மக்கள் திலகத்துடன் சரோஜாதேவி - கே.ஆர். விஜயா மற்றும் பல முன்னணி நடிகர்கள் நடிப்பதாக விளம்பரம் வந்தது
. 1966ல் வெளியான நான் ஆணையிட்டால் படத்தில் நல்ல வேளை நான் பிழைத்த கொண்டேன் பாடல் காட்சியில் ''விரைவில் வருகிறது அடிமைப்பெண் '' என்ற விளம்பரம் வந்தது குறிப்பிடத்தக்கது .
1967ல் ஏற்பட்ட மாற்றங்கள் காரணமாக ''அடிமைப்பெண் '' படம் மீண்டும் பல மாற்றங்களுடன் படபிடிப்பு துவங்கியது .மக்கள் திலகத்தின் கடும் உழைப்பினில் பிரமாண்டமாக உருவானது .பல்வேறு உள்ளரங்குகள் - வெளிப்புற படபிடிப்புகள் ஜெய்பூர் - ராஜஸ்தான் பாலைவனம் - சிங்கத்துடன் சண்டை காட்சிகள் என்று அன்றைய சினிமா செய்திகளில் பரப்பரப்பான செய்தாக வந்த வண்ணம் இருந்தது .
மக்கள் திலகத்தின் 100வது படம் ஒளிவிளக்கு வெளியான நேரத்தில் 20.9.1968 ல் ஜெய்ப்பூரில் அடிமைப்பெண் படபிடிப்பில் கலந்து கொண்டு இருந்தார் . எல்லோரின் எதிர்பார்ப்பும் 1969 பொங்கல் வெளியீடாக படம் வரும் என்று
எதிர்பார்த்தார்கள் .அண்ணா அவர்கள் மறைவு காரணாமாக தமிழ் புத்தாண்டு அன்று படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது . ஒரு வழியாக 1.5.1969 அன்று முதல் சென்னை மிட்லண்ட் - கிருஷ்ணா - மேகலா - நூர்ஜஹான்
மற்றும் தென்னாடெங்கும் விளம்பரம் வந்தது .
முன்பதிவில் சாதனை

முன்பதிவு தொடங்கிய முதல் நாள் அன்று சென்னையில் 4 அரங்குகளில் ரசிகர்கள் - மக்கள் வெள்ளம் அலை மோதியது . 100 காட்சிகள் 4 அரங்கில் ரிசர்வேஷனில் புக் ஆனது என்று முழு பக்க விளம்பரம் வந்தது .
1.5-1969 அன்று தமிழ்நாடு - கர்நாடக - கேரளா வில் அடிமைப்பெண் திரையிடப்பட்டது .

சென்னையில் மக்கள் திலகம் தலைமையில் அடிமைப்பெண் சிறப்பு காட்சி நடந்தது . அன்றைய தமிழக முதல்வர்
மற்றும் திமுக அமைச்சர்கள் - பிரபல தயாரிப்பாளர்கள் - இயக்குனர்கள் - பத்திரிகை நிறுவனங்கள் எல்லோரும் படத்தை பார்த்துவிட்டு பிரமித்து பாராட்டை மக்கள் திலகம் எம்ஜிஆருக்கு வழங்கினார்கள் .
தொடரும் ....
Last edited by esvee; 11th December 2014 at 05:36 PM.
-
11th December 2014 05:11 PM
# ADS
Circuit advertisement
Bookmarks