-
18th August 2015, 03:22 PM
#11
Junior Member
Diamond Hubber
பொள்ளாச்சி.
1978 ஜூன் மாதம் 16ஆம் தேதி.
நடிகர்திலகத்தின் ரசிகர்களிடையே ஒரு தகவல் வேகமாக பரவத்தொடங்கியது.அது பரபரப்பையும் ஆவலையும் தூண்டியது.
நடிகர்திலகத்தின்
ரசிகர்மன்றங்கள்மாபெரும் சக்தியாக இருந்த காலகட்டம் அது.பொள்ளாச்சியைச் சுற்றி ஏராளமான கிராமங்கள் உள்ளன. எல்லா கிராமங்களிலும் ரசிகர் மன்றங்கள் சிறப்பாக செயல்பட்டு வந்தன.சில குறிப்பிட்ட வீதிகளில் அந்த வீதிகளில் உள்ள அனைவருமே சிவாஜி ரசிகர்களாகவே இருந்தனர்.உதாரணம்:பொள்ளாச்சியில் நெசவாளர் காலனி என்று இரண்டோ, மூன்றோ தெருக்களைக் கொண்ட காலனி ஒன்று உள்ளது.அந்தத் தெருக்களில் உள்ள வீடுகளில் சிவாஜி போட்டோ இல்லாத வீடுகளே கிடையாது.
ஆரம்பத்தில் சொல்ல வந்த செய்தி என்னவெனில்,
ஜெனரல் சக்கரவர்த்தி திரைப்படம் திரையிட்ட துரைஸ் திரையரங்கில் 60அடி கட்அவுட் வைக்கப்பட்டுள்ளது என்பதே அது.நடிகர்திலகம் காக்கி உடையில் நின்று கொண்டு இருக்கும் போஸ்.அது மட்டுமல்லாமல் கட்அவுட்டைச் சுற்றி சீரியல் பல்புகளால் அலங்காரம் செய்யப்படிருந்தது.அந்த சீரியல் பல்புகள் கட்அவுட்டைச்சுற்றி ஓடுவது போல் அமைக்கப்பட்டிருந்தது.கட்அவுட் மட்டுமல்லாது திரையரங்கின் முன்புறம் முழுவதும் அதே மாதிரி அமைக்கப்பட்டிருந்தது.அதற்குமுன் வேறு எந்த திரைப்படத்திற்கும் 60அடி கட்அவுட் பொள்ளாச்சியில் வைக்கப்பட்டதில்லை.இன்றுவரை அந்த சரித்திரம் மாறவில்லை.
இரவு நேரத்தில் திரையரங்கைப் பார்ப்பதற்கு ஜெகஜோதியாக இருக்கும்.
அந்த வியப்பு எல்லா கிராமங்களுக்கும் பரவ அதைப் பார்ப்பதற்காகவே தினம் ஒரு கூட்டம் வெளியூர்களில் இருந்து
பஸ்ஸில் வந்து பார்த்துவிட்டு செல்வர்.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
18th August 2015 03:22 PM
# ADS
Circuit advertisement
Bookmarks