Results 1 to 10 of 3049

Thread: Nadigar Thilagam : The Greatest Actor of the Universe & The One & Only BO Emperor

Threaded View

  1. #11
    Senior Member Veteran Hubber
    Join Date
    Sep 2009
    Location
    Chennai
    Posts
    1,950
    Post Thanks / Like
    Quote Originally Posted by mr_karthik View Post
    அன்புள்ள பம்மலார் சார்,

    தாங்கள் அதிரடியாகத் தந்துள்ள 'வளர்பிறை' காவியத்தின் பேசும்படம் இதழ்கள் மட்டில்லா மகிழ்ச்சியைத் தருகின்றன. கிடைத்தற்கரிய இந்த ஆவனங்கள் என் குழந்தைப்பருவ நினைவுகளைத்தூண்டுகின்றன. நான் இதுவரை இப்படத்தைப் பார்த்ததில்லை. காரணம் இதுவரை கண்ணில் படாததே.

    என் சின்னஞ்சிறு பிராயத்தில், நாங்கள் குடியிருந்த சென்னை மண்ணடி தம்புச்செட்டித்தெருவிலிருந்து பக்கத்திலுள்ள பவழக்காரத்தெருவுக்கு பால் வாங்கச்செல்லும்போது, அத்தெருவிலிருந்த, வெகு ஆண்டுகளாக வெள்ளையடிக்கப்படாமல் இருந்த வீட்டின் சுவரில் உயரத்தில் இரு பெரிய போஸ்ட்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன. அவற்றில் ஒன்று நடிகர்திலகம் நடித்த "வளர்பிறை" இன்னொன்று நாகேஸ்வரராவ், சாவித்திரி நடித்த "மஞ்சள் மகிமை". (அப்போது அதில் நடித்தவர்கள் யார் என்பதெல்லாம் துல்லியமாகத்தெரியாது. அதில் பெரிய படமாக இருப்பவர் சிவாஜி என்பது மட்டும் தெரியும். அவ்வளவு சிறிய வயது). மழை வெயில் படாத தாழ்வாரம் போன்ற இடத்தில் ஒட்டப்பட்டிருந்ததால் பல ஆண்டுகளாக அந்த போஸ்ட்டர்கள் அப்படியே இருந்தன. நானே எப்படியும் ஒரு ஐந்து வருடங்கள் அவற்றைப்பார்த்திருப்பேன்.

    அதன்பிறகு வளர்பிறை பற்றிய எந்த ஒரு சிறு துணுக்கைக்கூட பார்த்ததில்லை. இப்போதுதான் சுமார் இரண்டு ஆண்டுக்கு முன்பு நமது ராகவேந்தர் சார் அளித்த பாட்டுப்புத்தக மேல் அட்டையையும், சகோதரி கிரிஜா அவர்களின் தளத்தில் வளர்பிறை படத்தின் சிறு விளம்பரத்தையும் பார்த்தபோது, எனக்கு அன்று அரைக்கால்சட்டை போட்டுக்கொண்டு திரிந்த காலத்தில் பார்த்த மெகா போஸ்ட்டர் நினைவில் நிழலாடியது. இப்போது தாங்கள் அள்ளித்தந்துள்ள பொக்கிஷப்பதிவுகள் மூலம் மீண்டும் இளம் பிராய நினைவுகளுக்குச் சென்றுவிட்டேன்.

    (அந்த இளம்பிராய போஸ்ட்டர் நினைவுகளுக்காகவே, பின்னொருமுறை 'மஞ்சள் மகிமை' பிராட்வேயில் மறு வெளியீட்டின்போது பார்த்தேன். நல்ல படம். 'ஆகாய வீதியில் அழகான வெண்ணிலா' போன்ற பாடல்களைக்கேட்டபோது என் சிறுவயது நினைவுகளை எண்ணி கண்கள் கசிந்தன).

