Results 1 to 10 of 4003

Thread: Nadigar_Thilagam_Sivaji_Ganesan_Part 16

Threaded View

  1. #11
    Senior Member Seasoned Hubber KCSHEKAR's Avatar
    Join Date
    May 2010
    Location
    CHENNAI
    Posts
    243
    Post Thanks / Like
    வீரபாண்டிய கட்டபொம்மன் மறுவெளியீடு குறித்த ஒரு அருமையான கவிதை.
    (திரு.ஆதவன் ரவி அவர்களின் முகநூலிலிருந்து)



    புதுசாக்கப்பட்டதா..?

    இல்லை..இல்லை.

    வீரபாண்டிய கட்டபொம்மன்
    புதுசுதான் எப்பவும்.
    -----------------
    ஆடம்பரத்திற்கென இல்லாமல்
    அர்த்தமுள்ளதாய் நாமுணரும்
    இந்தப் படத்தின்
    பிரம்மாண்டம் புதுசு.

    சராசரி மனிதர்களால்
    செய்யவியலாத சாகசங்களை
    செய்து காட்டும் நாயகர்களையே
    காட்டிப் பழகிய
    நம்மூர்த் திரைகளுக்கு
    இந்த சரித்திர நாயகனின்
    வேக வாழ்க்கை
    காட்டுதல் புதுசு.

    புகழ்,சம்பாத்தியம்,கௌரவம்
    இவற்றோடு மட்டுமே
    தன்னைப் பொருத்திக் கொள்ளும்
    நடிகர்களுக்கு மத்தியில்..
    சிவாஜி என்கிற கலைஞன்
    தன்னை
    இலட்சியத்தோடு
    பொருத்திக் கொண்டது புதுசு.

    எதிர் நின்று பார்க்கையிலே
    நம்மைப் போலவே
    இயல்புத் தோற்றம் காட்டுகிற
    ஒரு நடிப்புக் கலைஞன்,
    வேஷங்கட்டிய விநாடியே
    வீரபாண்டிய கட்டபொம்மனாக
    மாறிப் போனது புதுசு.

    நம்மில் எவரும் பார்த்திராத
    அந்த மாவீரனை,
    தன் வடிவில்
    எல்லோரையும்
    பார்க்க வைத்தது புதுசு.

    உருவிப் பிடித்த
    வாளின் வீச்சை
    கண்களினாலும்..
    வெடித்துப் பயங்காட்டும்
    பீரங்கிச் சத்தத்தை
    குரலினாலும்
    அந்த மகாகலைஞன்
    காட்டியது புதுசு.

    "இருந்தோம்..போனோம்"
    என்றிருந்த சாதாரணர்களுக்கிடையே
    சுள்ளென்று
    தன்னை நிரூபித்துப் போன
    கட்டபொம்மன் மட்டுமல்ல..
    திரையில்
    வந்து போனவர்களுக்கிடையே
    வாழ்ந்து போன
    நடிகர் திலகமும் புதுசு.

    சினிமாதானே என்று
    தன் நடிப்புக் கடமையினின்று
    தப்பிக்காமல்..

    வாய் பேசும் வசனந்தானே என
    மனப்பாடம் பண்ணி
    ஒப்பிக்காமல்..

    ஒட்டுதலாய்,
    உணர்வுப்பூர்வமாய்,
    உண்மையாய்...
    ஓர் வீரபுருஷனின்
    சரித்திரத்தை
    ஒரு திரைக் கலைஞன்
    விளங்க வைத்தது புதுசு.

    இதுவரை
    எவரும், எதிலும்
    தொடாத உயரங்களை
    எங்கள் சிவாஜி
    தொட்டது புதுசு.

    தன் திறமை நெருப்பெடுத்து
    நம் கவலைப் பொழுதுகளை
    சுட்டது புதுசு.

    அரை நூற்றாண்டு காலம்
    தாண்டின பிறகும்
    அரங்கங்கள் நிரப்புகிற
    அதிசயம் புதுசு.

    ஆகாயம், நீலம் தவிர்த்து
    நிறம் மாறிக் கொண்டாலும்,
    ஆதவன், கிழக்கிற்கு
    முதுகு காட்டி உதித்தாலும்,
    மாறி விடாத
    அய்யா நடிகர் திலகம் மீதான
    அன்புள்ளங்களின் பாசம்...
    எல்லாக் காலங்களிலும்
    புதுசு.
    ---------------
    வீரபாண்டிய கட்டபொம்மன்
    புதுசுதான் எப்பவும்.
    ---------------
    புதுப்படம் பார்போம்.. எல்லோரும்.
    ---------------
    அன்புடன்

    K.CHANDRASEKARAN
    President
    Nadigarthilagam Sivaji SamooganalaPeravai
    sivajiperavai@gmail.com
    https://www.facebook.com/sivaji.peravai

  2. Thanks eehaiupehazij thanked for this post
    Likes Russellmai, sss, eehaiupehazij liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •