மதுண்ணா வாசு..ஓ லிட்டில் ப்ளவர் பாடல்+ அலசலுக்கு நன்றி.. இருந்தாலும் என்னன்னாக்க ஈ பாட்டில் ராஜஸ்ரீ கொஞ்சம் நன்னாயிட்டு இருக்கும் தேவிகாவை விட (தேவிகா சரவண பவன் தயிர் வடை என்றால் ராஜ ஸ்ரீ நார்த் இண்டியன் தயிர்வடை வித் குறுகுறு காராபூந்திக் கண்களுடன் இருப்பார் என ஆன்றோர்கள் சொல்வார்கள் )
வாஸ்ஸூ.. இப்படிப் பண்ணிட்டீகளே..// உங்களுக்கு ஒரு கேள்வி. ராஜஸ்ரீ கோஷ்டியினர் கடற்கரை பாறைகளில் மேடான பகுதிகளில் களிநடனம் ஆடும்போது இறக்கத்தில் நிற்கும் நாகேஷ் திடுமென கீழே படுத்துக் கொண்டு எதையோ தேட எத்தனிக்கிறாரே? //
அள்ளும் அழகிகள் ஆர்ப்பரித்து ஆடுகையில்
துள்ளிய கற்களையே தேடு
ந்னு வேறு சில ஆன்றோர்கள் சொல்லியது போல் இருக்குமா இருக்கும்
எனக்குத் தூங்குமா பொங்குமான்னு கேக்கத் தோணலை..பாக்கத் தோணித்து
சரீ ஈ.. நானும் வெய்ட் பண்ணி வெய்ட் பண்ணிப் பார்த்துட்டேன்..அந்த ஆங்கிலப் பாட்டை அடுத்தபோஸ்ட்ல போடறேன்...வாசு நீங்க தனியா விளக்கம் தாங்க
Bookmarks