ஹாய் குட்மார்னிங்க் ஆல்...
//'பசித்தவன் முன்னே பழமாய் வந்தது நீயா... இல்லை நானா'
இந்த ஒரு வரி போதுங்காணும். போதும்.// வாஸ்ஸூ.. என்னா பாட்ட்ங்க இது.. வெரி நைஸ்..என் உளங்கவர்ந்த பாட் இது..காலங்கார்த்தால வெள்ளிக்கிழமை லீவ் நாள்ல சமர்த்தா குளிச்சு ஒம்மாச்சி கும்புட்டுட்டு பெரியாழ்வார்கிட்ட கொஞ்சம் பேசிட்டு பார்த்தா இந்தப் பாட்டு..டயட் ப்ரகாரம் என்னோட ப்ரேக்ஃபாஸ்ட் ஒரு கப் தேங்காய். சாப்பிட்டுக்கிட்டே கேட்டேன்..கேட்டுக்கிட்டே சாப்பிட்டேன் ( ரெண்டும் ஒண்ணு தானோ.. கொஞ்சம்மெல்லிய கோடு இருக்காக்கும்) ஆனா இப்போ மறுபடி பசிக்குது
அதே மாதிரி அந்த பூப் பாட்டும் நைஸ். தாங்க்ஸ்.. முன்னாடி ரொம்ப காலம் முன்னாடி கேட்டிருக்கேன்..
ம.தி பாட்ல இன்னும் அவ்வளவா ஃபேமஸான்னு தெரியாது..ம.தியோட ஒரு முழு நீள நகைச்சுவைப் படம் பார்த்த ஞாபகம் மனசுக்குள் புகையாய் ( ரொம்ப நாள்க்கப்புறம் யூஸ் பண்றேன் ஆதிராம்!) கதை எல்லாம் நினைவில்லை.. கல்பனா தியேட்டரில் ஒரு மேட்னி ஸ்கூல் போன காலத்தில் அம்மா கூட்டிக்கிட்டுப் போன நினைவு..
சபாஷ் மாப்பிளே..
வாரி முடித்த குழல் எனக்கே தான் சொந்தமென்று
வானத்துக் கார் முகிலும் சொல்லுதே..
மலர்ந்து விளங்கும் முகம் எங்களின் இனமென்று
வண்ண மலரெல்லாமே துள்ளுதே..
இதில் யாருக்கு யார் சொந்தம் என்பது
என்னை நேருக்கு நேர் கேட்டால் நான் என்ன சொல்வது..
வண்ண மலர் என்றும் வண்டுக்குத் தான் சொந்தம்
வழங்கிடும் மதுவாதான் ஆனந்தம்
தந்தப் பல் எழில்வந்து தன்னினம் தான் என்று
பொங்கும் கடல் முத்துபண் பாடுதே
குங்கும இதழ்கண்டு கோவைக் கனி எல்லாம்
தங்களின் இனமென்று ஆடுதே
கொத்தும் கிளிக்கே தான் கோவைக் கனிசொந்தம்
குறிப்பாக உணர்த்தலாம் வேறென்ன சொல்வது..
சீர்காழி பி.எஸ்.. நல்ல பாட்..
Bookmarks