-
20th April 2015, 02:13 PM
#11
Senior Member
Diamond Hubber
கோபால்,
உங்கள் குடும்பத்தில் நேர்ந்த பெருந்துயருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.
வெகு காலமாக உங்களிடம் சொல்லி வருவது தான் .நடிகர் திலகம் பற்றிய உங்கள் எழுத்துகள் இன்னும் பல தளங்களில் அறியப்பட தகுதியுள்ளவை . அந்தவகையில் , பெரும்பாலும் வெகு சில நடிகர் திலகம் ரசிகர்களும் , மைய உறுப்பினர்களும் வந்து போகும் இந்த திரியில் நீங்கள் எழுதும் ஆய்வுகளை , பதிவுகளை வலைப்பதிவு (blog) மற்றும் முகநூலில் பதிந்து இன்னும் அதிகமானவர்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டும்.
சமூக வலைத்தளங்களில் எழுதி வரும் அறிவுஜீவிகள் என்று சொல்லிக்கொள்பவர்கள் , உலக சினிமா ரசிகர்கள் என தங்களை கூறிக்கொள்பவர்கள் பொதுவாக நடிகர் திலகம் நம்மூர் கலைஞன் என்பதாலேயே , அவரை புகழ்ந்தால் தங்களை பாமரராக எண்ணி விடுவார்ர்களோ என நினைத்து போலித்தனமாக நடிகர் திலகத்தை குறித்து மதிப்பிட்டு எழுது வருவதை பரவலாக்க பார்க்க முடிகிறது .
அதற்கு காரணம் , உங்களைப் போன்ற தரமான ஆய்வுகளை எழுதுபவர்கள் அந்த தளங்களில் நடிகர் திலகத்தின் பெருமையை பதிவு செய்வதில்லை .
'உலக சினிமா ரசிகன்' என்ற பெயரில் முகநூலில் இயங்கி வரும் ஒருவர் நடிகர் திலகம் ரசிகர் (அவர் இந்த மன்றத்தில் இருக்கிறாரா தெரியவில்லை) பரவலாக நடிகர் திலகத்தின் சிறப்புகளை பதிந்து வருகிறார் .உங்களைப் போல பலரும் அது போல வர வேண்டும் என விரும்புகிறேன்.
ஆவன செய்வீர்கள் என நம்புகிறேன்.
Last edited by joe; 20th April 2015 at 02:23 PM.
-
Post Thanks / Like - 1 Thanks, 2 Likes
-
20th April 2015 02:13 PM
# ADS
Circuit advertisement
Bookmarks