Results 1 to 10 of 4003

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Part-15

Threaded View

  1. #11
    Member Regular Hubber
    Join Date
    Dec 2004
    Posts
    35
    Post Thanks / Like
    மறுபடியும் தில்லானா..
    -----------------------
    மறுபடியும் ஓர் நன்றிப் பதிவு..

    https://www.facebook.com/photo.php?f...9911407&type=1


    "கலியுக நந்தி,கோடையிடி
    முத்துராக்கண்ணன்
    ஒரு தவிலு."-என்றதும்
    மேள முழக்கத்துடன்
    காட்டப்படும்
    அமரர் பாலையாவின்
    குலுங்கும் மார்புகள் தவிர
    படத்தில் வேறு
    கவர்ச்சி கிடையாது.

    அர்த்தமற்ற
    மசாலாக்கள் கிடையாது.

    அழகழகாய் பெண்களுண்டு.
    அணுவளவும்
    ஆபாசம் கிடையாது.

    இசையுண்டு.
    காதுகளுக்கு
    ஆபத்து கிடையாது.

    காதல் உண்டு.
    காமம் கிடையாது.

    இதில் வரும்
    நாகேஷ் போல
    சிரிப்பு மூட்டுகிற
    வில்லன்
    எந்தப் படத்திலும்
    கிடையாது.

    நம்பியார் இருக்கிறார்.
    கை பிசைந்து,
    முகம் உருட்டும்
    கெட்டதனம் கிடையாது.

    நாட்டியப் பேரொளியின்
    நடனப் பாதங்கள்
    வேறெவர்க்கும்
    கிடையாது.

    நடிகர் திலகம்-
    நாதஸ்வரம் போல.
    அவரின்றி
    இந்தப் படமே
    கிடையாது.

    நம்
    இதயத் திரையில்
    அடிக்கடி ஓடும்
    "தில்லானா
    மோகனாம்பாள்"
    திரைப்படத்தை,
    இன்று
    இன்னுமொருமுறை
    ஓட விட்ட
    "சன்" தொலைக்காட்சிக்கு
    நன்றி சொல்லாவிடில்..
    எனக்கு
    மோட்சமே
    கிடையாது.

    Thanks: https://www.facebook.com/aathavan.svga

  2. Likes KCSHEKAR, Gopal.s, kalnayak liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •