-
17th September 2012, 05:05 PM
#11
Senior Member
Senior Hubber

Originally Posted by
Gopal,S.
உயர்ந்த மனிதன்-பகுதி-5
கவுரி-சத்யா காதலை உணர்ந்து
அவர் அதை அணுகும் பிரச்சனைக்குரிய காட்சி, NT யின் மேதைமைக்கு ஒரு சான்று. conference போய் வந்த தோரணையில் பிரச்சனையை
அணுகுவார். தள்ளி நிற்பார், மிரட்டுவார், ஆழம் பார்ப்பார், ஒரு உயர்ந்த ,வறண்ட,flat வாய்ஸ் இல் பேசுவார்.இறுதியாய் உறுதியை உணர்ந்து
சிறிதே உணர்ச்சி வச பட்டு ஒபபுவார். எனக்கு தெரிந்து இவ்வளவு காம்ப்ளெக்ஸ் ஆக ஒரு காட்சியை யாரும் அணுகியதில்லை.
(தொடரும்)
திரு. கோபால்,
மிக அழகாக கவனித்து குறிப்பிட்டுள்ளீர்கள். இந்த விசாரணைக் காட்சி நெடுகிலும், அவரது குரல் சற்றே கனமாக, அப்போது அவர் அணிந்திருக்கும் உடைக்கு ஏற்றார்ப்போலும் இருக்கும். காட்சி நெடுகிலும், அவரும் ஏற்கனவே காதலித்திருந்தாலும், அவர் செய்தது போல், சிவகுமாரும் தவறும் செய்து விடுவார் என்பது போல், கையாண்டிருப்பார். ஒரு வித சுய இரக்கம் மற்றும் பொறாமையும் கலந்திருக்கும். கடைசியில், மரத்தில் செதுக்கியதைக் கண்டு கண் கலங்கும் போது, சற்றே தடுமாறி, மறுபடியும் முன் இருந்த நிலைக்கு சட்டென மாறுவார்.
சௌகாரை அடித்து விட்டுச் சென்று, பின்னர் திரும்பியவுடன், காலை மாற்றிப் போடுவதை அழகாக கவனித்துக் குறிப்பிட்டுள்ளீர்கள். உடன், "I am sorry" என்று சௌகாரிடம் சொல்லும் போது, அவரது கண்களிலும், முகத்திலும், குற்றம் இழைத்தவனின் guilty பாவனையைக் காணலாம்.
நாகையா பணியிலிருந்து ஓய்வு பெறும் கட்டம். மிகச் சில நிமிடங்களே வந்தாலும், இந்த நிமிடம் வரை கண்களையும், நினைவையும் விட்டு அகல மறுக்கிறது.
மிக அற்புதமான ஆய்வு - மிக அற்புதமான படம், மற்றும் நடிப்பிற்கு.
அன்புடன்,
இரா. பார்த்தசாரதி
-
17th September 2012 05:05 PM
# ADS
Circuit advertisement
Bookmarks