    'வளர்பிறை'தான் இன்னும் காணக்கிடைக்கவில்லை. ராகவேந்தர் சார் முன்பு எழுதிய குறிப்புகளிலிருந்து இது ஒரு அற்புதமான படம் என்பதை உணர்கிறேன். எப்போது பார்க்க முடியுமோ தெரியவில்லை.
    டியர் mr_karthik,

    தன்யனானேன் சார், தன்யனானேன்..! "வளர்பிறை" விஷுவல் ஆவணப்பதிவு தங்களின் குழந்தைப்பருவ நினைவுகளை தூண்டியதாக தாங்கள் குறிப்பிட்டதைக் கண்டு மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தேன். அந்த நினைவுகள் வரும்போதெல்லாம், 'அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே' என்கின்ற உவகையும், அந்த ஃப்ளாஷ்பேக்கிலிருந்து மீண்டு வரும்போது 'இந்த நாள் அன்றுபோல் இன்பமாய் இல்லையே' என்ற ஏக்கமும் கொள்ளாதார் இவ்வுலகில் யார்? தங்களின் ஞாபகசக்திக்கு பிடியுங்கள் ஒரு 'சபாஷ்'. தங்களுடைய இனிய நினைவுகளை இங்கே பதித்ததற்கு நன்றி..!

    தங்களுடைய அந்த தித்திப்பான நினைவுகளை மேலும் விஸ்தரிக்க, இதோ தங்களுக்காகவும், வாசு சாருக்காகவும், "மஞ்சள் மகிமை(1959)"யிலிருந்து கானகந்தர்வர் கண்டசாலா-பாடகியர் திலகம் பி.சுசீலாவின் பின்னணிக் குரல்களில், திரை இசை மாமேதை மாஸ்டர் வேணுவின் இசையில், நம் அனைவரையும் கவர்ந்த 'ஆகாய வீதியில் அழகான வெண்ணிலா'. [ஆக்கம் : உடுமலை நாராயண கவிராயர்]



    வேணு இசையில் வந்த இந்த கானம், நிஜமாகவே வேணுகானம்தான்..! அமிதாப்பையும் கவர்ந்த நடிகையின் நடிப்பு அநாயாசத்தைப் பற்றிப் பற்பல அத்தியாயங்களே எழுதலாம், What an actress..!

    [நெய்வேலியாரே, வாய்பிளந்து கண்டசாலாவின் குரலில் மயங்கி, நீங்கள் கேட்டுக் கொண்டிருப்பது என் மனக்கண்ணில் தெரிகிறது. தங்களுக்காகவே இதோ இன்னும் இரு பாடல்கள்:]

    நமது நடிகர் திலகத்தின் அதியற்புத நடிப்பில், மெல்லிசை மாமன்னர்கள் விஸ்ராமின் இசையில், கானகந்தர்வரின் கம்பீர கமக்கக் குரலில், 'உல்லாசம் தேடும் எல்லோரும் ஓர் நாள்' பாடல், "தெனாலிராமன்(1956)" திரைக்காவியத்திலிருந்து...

    இப்பாடலை இயற்றியவர் கவிஞர் தமிழ்மன்னன்..!



    நடிகர் திலகம்- சகலகலாவல்லி பானுமதி இணையில், கானகந்தர்வரின் இசையில்-பின்னணிக் குரலில், "கள்வனின் காதலி(1955)"யிலிருந்து 'வெயிற்கேற்ற நிழலுண்டு'. [ஆக்கம் : கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை]



    mr_karthik அவர்களே, "வளர்பிறை"யை இதுவரை பார்க்கவில்லை என்று கவலைகொள்ள வேண்டாம். நெய்வேலியாரின் தொடர் திரைக்காவியத் தேடலில், இக்காவியத்தின் பிரதி உலகத்தின் எந்த இண்டுஇடுக்கில் இருந்தாலும் அதை அப்படியே அவர் 'லபக்'கிக் கொண்டுவந்துவிடுவார்.

    கவலையை விடுங்கள்..!

    தங்களின் இதயங்கனிந்த பாராட்டுக்களுக்கு எனது இனிய நன்றிகள்..!

    அன்புடன்,
    பம்மலார்.
    Last edited by pammalar; 6th August 2012 at 07:35 PM.
    pammalar

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •