-
30th June 2012, 11:56 AM
#11
Senior Member
Seasoned Hubber
தனக்கு எல்லாம் தெரிந்திருந்தும் அதை பகிரங்கமாக விளம்பரப் படுத்திக் கொள்ளாத அந்த படிக்காத மேதையின் கத்திச் சண்டைக் காட்சிக்காகவே வெள்ளி விழா ஓடியிருக்க வேண்டிய படம். அடுத்தடுத்து தொடர்ச்சியாக படங்கள் வந்து முந்தைய படத்தின் வெற்றியை பாதித்தது தான் நாம் கண்ட பலன். பிளாசாவில் கடைசி வரை அரங்கு நிறைந்த காட்சிகளுடன்ஓடிய படம் என் தம்பி. ஒவ்வொரு காட்சியிலும் எத்தனையோ ரசிகர்கள் இந்தக் கத்திச் சண்டைக்காகவே காத்திருந்தது மறக்க முடியாதது. ஒளிப்பதிவு நுணுக்கமா தெரியும், இசை நுணுக்கமா தெரியும், டைமிங்கா தெரியும், படத்தொகுப்பா தெரியும், இப்படி ஒரு படத்தின் அத்தனை தொழில் நுட்பங்களையும் தெரிந்திருந்தும் அவரவர்களுடைய தொழிலுக்கு மரியாதை கொடுத்து அவர்களுடைய உள்ளுணர்வுகளை மதித்தவர் நடிகர் திலகம். அதற்கு இந்தப் படமும் ஒரு சான்று.
வாசு சார், பிடியுங்கள்
-
30th June 2012 11:56 AM
# ADS
Circuit advertisement
Bookmarks